Tuesday, December 21, 2010

இனி EXE மற்றும் FLV கோப்புக்களையும் Unzip செய்யலாம்.


விண்டோஸ் கணனிக்கு அவசியமானதும் உபயோகம் தருகின்றதுமான டூல் 7 -Zip என்பதாகும்.
winRar மற்றும் Winzip போன்று இயங்கக்கூடிய இலவசமான டூல் இதுவாகும். இதை பற்றி ஏற்கனவே இங்கே விரிவாகபார்த்துள்ளோம்.

தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட 9.2 பதிப்பில் மேலும் சில வசதிகளை இணைத்துள்ளார்கள். கணனி புரோகிராமர்களுக்கு உதவும் வகையில் சில வகையான EXE மற்றும் FLV போன்ற பைல்களையும் இதன் மூலம் Unpacks செய்ய முடிகிறது.

EXE மற்றும் FLV பைல்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்று அறியவும் அதனுள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரிந்துகொள்வது ஆர்வமுடையவர்களுக்கு இந்த மென்பொருள் நிச்சயம் உதவும்.


இணையத்தின் பிடியிலிருந்து சிறுவர்களை எப்படி பாதுகாக்கலாம்?

இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் செய்கின்றன.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். இணையத்தின் உண்மைத்தன்மையை புரியக்கூடிய வயது
அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் தற்போது சமூக வலையமைப்புக்கல் மற்றும் அரட்டை அறைகள் போன்றவற்றிலே அதிகமான தவறுகள் நடக்குமிடமாக காணப்படுகின்றது.
கட்டிளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாகவிருக்கும் ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை பாதாளத்துக்கு இட்டுச்சென்று விடும். பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும்.சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டுக கொண்டுதான் இருக்கின்றனர்.
சரி நாம் இன் இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என இனிப் பார்ப்போம்.
விடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக்’ காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி.
நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கிலோக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீலோக்கர்கள்.
இவற்றினை உபயோகிப்தன் மூலம் சிறார்களுக்கு தெரியமாலே அவர்களினை நாம் பாதுகாக்கலாம்.
குறித்த மென் பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ளவற்றை பார்க்கவும்

பறவைகளின் ஏமாற்றுக் குணம்!

கூடி வாழ்வதற்கும், பொதுநலம் பேணுவதற்கும் நாம் பறவைகளை உதாரணமாகக் கூறுகிறோம். ஆனால் சில பறவைகளிடம் அசாதாரணமான ஏமாற்றுக் குணம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கூட்டமாக வாழும் இயல்புடைய பறவைகள், எதிரிகள் வந்தால் எச்சரிக்கைக் குரல் எழுப்பி சகாக்களை உஷார்ப்படுத்தும். சில பறவைகளோ பொய்யான அபாய எச்சரிக்கைக் குரலை எழுப்பித் தம் சக பறவைகளை விரட்டி ஓடி ஒளியச் செய்கின்றன. அதன் மூலம், தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன.
அமெரிக்கா நியூயோர்க் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மன். அவர், தென் அமெரிக்காவின் பெரு நாட்டு அமேசான் காடுகளில் பல இனப் பறவைகள் கலந்து கூட்டமாக வாழும் முறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வினோதமான நிகழ்ச்சியை சார்லஸ் கண்டார்.
அம்மாதிரியான கலப்புக் கூட்டங்களில், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பறவைகளே காவல் பணியை மேற்கொள்ளும். அக்கம்பக்கத்தில் கழுகு போன்ற எதிரிகளின் நடமாட்டம் தெரிந்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான அபாய ஒலியை எழுப்பும். அதைக் கேட்டதும் மற்ற பறவைகள் சட்டென்று தலைமறைவாகிவிடும்.
இதுபோல காவல் காப்பதற்கு, `காவல் பறவைகளுக்கு’ மற்ற பறவைகள் `கைமாறு’ செய்கின்றன. அதாவது, தாவரங்களில் இருந்து பூச்சிகளை உதிர்த்துவிட்டு, அவற்றுக்கு நிறைய இரை கிடைக்கும்படி செய்கின்றன. இப்படி இரு தரப்புப் பறவைகளும் பலனடைகின்றன.
காட்டின் வெவ்வேறு பகுதிகளில் காவல் பணியாற்றும் இரண்டு இனப் பறவைகளை சார்லஸ் ஆராய்ந்தார்.
`டானேஜர்’ என்ற பறவைகளும், உச்சாணிக் கொமபுகளில் நடமாடும் `ஆன்ட்ஷ்ரைக்’ என்ற பறவைகளும் தாழ்வான கிளைகளில் காவல் பணியாற்றுவது அவருக்குத் தெரிந்தது.
காவல் பறவைகள் இரையெடுக்கும்போது மற்ற பறவைகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. பூச்சிகளைப் பிடிக்கும்போது துரத்தல்களும், சண்டைகளும் சகஜம். அதுபோன்ற போட்டிக் குழப்பங்களின்போது இரண்டு காவல் பறவைகளும் அபாய அறிவிப்புக் குரலை எழுப்பியதைக் கண்டு சார்லஸ் ஆச்சரியப்பட்டார்.
மற்ற பறவைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புகின்றனவோ என்று அவர் சந்தேகப்பட்டார். ஏனெனில் அப்போது அக்கம்பக்கத்தில் எதிரிகள் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் காவல் பறவை தன்னை மறைத்துக்கொள்ளவும் முயலவில்லை.
காவல் பறவைகள் ஏன் இப்படி பொய்யான ஒலியை எழுப்பி ஏமாற்ற வேண்டும்? மற்ற பறவைகளை பயமுறுத்தி ஓட்டி விடுவதன் மூலம் தாம் நிறைய இரையைப் பிடிப்பதுதான் அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவர் பறவைகளைக் கண்காணித்து வந்தார்.
காவல் பறவைகள் தமது குஞ்சுகளுக்காக அதிக உணவு தேட வேண்டிய தேவை ஏற்படும் போது, அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புவது அதிகமாகிறது. ஆனால் பொய்யோ, மெய்யோ, சத்தம் கேட்டதும் மற்ற பறவைகள் கொஞ்சம் கூட `ரிஸ்க்’ எடுக்காமல் உடனே ஒளிந்து கொள்வதையும் சார்லஸ் மன் கண்டுபிடித்தார்.

