Technology










பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர

நாம் மிகவும் சிரமப்பட்டு  பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.
2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும். 


பல ஸ்கைப் கணக்குகளை ஒரே நேரத்தில் லொகின் செய்வதற்கு

பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள். 
ஆனால் கணனியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லொகின் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே கணனியில் லொகின் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக தான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லொகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவியதும், கிடைக்கும் ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம்.


கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது.
இத்தகைய தேடியந்திரங்களுக்கும் குறைவில்லை தான். இருப்பினும் போர்லுக் கூகுலை போலவே எளிமையாக இருக்கிறது. இதை விடை சுலபமாக பல தேடியந்திர தேடலை பயன்படுத்த முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிக மிக எளிதாக தேடல் சேவையை வழங்குகிறது போர்லுக்.
சொல்லப்போனால் இதன் முகப்பு பக்கம் கூகுலை விட எளிமையாக இருக்கிறது.ஒரே ஒரு தேடல் கட்டம். அதன் இடது பக்கத்தில் போர்லுக் என்னும் பெயர் அவ்வளவு தான். வேறு எந்த அம்சங்களும் கிடையாது.
ஆனால் தேடல் கட்டத்தில் டைப் செய்த பிறகு தான் சின்னதாக அற்புதம் அரங்கேறுகிறது. உண்மையில் டைப் செய்யும் போதே அற்புதம் ஆரம்பமாகி விடுகிறது. முதல் எழுத்தை அடிக்க துவங்கியதுமே தேடப்படும் சொல் இதுவாக தான் இருக்கும் என்ற கணிப்பில் அந்த சொல்லுக்கு உரிய தேடல் முடிவுகள் அணிவகுக்கின்றன. பொருந்தக்கூடிய பிற சொற்களும் கொடுக்கப்படுகின்றன.
அந்த கணிப்பு சரியானது என்றால் தேடல் முடிவுகளை பரிசிலிக்க துவங்கி விடலாம். இல்லை என்றால் நாம் தேட உத்தேசித்த சொல்லை முழுவதும் அடித்து தேடலாம். முதலில் வரும் தேடல் முடிவுகளில் திருப்தி அடைய வேண்டும் என்றில்லை. கூகுலின் போட்டி தேடியந்திரமான பிங் மற்றும் யூடியூப், டெலிசியஸ், பேஸ்புக், டிவிட்டர், பிலிக்கர் போன்ற சேவைகளையும் பயன்படுத்தி தேடிப்பார்க்கலாம்.
இந்த சேவை ஒன்றும் புதிதல்ல கூகுல் இத்தகைய உடனடி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதனை மிக அழகாக இந்த தேடியந்திரம் தருகிறது. தேடல் முடிவு பட்டியலின் இடது பக்கத்தில் முதலில் கூகுலும் அதனை தொடர்ந்து மற்ற சேவைகளும் வரிசையாக இடம்பெறுகின்றன.
ஐடியூன்ஸ் மூலம் பாடல்களையும் மேப்ஸ் மூலம் வரைபடங்களையும் தனியே தேடலாம். நாடுகளுக்கான தனித்தனி பட்டியலும் இடம்பெறுகின்றன. செய்திகள், புகைப்படங்கள், வீடியோ என தனித்தனியே தேடிக்கொள்ளும் வசதியை தரும். தேடியந்திரங்கள் எல்லாவற்றையும் விட அதிக சிக்கல் இல்லாமல் குறுக்கீடுகள் இல்லாமல் இந்த சேவை மிகவும் எளிமையாக இருக்கிறது.
அந்த வகையில் மிகச்சிறந்த உடனடி தேடியந்திர சேவை என்று இதனை வர்ணிக்கலாம். கூகுலை தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம். எப்படியும் இந்த தேடியந்திரம் முதலில் முன் வைப்பது கூகுல் தரும் முடிவுகளை தான்.


