வேட்டையாடும் குணம் கொண்ட புலி ஒன்று தனக்கு எதிரியாக நினைத்த குரங்கு ஒன்றைக் கொண்று விட்டது, அவ்வுடலை கொண்டு செல்லும் போது தான் இறந்த தாய்க் குரங்கோடு பின்னிப் பிணைந்திருக்கும் குட்டிக் குரங்கை அது தற்செயலாக அவாதானிக்கிறது. உடனே அக் குட்டிக் குரங்கை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது அந்தப் புலி. இரவு பகலாக அதனோடு உறவாடும் புலி அது தவறிக் கூடக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளதை இந்தக் காணொளியில் காணலாம். இரவில் கூட தன்னருகில் அணைத்து வைத்து அக் குரங்கு குட்டியுடன் தூங்குகிறது. |
Sunday, November 21, 2010
மிருகமே குழந்தை என்றால் மனம் இரங்குகிறது (வீடியோ இணைப்பு)
வயிற்றில் பாம்பை சுமந்த பெண் (படம் இணைப்பு)
| அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான். உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார். அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது. ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது. இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது | ||
|
வல்லவனுக்கும் வல்லவன்! - (வீடியோ இணைப்பு)
|
மயிர்க்கூச்செறியும் சைக்கிளிங் வித்தை! (வீடியோ இணைப்பு)
|
88 குழந்தைகளை பெற்றவர் மீண்டும் திருமணம்
|
முதலையின் பிடியிலிருந்து தப்பிய யானை! (படங்கள் இணைப்பு)
நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே, அளவில் மிகப்பெரியது யானைதான்.
அதன் கம்பீர தோற்றத்தையும் பலத்தையும் கண்டு மிரளாத மனிதர்களும் (பாகனைத் தவிர) இல்லை. ஏனைய விலங்குகள் கூட அதனைக்கண்டால் பயத்துடனேயே விலகிச் சென்று விடுவதுண்டு.
யானை நிலத்தில் பலசாலி என்பது போல் நீரில் பலசாலி முதலையார் தான்.
ஆனால் முதலையிடம் சண்டையிட்டுத் தப்பித்துச் சென்ற யானையொன்றின் புகைப்படங்களை அண்மையில் செம்பியா எனும் நாட்டின் புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது கெமராவில் 'க்ளிக்' பண்ணியிருக்கின்றார்.
தாய் யானை ஒன்றும் அதன் குட்டியும் ஆற்றங்கரையில் நீர் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது முதலையொன்று தாய் யானையின் தும்பிக்கையை கௌவிப் பிடித்துள்ளது.
எனினும் யானை தனக்கே உரிய பலத்தால் முதலையைத் தாக்கி அதனிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சியைத் தான் அவர் பிரமாதமாகத் தனது கெமராவில் பதிந்து கொண்டிருக்கின்றார்,
நூறு அடி கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சிறு காயங்களுடன் மீண்ட அதிசயம்! (வீடியோ இணைப்பு)
ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் பிளாரஸ் பகுதியில் மூன்று வயது குழந்தையொன்று 100 அடி ஆழமான தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீழ்ந்தது. வெனசா மமானி என்ற இந்தக் குழந்தை வீழ்ந்த கிணறு விவசாயிகளால் பாவிக்கப்படும் 14 அங்குலங்கள் மட்டுமே அகலமான கிணறாகும். இதில் யாரும் விழுந்தால் மீட்டெடுப்பதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். குழந்தை விழுந்த தகவல் கிட்டியதும் பொலிஸார் தீயணைப்புப் படையினர் என 200 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் அங்கு விரைந்தனர் உள்ளே யாரும் இறங்க முடியாது அந்தளவு கிணறு ஒடுக்கமானது உள்ளே ஒரு கயிறு போடப்பட்டது. அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு குழந்தை மேலே வருமா? அதுசம்பந்தமான அறிவுறுத்தல்களை குழந்தையால் பின்பற்றமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் வேறு வழியில்லை. இதற்கிடையில் அங்கு ஊடகங்களும் வந்து சேர்ந்துவிட்டன. விஷேட கேபிள் வழியாக கெமராக்களும் கிணற்றுக்குள் அனுப்பப்பட்டன. படப்பிடிப்பும் நடந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேர தீவிரப் போராட்டத்தின் பின் அந்த அதிசயம் நடந்தது. குழந்தை வெனசா மமானி எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு மேலே வந்தது. உள்ளே அனுப்பப்பட்ட கயிறு குழந்தையின் மார்பைச் சுற்றிக் காணப்பட்டது. அழுது கொண்டு வெளியே வந்த குழந்தையின் உடலில் சிறு கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்டன. இருந்தாலும் குழந்தை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது. |
உயர் ரத்தக்கொதிப்புக்கு நிரந்தரத் தீர்வு (வீடியோ இணைப்பு)
உலகில் பல கோடி மக்கள் அவதியுறும் ஒரு பாரிய நோயாக உயர் ரத்தக்கொதிப்பு உள்ளது. பொதுவாக பரம்பரை வருத்தமாகவும், சர்க்கரை வியாதியுள்ளவர்களையும் இது தாக்குகிறது. உடலில் ரத்தம் பயணிக்கும் நாடி நரம்புகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் இதயம் கடுமையாகத் துடிக்கும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும், அப்போது நாடி நரம்புகள் விரிவடையும். இத் திறன் நாளடைவில் பாதித்து, அவை சுருங்கி விரியும் தன்மை பாதிப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை மாத்திரை கொண்டே கட்டுப்படுத்தி வந்தனர் மருத்துவர்கள். பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கோபம் அதிகமாக வரும், மாரடைப்பு ஏற்படும், சிறுநீரகம் பதிக்கப்படும், மற்றும் மூளை நரம்புகள் வெடிக்கும் அபாயமும் உண்டு. ஆனால் இதனைத் தற்போது மிக எளிதாக மாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் 99% வெற்றியும் பெற்றுள்ளனர். மனித உடலில் உள்ள சிறுநீரகத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு நாளத்தில் உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் மூலமே மூளை நாடி நரம்பை விரிவாக்கவும் சுருங்கவும் செய்கிறது. கால்கள் (தொடை) வழியாக நீளமான ஊசி ஒன்றைச் செலுத்தி அதை சிறுநீரகம் வரை கொண்டுசென்று, குறிப்பிட்ட அந்த நரம்புக்கு சில வகையானமின் சாரத்தைப் பாய்ச்சி அவற்றைத் தூண்டுவதன் மூலம் அந்நரம்புகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன. அதனால் அவை சமிக்ஞைகளை சரியாக மூளைக்கு அனுப்பும். எனவே ரத்த அழுத்தம் சரியான முறையில் பேணப்படுவதாக, தற்போது சிகிச்சைபெற்றுக்கொண்ட நபர் தெரிவித்துள்ளார். இவர் தனது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தினம்தோறும் 12 மாத்திரைகளை எடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது மாத்திரைகள் ஏதும் பாவிக்காமல் அவர் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். |
2 முதலைகளை விரட்டிய அதிசயப் பூனை (வீடியோ இணைப்பு)
|
400 உயிர்கொல்லி சிலந்திகளுடன் சாதனை முயற்சியில் அவுஸ்திரேலியர்! (வீடியோ இணைப்பு)
|
220 அடி உயரமான தேநீர் குவளை
பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இக் குவளையின் உயரம் 220 அடியாகும். இக்குவளையில் 28 மில்லியன் லீற்றர் தேநீரை நிரப்ப முடியும். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மேய்டென் பகுதியில் இவ் மிகப்பெரிய குவளை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குவலையில் சீனர்கள் பருகும் அனைத்து தேநீர்களையும் உள்ளடக்க முடியும். தேநீர் பிரியர்கள் தேநீருக்கான தங்களது காணிக்கையாக இத்தேநீர் குவளையை தயாரித்துள்ளனர். அதனுடன் தேநீர் கோப்பையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தங்களது தேநீர் குவளையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவதற்காக கின்னஸ் அலுவலர்களை தொடர்புக்கொண்டுள்ளனர். |
குங்பூ எலியின் கடும் தாக்குதல்! (வீடியோ இணைப்பு)
|
அமெரிக்காவில் பதினெட்டும் பெற்று பெருவாழ்வு வாழும் மகராசி! �(படங்கள் இணைப்பு)
| அளவான குடும்பம் தெவிட்டாத இன்பம், நாமிருவர் நமக்கிருவர் என்பது சிறந்த குடும்பத்திற்காகச் சொல்லப்படுகின்ற உதாரணங்களாகும். மேலும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என திருமணங்களின் போது தம்பதியரை வாழ்த்துவதுமுண்டு. இதன் பொருள் 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பது. ஆனால் சிலர் 16 என்பதை குழந்தைகளின் எண்ணிக்கை என தவறாக நினைத்து விடுகின்றனர். அவர்களைப் போன்று, அதனை தவறாக நினைத்துக்கொண்ட தம்பதி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? அமெரிக்காவின் டென்னெசி நகரைச் சேர்ந்த கில் மற்றும் கெலி தம்பதியரே இவர்கள். ஆம், இத்தம்பதியினருக்கு 18 குழந்தைகள். மூத்த பிள்ளையின் வயது 21.18ஆவது குழந்தையின் வயது 1 மாதம் மட்டுமே. இத்தம்பதியனர் 23 வருடங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். தினசரி இவர்களின் வீடு, வைபவம் ஒன்று நடப்பதைப் போலவே காட்சியளிக்குமென இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பெ..ரி..ய..குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து நீங்களும் மகிழுங்களேன் |
