இதை ஆராய்ந்த வைத்திய நிபுணர்கள் இது அவரின் நிறமூர்த்தம் விகாரம் காரணமாக இச் சதைகள் வளர்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். இதை அகற்ற குறைந்து ஆறு தடவைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து குறித்த நபர் கூறுகையில் இந்த பிரச்சனை காரணமாக தன்னால் ஒரு வேலையும் செய்ய முடியாம உள்ளதாகவும் என் முகம் பார்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளதால் எமது பகுதி மக்கள் என்னுடன் பழகுவதற்கே பயப்படுவதாகவும் கவலை தெரிவித்தார். |
Sunday, September 26, 2010
23 KG சதையை முகத்தில் கொண்டுள்ள விசித்திர மனிதன்
இணையக்கோட்டை முரட்டு ரவுடிகள்

கல்லூரிக்காலங்களில் வேடிக்கைக்காக இரவு நேரத்தில் மின்சாரத்தடையின் போதோ அல்லது பட்டப்பகலில் போர்வை போத்தியோ பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். அதாவது யார் அடிக்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் அடி வெளுக்கப்படும். வெளிச்சம் வந்ததும் பார்த்தால் எல்லோரும் அவரவர் இடத்தில் இருப்பார்கள். அப்படி இணையத்தின் பின்பக்கம் மறைந்து கொண்டு தாக்குபவர்கள் பற்றியும் அக்கலையின் நுட்பங்கள் பற்றியும் இப்பதிவில்.
சின்னக் குழந்தைகளைத் தாக்கினால் அது இணைய அச்சுறுத்தல் (cyber bullying) என்றும், மீசை முளைத்த குழந்தைகளைத் தாக்கினால் இணையத் தொந்திரவுகள் (cyber stalking/cyber harassment) என்றும் இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைப்பின்னல்கள் பெருகிப்போய்விட்ட இணையத்தில் ஒரு தனி நபரைப் பற்றித் திரித்து எழுதி இணையத்தில் வலம் வரச்செய்வதென்பது சுடுதண்ணி வைப்பது போல் மிகமிக எளிது. இதை ஏன் செய்கிறார்கள்? தனிப்பட்ட வன்மம் அல்லது மனவியாதி இரண்டில் ஒன்றாக இருக்கலாம். இணைய உலகத்தில் கருத்து விவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டேயிருந்தாலும், கருத்துக்களைத் தாக்கி விவாதிக்காமல் கருத்துச் சொல்லும் நபரின் இனம், மொழி ஆகியவற்றைச் சாடித் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதும் அன்பர்களாலேயே இணைய ரவுடித்தனம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நிஜ வாழ்வில் முகம் காட்டி மோதும் அளவுக்குக் கூட சில இணையத்தகராறுகள் செல்வதுண்டு.
இவற்றை எப்படிச் சமாளிப்பது?. உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது. அனேக இணையத் தொந்திரவுகள் அடையாளத்திருட்டு(identity theft) மூலமே நடைபெறுகிறது. அதுபோக இணையத்தளங்களிலோ அல்லது பதிவுகளிலோ கருத்து மோதல்களில் பெரும் காலத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கருத்தை ஒரே முறை பதிவு செய்வதோடு இணையத்தின் மூலம் நாம் செய்யும் சமூக சேவையினை முடித்துக் கொள்வது நன்று. கருத்துக்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்பதெல்லாம் காலவிரயம் என்பது அனுபவசாலிகளின் கருத்து. இணையத்தில் பலதரப்பட்ட நபர்கள் வருவார்கள், இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.
இந்தியாவின் முதல் இணையத் தொந்திரவு குற்றப்பதிவு தில்லியைச் சேர்ந்த திருமதி. ரித்து கொஹ்லி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. காரணம் அவரது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து தினமும் ஒருவர் இணைய அரட்டையில் கும்மியடித்து வந்ததும், அதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில் ஏகப்பட்ட நபர்கள் திருமதி. ரித்து அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து 'வரலாமா' என்று கேட்க ஆரம்பித்ததும் தான். பின்னர் வழக்கம் போல வலையிணைப்பு முகவர் எண் (I.P) மூலம் குற்றவாளி கணடுபிடிக்கப்பட்டு முட்டிக்கு முட்டி பெயர்க்கப்பட்டாலும் இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து திருமதி. ரித்து கொஹ்லிக்கு மட்டுமே வெளிச்சம்.