லேசர் கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு

லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் உலகின் முதல் கருவியை யேல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிசக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கருவியை உருவாக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அடுத்த சந்ததியினரின் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக ஒளி பயன்படுத்தப்படும் பட்சத்தில் தங்களது கண்டுபிடிப்பு பயன்படும் என அவர்கள் கூறினர்.
யேல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் ஸ்டோன் மற்றும் அவரது குழுவினர் லேசருக்கு எந்த பொருட்கள் அடிப்படையாக உள்ளன என்பது குறித்து துவக்கத்தில் ஆய்வு செய்தனர். லேசர் வடிவமைப்பில் சமீபத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பாரம்பரிய லேசர் செயல்பாட்டுடன் அவை பொருந்துவதாக இல்லை. எனவே ஒரு லேசரை உருவாக்குவதற்கு எவை பயன்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தோம் என டக்ளஸ் கூறினார்.
இந்த குழுவினர் கண்டறிந்த புதிய கருவி குறிப்பிட்ட அலை வேகத்தில் உள்ள 2 லேசர் கற்றைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. சிலிகானில் உருவாக்கப்பட்ட இக்கருவி லேசரை திரும்ப பரவ செய்து செயலிழக்க செய்யும்.


இனி அறுவை சிகிச்சையின் போது நரம்புகள் மின்னும்: அமெரிக்க விஞ்ஞானிகள்

அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நோயாளியின் உடல் நரம்புகளை ஒளிரச் செய்யும் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அறுவை சிகிச்சை என்றால் அனைவருக்கும் ஒரு வித பயம் ஏற்படுவது வழக்கம். காரணம் சிகிச்சையின் போது ஏற்படும் சில தவறுகளால் பல பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.
பொதுவாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் உடலில் உள்ள நரம்புகளை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க தவறும் போது தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் எலக்ட்ரானிக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு மின்காந்த அலைகளில் ஒளிரக்கூடிய திரவம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது நோயாளி உடலில் இதை செலுத்தினால், அவரது உடல் நரம்புகள் அனைத்தும் ஒளிரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்டமாக அமினோ அமிலங்கள் அடங்கிய இந்த புரோட்டின் கலவையை எலிகள் மீது செலுத்தி சோதனை செய்த போது, அவற்றின் உடலில் உள்ள நரம்புகள் ஒளிர்ந்தன. இதன் மூலம் உடலின் பிற பகுதிகளையும், நரம்புகளையும் எளிதாக பிரித்தறிய முடிகிறது.
மேலும் அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

நம் கணனியின் வேகத்தை நிர்ணயிப்பதில் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணனியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்.
ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம். இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணனியின் வேகம் மெமரி அதிகமாக உபயோகபடுத்தப்படும். நம் கணனியும் வேகம் குறைந்து காணப்படும்.
இந்த மென்பொருளை நீங்கள் நிறுவி விட்டால் போதும் உங்கள் கணனியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டுபடுத்தி உங்கள் கணனியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
டவுன்லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
Information Overview
Memory Optimization
System Tuneup
Process Management
Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும். 
Information Overview : இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
இந்த பிரிவில் நம் கணனி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோகபடுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணனி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization: இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும். இவை இரண்டுமே நம் கணனியின் மெமரியை கட்டுபடுத்த உதவும் வசதிகளாகும். இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.
அதில் உங்களுடைய கணனி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுபடுத்தி உள்ளது என்ற விவரம் வரும். இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணனியின் மெமரியை கட்டுபடுத்தும்.
இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.  அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதற்க்கும், நம் கணனியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள் இருக்கும்.


PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர் (வீடியோ இணைப்பு)

தற்கால தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில் புதிய உபகரணங்கள் வெகுவாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே.
நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் Printer technology யின் ஓர் புதிய பரிமானமாக இதை குறிப்பிடலாம். நாம் Printer ஒன்றை தெரிவு செய்யும் போது குறிப்பாக கவனிப்பது சிறந்த தரம்(Quality), வேகம்(Speed), பருமன்(Size) மற்றும் Background noise level ஆகியவையே.
அவ்வகையில் Printbrush என அழைக்கப்படும் இந்த பிரிண்டரானது ஓரு வித்தியாசமான, விசித்திரமான பிரிண்டர் ஆகும். இதை அறிமுகப்படுத்தியவர்கள் PrintDreams நிறுவனமாகும். இதன் விசேஷம் என்னவென்றால் இந்த பிரிண்டரை கையில் தூக்கி செல்லலாம். ஓரு தாளின்(Paper) மேல் இப் பிரிண்டரை நகரத்தி சென்றால் இப் பிரிண்டரானது அத்தாளில் உள்ள விடயங்களை நிழற்படங்களாக 600 DPI(Dots Per Inch) ஆக பதிவு செய்து கொள்ளும்.
இதில் Bluetooth communication மற்றும் மீள்நிரப்பு Rechargeable Batteries களை கொண்டிருப்பதால் இதனை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். மேலும் இப் பிரிண்டரானது வெறுமனே தாள் ஒன்றிற்கு முடக்கப்பட்டது அல்ல, எந்தவொரு தட்டடையான மேற்பரப்பையுடைய(Fabric material மற்றும் Letter envelopes) போன்ற பொருட்களையும் ப்ரின்ட் செய்துகொள்ளலாம்.
இதன் அறிமுக விலை $199 என தெரிவிக்கப்படுகின்றது.



