Tuesday, September 21, 2010

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு


qatarஅமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ்என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை நேற்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது.
ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு  மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன்  இயற்கை எரிவைவ்ஐ உற்பத்தி செய்கிறது.
கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு  90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது.   79,411 டாலர்கள்மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு  52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு  52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு  48,714 டாலர்கள்)பெற்றுள்ளது.
ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது.
அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு  38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை.
36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது  இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  3,176 டாலர்கள்),  113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  5,026 டாலர்கள்)
முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1    கத்தார்   90,149 டாலர்கள்
2    லக்செம்பெர்க்    79,411  டாலர்கள்
3    நார்வே    52,964    டாலர்கள்
4    சிங்கப்பூர்   52,840    டாலர்கள்
5    ப்ரூனே    48,714    டாலர்கள்
6    அமெரிககா    47,702    டாலர்கள்
7    ஹாங்காங்    44,840    டாலர்கள்
8    சுவிட்சர்லாந்து    43,903   டாலர்கள்
9    ஹாலந்து    40,601    டாலர்கள்
10    ஆஸ்த்ரேலியா    39,841    டாலர்கள்

ஆஸி. வில்வூட் நகரில் இலங்கைத் தமிழர்கள் கூரை மீதேறி நடத்தும் போராட்டம் தொடர்கிறது - பீஜி நாட்டை சேர்ந்த ஒருவர் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

நாடு கடத்துவதற்காக அவுஸ்திரேலிய வில்வூட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கை தமிழர்கள் உட்பட்ட 11 பேர் சிறைச்சாலையின் கூரை மீதேறி நடத்தி வரும் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் 9 பேரும் ஆப்கானிஸ்தானிய பிரஜை ஒருவரும் ஈராக்கிய பிரஜை ஒருவருமாக 11 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பீஜி நாட்டை சேர்ந்த ஒருவர், கூரையில் இருந்து பாய்ந்து நேற்று தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தநிலையில் தாம் நாடு கடத்தப்படும் உத்தரவு விலக்கிக்கொள்ளப்படாவிட்டால் தாமும் கூரையில் இருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 பேரும் எச்சரித்துள்ளனர்.
தாம் இலங்கைக்கோ அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பப்படக்கூடாது என்றும், அத்துடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை தாம் சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதனையடுத்து வில்வூட் சிறைச்சாலை பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கை சிங்கள இளைஞரை சுட்டுக்கொல்லுமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவு

துபாயில் தமது காதலியின் கணவனைக் கொலை செய்த 23 வயதான இலங்கை சிங்கள இளைஞர் ஒருவரை சுட்டுக் கொல்லுமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை கடந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்டவரின் மனைவி தமது கணவர் ஆபிரிக்கர் ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
எனினும் சாட்சியங்கள். புஸ்பகுமார என்ற இலங்கையைச் சோ்ந்த இளைஞருக்கும் குறித்த பெண்ணுக்கும் தொடர்புகள் இருப்பதை உறுதிப்படுத்தின.
இதனை அடுத்து மூன்றாவது முறையாக நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணின் கணவர், புஸ்பகுமார என்ற சிங்கள இலங்கையரால் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரை சுட்டுக் கொல்ல துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 பில்லியன் புகைப்படங்கள் தரவேற்றம் : ஃபிலிக்கர் அறிவிப்பு

  5 பில்லியன் புகைப்படங்கள் என்ற மைல்கல்லினை தாம் எட்டியுள்ளதாக ஃபிலிக்கர் அறிவித்துள்ளது. 

ஃபிலிக்கர், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சேகரிப்புத் தளமாகும். இணைய சமூகம், இலகுவாக தமது ஒளிப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றைச் சேமித்துப் பகிர ஏதுவான தளமாக இது விளங்குகின்றது. 

இது பிரபல யாஹூ நிறுவனத்திற்கு உரித்துடையது. 5 பில்லியன் புகைப்படங்களில் இறுதியானதை 'யியோஹாரன்' என்ற பாவனையாளரே, தரவேற்றம் செய்துள்ளார்.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 30,000 படங்கள் அதன் இணையத்தளத்தில் தரவேற்றப்படுவதாக ஃபிலிக்கர் தெரிவிக்கின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஃபிலிக்கர் 2 பில்லியன் இலக்கினை அடைந்தது. _