சீறிப் பாய்ந்த காளை; சிதறி ஓடிய மக்கள் கூட்டம் - பெண் உட்பட நால்வர் படுகாயம் (வீடியோ இணைப்பு)
|
ஜன்னல் வழியே மதுபானக் கடைக்குள் சீறிப் பாய்ந்த மான்; மக்கள் அலறியடித்து ஓட்டம் (வீடியோ இணைப்பு)
|
70 வயதாகும் பிரிட்டன் பாட்டியை துரத்தி துரத்தி காதலித்து மணந்த 20 வயது இளைஞர்
பாட்டி திருமணத்திற்கு ஒகே சொல்லியதில் மணமகனுக்கு ஏகப்பட்ட சந்தோசமாம். 2006 இல் நண்பர்களுடன் விடுமுறைக்காக துனிசியாவிற்கு சென்ற போது ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தவர் தான் ரபா என்ற இந்த இளைஞர். 50 வருட இடைவெளியை சிறிதும் பொருட்படுத்தாமல் ரபா தன் பின்னால் அலைவதைக் கண்டு பாட்டிக்கு எரிச்சலே உண்டாகியதாம். எவ்வளவோ முறை பாட்டி சொல்லியும் கேட்காமல் துரத்தி துரத்தி பின்னால் அலைந்து மனதை வென்றுள்ளதாக பிரிட்டன் பாட்டி கூறுகிறார். ரபாவுடன் இணைந்து சுற்றிய தருணங்களையும், முதல் முத்தத்தையும் சுவைபட விவரிக்கிறார் பாட்டி. விடாமுயற்சி என்பது இதுதானோ!!!!!!!! |
தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று
பிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.

4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.
ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.
பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.
அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.
தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.
தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.
இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் 'அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.
அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.
எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.
ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.
பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.
அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.
தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.
தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.
இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் 'அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.
அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.
எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
20 வயது இளைஞர் தாத்தா போல் முகமூடியணிந்து கனடாவில் நுழைய முயன்றதால் கைது (படங்கள் இணைப்பு)
ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான வெள்ளைக்காரர் போல் மாஸ்க் அணிந்து ஹாங்காங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். கனடாவின் வான்கௌவெர் விமான நிலையத்தில் இவரின் போலித்தனம் அம்பலமானதால் கைது செய்யபபட்டுள்ளார்.
தன்னுடைய பயணத்தின் இடைவெளியிலேயே திடிரென டாய்லெட்டுக்குள் சென்ற இவர் சில நிமிடங்களில் பெரிதாக எந்த மாற்றமுமின்றி 20 வயது இளைஞராக மாறி வந்துள்ளார். இந்த விடயம் கண்காணிக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.
20 வயதுள்ளவர் எப்படி தாத்தாவாக மாறினார் என அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் பைக்குள் வயதானவர் போன்ற முழுமையான முகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் சேர்ந்து வயதானவர்கள் அணியக் கூடிய தொப்பி, கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர் கனடாவில் அகதி உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தன்னுடைய பயணத்தின் இடைவெளியிலேயே திடிரென டாய்லெட்டுக்குள் சென்ற இவர் சில நிமிடங்களில் பெரிதாக எந்த மாற்றமுமின்றி 20 வயது இளைஞராக மாறி வந்துள்ளார். இந்த விடயம் கண்காணிக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.