பத்து நிமிடங்கள் போதும் உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு

ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணையத்தில் பொருள்களை வாங்கும் போதும், இணைய வங்கிக் கணக்கு மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் கடவுச்சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம் தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
பொதுவாக உலகம் முழுவதுமே கடவுச்சொல்லை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே(Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010 ல் புளூம்பெர்க்(Bloomberg) நிறுவனம் நடத்திய கடவுச்சொல் பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் கடவுச்சொல்லாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க கடவுச்சொல்லை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன்(Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு கடவுச்சொல்லை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி கடவுச்சொல்லை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள்(Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை சா சா(Cha Cha) மற்றும் சல்சா(Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற்படி இத்தகைய கையடக்கத்தொலைபேசிகள் மூலமாக பாவனையாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.
பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான வதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மற்றைய நிறுவனங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.



பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது. சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது.
அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி செய்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று வலி பற்றி குறிப்பிட்டு கொண்டிருந்தார். பேஸ்புக் பயனாளிகள் தங்கள் மன உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் இப்படி செய்திகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம்.
சிலர் தாங்கள் பார்த்த புதிய படங்களை பற்றி கூறலாம். சிலர் காலை செய்தி பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எதனையும் பேஸ்புக்கில் தெரிவிக்கலாம். பீட்டரும் இப்படி தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
பீட்டரின் நல்ல நேரம் அவரது பழைய நண்பர் ஒருவர் தற்போது மருத்துவராக இருப்பவர் இந்த செய்தியை படித்து பார்த்தார். மற்றவர்களுக்கு பீட்டர் ஏதோ புலம்புகிறார் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் மருத்துவரான ராகுல் வெலிநேனி இந்த குறிப்பை பார்த்துமே இவை அபன்டிசைட்ஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார்.
எனவே உடனடியாக பீட்டரின் பேஸ்புக் செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு செய்தியை அனுப்பி வைத்து உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் எழுதியிருந்தார். இருவரும் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் பீட்டரின் தொலைபேசி எண்ணோ, முகவரியோ மருத்துவரிடம் இல்லை. எனவே தனது மருத்துவமனையை குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்திருந்தார்.
பீட்டர் வேறு ஒரு பகுதியில் இருந்ததால் உடனடியாக அந்த மருத்துவமனிக்கு செல்லும் சாத்தியம் இருக்கவில்லை. இருப்பினும் மருத்துவ நண்பரின் எச்சரிக்கையின் தன்மையை புரிந்து கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கே பீட்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அபண்டிசைட்ஸ் நோயல் பாதிக்கப்படிருப்பதை கண்டு கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்து பீட்டர் கண்விழித்ததும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் பேஸ்புக் மூலம் உயிர் காத்த நண்பா என நெகிழ்ந்து போனார்.
டாக்டர் ராகுலோ தன் பங்கிற்கு பிரிந்த பழைய நண்பரை மீண்டும் சந்திக்க இது சுவாரஸ்யமான வழி தான் என்று கூறியுள்ளார். சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கால் சாத்தியமாக கூடிய மாயங்களில் இதுவும் ஒன்று.


கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க

நம்முடைய சில முக்கியமான கோப்புகளை பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம். அந்த வகையில் ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய கோப்புகளை மறைத்து வைக்கலாம்.
சாதரணமாக அந்த கோப்புகளை  ஓபன் செய்தால் போட்டோ மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் கோப்புகள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள கோப்புகளை பார்க்க முடியும்.
1. இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகளை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து கீழே உள்ள தரவிறக்க சுட்டியை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
3. இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கம் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.
4. அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg கோப்பை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே கோப்பை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
7. இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
8. அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோப்புகள் மறைக்கப்பட்டது என செய்தி வரும். அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் கோப்பை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
9. வெறும் படம் மட்டுமே தெரியும். பின்னால் இருக்கும் நம் கோப்புகள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் கோப்புகள் தெரியும். அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
10. இது போல் நம் கோப்புகளை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளலாம். 