பிரபல சிற்பக் கலைஞர் Giacometti காதல் கடிதமொன்று 266500 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை

சுவிட்சர்லாந்தின் முன்னணி சிற்பக் கலைஞர் Alberto Giacometti காதல் கடிதமொன்று 266500 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் Sotherby  ஏல விற்பனையில் இந்தக் காதல் கடிதம் ஏலமிடப்பட்டது.
ஜெர்மனியின் பிலபல நடிகை மார்லென் டைடிரிச்சிற்காக இந்தக் காதல் கடிதம் வரையப்பட்டிருந்தது.
1959ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி இந்தக் காதல் கடிதம் எழுதப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றுப் பக்கங்களைக் கொண்ட இந்தக் காதல் கடிதத்தில் மூன்று சித்திரங்கள் வரையப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

நிர்வாணமாக திரியும் மனிதர்கள்!

சிங்கப்பூர் நாட்டில் பிறந்த மேனியாக திரிகின்றமை நாகரிகமாக மாறி வருகின்றது.
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் குறைந்தது 105 ஆண்கள் வீதிகளில் நிர்வாணமாக திரிந்து இருக்கின்றார்கள் என்று பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து உள்ளன.
குயின்வேய்ஸில் உள்ள மக்டோனால்ட் உணவகத்துக்கு சுமார் கடந்த வார ஆரம்பத்தில் காலை 4.00 மணி அளவில் நிர்வாணமாக சென்ற ஒருவர் சாப்பாட்டுக்கு ஓடர் செய்ய முயன்று உள்ளார்.
அதே போல ஓடும் பஸ்ஸில் கடந்த புதன்கிழமை மதியம் ஒரு பெண் நிர்வாணமாக ஏற முயன்றார்.
ஆனால் பொது இடங்களில் நிர்வாணமாக திரிகின்றமை சிங்கப்பூரில் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

ஹோலிவூட் திரைப்படங்கள் ஜிப்(gif) அனிமேசன்களாக உருவாக்கப்பட்டால்..(படங்கள்)


ஹோலிவூட் திரைப்படங்கள் கணனியின் ஜிப்(gif) அனிமேசன்களாக உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இந்த படங்களை பாருங்கள், உங்களுக்கென்ன தோன்றுகிறது?



