இளைஞர் ஒருவரின் தலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் குத்தப்பட்ட கத்தி ஒன்றை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். சுமார் 3 மணித்தியாளங்கள் இந்தச் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
பிரேஸிலைச் சேர்ந்த எடில்சன் என்ற 29 வயதான இவ்விளைஞர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் தான் நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அப்போது வைத்தியர்கள் மூளை பாதிக்கப்படலாம் எனக் கருதியதால் கத்தியின் கைபிடியை மட்டுமே அகற்றியுள்ளனர்.
கூர்மையான முன் பாகத்தை அகற்ற முன்வரவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 3 வருடங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனையடுத்தே சத்திரச்சிகிச்சைக்குத் தாம் இணங்கியதாகவும் அது வெற்றி அளித்துள்ளதாகவும் எடில்சன் தெரிவிக்கின்றார். _
கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இரண்டு கைகளிலும் தலா 8 விரல்கள் வீதம் 16 ரோபோடிக் விரல்கள் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.
மசாஜ் செய்வதற்காக 3 மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் 2 கைகளும் முதலில் மனித தலையினை முப்பரிமாணமாக ஸ்கேன்செய்யும்.
பின்னர் தலையினது உருவத்தை அளந்துகொள்வதுடன் ஒவ்வொரு பகுதிக்கும் வழங்க வேண்டிய அமுக்கம் மற்றும் முறைகள் என்பனவற்றை நிர்ணயித்துக்கொள்ளும்.
இங்கு பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் அசைவு மற்றும் அமுக்கத்தை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும். விருப்பமான மசாஜ் முறையை இதில் தெரிவு செய்யவும் முடியும்.
மேற்படி ரோபோக்களானது வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களின் தலையையும் கூந்தலையும் சாம்போவால் சுத்தப்படுத்தும். இதன் மூலம் வைத்தியசாலைகளில் இத்தகைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.