Thursday, September 16, 2010

காற்சட்டை இல்லாமல் செய்தி வாசித்ததால் பரபரப்பு (காணொளி இணைப்பு)

காற்சட்டை அணியாமல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் ஈடுபட்ட செய்திவாசிப்பாளரின் காணொளி யூ டியுப் இணையத்தளத்தில் பலரது கவனித்தினை ஈர்த்துள்ளது.

இச்செய்திச் சேவையானது ஸ்லோவெனிய நாட்டின் 'பொப் டிவி' எனப்படும் தொலைக்காட்சி சேவையினுடையதாகும்.

மேற்படி செய்திவாசிப்பாளர் நேரடி செய்தி சேவையில் செய்தியை வாசித்து முடித்துள்ளார்.

அதன் பிறகு தனது சக உழியரொருவருடன் கதைப்பதற்காக பின்னால் திருப்பியுள்ளார்.

அப்போது அவர் மேலாடையையும், கீழ் பகுதியில் உள்ஆடையை மட்டும் அணிந்திருந்தமை தெரியவந்தது.

ஆனால் அதன் போது வீடியோ கமெரா செயற்பட்டுக்கொண்டிருந்தமையை அவர் அறிந்திருக்கவில்லை.

மேற்படி செய்தியானது நேரடியாக உலகம் பூராகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பதினேழு நிமிடங்கள் ஓடக்கூடிய அக் காட்சி தற்போது யூ டியுபில் சக்கைபோடு போடுகின்றது.

இன்று சர்வதேச ஓசோன் தினம்

  இன்று சர்வதேச அளவில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியானது உயிர் வாழக் கூடிய கோளாக அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக ஓசோன் படை திகழ்கின்றது. உலகில் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்குத் தேவையான அமைப்பினை ஓசோன் படை பெற்றுக் கொடுத்துள்ளது. ஓசோன் படையின் முக்கியத்துவத்தினை முழு உலகிற்கும் உணர்த்தும் வகையிலும் ஓசோன் படைக்கு நன்றி கூறும் முகமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 16ஆம் திகதி சர்வதேச ஓசோன் தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஓசோன் படையைத் தாக்கத்திற்குட்படுத்தும் இரசாயனங்களுக்கு எதிராக கனடா நாட்டில் "மொன்றியல்" உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கமைய 1995ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஓசோன் படையானது, பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்திலுள்ள படையாகும். இது வளிமண்டலத்தில் 90 வீதமான பகுதியினை உள்ளடக்கியுள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து 15 - 45 கிலோ மீற்றர் உயரத்தில் இது பரவியுள்ளது.

சூரியனிலிருந்து பூமியை நோக்கித் தெறிப்படையும் புற ஊதாக் கதிர்கள், கழி ஊதாக் கதிர்கள், செவ்வூதாக் கதிர்கள் என்பன நேரடியாக பூமியினை தாக்காமல் பூமியின் பாதுகாப்புக் கவசமாக ஓசோன் படை விளங்குகின்றது.

தற்போது ஓசோன் படை பல தாக்கங்களுக்குட்பட்டு பாதிப்படைந்து வருகின்றது. இதனை ஓசோன் துவாரம் என்று அழைப்பர். இதன் மூலம் உலகமும் உலக மக்களும் பாதிப்படையக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் தம் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஓசோன் படையினது பாதிப்பிற்கு முழுக்க முழுக்க மனிதனின் செயற்பாடுகள் தான் காரணம், இயற்கை அம்சங்களினால் இது எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவும் தெரிவிக்கப்படுகின்றது.குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ காபன், புளோரோ காபன் என்னும் வாயுக்களின் மூலமே ஓசோனின் படை மண்டலம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இவை பாரிய கைத்தொழிற் சாலைகளிலிருந்தே வெளியேற்றப்படுகின்றது. மனிதனின் கைத்தொழில், விவசாய நடவடிக்கைகளே ஓசோன் பாதிப்பிற்குக் காரணமாகும்.1980ஆம் ஆண்டு ஓசோனில் பாரிய பாதிப்பு ஏற்பட்டதற்கு குளிர்சாதனப் பெட்டிப் பாவனை, இரசாயன வாசனைத் திரவியங்களின் பயன்பாடுகள் என்பனவே முக்கிய காரணிகளாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஓசோனில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

கைத்தொழில் நடவடிக்கைகளின் போது வெளியேற்றப்படும் ஓசோனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களின் அளவினைக் கட்டுப்படுத்த புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயன பசளைகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றின் அளவினைக் குறைக்க வேண்டும். அல்லது இயற்கை உத்திகளைக் கையாள வேண்டும்.

குப்பைகள் எரிப்பதினைத் தடுத்து அவற்றினை வேறு வகையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகப் பூச்சு, இரசாயன வாசனைத்திரவியங்களின் பயன்பாடு ஆகியவற்றின் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும். குளோரோ புளோரோ காபன் காபன் வெளியேறும் குளிர்சாதனப் பெட்டிகளை பாவனையிலிருந்து அகற்றி நவீன குளிர்சாதனப் பெட்டிகளை பாவனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஓசோனில் ஏற்படும் தாக்கத்தால் ஏற்படும் தீமைகள்:

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால், துருவப் பனிக்கட்டிகள் கரைந்து பூமியே அழிவடையு அபாயம் ஏற்படும். புற ஊதாக்கதிர்களின் கதிர் வீசலினால் தோல் புற்றுநோய்கள், கண் தொடர்பான நோய்கள் ஏற்படும். நாம் சுவாசிக்கும் காற்று நச்சுக்காற்றாக மாற்றமடையும். இதனால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும். சில பயனுள்ள நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றன.

இக்கதிர்வீசல் தாவர வளர்ச்சியினை கட்டுப்படுத்துவதால் விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணமாகின்றது. மீன்கள், ஊர்வன போன்றவற்றின் முட்டைகள் அழிவடைகின்றன.

புவியில் உயிர்ச் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இப்பாதிப்புக்களைத் தடுப்பதற்காக, ஓசோனில் ஏற்பட்டு வரும் தாக்கங்களைக் குறைப்பது எம் கையிலே உள்ளது. முழு உலகினையும் பாதுகாக்கும் கடமை எம் அனைவருக்கும் உண்டு. எனவே உலகினை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற, இன்று முதல் நாம் ஓசோன் படையின் பாதுகாப்புக்கான நடவடிக்கைக்குக் கை கொடுப்போம்.

இலங்கையில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு நிலையம்

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையமொன்றை இலங்கையில் நிறுவத் தீர்மானித்துள்ளதாக தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சித்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.இது தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று அமைச்சரின் தலை மையில் செவ்வாயன்று கொழும்பில் நடை பெற்றதுடன் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான விஞ்ஞானத்துறை முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கருத் திட்டத்தின் கீழ் இலங்கையின் மின் வலு, கடல், வான், வர்த்தகத்துறைகளை விஞ்ஞானத்துறையுடன் இணைந்ததாக முன்னேற்றும் வகையில் மேற்படி சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச மட்டத்திலுள்ள விஞ்ஞான ஆராய்ச்சித்துறை நிபுணர்களை இணைத்துக்கொண்டு துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்ட ங்களை மேற்கொள்ளவும் கைத்தொழிற் துறையை முன்னேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். 

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.
வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.
ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
காய்ச்சல்
குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.
உடலில் அக்கி உண்டானால்
குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.
வயிற்றுப் பொருமல்
குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.
காமாலை
குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
விக்கல்
மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.
நாக்கில் பாதிப்பு
உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.
மூலம்
மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.
தொண்டைப் பிடிப்பு
இலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.
காது பாதிப்பு
கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.
கழுத்தில் பாதிப்பு
குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.
வாயில் பாதிப்பு
அதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.
வயிற்று வலி
குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.
இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta

மைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத் தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.
இது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.
இதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.
இதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.
இயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.