தோழனா தொல்லையா..? - செல்லிடத் தொலைபேசி குறித்த ஒரு பார்வை


மனித குலத்தின் ஆறாவது புலனாக மாறியிருக்கிறது செல் போன், ஆரம்பத்தில் பேச மட்டும் பயன் படுத்தபட்ட இவை, தன்  எல்லையை தாண்டி கை அடக்க கணினியாக மாறிவிட்டிருக்கிறது .இளசுகளின் இனிய காதலராகவே மாறியிருக்கிறது. பெற்றோர்களின் மாபெரும் வில்லனான இந்த செல்போன் மீது கதிரலை தாக்க விளைவுகளால் நிறைய உடலியல் மாற்றம், மற்றும் நோய் ஏற்படுத்துகிறது என்கிற நிருபணங்கள் இருந்தாலும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஆபத்பாந்தனாக, உற்ற தோழனாக செல் போன் சில நேரங்களில் பயன்படுகிறது என்பதையும் இங்கே நாம் பார்க்கலாம்!
உதாரணமாக டவர் இல்லாத இடத்தில் ஆபத்தில் மாட்டி கொண்டீர்கள் ,வெளியுலகை தொடர்புகொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை , கவலையே வேண்டாம் ,உங்கள் செல் போனை எடுங்கள் 112 என்று அழுத்துங்கள் ,உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான எமெர்ஜென்சி நம்பர் அது  .கீ பேட் லாக் ஆகி இருந்தாலும் இந்த எண்னை டைப் செய்ய இயலும் , உங்கள் செல் தானாகவே அக்கம் பக்கத்திலிருக்கும் ஏதாவது ஒரு நெட் வொர்க்கை பிடித்து உங்களுக்கான எமெர்ஜென்சி இணைப்பை ஏற்படுத்திதரும்.
அடுத்து கார் வச்சிருக்கிற எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேவையான விஷயம் , நாம அடிகடி கார் சாவியை கார் உள்ளேயே விட்டு  விட்டு அவசரமாகவோ  , ஞாபக மறதியாகவோ கார் கதவை சாத்திவிடுவோம் , பிறகு நம் பாடு அதோகதிதான் .ஒன்னு பழது பார்ப்பவரை  அழைத்து வந்து கண்ணாடியை கழட்டி சாவியை எடுக்கவேண்டும் ,அல்லது வீட்டுக்கு போய் வந்து மாற்று சாவி எடுத்து வந்துதான் ரிமோட் லாக்கை திறக்க வேண்டியிருக்கும் .இனி அந்த கவலையே வேண்டாம் ,ஞாபக மறதியா லாக் பண்ணிட்டமா ? ஒன்னும் வேண்டாம் உங்க செல் போனை எடுங்க ,வீட்டுக்கு ஒரு போன்  போடுங்க ,வீட்டில் இருக்கும் டுப்ளிகேட் கீயிலிருக்கும் அன்லாக் பட்டனை அழுத்த சொல்லுங்கள் ,உங்கள் செல் போனை டோர் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் ,பிறகென்ன நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் கார் திறந்து கொள்ளும்.
சும்மா இருக்கும் போதெல்லாம் ஜம்முன்னு இருக்கும் பாட்டரி , ரொம்ப முக்கியமான தருணத்துல, அவசியமா பேச வேண்டிய நேரத்துல ஆப் ஆயிடும் , பவர் தீந்து போய்டும் ,அதுகெல்லாம்  ஒன்னும் டென்ஷனே ஆக வேண்டாம்,உங்க செல்லில் ,*3370# என்ற எண்ணை டயல் செய்யுங்க  உடனே உங்க பாட்டரியில் அய்ம்பது சதமான பவர் ஹிட்டன் பாட்டரி பவரிலிருந்து வந்து சேர்ந்திருக்கும் ,அப்புறமென்ன ,அத்தியாவசிய அழைப்பை அற்புதமாய் பேசி முடிக்கலாமே !
அதிக விலை கொடுத்து வாங்கும் செல் போனை பொண்டாட்டியை பாதுகாப்பது போல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது ,அதிலும் திருடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்று விடுகிறார்கள் .இப்படி செல் போன் திருட்டு  நடக்காம இருக்கணும்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு.
திருடுனவன் அந்த செல் போனை விற்க முடியாமலோ ,பயன்படுத்த முடியாமலோ செய்து விட்டால், எவனுமே செல் போனை திருடமாட்டான் .அதற்க்கு கீழ் கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவும் *#06# என்று உங்கள் செல் போனில் டைப் செய்தால், உங்கள் போனின்  பதினைந்து இலக்க வரிசை எண் உங்கள் திரையில் தெரியும், அதை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள், செல் திருடுபோனவுடனேயே உங்கள் செல் பேசி இணைப்பு வசதி தந்த நிறுவனத்திடம் நீங்கள் குறித்து வைத்திருந்த பதினைந்து இலக்க எண்ணை கூறி, திருடுபோன தகவலையும் தெரிவியுங்கள், அவர்கள் அந்த செல்போனை செயலிழக்க செய்து விடுவார்கள், பின்பு செல் திருடன் அதை வேறு சிம் மாற்றி கூட பயன்படுத்த முடியாது,யாரிடமும் விற்கவும் , முடியாது.  இப்ப சொல்லுங்க ; இக்கட்டான சூழ் நிலையில் இனிதே உதவும் செல் போனை தொல்லை பேசி என கிண்டலடிப்பீங்களா..?

