Tuesday, September 21, 2010

இலங்கை சிங்கள இளைஞரை சுட்டுக்கொல்லுமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவு

துபாயில் தமது காதலியின் கணவனைக் கொலை செய்த 23 வயதான இலங்கை சிங்கள இளைஞர் ஒருவரை சுட்டுக் கொல்லுமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை கடந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்டவரின் மனைவி தமது கணவர் ஆபிரிக்கர் ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
எனினும் சாட்சியங்கள். புஸ்பகுமார என்ற இலங்கையைச் சோ்ந்த இளைஞருக்கும் குறித்த பெண்ணுக்கும் தொடர்புகள் இருப்பதை உறுதிப்படுத்தின.
இதனை அடுத்து மூன்றாவது முறையாக நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணின் கணவர், புஸ்பகுமார என்ற சிங்கள இலங்கையரால் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரை சுட்டுக் கொல்ல துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment