Tuesday, April 5, 2011

பாம்பை விழுங்கும் தவளை (வீடியோ இணைப்பு)

நாம் பொதுவாக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும்போது கூட உணவுச் சங்கிலியில் தவளையை பாம்பு விழுங்கும் என்று தான் கற்றிருக்கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங்குகின்றது. 

Bullfrog (காளைமாட்டுத்தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.



சி.டி, டி.வி.டி எழுதும் இலவச மென்பொருள்!

கேள்வி: சிடி மற்றும் டிவிடிக்களில் டேட்டா எழுதும் இலவச பர்னிங் புரோகிராம் ஒன்று கூறவும். அதில் அனைத்து வசதிகளும் இலவசமாகவே கிடைக்க வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.? 

பதில்: ஒன்றென்ன மூன்று தருகிறேன். 

1. அஷாம்பு சிடி பர்னிங், 

2. சி.டி. பர்னர் எக்ஸ்பி புரோ மற்றும் 

3. டீப் பர்னர். 

இவற்றை கீழ்க்காணும் தளங்களில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். அவை தரும் இலவச வசதிகளுக்கு அந்த தளங்களில் அல்லது புரோகிராம் ஹெல்ப் பக்கங்களில் படிக்கவும். 

http://www2. ashampoo.com/webcache/html/1/ product_2_1110__.htm 

http://cdburnerxp.se/download.php 

http://www.deepburner. com/?r=download

செயற்கை இதயம் தயார்! விஞ்ஞானிகளின் வெற்றி நோக்கிய வியத்தகு சாதனை

மனித இதயத்தை ஆய்வு கூடங்களில் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு இது ஒரு சுப செய்தியாக அமையவுள்ளது. 

செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இதயம் ஒரு சில வாரங்களில் துடிக்க ஆரம்பிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது ஒரு பாரிய ஆராய்ச்சித் திட்டத்தின் முதலாவது படியாகும். 

இதைத் தொடர்ந்து ஈரல், நுரையீரல், சிறுநீரகம் என்பனவற்றையும் ஆய்வுகூடங்களில் உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

நன்கொடையாக வழங்கப்படும் மனித உறுப்புக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைக்கலங்களில் இருந்தே செயற்கை இருதயம் உருவாக்கப்படுகின்றது. 



இதயத்தோடு தொடர்புடைய ஏனைய திசுக்களோடு இவை சேர்க்கப்பட்டு அவற்றுக்கு ஊசி மூலம் ஏனைய இணைப்புக் கலங்கள் அனுப்பப்பட்டு வளரவிடப்படுகின்றன. 

இந்த முறையின் மூலம் ஆரோக்கியமாக இருதயக் கலங்களையும் கட்டமைப்பையும் உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதயம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றது. 

அடுத்த ஓரிரு வாரங்களில் அது துடிக்க ஆரம்பிக்கும் என்று நம்புகின்றோம் என்று அமெரிக்காவின் மினியாபோலிஸ் பிராந்தியத்தின் மினசோடா பல்கலைக்கழக மருத்துவ மீள் ஊக்கமளித்தல் பிரிவின் பேராசிரியர் டொக்டர். டொரிஸ் டேலர் தெரிவித்துள்ளார். 

முழு அளவில் செயற்படக்கூடிய இதயம் ஒன்றை உருவாக்குவதில் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மனித உறுப்பு மாற்றத்துக்கான அனைத்து உறுப்புக்களையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் என்னால் நிச்சயம் கூற முடியும் என்று அவர் மிகவும் உறுதியாகக் கூறியுள்ளார். 

தற்போது இதய மாற்று சிகிச்சைக்கு ஆளாகின்றவர்கள் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவதற்காக வாழ்நாள் முழுவதும் மருந்துகளைப் பாவிக்க வேண்டியுள்ளது.இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

ஆனால் ஒரு நோயாளியின் சொந்த இணைப்புக் கலங்கள் மூலம் உருவாக்கப்படும் செயற்கை இதயங்கள் மூலம் இந்தப் பிரச்சினையை தடுக்கலாம். 

மேலும் ஒருவரின் சொந்தக் கலங்கள் மூலம் உருவாக்கப்பட்டு பொருத்தப்படும் இதயத்தை நிச்சயம் அவரின் உடல் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் ........

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம். 

உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? 

அ) காலை 

ஆ) மதியம், மாலை 

இ) இரவு. 

2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?


அ) மெதுவாக… தலைகுனிந்தபடி… 

ஆ) வேகமாக… 

இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக… 

3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்?
 

அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி… 

ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன். 

இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.

4. நீங்கள் தரையில் அமர்ந்திருக்கும்போது… எப்படி? 

அ) கால்களை நீட்டிக் கொண்டு… 

ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத்திருப்பேன். 

இ) சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பேன்.

5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
 

அ) லேசான புன்னகை 

ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.

இ) விழுந்து விழுந்து சிரிப்பேன். 

6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி? 
அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன். 

ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன். 

இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன். 

7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..?
 

அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன். 

ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன். 

இ) கட்டாயம் உதவி செய்வேன் என்று உறுதி கூறுவேன். 

8. உங்களுக்கு பிடித்த நிறம் எது? 

அ) வெள்ளை, பிரவுன் மற்றும் காபி கலர். 

ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச்சை. 

இ) கருப்பு 

9. படுக்கையில் படுத்திருக்கும்போது எப்படி படுத்திருப்பீர்கள்?
 

அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்திருப்பேன். 

ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன். 

இ) மல்லாந்த நிலையில் படுத்திருப்பேன். 

10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு? 


அ) சந்தோஷமான கனவு… 

ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும். 

இ) கனவு காணும் பழக்கம் கிடையாது. 

என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…?
 

அ – 2 மதிப்பெண் 

ஆ – 4 மதிப்பெண் 

இ – 6 மதிப்பெண் 

இப்போது அதற்கான மதிப்பெண்களை கூட்டுங்கள். 

50-க்கும் அதிகமான மதிப்பெண்: 


நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி! 

41-லிருந்து 50- மதிப்பெண் :
 

உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசியே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக்கல்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பம்… அதனால் தடுமாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்! 

31 -லிருந்து 40-மதிப்பெண்:


நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.

21-லிருந்து 30-மதிப்பெண்: 


நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். 

21-க்கும் கீழான மதிப்பெண்:
நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்.

மட்டக்களப்பில் உள்ள வீடொன்றிலிருந்து 64 பாம்புக் குட்டிகள் மீட்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 64 நாக பாம்புக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன. 

செட்டிபாளையம் வைத்தியசாலை வீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது வீட்டிலிருந்தே இன்று காலை இந்த நாகப்பாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

வீட்டிலிருந்து நாகப்பாம்பு ஓடுவதைக் கண்டு வீட்டை துப்பரவு செய்ததில் 64 பாம்புக்குட்டிகளை கண்டெடுத்துள்ளனர். 

இதனைக் கேள்வியுற்று பெருந்திரளான மக்கள் அதனை பார்வையிட செல்கின்றனர்.