Thursday, September 2, 2010

'பிளக்பெரி' சர்ச்சையால் கூகுள்,ஸ்கைப் தரவுகளில் பிரச்சினை

  இந்தியாவில் நிலவிய 'பிளக்பெரி' சர்ச்சையைத் தொடந்து கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் தரவுகள் தொடர்பில் புதிய பிரச்சினை எழுந்துள்ள்தாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

'பிளக்பெரி' கையடக்க தொலைபேசியில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டினை இரண்டு மாதங்ளுக்குள் சரி செய்ய வேண்டுமென இந்திய மத்திய அரசு காலக்கேடு விதித்துள்ளது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் 'சேர்வர்'களை இந்தியாவில் அமைக்க வேண்டும் எனவும் அதனூடாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அதன் தரவுகளை பரீசலிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமெனவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ஜீ.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனமானது தனது ஜீ மெயில்ல் மின்னஞ்சல் சேவைகளுக்கு தரவுகளை பரிமாணம் செய்யும் அதி உயர் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.

எனவே தான் இதனை அரசினால் பரீசீலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனையடுத்தே தீவிரவாதிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. __

அப்பிள் நிறுவனத்தின் நவீன 'ஐ பொட் டச்' - 'ஐ பொட் நெநோ'

அப்பிள் நிறுவனமானது தனது இசைப்பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் இசையை பிரதானப்படுத்திய சமூகவலை அமைப்பு பிங் , நவீன 'ஐ பொட் டச்' மற்றும் 'ஐ பொட் நெநோ' என்பவற்றை நேற்று அறிமுகப்படுத்தியது.




ஐ பொட் டச்




இப்புதிய 'ஐபொட் டச்'சானது மிகவும் மெல்லிய உருவத்தினை கொண்டது. இதன் திரை 'அப்பிள் ஐ' இன் நான்கில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'ரெடீனா ஸ்க்ரீன்' தொழில்நுட்பத்தினை ஒத்ததாகும்.

மேலும் இது இரண்டு கெமராக்களை கொண்டுள்ளதுடன் ஒரு தடவை இதனை சார்ஜ் செய்வதன் மூலம் 40 மணித்தியாலங்கள் வரை பாடல்களைக் கேட்கவும் 7 மணித்தியாலங்கள் வரை வீடியோக்களைப் பார்க்கவும் முடியும்.

மேலும் வீடியோ பதிவு செய்யும் வசதி, 'வொயிஸ்மெமோ', 'மெப்ஸ்' , 'வொயிஸ் கொண்ட்ரோல்', 'யு டியுப்' , 'நைக் + ஐ பொட்', 'சபாரி வெப்பிரவுசர்' , மெயில் ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

ஐ பொட் நெநோ


மேற்படி 'ஐ பொட் நெநோ' ஆனது தனது முன்னைய 'ஐ பொட் நெநோ'வுடன் ஒப்பிடும் போது மிகச் சிறியதாகும். மேலும் அதன் பாரமும் மிகக் குறைவானது. தொடுந்திரையுடன் அமைக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம். 'வொயிஸோவர்', 'எப் எம் ரேடியோ' , 'நையிக் + மற்றும் 29 மொழிகளில் என்பன இதன் மேலதிக வசதிகளாகும்.

மேலும் 8 ஜிபி நினைவகத்தினைக் கொண்ட 'நெநோ 149' அமெரிக்க டொலர் விலையிலும் 16 ஜிபி 179 அமெரிக்க டொலர் எனவும் விலையிடப்பட்டுள்ளன.

'ஐ டியூன் பிங்'



மேற்படி சமூக வலைப்பின்னல் தளமானது அப்பிளின் பிரபல இசை மென்பொருளான 'ஐ டியூனு'டன் சேர்ந்ததாகும்.

இது இசைப் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் தளம்.

இதன் மூலம் பாவனையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான இசைக்கலைஞர்களைப் பின்பற்ற முடியும். மேலும் அவர்கள் கொள்வனவு செய்யும் இசை வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

மேலும் அக்கலைஞரின் இசை வெளியீடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

எமது நண்பர்களுக்குப் பிடித்தமான இசை தொடர்பான தகவல்களினை இதனூடாகப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் அவர்கள் தெரிவு செய்த பாடல்களையும் செவிமடுக்க முடியும்.

