Monday, September 6, 2010

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜனாதிபதியால் திறப்பு (பட இணைப்பு)

  பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட குறித்த ஸ்டேடியத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு முதல் தடவையாக துடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் சி.பி ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். 




___ 

டுவிட்டருக்கு 145 மில்லியன் பாவனையாளர்கள்

  மைக்ரோ புளொகிங் தளமான டுவிட்டர் 145 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியுள்ளது. 

மேலும் அதனை கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பாவிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 62% அதிகரித்திருப்பதாகவும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி இவான் வில்லியம்ஸ் தெரிவிக்கின்றார். 

அதன் கையடக்கத் தொலைபேசி மூலமான பாவனையாளர்களின் அதிகரிப்புக்கு அதன் விசேட 'அப்ளிகேசன்'களே காரணமென அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இவ்விசேட 'அப்ளிகேசன்'களானது 'ஐபோன்', 'பிளக்பெரி' மற்றும் 'அண்ட்ரோயிட்' மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளுக்காக உருவாக்கப்பட்டவை.

இவற்றில் 'ஐபோன்' மற்றும் 'பிளக்பெரி' மூலமான பாவனையாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர் என மேலும் அவர் தெரிவிக்கின்றார்.

இதன் மொபைல் தளம் m.twitter.com ஆகும்.

மேலும் 14 வீதமான கையடக்கத் தொலைபேசிகளின் மூலமான டுவிட்டர் பாவனையாளர்களில் 8 வீதமானவர்கள் குறுந்தகவல்கள் மூலம் மேற்படி தளத்திற்குப் பிரவேசிக்கின்றனர். _