பறக்கும் வீடியோ கேமரா

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு செல்கின்ற இந்த காலகட்டத்தில், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த நபர் பறக்கும் வீடியோ கேமரா ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் தனது நண்பனின் திருமண விழாவை படம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அந்த கேமராவுக்கு UFO என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தரையிறங்குவதற்கு பொருத்தமாக நான்கு கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை ஒரு கிலோ கிராம் ஆகும். இது பற்றி குறித்த நபர் தெரிவிக்கையில்,"இந்த கேமரா மூலம் எந்தக்கோணத்தில் வைத்தும் வீடியோ படம் பிடிக்க முடியும். எங்கும் இயக்கிச்செல்ல முடியும்.
ஆனால் இது wireless மூலம் இயங்குவதால் எப்போதும் கையில் remote control இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இது தொழில்நுட்பத்தில் வியத்தக்க ஒரு விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை

சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.
ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார்.  தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றோம். ஒரு சில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணனியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும்.

இதனை பயன்படுத்த
1. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
2. இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
3. இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்கபட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
4. அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
5. அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
6. அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும்.
7. அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.


கணனியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய

ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி


குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைன் திட்டம் தொடக்கம்
குழந்தைகளை தத்தெடுக்கும் முறையானது தற்போது நவீனமுறையில் இணையதள வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் தத்தெடுக்கும் முறை வெளிப்படையாக இருக்கும் வகையில் இணையதள அடிப்படையிலான கேரிங்ஸ் எனப்படும் "குழந்தை தத்தெடுப்பு ஆதாரத் தகவல் மற்றும் வழிகாட்டித் திட்டத்தை" மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது இணையதள அடிப்படையிலான நிர்வாக தகவல் திட்டமாகும். குழந்தைகள், பெற்றோர் மற்றும் தத்தளிக்கும் நிறுவனங்கள் ஆகியோரின் பராமரிப்பு மற்றும் வசதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. தற்போது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதில்லை.
2009-ம் ஆண்டு 2518 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. 2010-ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6286 ஆக உயர்ந்தது. இணையதள அடிப்படையிலான நிர்வாக முறை மூலம் குழந்தைகள் தத்தெடுப்பதில் உள்ள இடைவெளியை இந்த கேரிங்கஸ் ஆன்லைன் திட்டம் போக்கி இணைப்புகளை ஏற்படுத்தி தரும்.
எளிய மற்றும் வெளிப்படையான முறையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை சுமுகமாகவும், விரைவாகவும் செய்வதற்கு இந்த கேரிங்ஸ் திட்டம் உதவும். அத்துடன் குழந்தைகள் தத்து கொடுக்கும் நிறுவனங்களின் பொறுப்புத் தன்மையும் அதிகரிக்கச் செய்யும். குழந்தைகள் தத்தெடுப்பதைப் பற்றிய தேசிய அளவிலான தகவல் அடித்தளம் ஏற்படவும் இது வழிவகுக்கும்.
தத்து கொடுக்க தயாராக இருக்கும் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தத்து கொடுப்பதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு உதவும் வகையிலேயே இந்த கேரிங்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தத்தெடுப்பதற்கு முந்தைய தகவல்கள் அனைத்தையும் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தெரிந்து கொண்டு தங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்து இதுபற்றிய விவரங்களை அறியலாம்.
இதற்கான வலைத்தளம்...http://adoptionindia.nic.in/



வீடியோக்களை எடிட் செய்வதற்கு
வீடியோக்களை எடிட் செய்வதற்கு Daniusoft Video Studio Express என்ற மென்பொருளானது உதவுகிறது.
முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் பேஸ்புக் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும்.
அதில் கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எளிமையாக எடிட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad  ஆகிய சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.

Share/Bookmark




தண்ணீர் மூலம் இயங்கும் கார்: வாலிபரின் சாதனை

பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இலங்கை வாலிபரான "துஷார ஹெதிரிசிங்க" சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.
இவர் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.

Share/Bookmark




கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?

உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
அதற்கு இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

Share/Bookmark




பக்டீரியாக்களை விரட்டும் சுறா தோல்

அதிக கேடுகளை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகளை சுறா தோல் விரட்டுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
கிருமிகள் அதிகம் சேரும் மருத்துவமனைகளில் ஓபரேஷன் தியேட்டர் கருவி உறைகளில் சுறா தோலை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியில் சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும்.
சில நேரங்களில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றை சாப்பிட வரும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறு உயிரினங்கள் கூட அதில் ஒட்டாது என்பதால் சுறா தோலையே உறை போல போடலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர் டோனி பிரெனன் கண்டுபிடித்தார்.
பிளாஸ்டிக் ஷீட் போல சுறா தோலை பயன்படுத்தி "ஷார்க்லெட்" என்ற ஷீட்களையும் அவர் உருவாக்கினார். உயிரினங்களை மட்டுமல்லாமல் பக்டீரியாவையும் விரட்டும் சக்தி, சுறா தோலுக்கு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி செய்ய ஷ்ரவந்தி ரெட்டி என்ற இந்திய பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஆய்வில் கிடைத்த தகவல் பற்றி ஷ்ரவந்தி கூறியதாவது: 99 சதவீத பக்டீரியாக்களை அழித்துவிட முடியும் என்றாலும் மீதம் ஒரு சதவீத பக்டீரியா மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியது. கம்ப்யூட்டர் கீபோர்டு, பஸ், கூடைகளின் கைப்பிடிகளில் பக்டீரியா கிருமிகள் மறைந்திருக்கும். சுறா தோலில் இவை ஒட்டுவதில்லை.
சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் போல பக்டீரியா கிருமிகள், ஆல்கா ஆகியவற்றையும் ஷார்க்லெட் ஒட்டவிடுவதில்லை. சாதாரண பிளாஸ்டிக், ஷார்க்லெட் ஆகியவற்றின் மீது தனித்தனியே பக்டீரியா கிருமிகளை 24 மணி நேரம் வளரச் செய்து ஆய்வு செய்யப்பட்டது.
பிளாஸ்டிக்கை ஒரு உறை போல பக்டீரியா கிருமிகள் மூடியிருந்தன. ஷார்க்லெட்டில் சிறிது கூட பக்டீரியா இல்லை. மருத்துவமனைகளில் ஓபரேஷன் மேசை, ஓபரேஷன் கருவிகளின் கைப்பிடி போன்றவற்றை ஷார்க்லெட் உறையால் மூடினால் பக்டீரியா பாதிப்பை தடுக்கலாம்.

Share/Bookmark




கொடிய வைரஸால் நன்மையும் உண்டு

மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான வைரஸானது புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மனிதர்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களில் மிக முக்கியமானது "மீசல்ஸ்" வைரஸ்கள். எளிதாகத் தொற்றும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் ஊடுருவினால் கடுமையான வலியுடன், உடம்பில் சிவப்பு சிவப்பான புள்ளிகள் தோன்றும்.
ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரியும் மருந்தாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மீசல்ஸ் வைரஸ்கள் தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி நுழைகின்றன, வெளியேறுகின்றன என்பது தான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர்.
குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மீசல்ஸ் வைரஸ்களை கொண்டு தாக்கி அழிக்க முயன்று வருகிறார்கள். அதற்காக இந்த வைரஸ்கள் செயல்படும் விதத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த வைரஸ்கள் ஒரு செல்லுக்குள் ஊடுருவுவதில் இரண்டு புரதங்கள் முக்கியமாகச் செயலாற்றுகின்றன என்று ஆரம்பகட்டமாகத் தெரியவந்திருக்கிறது. அவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. அந்த ஆய்வு முடியும்போது புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

Share/Bookmark




பயர்பாக்சின் இணைய வேகத்தை அதிகரிக்க

நாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன.
நமது இணைய இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும். ஏன் இப்படி மெதுவாக தரவிறக்கம் ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.
இணைய இணைப்பு நல்லதாக பெற்றிருந்தாலும், இணையதளங்கள் மித வேகத்தில் வருவதற்கு காரணம் இணைப்புக்கேற்றவாறு வலை உலவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே ஆகும். ஒவ்வொரு வலை உலவிகளுக்கும் தனித்தனியே அமைப்புகள்(Configurations) உள்ளடங்கியிருக்கும்.
இதை நாம் அறிவதில்லை. உதாரணமாக Firefox ன் அமைப்புகளைப் பார்க்க இணைய முகவரி அடிக்குமிடத்தில் About:config என்று தட்டச்சிட்டால் பயர்பாக்ஸ் வலை உலவியின் முக்கிய அமைப்புகள் நமக்குத் தெரியும்.
இவைகளை நமது இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலவியும் புரிந்து கொண்டு வேகத்தை அதிகப்படுத்தும். ஆனால் நாம் தெரியாமல் எதாவது ஒன்றின் மதிப்பை மாற்றிவிட்டால் சிக்கலாகிவிடும்.
அதனால் இதற்கென இருக்கும் மென்பொருள் தான் Firefox Booster. இந்த மென்பொருளில் நாம் வைத்திருக்கும் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும். நமது இணைப்பிற்கு ஏற்றவாறு பயர்பாக்ஸ் உலவியை தயார்படுத்தும். எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருளானது அதன் வேலையை செய்கிறது.
இந்த மென்பொருளை செயல்படுத்தும் போது முக்கியமாக Firefox வலை உலவியை மூடியிருக்க வேண்டும். இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது.