'ஐ போன்' மற்றும் 'ஐ பொட் டச்' என்பவற்றினூடக இச்சேவையைப் பெற முடிகின்றமை இதன் சிறப்பம்சம்.



ஏ9 வீதியில் இராணுவ கண்காட்சி! (படங்கள் இணைப்பு)

வவுனியா - யாப்பாணம் ஏ9 வீதியில் யுத்தத் தளபாடங்கள் போன்றவை படையினரால் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அடுத்த படியாக இப்பொருட்களுக்கு இவ்வீதியில் மவுசு கூடி உள்ளது.

தென்னிலங்கைப் பயணிகள் பேரார்வத்துடன் இவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிநொச்சியில் தகர்க்கப்பட்ட தண்ணீர்த்தாங்கி, ஆனையிறவு யுத்த டாங்கி, மற்றும் இராணுவ நினைவுத் தூபி போன்றவை இவற்றுள் சிலவாகும்.









வயது 14; உயரம் 6 அடி 9 அங்குலம் : அசத்துகிறார் பிரேஸில் சிறுமி! (வீடியோ இணைப்பு)

"எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா?

6 அடி 9 அங்குலம். அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி. 'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவமடைந்து, இளம்பெண்ணாகும் போது இவரது உயரம் எப்படி இருக்கப் போகின்றதோ? திருமணம் என்று வரும் போது இவருக்கேற்ற மணவாளனைத் தேடுவதில் இவரது பெற்றோர் என்ன சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

சூதாட்ட சர்ர்சை: 3 பாக். வீரர்கள் தொடரிலிருந்து நீக்கம்

 சூதாட்டப்புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் வீரர்களான பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் மொகமட் அமீர், மொகமட் ஆசிப் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை பாகிஸ்தான் அணி மேலாளர் யவார் சயீத் இதனை உறுதி செய்துள்ளார். சூதாட்ட விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த 3 வீரர்களையும் அணியிலிருந்து நீக்குமாறு தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த 3 வீரர்களும் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை, இஜாஜ் பட் முன்னிலையில் சந்திக்கவுள்ளனர். 

 

சிலி சுரங்கத் தொழிலாளிகள் நலமாயுள்ளனர் (வீடியோ இணைப்பு)

கடந்த சுமார் ஒருமாத காலமாக சிலி நாட்டில் நிலத்துக்கடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டுள்ள 33 சுரங்கத் தொழிலாளிகளும் நலமாய் உள்ளனர் என்று கடைசியாக வெளியிடப்பட்ட விடியோ படக்காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களை பாதிப்புக்கள் எதுவுமின்றி பத்திரமாக மீட்டெடுக்க முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குழாய் வழியாக நிலத்துக்கு அடியில் செலுத்தப்பட்ட விடியோ கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட படக்காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.

அதில் அவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன.இது இவர்களது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.இவர்களை மீட்டெடுக்க குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் செல்லும் அன அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தல் போத்தலாக பீர் குடிக்கும் மான் (வீடியோ இணைப்பு)

சீனாவில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் உள்ள ஒரு மான் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக தினமும் போத்தல் போத்தலாக பீர் குடித்து காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது

இந்த விடுதியில் பணியாற்றும் ஒரு நபர் ஒருநாள் தண்ணீருக்குப் பதிலாக மானுக்கு பீர் குடுத்திருக்கிறார் அதுவே இப்போது விபரீதமாக மாறிவிட்டது. அந்த மான் தினந்தோறும் குறைந்தது இரண்டு போத்தல் பீர்ரை குடிக்கிறது. அதுதவிர தினமும் வைன்னும் குடிக்கிறதாம்.

ஒரு போத்தல் பீரை ஒரு இழுவையிலேயே அது குடித்து முடித்து விடுகிறதாம் . இதனால் இப்போது அந்த பணியாளரின் முழு ஊதியமும் மானுக்கு பீரும் வைன்னும் வாங்கிக் கொடுக்கவே போய்விடுகிறதாம். அ

ந்த மான் பீர் குடித்துவிட்டு போடும் கூத்தை பார்க்கவே தினமும் அங்கு பலர் வருகைதர தொடங்கியுள்ளனராம்.