தனிப்பட்ட நபர்களால் மட்டுமின்றி கூட்டம் சேர்ந்து கொண்டு ஒருவரைக் குறிவைத்து இணையத்தில் தொந்திரவு செய்வதும் இணையத்தின் மாமூல் வாழ்க்கையில் ஒரு பகுதியே. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?. நிஜ வாழ்க்கையைப் பாதிக்காதவரை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவதே சிறப்பு. கவன ஈர்ப்பைப் பெறுவதே குற்றவாளிகளின் முதல் நோக்கம். அது கிடைக்காத வருத்தத்தில் அவர்களாகவே மனநலக் காப்பகத்தில் சென்று சேர்ந்து கொள்வதின் வாய்ப்பதிகம். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். இணையத்தில் அனைவரது நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கால அவகாசங்கள் வேறுபடுமே ஒழிய, எவரும் தப்பிக்க முடியாது.
உங்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோரின் படத்தினை வலைப்பக்கங்களிலோ, பதிவுகளிலோ பிரசுரிக்கும் முன் எதையும் தாங்கும் இதயம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நலம்.ஒரு தாய் தன் குழந்தையின் படத்தையே, 'ஆதரவற்ற குழந்தை, உதவி செய்யுங்கள்' என்ற கோரிக்கையுடன் மின்னஞ்சல்களில் பார்த்த சம்பவத்தை உலகம் கண்டிருக்கிறது. தொலைபேசி எண்கள், பழைய எண், புதிய எண் போன்ற நுணுக்கமான விவரங்களுடன் கூடிய வீட்டு முகவரி ஆகியவற்றை வலையேற்றுவதைத் தவிர்க்கவும். அதனினும் முக்கியமானது மற்றவர்களுடைய விவரங்களை அவர்களது அனுமதியின்றி பிரசுரிப்பது.கடந்த காலத்தில் இணையத் தொந்திரவினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால் அரசு அவர்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழரின் பிரத்யேக மின்னஞ்சலை இணையத்தில் வெளியிட்டு, 'வந்து குவியும் மின்னஞ்சல்களை அழித்து, அழித்து மணிக்கட்டு வலிக்கிது, அழுதுருவேன்..' என்று அவரை ஊடகத்தில் கதற விட்ட கதை ஒரு சமீபத்திய உதாரணம்.
இவ்வளவுக்குப் பிறகும், இணையத்தின் மூலம் தொந்திரவுகள் ஏற்படின் கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் பட்டியலில் உங்களுக்கு அருகே வசிக்கும் நண்பருக்கு பேசா அழைப்புக் கொடுத்து (missed call) விவரத்தைச் சொன்னால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.
உங்களின் இணைய அனுபவம் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்க வாழ்த்துக் கூறி இப்பதிவு நிறைவடைகிறது.
நியூயோர்க் மேடையில் 'வக்கா வக்கா' - நேரடியாக பாடி ஆடி அசத்திய ஷகீரா!
இரு தினங்களுக்கு முன்ர் செப் 22, நியூயோர்க்கின் மெடிசன் ஸுகொயர் கார்டன் அரினாவில் அவரது பிரமாண்ட இசை நிகழ்வு நடந்தது. அதில் நீண்ட நாட்களின் பின், தென்னாபிரிக்க உலக கிண்ண போட்டிகளுக்காக இசையமைத்த 'வக்கா வக்கா' பாடலை நேரடியாக பாடி நடனமாடினார். ரசிகர்களின் உற்சாக கரகோசத்தின் மத்தியில் அந்தப்பாடலில் அரங்கமே மூர்ச்சை இழந்த காட்சிகள் இவை (ஷகீராவின் ரசிகை ஒருவர் தனது கமெராவில் படம்பிடித்தது)
இளைஞர்களுடன் நடனமாட ஷகீரா தயார்!
இசைநிகழ்ச்சிகளில், என்னுடன் ஒரே மேடையில் ஆடுவதற்கு, உங்களுக்கு விருப்பமா? உங்கள் நடனத்திறனை காண்பியுங்கள் என ஷகீரா அழைப்பு விடுத்துள்ளார். இசைநிகழ்ச்சிகளுக்காக வட அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும், இவ்வாறு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கபோகிறாராம்!
சந்தைக்கு வரவுள்ள புதிய இசை அல்பமான 'லோகா' வின் வீடியோ ட்ரேக் அண்மையில் வெளியாகியது. இதன் போதே இவ் அறிவித்தலையும் அவர் வெளியிட்டார்.
சந்தைக்கு வரவுள்ள புதிய இசை அல்பமான 'லோகா' வின் வீடியோ ட்ரேக் அண்மையில் வெளியாகியது. இதன் போதே இவ் அறிவித்தலையும் அவர் வெளியிட்டார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற இசை நிகழ்வு படங்கள்:
உங்களைப்பற்றி ஒரே பக்கத்தில் ஒரு இணையத்தளம்.
இன்னும் பொதுப்பாவனைக்கென அறிமுகப்படுத்தப்படாத போதும் பரீச்சார்த்தமாக இயங்கி வருகிறது about.me. நீங்களும் உங்களுடைய பெயரைத் தேர்வு செய்வதற்கு விரைவாக பதிவு செய்துகொண்டால் அதே பெயர்களை உங்களுக்கென்றே ரிசேவ் செய்து வைப்பதாக கூறுகிறார்கள் இவர்கள்.