20 வயதுள்ளவர் எப்படி தாத்தாவாக மாறினார் என அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் பைக்குள் வயதானவர் போன்ற முழுமையான முகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் சேர்ந்து வயதானவர்கள் அணியக் கூடிய தொப்பி, கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர் கனடாவில் அகதி உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கத்துக்கு சவர்க்காரமிட்டு நீராட்டும் அதிசய நபர் (படங்கள் இணைப்பு)
|
மாணவியை விட்டு இணைபிரியாமல் அதிக பாசத்துடன் பழகும் சிட்டுக்குருவி!
ஆனால் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகள் தங்களை வளர்த்தவர்களை பெற்றோர் போல் கவனித்துக் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மட்டும்தான் அன்பு காட்டத் தெரியுமா? ஐந்தறிவு ஜீவன்களான எங்களாலும் அன்புக்கு இலக்கணமாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது மாணவி வளர்க்கும் சிட்டுக் குருவி. ஊட்டி அருகேயுள்ள இந்து நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்திகா (13). இவள் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அருகேயுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிம் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2 மாதத்துக்கு முன் கீர்த்திகா பள்ளிக்கு சென்றாள். செல்லும் வழியில் சிட்டுக் குருவி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.அதனை அன்போது தனது இல்லத்துக்கு எடுத்து வந்தாள் கீர்த்திகா. தனது உடன் பிறந்த சகோதரியாக அதனை அன்போடு கவனித்து வளர்த்து வந்தாள். அதற்கென தனிக் கூண்டு அமைத்து கண்ணை இமை காப்பது போல் பார்த்துக் கொண்டாள். கீர்த்திகாவின் சீரிய முயற்சியாலும், அவள் காட்டிய கருணையாலும் சிட்டுக்குருவி சீரான வளர்ச்சி பெற்றது. தற்போது கீர்த்திகாவின் தோழியாகவே மாறி விட்டது. கீர்த்திகா பள்ளிக்கு கிளம்பும் போது அவளது புத்தப்பை மேலை அமர்ந்து கொண்டு சிறிது தூரம் பயணம் செய்யும். அவரது கடைக்கண் பார்வை கிடைத்ததும் பிரியா விடை பெற்று பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு பறந்து வந்து விடும். வீட்டை விட்டு எங்கே சென்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பி விடும். கீர்த்திகாவின் தம்பி கார்த்தியும் சிட்டுக் குருவிக்கு நெருங்கிய தோழனாகி விட்டான். இருவரும் சாப்பிடத் தொடங்கியதும் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும். அவர்கள் ஏதாவது தாணியத்தை லேசாக மென்று அதை தங்கள் நாவில் வைத்து நீட்டினால்அதை அப்படியே ருசித்து சாப்பிடும். எப்போதும் இணை பிரியாத தோழி போல் விளங்கும் சிட்டுக்குருவியை எல்லோரும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். |
பத்து வயதில் தாயான ரோமானியச் சிறுமி! (வீடியோ இணைப்பு)
ஸ்பெயின் நாட்டில் தற்போது வசித்துவரும் ரோமானியா நாட்டைச் சேர்ந்த எலீனா என்ற 10 வயது சிறுமி கடந்தவாரம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இக் குழந்தையின் தந்தையின் வயது வெறும் 13 வருடங்களே என அச்சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஸ்பானிய நகரான ஜெரெஸ் டி லா புரென்டெரா நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறப்பின் போது குழந்தையின் நிறை 2.89 கிலோ கிராம்கள் எனவும் குழந்தை மற்றும் அதன் தாயார் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ரோமானியரான இச்சிறுமி ஸ்பையின் நாட்டில் அண்மையில் குடியேறியவர் என்றும் குடியேறியபோதே கருத்தரித்து இருந்ததாகவும் ஸ்பானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவைச் சேர்ந்த திரீஸா மிடில்டொன் என்ற 12 வயச் சிறுமி 2006 ஆம் ஆண்டு குழந்தையொன்றினை பிரசவித்திருந்தார். இந்தவருடம் பெப்ரவரி மாதம் 9 வயதான பாடசாலை சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். |
உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய் கின்னஸ் சாதனை (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச் சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடிய பூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 821 கிலோ (1810 பவுண்) நிறையாகும். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காயின் நிறை ஆயிரத்து 725 பவுண்களாகும். கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு 4.74 மீற்றர்களாகும். 2009 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த பூசணி. இது ஆயிரத்து 725 பவுண் நிறையாகும். ஒஹியோவைச் சேர்ந்த கிரிஸ்டி என்பவரது தோட்டத்தில் விளைந்ததே இப்பூசணிக்காய். |
புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்!
குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.
புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" எனத் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)