'பமகல' வெந்நீரூற்றுக்கள் : துருக்கியின் அற்புத படைப்பு! (பட இணைப்பு)

  இயற்கையின் அருங்கொடையாக உலகுக்கு வழங்கப்பட்ட அற்புதப் படைப்புக்களுள் வெந்நீரூற்றுக்களும் ஒன்று. 

இந்த வகையில், துருக்கியின் டினிஸில் மாகாணத்தில் அமைந்துள்ள பமகல வெந்நீரூற்று மிகவும் பிரசித்தி வாய்ந்தது. உலகிலேயே இது ஒன்று தான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது . இது யுனஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் பரம்பரைச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெண்டிரஸ் நதிப்பள்ளத்தாக்கு தான் பமகலவின் அமைவிடம். இவ்வெந்நீரூற்று 2700மீ உயரமும் 600மீ அகலமும் 160மீ உயரமும் கொண்டது. இதிலிருந்து தூய வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கல்சியம் காபனை அதிகளவு கொண்டிருப்பது சிறப்பம்சம். 

எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 பாகையிலிருந்து 100 பாகை செல்சியஸ் வரை காணப்படும். இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் 'செடிமென்ரரி' என்றழைக்கப்படும் பாறைகள் உருவாகின்றன. 

இப்பாறைகள் ஐஸ்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை 'பஞ்சுக் கோட்டை' என்று அழைப்பர். மலையிலிருந்து 100மீ அடிப்பாகத்தில் இவை அமைந்துள்ளன. 

நோய்களைக் குணமாக்கும் வல்லமை 

பமகல, 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். 

இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டப் பிரச்சினைகள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சார்பான நோய்கள், வாத நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், சமிபாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு உண்டு. 

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இங்கு பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டன. 

இதனால் வெந்நீரூற்றுக்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. 

இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும் மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இவ்வீதியில் மோட்டார் வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. 

தற்போது இங்கேயுள்ள சுற்றுலா விடுதிகளை அகற்றி விட்டு, அவ்விடங்களில் செயற்கை முறையிலான நீச்சற் தடாகங்களை அமைக்க துருக்கியின் சுற்றுலாத்துறையினர் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அது மட்டுமன்றி, இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 

இயற்கையின் அரும்பெரும் சொத்தான பமகல வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

உல்லாசப் பயணிகளின் உள்ளங்கவர்ந்த வெந்நீரூற்றுக்கள் என்றால், அவற்றின் பராபரிப்பும் சிறப்பாகத்தானே இருக்க வேண்டும்?

பமகல வெந்நீரூற்றுக்கள், துருக்கி நாட்டுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம் என்றால் கூட, அது மிகையல்ல.

-தக்ஷாலினி


அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா

அலுவலக கணணி மூலம் இணையதளத்தில் ஆபாச படம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தினைச் சேர்ந்தவர் பவுல்மெக்காலே.இவர் துறைமுகம்,மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டு அவுஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றார். இந்நிலையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அலுவலக விபரங்களை பதிவு செய்து கொள்வதற்காக இணையதள இணைப்புடன் கணணி வழங்கப்பட்டிருந்தது. அப்படி வழங்கப்பட்ட அலுவலக கணனியில் பவுல் மெக்காலே ஆபாசபடம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், இணையதள வாயிலாக சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் புகார் எழுந்தது. கையும் களவுமாக சிக்கிய அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு

ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த கொடூர தண்ட னையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளன. இதுபோன்ற கருத்தை பிரான்ஸ் பிரதமர் சர்கோஷியின் மனைவி கர்லாபுரூனி மற்றும் பிரான்ஸ் நடிகை இசபெல்லா அட்ஜானி ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.
இதற்கு ஈரான் நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “கேஹான்” என்ற பத்திரிகை தனது தலையங்கத்தில் கர்லாபுரூனியை கடுமையாக சாடியுள்ளது. அவர் ஒரு “கபட வேடதாரி” என வர்ணித்துள்ளது.
மேலும் ஒரு பத்திரிகை கர்லா புரூனியையும், நடிகை இசபெல்லா அட்ஜானியையும் “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக வர்ணித்து உள்ளது.
43 வயது சாகினேகை காப்பாற்ற மனித உரிமை போராட்டம் என்ற பெயரில் “பிரான்ஸ் விபசாரிகள்” களம் இறங்கியுள்ளனர் என எழுதியுள்ளது. பிரான்ஸ் பாடகர் பெஞ்சமின் பயோலேயுடன் புரூனிக்கு கள்ளத்தொடர்பு என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு டி.வி.யும் கர்லா புரூனியை கடுமையாக சாடியுள்ளது. இதன் மூலம் அவர் தனது ஒழுக்கமின்மையை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் நாட்டு அரண்மனை வட்டாரம் இந்த விமர்சனங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது.
இதற்கிடையே தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களால் கர்லா புரூனி அதிர்ச்சியில் உள்ளார்.

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை' என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை' என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

80 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளது

Match Fixingஉலக கிரிக்கெட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தான் சூதாட்ட சர்ச்சையில் பிரிட்டீஷ் போலீஸாரின் விசாரணை நடந்துவரும் வேளையில், முன்பு நடந்த ஏராளமான போட்டிகளிலும் முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சூதாட்டம் நடத்திவரும் தங்களது சூதாட்டக் கும்பல் இதுவரை 80 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக இடைத்தரகர் மஸ்ஹர் மஜீத் போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான்-இங்கிலாந்திற்கிடையே நடந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும்,சிட்னியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் லஞ்சம் பெற்று மோசமாக ஆடியதாக பிரிட்டீஷ் ரியல் எஸ்டேட் வியாபாரியும்,ஸ்போர்ட்ஸ் ஏஜண்டுமான மஸ்ஹர் மஜீத் வெளிப்படுத்தியுள்ளார்.
சிட்னி டெஸ்ட் மூலம் மட்டும் எட்டு அரை லட்சம் பவுண்ட்(அரைக்கோடி இந்திய ரூபாய்) சூதாட்டக் கும்பலுக்கு கிடைத்ததாக மஜீத் ஒப்புக்கொண்டுள்ளார். தேவைப்படும்பொழுது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மஜீத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, லண்டனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் அறைகளில் பல மணிநேரம் நீண்ட சோதனையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கணக்கில் இல்லாத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.இது சூதாட்டக்காரர்களிடமிருந்து கிடைத்த பணம் என்று கருதப்படுகிறது.
லட்சக்கணக்கான பண கொடுக்கல் வாங்கல் ஆதாரங்களும் காசோலைகளும் கண்டெடுத்த பாக். வீரர்களின் கூடுதலான மொபைல் ஃபோன்களையும் கண்டெடுத்தனர்.
பிரிட்டனில் வைத்து பொருளாதார மோசடியில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். செப்டம்பர் 22 ஆம் தேதி சுற்றுப்பயணம் முடியும் வரை கைதிலிருந்து தப்ப பாக். கிரிக்கெட் அணி தூதரக உதவியை நாடியுள்ளது.
தங்களுடைய தேசிய அணி அந்நிய நாட்டில் அவமானப்படுவதை தடுக்க பாக். அரசு முயலும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் மூத்த 3 அதிகாரிகள் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியின் உத்தரவின்படி லண்டனுக்கு பறந்துள்ளனர். பிரிட்டீஷ் போலீசாருடன் இணைந்து இவர்கள் விசாரணையில் ஈடுபடுவர். அவமானகரமான தலைதாழ்த்தும் நிலைமை தனது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூஸஃப் ரஸா கிலானி இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடரவேண்டும் என ஐ.சி.சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சியின் ஊழல் ஒழிப்பு பிரிவும் இச்சம்பவத்தில் விசாரணையை மேற்கொள்ளும். புலனாய்வுகளின் அறிக்கை கிடைத்தவுடன் வீரர்கள் குற்றவாளிகள் எனத் தெரியவந்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திற்கும் சூதாட்டம் நடத்தும் ஸ்பாட் பிக்சிங் என்ற சூதாட்டத்தின் ஏஜண்டுகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் தொடர்பை  பிரிட்டீஷ் பத்திரிகையான ‘நியூஸ் ஆஃப் த வேல்ட்’ வெளியிட்டது.
இங்கிலாந்திற்கெதிரான நான்காவது டெஸ்டில் தொடர்ந்து ‘நோ’பால் எறிய பாக்.வீரர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட மஸ்ஹர் மஜீதை இப்பத்திரிகையின் நிரூபர் 150000 பவுண்ட் வாக்களித்து ரகசிய கேமராமூலம் சிக்கவைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக நோபால் எறிய நிரூபர் மஸ்ஹருக்கு பணம் கொடுத்துள்ளார். மஸ்ஹரின் உத்தரவின் படி பாக்.வீரர்கள் ஆஸிஃபும், ஆமிரும் நோபால் வீசினர்.
கைதுச் செய்யப்பட்ட மஸ்ஹர் மஜீதின் அளித்த தகவலின் படி பாக். கேப்டன் சல்மான் பட், வேகப் பந்து வீச்சாளர்களான முஹம்மது ஆஸிஃப், முஹம்மது ஆமிர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் உள்ளிட்ட ஏழு பாக்.வீரர்களை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை செய்திருந்தனர்.

ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தம்

Dictionaryஆங்கில மொழியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக திகழும் ஆக்ஸ்போர்ட் அகராதியின் அச்சு பதிப்பு நிறுத்தப்பட்டு ஆன்லைன் வழி மட்டும் செயல்படும்.
ஆன்லைன் பதிப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அச்சு பதிப்பை பயன்படுத்துவோரின் பல மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியீட்டாளர்களான ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் அறிவித்துள்ளது.
புதிய பதிப்பில் வார்த்தைகளை சேர்க்கும் பணி பூர்த்தியாகும் வேளையில் அச்சுபதிப்பிற்கு போதிய தேவையுடையோர் இருப்பாகளா என்பது சந்தேகமே! என வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்ட் அகராதியின் ஆன்லைன் பதிப்பிற்கு மாத சந்தாதாரர்களிடமிருந்து 20 லட்சம் ஹிட்டுகள் கிடைக்கின்றன. 1989-ம் ஆண்டில் வெளியிட்ட 20 வால்யூங்களைக் கொண்ட தற்போதைய அச்சு பதிப்பு 30000 பிரதிகளே விற்பனையாகியுள்ளது.
1165 டாலர் இதன் விலை. ஆக்ஸ்போர்ட் அகராதியின் முதல் பகுதி வெளியானது 1884 ஆம் ஆண்டிலாகும். தொடர்ந்து பிரபலமான அகராதியின் முழுப்பதிப்பும் வெளியானது 1928 ஆம் ஆண்டில்.
சாமுவேல் ஜான்சன் 1755 ஆம் ஆண்டில் வெளியிட்ட ’எ டிக்சனரி ஆஃப் இங்கிலீஸ் லாங்குவேஜ்’ என்ற அகராதிக்கு பிறகு முழுமையான அகராதி ஆக்ஸ்போர்ட் அகராதியாகும்.
அகராதியின் தற்போதைய பதிப்பில் (இரண்டாம் பதிப்பு) 2,91,500 வார்த்தைகள் உள்ளன. ஆக்ஸ்போர்ட் அகராதி ஆன்லைனில் செயல்படத் துவங்கியது 2000 ஆம் ஆண்டிலாகும்.
பணம் கட்டும் சந்தாதாரர்களுக்கு மிக எளிமையாகவும்,வேகமாகவும் வார்த்தைகள் கண்டறிவதற்கான வசதியை இது ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இணைத்து இந்த அகராதி அப்டேட் செய்யப்படும்.