இணையத்தள முகவரி http://about.me
இணையத்தள முகவரி http://about.me
எம்.வி.சன்.சீ கப்பல் அகதிப்பெண்மணி ஒருவர் குழந்தை பிரவசம்!
எம்.வி.சன்.சீ கப்பலில் மூலம் கனடா வந்திருக்கும் இலங்கை தமிழர்களில், பெண்மணி ஒருவருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரித்தானிய - கொலம்பிய தீவில் உள்ள Maple Ridge நகரத்தில் அமைந்திருக்கும் Alouette Correctional Centre முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருத இப்பெண் அருகில் இருந்த வைத்திய சாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக பிரவசத்திற்கென அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இப்பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. இவரது கணவர், மற்றுமொரு நகரத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், குழந்தையையும், மனைவியையும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டாரா என தெரியவில்லை.
இக்குழந்தை கனேடிய பிரஜாவுரிமையை பிறப்பால் பெற்றுள்ளது என்பது கனேடிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாயும், சேயும் வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இக்குழந்தை கனடாவில் பிறந்தததினால் கனடிய குழந்தையையாகவே கருதப்படும் எனவும், கனடிய குடியுரிமையை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவல்களை, மேற்படி அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியான மாலினி டியோனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை எம்.வி.சண்.சீ கப்பலில் கனடா சென்ற அகதிகளில் இதுவரை சிறுவர்கள் உட்பட 12 பேர் விடுதலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது..
இக்குழந்தை கனேடிய பிரஜாவுரிமையை பிறப்பால் பெற்றுள்ளது என்பது கனேடிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாயும், சேயும் வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இக்குழந்தை கனடாவில் பிறந்தததினால் கனடிய குழந்தையையாகவே கருதப்படும் எனவும், கனடிய குடியுரிமையை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவல்களை, மேற்படி அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியான மாலினி டியோனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை எம்.வி.சண்.சீ கப்பலில் கனடா சென்ற அகதிகளில் இதுவரை சிறுவர்கள் உட்பட 12 பேர் விடுதலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது..
காமன்வெல்த் வீடியோ தீம் பாடல் - பேஸ்புக்கில் வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் (வீடியோ இணைப்பு)
காமன் வெல்த் போட்டிகள் அக்டோபர் மூன்றாம் திகதி டெல்லியில் தொடங்குகிறது. எனினும் கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் இப்போட்டிகள் நடைபெறுவது பற்றிய எதிர்ப்பிரச்சாரமே வலுப்பெற்று வந்தது. போட்டி மைதானத்தில் குளறுபடிகள்,மேம்பாலம், கூரை இடிந்து வீழ்ந்தமை, தீவிர வாத தாக்குதல், விளையாட்டு வீரர்கள் விலகியமை, என எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை காமன்வெல்த் கமிட்டி எதிர்கொண்டது.
ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி, இப்போட்டிகளை திறம்பட நடத்திமுடிக்க டெல்லி தயாராகிவருகிறது. இந்நிலையில் தான் இப்பாடலின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. பேஸ்புக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடப்பட்ட சில மணித்தியாலங்களில் 5000 ற்கு மேற்பட்ட ரசிகர்களாள் 'லைக்' செய்யப்பட்டும், 1000 ற்கும் மேலான கருத்துப்பரிமாற்றங்களுடனும் உலகம் முழுக்க பயணிக்க தொடங்கியுள்ளது இப்பாடல்!
தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ஜெய் ஹோ பாடலையும், வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற மா துஜே சலாம் பாடலையும் பாடவிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது
பாக். விஞ்ஞானிக்கு 86 வருட சிறைத்தண்டனை: அமெரிக்கா தீர்ப்பு
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிளானி இது தொடர்பாக அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தினரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேற்படி பாகிஸ்தானிய பெண் விஞ்ஞானிக்கு 86 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்படும் போது மோசமான குண்டுகளை தயாரிப்பதற்கான குறிப்புகளையும் நியூயோர்க்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலையும் தன்னுடன் வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.
