Sunday, September 5, 2010

உலகின் அதிவேக விரைவுக் கணினி

நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.
தற்போதைக்கு அமெரிக்க அணு ஆற்றல் சோதனைக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப் பட இருக்கும் இக்கணினி, அது மட்டுமல்லாது கட்டுமானப் பொறியியல், மருத்துவ ஆய்வு, இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிலத்தடி எரிபொருள் ஆய்வு உள்ளிட்ட பற்பலப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உலகின் மிக அதிக ஆற்றல் கொண்ட மடிக்கணினியைப் போல் ஒரு லட்சம் மடங்கு ரோட்ரன்னரின் கணக்கிடும் ஆற்றல் உள்ளது என IBM தெரிவித்துள்ளது. இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவுக் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்ற அலகில் அளப்பர். ஒரு ஃப்ளாப் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் பின்னக் கணக்கீடுகள் FLoating-point Operations Per Second - FLOPs).
ஒரு ட்ரில்லியன் (பத்தாயிரம் கோடி) பின்னக் கணக்கீடுகளை ஒரு கணினி ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் கிகாஃப்ளாப் (Gigaflops) என்றும், ஆயிரம் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் டெராஃப்ளாப் (Teraflops) என்றும் ஒரு மில்லியன் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் பெட்டாஃப்ளாப் (Petaflops) என்றும் அளக்கப்படுகிறது. ரோட் ரன்னரின் மீஉயர் கணக்கிடும் திறன் 1.7 பெட்டாஃபிளாப்" (Petaflop) ஆகும்.
இந்தியாவிலும் அதிவிரைவுக் கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேம்பட்டக் கணினியக மையம் (Center for Advanced Computing - CDAC) உருவாக்கிய அதிவிரைவுக் கணினியின் செயல்திறன் 1005 கிகாஃப்ளாப்கள் என்பது தனித் தகவல்

நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு

நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முகத்துவாரம் தென்னந்தோப்பு பகுதியில் குறித்த காதல் ஜோடி மயக்கமுற்ற நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.ரணதுங்க தெரிவித்தார்.
திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவ்விருவரும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
இதுபற்றி பிந்திக் கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவருவதாவது:
குறித்த காதல் ஜோடி முன்னாள் காதலர்கள் எனவும், காதலியான பெண்ணுக்கு பலவந்தமாக  வேறு நபரை திருமணம் முடித்து வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி நஞ்சருந்தி திருக்கோவில் பிரதேச தென்னந் தோட்டத்தில் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளனர்.
இதையறிந்த  தோட்டத் தொழிலாளர் உடனடியாக பொலிஸாருக்கு கொடுத்த தகவலில் பொலிஸ் விரைந்து அந்த ஜோடிகளை அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு அனுமதித்து சிகிச்சைக்குட்படுத்தியிருந்தனர்.
தற்போது இருவரும் பிழைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.