Monday, October 11, 2010

இந்த எலிக்கு பசி கொஞ்சம் அதிகம் தான்!


சிறுத்தைகள் (Leopard) பற்றிய ஆராய்ச்சிக்காக, கசேய் குட்டெரிச் (Casey Gutteridge) எனும் மாணவர் ஒருவர் இங்கிலாந்தின் Hertfordshire பல்கலைக்கழக விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றார்.
ஒரு எலி, சிறுத்தைக்கு முன் நின்று இறைச்சித்துண்டு ஒன்றை நுகர்ந்து கொண்டிருப்பதை தற்செயலாக அவதானித்தார்!
'சிறுத்தையை அது கவனிக்கவே இல்லை!' என்றவர், சட்டென தனது கமெராவுக்குள் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். எலியின் செயல் இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதும், சிறிது நேரத்தில் இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதையும் அவர் எடுத்த புகைப்படத்தில் பாருங்களேன்!
எலியை அங்கிருந்து மெதுவாக அகற்றி தன் உணவை எடுக்க சிறுத்தை எவ்வளவு முயற்சிசெய்தும் எலி அசையவே இல்லையாம்!பாவம் சிறுத்தை! எலி சாப்பிட்டு முடிக்கும் வரை பொருத்திருந்ததுதான் மிச்சம்!

பெண் சிறுத்தையாம் அது - ஷீனா என்பது அதன் பெயர்! பிறந்து நான்கு மாதத்தில் இந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு எடுத்து வந்துவிட்டார்களாம்! ரொம்ப அப்பாவித்தனமான ஆனால் நல்ல சிறுத்தையென சிரித்துக்கொண்டு கூறுகிறார் கசேய்!
இந்தகாட்சியை படமாக்கிய அவருக்கு நன்றி கூறி அதன் உரிமையை வாங்கியிருக்கிறது குறித்த பல்கலைக்கழகம்!
எலியின் செயல் ஒரு அழகான அர்த்தத்தை சொல்லிச்செல்கிறது!

'உங்கள் அனுமதியில்லாமல் யாராலும் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது'

போலா கரடி குட்டிக்கரணம் போட்டு பார்த்திருக்கீங்களா?


எப்போதும் பனிப்பிரதேசத்திலேயே வாழும் போலா கரடிகளுக்கு, உலகில் அழிந்து வரும் அரிய உயிரினங்கள் வரிசையில் முக்கிய பங்குண்டு! இது வெஜிட்டேரியனா? அல்லது நான்வெஜ்ஜா? என்றே பலருக்கு சந்தேகம் உண்டு!
துருவப்பிரதேசங்களில் பச்சைப்பசேல் என தாவரங்கள் வளர்வது இல்லையென்பதால் இவை நான்வெஜ்ஜாகத்தான் இருக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நீர் மேல் மிதக்கும் பனிக்கட்டிகளுக்கு இடையில் கொக்கு பிடிப்பது போல் லபெக்கென தலையை உள்விட்டு மீன்களைத்தான் பிடித்து சாப்பிடுவதாக இங்கு அரிதாகவே செல்லும் சுற்றுலாபயணிகள் தெரிவிப்பார்கள்!

மேற்கு கனடாவாவின் துருவப்பிரதேசங்களை பார்வையிடச்சென்ற ஒரு போட்டோகிராபரின் கமெராவுக்குள் சிக்கிய புகைப்படங்கள் இவை.
இதுவரை போலா கரடி இப்படி ஒரு செய்கை செய்து பார்த்ததே இல்லையென்கிறார்.

என்னதான் செய்தது? கொட்டிக்கிடக்கும் பனியை குடைந்து, தலையில் உள்ளே நுழைத்தது போலா. மீன்களைத்தான் பிடிக்கப்போவதாக போட்டோகிராபரை அழைத்து சென்றவர் கூறினார்.

ஆனால் நடந்தது வேறு, தனது இரண்டு பின்னங்கால்களையும் விரித்து தலையை நுழைத்து மிக லாவமாக அடித்தது ஒரு குட்டிக்கரணம்!
பார்வையாளர் அசந்து புகைப்படம் எடுக்க, ஏதோ என்னை பார்த்து மகிழ்கிறார்கள் என நினைத்த துருவக்கரடி மீண்டும் இரண்டு தடவை அழகாக குட்டிக்கரணம் அடித்தது.

அப்படியே கமெராவுக்குள் சுருட்டி எடுத்துவந்துவிட்டார் போட்டோகிராபர்! ஓநாய்கள் வரும் அதிர்வின் சத்தம் பனிக்கட்டிகளின் கீழ் நன்றாக கேட்கும் என்பதால் தான் தலையை இப்படி பனிக்குள் செலுத்துகின்றனவாம்!

ஆனால் ஏன் குட்டிக்கரணம் அடிக்கின்றன என துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்களுக்கு கூட தெரியவில்லையாம்!

நம்பமுடியாத புகைப்படங்கள்?


 இந்த புகைப்படங்களைப் பாருங்கள் இவற்றை நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
சிலவற்றை நம்பலாமா? உங்கள் கருத்தை கூறுங்கள்.

கூகுளின் தானியங்கிக் கார் : செயற்கை அறிவாண்மைப் புரட்சி (காணொளி இணைப்பு)

கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.

சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.

இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.

கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நண்டுகளால் டிராபிக் ஜாம்



சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில். அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும்.

அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன. நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்து வலம் வருகின்றன.

அவைகளும் ஒருவித சததத்தை எழுப்புவதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். அவசர கோலத்தில் வரும் வாகனங்கள் ஏராளமான நண்டுகளை அடித்து நசுக்கிவிட்டு செல்கின்றன. ஆனால் பெரும்பாலான வாகன ஒட்டிகள் பொறுபானவர்களாக இருபதால், நண்டுகள் நகர்ந்து செல்லும் வரை தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்.

இதனால் `டிராபிக் ஜாம்’ ஏற்படுகிறது. `நண்டு இனபெருக்க சீசன் ஆரம்பித்து ஒரு வார காலத்திற்கும் இந்த நிலை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்ன நிலைமையோ’ என்று புலம்புகிறார்கள், டிரைவர்கள்.

இராட்சத மலைப்பாம்புடன் விளையாடும் சிறுவர்கள் (படங்கள் இணைப்பு)

இந்த சிறுவர், சிறுமியர்க்கு பயம் என்பதைக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் போல. இளம் கன்று பயம் அறியாது. அது உண்மையே