சிகரட் வகைகளுக்கான வரி உயர்த்தப்படவுள்ளது
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலதிகமாக வரி அறவீடு செய்வதனால் வருடாந்தம் சுமார் 50 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருமானமாக ஈட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அநேகமான சிகரட் பக்கற்றுக்களின் விலை 7.20 சுவிஸ் பிராங்கிலிருந்து 7.40 சுவிஸ் பிராங்ககாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நுகர்வோர் விலை மாற்றத்தை உணரமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்புச் சந்தை மூலமான சிகரட் விற்பனையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
அமெரிக்க டொலருக்கு எதிரான சுவிஸ் பிராங்கின் பெறுமதியில் உயர்வு
கடந்த 30 மாதங்களில் பதிவான அதி கூடிய பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2008ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 0.98 சுவிஸ் பிராங்குகளாக பதிவாகியுள்ளது. சுவிஸ் பிராங்கின் ஸ்திரமான நிலைமை வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என சுவிஸ் தேசிய வங்கி அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து உற்பத்தி துறை பின்னடைவுகளை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
செல்போன் கேமிராவில் உருவாக்கப்பட்ட கின்னஸ் சாதனை திரைப்படம்
லண்டனைச் சேர்ந்த பிரபல நிறுவனம் வாலாக் அன்ட் குரோமின்ட். இது ஏராளமான குறும் படங்கள், அனிமேஷன் படங்கள், திரைப்படங்களை தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் ஆர்தமான். இவர் பிரபல மொபைல் போன் நிறுவனமான நோக்கியோ என்-8 எனும் மாடல் ஸ்மார்ட் கேமிரா போன் மூலம் டாட் எனும் பெயரில் மெல்லிய திரைப்படத்தினை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதில் 9 மிமி. உயரமான பொம்மையினை முக்கிய ஆக் ஷன் பாத்திரமாக உருவாக்கியுள்ளார். இவரது இந்த முயற்சி கின்னஸில் இடம்பிடித்துள்ளது. |
15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ் எழும்பு கூடு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
உலகில் வாழ்ந்து மடிந்த டயனோசரஸ்சின் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அரியவகை டயனோசரஸ்கள்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோன்டி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வினோதமான அறிய வகை விலங்குகளின் 2 ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
அதில் முகதாடையின் முன் புறத்தில் காண்டா மிருகத்தை போன்ற ஒரு கொம்பு இருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் மற்ற 11 கொம்புகளும் ஆக மொத்தம் 15 கொம்புகள் இருந்தன. எனவே, அந்த அறிய விலங்கின் எலும்பு கூடுகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.
அவையும் டயனோசரஸ் வகையை சார்ந்தது என கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது 5 மீட்டர் நீளமும், 2500 கிலோ எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில் இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது.
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த 8 அம்ச திட்டம் வெளியீடு
கடந்த ஜூன் 11ம் திகதி பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஆரம்பித்தது.
இதனை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் பலியானார். இதனால் அங்கு மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இப்பிரச்சினைகு தீர்வினை முன்வைக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக்கூட்டம் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது காஷ்மீர் நிலவரம் குறித்த அனைத்துக் கட்சி குழுவின் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பிக்கப்பட்டு,அந்த அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், காஷ்மீரில் பதற்றத்தை தணிப்பதற்காக, 8 அம்ச தீர்வு திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தீர்வு திட்டம் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார். வெளியிட்ட தீர்வு திட்டம் வருமாறு:
காஷ்மீரில், கலவரத்தின்போது, கல் வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக கைதான அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற வேண்டும்.
பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை குறித்து, காஷ்மீரைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மதிப்புவாய்ந்த நபர் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
பதற்றமான பகுதிகள்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளை காஷ்மீர் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.
உடனடியாக, இராணுவம், துணை இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில், குறிப்பாக ஸ்ரீநகரில், பாதுகாப்பு படையினரை மீண்டும் நிறுத்துவது குறித்து காஷ்மீர் அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.
மூடப்பட்ட கல்வி நிறுவனங்களை காஷ்மீர் அரசு உடனடியாக திறக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு வீணாகி விடக்கூடாது என்பதால், தேவைப்பட்டால், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி கட்டமைப்பு வசதிகளுக்காக, காஷ்மீருக்கு கூடுதலாக ரூ.100 கோடி வழங்கப்படும்.
காஷ்மீரின் பிற பிராந்தியங்களான ஜம்மு, லடாக் ஆகிய பிரதேசங்களின் வளர்ச்சி தேவைகள் குறித்து ஆராய, 2 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். என எட்டு அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. _
இலங்கை-அமெரிக்க நாடுகளின் முதல் பெண்மணிகள் சந்தித்துப் பேச்சு! (வீடியோ இணைப்பு)
| இலங்கை - அமெரிக்க நாடுகளின் முதல் பெண்மணிகளுக்கு இடையில் இன்று காலை நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நாவின் 65 ஆவது கூட்டத் தொடருக்காக நியூயோர்க்கு வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணிகளுக்கு மிசேல் ஒபாமா இன்று விருந்துபசாரம் வழங்கினார். மிசேல் ஒபாமாவால் நடத்தப்படும் "Stone Barns" விவசாய மற்றும் உணவு உற்பத்தி நிலையத்தில் இவ்விருந்துபசார வைபவம் இடம்பெற்றது. |
Subscribe to:
Posts (Atom)