பாக்.பெருவெள்ளம்:முஸ்லிம் நாடுகள் 100 கோடி டாலர் நிதியுதவி

Flood Victims
பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 100 கோடி டாலர் அளிக்க முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கான்ஃப்ரன்ஸ்(O.I.C) முடிவுச் செய்துள்ளது. இவ்வமைப்பின் தலைவர் இக்மாலுதீன் இஹ்ஸா நோக்லூ இதனை தெரிவித்துள்ளார்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண வருகை புரிந்திருந்தார் அவர். நேற்று முன்தினம் தெற்கு சிந்துவில் சில பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தன.இது நிலைமை மேலும் மோசமடையச் செய்தது.இந்த சூழலில்தான் முஸ்லிம் உலகின் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், துருக்கி, கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவ நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் பணம் நிதியுதவியாக வழங்கப்படும் என இஹ்ஸா நோக்லூ தெரிவித்தார்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு நிவாரண உதவிகள் அரசு சாரா அமைப்புகள் மூலம் வழங்குவதை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி விமர்சித்துள்ளார். இத்தகைய உதவிகளை அரசுசாரா அமைப்புகள் தவறாக பயன்படுத்தும் என கிலானி சுட்டிக்காட்டினார்.
இரண்டுகோடி மக்களை பாதித்த வெள்ளப்பெருக்கில் 2000 பேர் மரணித்தனர். ஏறத்தாழ ஒருமாதம் ஆகியும் கூட முகாம்களில் துயருறும் மக்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. முகாமில் நோய் பரவுவதாக துயர்துடைப்பு அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையேதான் சிந்துமாகாணத்தில் சுஜவான் பிரதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

அமெரிக்க மக்களிடம் ஒபாமா வேண்டுகோள்: முஸ்லிம்களும் இந்நாட்டின்

Obamaஅமெரிக்காவில் முஸ்லிம்களும் உரிமைகள் கொண்ட குடிமக்களாவர் அவர்களுக்கு பிறருக்குரிய உரிமைகள் போலவே அனைத்தும் கிடைக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
செப்.11 உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார் ஒபாமா.
கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில் திங்கள் கிழமை என்.பி.எஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள நேர்முகப்பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார் அவர்.
அவர் கூறியதாவது:”அமெரிக்க குடிமகனுக்கான மதச் சுதந்திரத்தைக் குறித்துதான் இஃப்தாரில் உரை நிகழ்த்தினேன். மாறாக, அது ஏதேனும் மஸ்ஜித் நிர்மாணத்தைக் குறித்தல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்ட மதிப்பீடுகளைப் பற்றித்தான் உரை நிகழ்த்தினேன். எனது வார்த்தைகள் மிகவும் தெளிவாகயிருந்தது. அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயமோ, யூத ஆலயமோ அல்லது ஹிந்துக் கோயிலோ கட்டுவதாகயிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் கூறியிருப்பேன்.
இஸ்லாத்தை விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு பிரிவினரை வேறுபடுத்தி பார்க்கவியலாது. முஸ்லிம்களும் அமெரிக்க குடிமக்களே! இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் உயர்த்திப்பிடித்துள்ள கொள்கையாகும். அதனை பாதுகாப்பது அதிபர் என்ற நிலையில் எனக்கு பொறுப்புள்ளது.
சட்டம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒன்றே. அதனை மீண்டும் உறுதிப்படுத்தவே நான் விரும்புகிறேன். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஈராக்கிற்கு சென்று போர் செய்து திரும்பிய முஸ்லிம்களும், இந்த நாட்டில் பதவிகளை வகிக்கும் முஸ்லிம்களும் உண்டு. அவர்களிடம், நீங்கள் உங்கள் மதத்தை துறந்தால்தான் இந்த நாட்டில் வாழமுடியும் என்று சொல்வதற்கு எவரால் இயலும்?” இவ்வாறு ஒபாமா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ஒபாமா இஸ்லாமிய மத நம்பிக்கையாளர் என்று பிரச்சாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்: “அதில் எனக்கு கவலையில்லை. தவறான பிரச்சாரங்கள் இந்த ஊடக உலகில் சகஜமானது. எப்பொழுதும் என்னால் எனது பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிவிட்டு அலைய முடியாது. உண்மைகள் உண்மைகளாகும். வதந்திகளைக் குறித்து எனக்கு பதட்டம் இல்லை.” என ஒபாமா கூறினார்.
ஒபாமா தற்பொழுதும் முஸ்லிம் என்று நம்பக்கூடியவர்கள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர் என கடந்தவாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
குவைத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க குடிமகன் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபும் அவருடைய இந்திய மனைவி டெய்ஸி கானும் இணைந்து ‘கொர்தோவா ஹவுஸ்’ என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கி வைத்த 10 கோடி டாலர் மதிப்பிலான திட்டம்தான் சர்ச்சையைக் கிளப்பிய க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் திட்டம்.
ஜிம்னேஷியம், தியேட்டர், நூலகம், ரெஸ்ட்ராண்ட், பிரார்த்தனை ஹால் உள்ளிட்ட 13 மாடி இஸ்லாமிய கம்யூனிட்டி செண்டர்தான் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யூத கம்யூனிட்டி செண்டருக்கு சமமான இந்த கலாச்சார மையம் நிர்மாணம் பூர்த்தியானாலும் கூட தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளான க்ரவுண்ட் ஜீரோவிலிருந்து காண்பதற்கு முடியாத தொலைவிலாகும்.
நியூயார்க்கில் பிரபல அமெரிக்க சொஸைட்டி ஃபார் அட்வான்ஸ்மெண்ட் என்ற அமைப்புடன் இணைந்து தனியார் நிலத்தில் கட்டத் தீர்மானித்திருக்கும் கலாச்சார மையத்திற்கு இஸ்லாத்தின் விரோதிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
யூத மதத்தைச் சார்ந்த நியூயார்க் மேயர் மைக்கிள் ப்ளூமெர்க் மஸ்ஜித் கட்ட அங்கீகாரம் அளித்தும் கூட அமெரிக்க ஊடகங்கள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.
இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

“நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.
புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் செயல்படும். இந்த ரோபோ, தானே எழுந்து நிற்கும்; எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்; தவழும். இந்த புதிய ரோபோவில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன. அதன் காது பகுதியில், இரண்டு மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. உடல் பகுதியில் மோட்டார் மற்றும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரோபோ குறித்து இதை உருவாக்கிய குழுவின் இயக்குனர் அசடா மினோரு கூறியதாவது:

மனிதர்களுடன் சேர்ந்து வாழும் திறமை பெற்றுள்ள ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் லட்சியம். அதற்கு தேவை மனிதர்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை தயாரித்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ரோபோ திட்டம், குழந்தைகளை மையமாக கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
பிறந்த குழந்தை ரோபோவைத் தவிர, குழந்தைகள் ரோபோக்களும் இந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள், மனிதர்களின் பேச்சை புரிந்து கொள்ளும்; பொருட்களை அடையாளம் காணும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்கும். “கின்டி’ என்ற இன்னொரு ரோபோவையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ஐந்து வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ, முகத்தில் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனித வளர்ச்சியை ஆராய்வதற்காக இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனினும், மனித இன வளர்ச்சி மர்மத்திற்கு இதுபோன்ற ரோபோக்கள் மூலம் விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறித்தான்!

கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்

நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடந்தது. அதன் விவரம்: நேர்காணலுக்கு செல்வோர் மிடுக்கான ஆடைகள் அணிந்தால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பெண்கள் அணியும் உடையில் கவர்ச்சி அளவோடு இருந்தால் நல்லது. அதுவே, அதிகமானால் வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.
இதுபோன்ற உடைகளால் தவறான எண்ணம் ஏற்படுவதே காரணம். ஆண்களை பொருத்தவரை இஸ்திரி செய்யாத சட்டை, கனமான பேன்ட், பொருந்தாத டை போன்றவற்றை அணிந்து செல்வதால் புறக்கணிக்கப்படுவோர் அதிகம்.

1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு


ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி ஜார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை ஜார் என அழைப்பர். ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது. சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார். ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தினால் அந்நாட்டின் கடைசி ஜார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 1600 டன் தங்கப்புதையலை கைப்பற்றி சைபீரியாவில் உள்ள உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும் பைகால் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டது. இதை ரஷ்யாவின் மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் கண்டுபிடித்தனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஏரியின் பராமரிப்புப்பணிக்கு செலவிடப்படும் என சைபீரியா அறிவித்துள்ளது.

இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா

இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஆரியவதி என்ற பெண் மீது எஜமானர் சித்திரவதைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மீது ஆணிகள் ஏற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுவதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளும் நேற்று தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.