Share/Bookmark




கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை

கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இதற்கு 2 step verification என்று பெயர்.
குறித்த கூகிள் கணக்கினை லொகின்(Login) செய்யும் நபரின் உரிமைத்துவத்தை உறுதிப்படுத்தும் முறை தான் இது. குறித்த சேவையினை செயற்படுத்தும் போது உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது நேரடி தொலைபேசி அழைப்பு மூலம்).
இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே குறித்த கூகிள் கணக்கினை திறக்க முடியும். தொலைபேசி என்பது எமது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள காரணத்தினாலேயே கூகிள் இந்த முறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. 2 step verification னை செயற்படுத்த
1. முதலில் உங்கள் கூகிள் கணக்கின் settings பக்கத்திற்கு செல்லவும்.
2. பின்னர் security பகுதியில் புதிதாக காணப்படும் இணைப்பை க்ளிக் செய்யவும்.
3. பின்னர் உங்கள் கடவுச் சொல்லினை மீண்டும் ஒரு டைப் செய்து உள்நுழைக.
இவ்வாறு செய்தால் இந்த புதிய முறைமையினை செயற்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதி உங்கள் கணக்கில் செயற்படுத்தப்பட்ட பின்னர், புதியதொரு விண்டோ(Window) கூகிள் கணக்கினை லொகின் செய்யும் போது தோற்றுவிக்கப்படும்.
அந்தப் பகுதியில் உங்கள் இரகசிய இலக்கத்தை வழங்கி உள்நுழைய வேண்டும். ஒவ்வொரு லொகின் செயற்பாட்டிலும் கூகிள் SMS மூலமோ அல்லது நேரடி அழைப்பு மூலமோ இரகசிய குறியீட்டினை அனுப்பிவைக்கும்.
நீங்கள் விரும்பினால் அந்த இரகசிய இலக்கத்தை குறித்த கணணியில் 30 நாட்களுக்கு ஞாபகம்(Remember) வைத்துக்கொள்ள முடியும்(இது தனிப்பட்ட கணணியை பாவிப்பவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்).
இங்கு நீங்கள் இரண்டு தொலைபேசி இலக்கங்களை உபயோகிக்கும் வசதியும் காணப்படுகிறது. அதாவது முதலாவது தொலைபேசி தொலைந்து போகுமிடத்து Backup தொலைபேசியாக அடுத்த தொலைபேசியை பாவிக்க முடியும். இந்த Backup இலக்கத்தினை தேர்வு செய்யும் போது உங்களுக்கு நெருக்கமான இன்னொருவரின் இலக்கத்தை வழங்குவது மிகச் சிறந்தது.


Share/Bookmark


சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும், அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. சனி கிரகத்துக்கு மொத்தம் 62 சந்திரன்கள் உள்ளன.
சனி கிரகத்தின் தன்மை பற்றியும், அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1997 ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.
7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனிக் கோளை இது 2004 ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005 ல் தரையிறங்கியது.
காசினி ஹைகன்ஸ் தனது ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால், அவற்றின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு "காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்" என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இரு விண்கலமும் 2017 வரை எந்த வித குறைபாடும் இல்லாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில் டைட்டனை சுற்றி வெண்மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது. இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன.
அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும், இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்


Share/Bookmark

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்

உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர்.
நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு   கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தையும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரிகள் கூறியதாவது: மரப் பெருஞ்சுவர் பற்றி சீன வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. அது உண்மைதான் என தற்போது தெரியவந்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் லயோனிங் மாகாணத்தில் டாண்டோங் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் ஓக் மரத்தை பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1368 – 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டது. பின்னர் மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடங்களில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.


Share/Bookmark




90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share/Bookmark