Friday, January 21, 2011

அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்


ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாகஅறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.
இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.
இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :
ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.
ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:
ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.
காருக்கான பிளாக் பாக்ஸ்:
தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
ஜிபிஎஸ் ஜாம்மர்:
உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.
மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:
வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.
ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

நோக்கியா E5 அடுத்தவரவு…


நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது.
உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது.
மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள்
▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery

ஆபரேட்டிங் சிஸ்டம் லைசன்ஸ் மறந்து விட்டால்


கணினியில் முக்கியமான ஒன்று இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்கு தளங்கள். பெரும்பாலும் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன் படுத்துகிறோம் . நாம் இந்த கணினியில் இந்த இயங்கு தளங்களை நிறுவும் போது அதற்க்கான லைசன்ஸ் மற்றும் சீரியல் எண்ணை சரியாக கொடுத்தால் மட்டுமே இந்த இயங்கு தளத்தை நம் கணினியில் நிறுவ முடியும். ஒரு எண் மாறினால் கூட நிறுவ முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த எண்ணை நாம் தொலைத்தோ அல்லது மறந்தோ விடுகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் என வைத்து கொள்வோம்.
இப்பொழுது நம் கணினியில் ஏதோ ஒரு பிரச்சினையால் இயங்கு தளத்தை திரும்பவும் நிறுவ வேண்டும். இப்பொழுது அந்த எண்ணை மறந்து விட்டதால் நம் கணினியில் நிறுவுவதில் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையில் நமக்கு உதவவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருளில் உங்கள் இயங்கு தளங்கள் மட்டுமின்றி நம் கணினியில் பதிந்துள்ள Nero, VM ware, Ms office ன் Serial எண்ணையும் நமக்கு தெரிவிக்கும். 
  • இந்த மென்பொருளை நம் கணியில் நிறுவ வேண்டாம். தரவிறக்கியவுடன் நேராக இயக்கலாம்.
  • மிகச்சிறிய அளவே உடையது (95kb).
  • 100% பாதுகாப்பான இலவச மென்பொருள்.
 பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் உங்களுக்கு ஒரு செய்தி விண்டோ வரும் அதில் உள்ள Accept பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் படத்தில் உள்ளது போல் தேர்வு செய்து கொண்டு அருகில் உள்ள Search என்ற பட்டனை அழுத்தினால் போது உங்களுடைய இயங்கு தளத்தின் லைசன்ஸ் சீரியல் எண்கள் மற்றும் உங்கள் MS office லைசன்ஸ் ஆகியவைகள் வந்திருக்கும்.
  • கீழே உள்ளதை போல முடிவு வரும். அதில் உள்ள File- Save க்ளிக் செய்து உங்களுடைய கணினியின் லைசன்சை சேமித்து கொள்ளுங்கள். 
இனி உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டாலும் கவலை இல்லாமல் நாம் பெற்று கொள்ளலாம். மேலும் உதவிக்கு http://www.klinzmann.name சென்று பார்த்து கொள்ளவும்.

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.
இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள், அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறன அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும் Microsoft நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் “சிறந்த ஒரு அன்டி வைரஸ்” நீங்களே உணர்வீர்கள்……
இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.
01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும் Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.
05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது திறக்காது.
வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?
எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R) திறந்து drive வின் எழுத்தை கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
இவ்வாறு open செய்யும் போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம்.

கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க 3 மென்பொருள்கள்


நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.

1.Advance System Care Free 3.7.3
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய 
2. Ccleaner v3.02
 
இந்த மென்பொருளை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஏற்க்கனவே மூன்றுமுறை இந்த மென்பொருளை பற்றிய பதிவை இந்த தளத்திலேயே போட்டு இருக்கேன். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது. இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய  
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 
3. Wise Registry Cleaner Free 5.91
நம்முடைய கணினியில் சில மென்பொருட்களை நாம் நிறுவுவோம். பின்னர் இந்த மென்பொருளின் செயல்பாடு பிடிக்காமல் இதை நீக்கி விடுவோம். இப்படி நீக்கும் போது நம்முடைய கணினியில் உள்ள registryல் அந்த மென்பொருளின் பைல்கள் நீங்காமல் அப்படியே பதிந்து விடும். இதனால் நம் கணினியின் வேகம் மிகவும் பாதிக்க படுகிறது. இந்த பைல்களை நீக்க அருமையான இலவசமென்பொருள் தான் இந்த மென்பொருள். மேலே உள்ள இரண்டு மென்பொருளில் இந்த வசதி இருந்தாலும் யாரும் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி registry சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 
டிஸ்கி: இங்கு நான் கொடுத்துள்ள அனைத்து மென்பொருட்களும் லேட்டஸ்ட் பதிப்பு ஆகும். ஆகவே தற்போது தங்களிடம் இவைகளின் பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து மாற்றி கொள்ளுங்கள். 

உங்கள் போனை பாதுகாக்க சிறந்த இலவச ஆன்டி வைரஸ்கள்


நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.
எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.
NetQin  Mobile Anti Virus
இந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.
இந்த மென்பொருளை தரவிறக்க NetQin Mobile Anti Virus
Look Out Mobile Anti Virus

இந்த ஆன்டி வைரசும் நன்றாக செயல் படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனின் அனைத்து தகவல்களையும் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். இதில் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதை தரவ்றக்க இந்த லிங்கில் சென்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொபைல் போனின் ரகத்தை குறிப்பிட்டு GO க்ளிக் செய்து உடன் மேலே Download என்ற மஞ்சள் நிற பட்டன் வரும் இதை க்ளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.
இதை தரவிறக்க - Mylook Out Mobile Anti Virus
Get Droid Free Anti Virus

Android மொபைல் போன்கலுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது வைரஸ், மால்வேர் அவற்றிடம் இருந்து போன்களை பத்திரமாக பாதுகாக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்க  Droid Security

Face book சுலபமாக உபயோகிக்க Short cut keys


இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள். 
நண்பர்களே இந்த shorcut keys கூகுள் க்ரோமில் மட்டுமே வேலை செய்கிறது.

Keyboard Shortcuts
Function
ALT + 1முகப்பு பக்கம் 
ALT + 2சுய விவரம் 
ALT + 3நட்பு கோரிக்கைகள் 
ALT + 4நமக்கு வந்த அஞ்சல்கள் 
ALT + 5அறிவிப்புகள் 
ALT + 6எனது கணக்குகள் 
ALT + 7PRIVACY SETTING
ALT + 8OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9TERMS AND CONDITIONS
CTRL + FVIEW SOURCE PAGE
CTRL + HBOOK MARK
CTRL + OREFRESH
CTRL + PSELECT ADDRESS BAR
CTRL + RPRINT THE PAGE
CTRL + SSAVE PAGE
CTRL + YFIND
 

ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut Keys


ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut Keys

இன்று இணைய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை அடைந்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த நிறுவனம் எதில்  கால்வைத்தாலும் வெற்றி தான். அந்த நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் கூகுள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் கொடுத்துள்ளேன். இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன். 
இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail அக்கௌன்ட் சென்று 
  • Settings 
  • General
  • Key board Shortscuts on
  • Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.
Gmail Shorcut keys
இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்து பாருங்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும். 

Keyboard Shortcuts
Function
CCompose new Mail
NNext Mail
PPrevious Mail
!Report as a Spam
RReply to the Message
AReply to All
FForward that message 
#Delete the Message
/Puts your cursor in Search box
OOpens Recent Message
UAutomatically comes to inbox
SStar a message
VMove to
Shift+IMark as Read
Shift+UMark as Unread
QMove to your Cursor in Chat Search