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?


இக் கட்டுரையாசிரியர் ஒரு தொலைத் தொடர்புப் பொறியிலாளர். இத் துறைசார்ந்த 4ஜி தொழில்நுட்பம் குறித்த இவரது கட்டுரை,  இதே பகுதியில் முன்னரே வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் தொலைபே ஒட்டுக் கேட்பது  தொடர்பாக தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் அது தொடர்பான ஒரு தொழில் நுட்ப விடயங்கள் தாங்கி வரும் இக்கட்டுரையை, கட்டுரையாளர் ரவிச்சந்திரன்அவர்களுக்கான  நன்றிகளுடன் இங்கே தருகின்றோம்.-4Tamilmedia Team
தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?
இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.
Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.
இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.
விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.
சற்று விரிவாக பார்க்கலாம்...
உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.


உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.
இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை. Law of Average!

சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))
தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.
தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.
போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

2010 இன் சிறந்த பயன்தரும் பத்து இணையத்தளங்கள் - 4தமிழ்மீடியாவின் பார்வையில்


4தமிழ்மீடியா வாசகர்களின் கணிப்பில் 2010 இல் உபயோகம் தருகின்ற சிறந்த பத்து இணையத்தளங்களின் தொகுப்பை இங்கே தருகின்றோம்.
yahoo தனது புதிய மைக்ரோ பதிவிடல் Yahoo Meme எனும் சேவையை இன்று ஆரம்பித்துள்ளது. இணைய சந்தையில் பல வகையிலும் பெரும் போட்டியை எதிர் நோக்கியுள்ள யாகூ வாடிக்கையாளர்களை கவர இந்த புதிய முறையை ஆரம்பித்துள்ளது.
2.  CUT MP3 . net
பாடல்களின் சில பகுதிகளை மட்டும் எடுத்து வெட்டி அப்பகுதியை மட்டும் செல்போனில் சேமிக்க விரும்பலாம். அதையும் எந்த மென்பொருளையும் கணனியில் நிறுவாமல் ஆன்லைனிலியே செய்ய முடிகிறது.
கணணி மென்பொருட்களின் உதவி இல்லாமல் இணையத்திலிருந்தவாறே சுலபமாக படம் வரைவதற்க்கு உதவும் தளம். இது ஒரு  ரியல்டைம் பெயிண்டிங் டூல்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இச்சேவை விண்டோஸ் , மக்கிண்டோஸ் கணனிகளில் அனைத்து உலாவிகளிலும் இணைய இணைப்பிருந்தால் இயங்கக்கூடியது . மேலும் விபரம் இங்கே
5.  http://fav4.org/
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களின் தொகுப்புடன் வேகமாக திறக்க கூடியது Fav4.org எனும் தளமாகும்
வலைப்பதிவில் இருந்து இணையத்தளத்திற்கு மாற நினைப்பவர்கள், இணையத்தளத்திற்கான சிறந்த பெயரை இலகுவாக தேர்ந்தெடுப்பதற்கான உதவியை இந்த இலவச தளம் வழங்குகிறது.
7. bit.ly
8. Drop box
நீங்கள் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்களை கணனி, மடிக்கணனி, மற்றும் ஐபோன்களில் Synchronize செய்து கொள்ள உதவுகிறது Drop box தளம்.
குறிப்பிட்ட தளத்தை பார்க்க முடியாமல் போனது உங்களுக்கு மட்டுமா அல்லது மற்றைய எல்லோருக்குமா என்பதையாவது அறிந்து கொள்ள என்ன வழி. அதற்கு உதவுதான் http://downforeveryoneorjustme.com/ எனும் தளமாகும்.
ஈசீஇமேஜ் ரீஸைசர் எனும் அப்பிளிக்கேஷன் ஆன்லைனில் படங்களை சிறிதாக்குவதற்கு உதவுகிறது