Sunday, September 26, 2010

எம்.வி.சன்.சீ கப்பல் அகதிப்பெண்மணி ஒருவர் குழந்தை பிரவசம்!


எம்.வி.சன்.சீ கப்பலில் மூலம் கனடா வந்திருக்கும் இலங்கை தமிழர்களில், பெண்மணி ஒருவருக்கு நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு  பெண்  குழந்தை பிறந்துள்ளது. பிரித்தானிய - கொலம்பிய தீவில் உள்ள Maple Ridge நகரத்தில் அமைந்திருக்கும் Alouette Correctional Centre முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருத இப்பெண் அருகில் இருந்த வைத்திய சாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக பிரவசத்திற்கென அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இப்பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. இவரது கணவர், மற்றுமொரு நகரத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், குழந்தையையும், மனைவியையும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டாரா என தெரியவில்லை.

இக்குழந்தை கனேடிய பிரஜாவுரிமையை பிறப்பால் பெற்றுள்ளது என்பது கனேடிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாயும், சேயும் வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இக்குழந்தை கனடாவில் பிறந்தததினால் கனடிய குழந்தையையாகவே கருதப்படும் எனவும், கனடிய குடியுரிமையை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவல்களை, மேற்படி அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியான மாலினி டியோனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை எம்.வி.சண்.சீ கப்பலில் கனடா சென்ற அகதிகளில் இதுவரை சிறுவர்கள் உட்பட 12 பேர் விடுதலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது..

No comments:

Post a Comment