Wednesday, October 6, 2010

கோடைக்கால கூந்தல் பாரமரிப்பு

 நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

* குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

* தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும். 
..

கெட்ஜார் வழங்கும் இலவச மொபைல் கேம்ஸ்

  ' கெட்ஜார் ' மற்றும் 'க்ளு' மொபைல் என்பன கைத்தொலைபேசி மென்பொருள் தரவிறக்கத்தளம் (அப்ளிகேசன் ஸ்டோர்) மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான வீடியோ கேம்ஸ் வெளியீட்டு நிறுவனங்கள் ஆகும்.

தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இலவசமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கான கேம்ஸ்களை தரவிறக்கம் செய்யும் வசதியினை தங்கள் பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இவ்வசதியானது இரு வாரங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ரோயிட்டினை தளமாக கொண்டியங்கும் கையடக்கத் தொலைபேசிகள், ஐ-போன், பிளக்பெரிகள் உட்பட அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

பிரெய்ன் ஜீனியஸ் 2 , மிஸ்ட்ரீஸ் ஒப் டயிம், பில்ட்ட லொட், ரேஸ் ட்ரய்வர் கிரிட் ஆகிய பிரபல கேம்ஸ்கள் இதில் உள்ளடங்குகின்றன.

பொதுவாக இவற்றின் விலை சுமார் ஒன்று முதல் 5 அமெரிக்க டொலராகும்.

அவர்களில் உத்தியோகபூர்வ இணையத்தளமான /www.getjar.com/mobile-all-games/ இல் கேம்களை தரவிறக்கம்செய்து கொள்ளமுடியும். _

இந்திய வடக்குப் பகுதியில் புதிய மொழி கண்டுபிடிப்பு

  இந்தியாவின் வடக்கு பகுதியில் புதிய மொழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் 'கோரோ' என்ற மொழியைப் பேசுவோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

'கோரோ' எனப்படும் இந்த மொழியை பேசுவோர் சுமார் 800 முதல் 1200 வரையான எண்ணிக்கையில் அங்கு வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. . 

நேஷனல் ஜோகிராஃபிகல் சேனல் குழுவின் 2008 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த 'கோரோ' மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. 



அதேவேளை, இந்த கோரோ மொழி திபெத்தோ- பர்மன் குடும்பத்தை சேர்ந்தது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். __

உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் கலைப் படைப்புக்களுடன் - லண்டனில் ஒரு அரிய கண்காட்சி



உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் கண்காட்சி ஒன்று லண்டனில் நடைபெற்று வருகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மரவேலைப்படு சிற்பம், கூண்டுக்கிளி சிற்பம் முதல் டாவின்ஸி, ராபெல், கோயா, ரூபென்ஸ், டாவின்ஸி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் வரை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள எல்லாமே அரிய வகை கலைச்சிற்பங்கள் என்ற ரீதியில் இவ் ஓவியக்கண்கட்சி பிரபலமடைந்து வருகிறது. பண்டைய காலத்தின் 200 புகழ் பெற்ற ஓவியர்களின் சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் இக்கண்காட்சிக்கு அழகு சேர்க்கின்றன.
இவை வருகிற டிசம்பர் 12 ம் திகதி வரை மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். லண்டனின் ரோயல் அக்கெடெமி ஆப் ஆர்ட்ஸ் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சியிலிருந்து சில புகைப்படங்கள்
லண்டனின் 'த கார்டியன் இணையத்தளம்' அண்மையில்இந்தியாவின் பெங்களூர் நகரின் தெருவோர கட்டிச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் முரல்ஸ் (Murals) வகை ஓவியங்களின் சில புகைப்படங்களை பிரசுரித்திருந்தது. இதோ அப்பதிவிலிருந்து சில புகைப்படங்கள்
இந்த இரண்டு புகைப்படத்தொகுப்பிலும், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வித்தியாசமானவை தான். ஆனால் ஓவிய படைப்பில் ஒரு மெல்லிய ஒற்றுமை மேலிடுகிறது என்பதை மறுக்க முடியாது.

இரண்டு வயது சிறுமியை மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டி வைத்து பெற்றோர் வேலைக்கு சென்ற கோரம் (படங்கள் இணைப்பு)

மின் கம்பத்தில் இரண்டு வயது சிறுமியை கட்டி வைத்து விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர் . எதுவும் அறியாத குழந்தை சங்கிலியை கையில் பிடித்தவாறு வீதியில் நின்ற வேளை அவ்வழியால் வந்தவர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து காவல் துறையினர் குழந்தயை மீட்டு சென்றுள்ளனர் .

மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டி அதில் ஒருபகுதியை குழந்தையின் காலில் பூட்டு போட்டு பூட்டி வைத்து விட்டு சீனா நாட்டு தம்பதிகள் வேலைக்கு சென்றுள்ளனர் . இந்த சம்பவத்தை கேள்வி பட்ட மக்கள் கொதிப்பில் உள்ளனர் . பாவம் இந்த பிஞ்சு ... இவங்க பெற்றோரா அல்லது ....! 



கணணி தொழில்நுட்பத்தில் ஒபாமாவை உருவாக்கினாரா மகிந்தா? (படம் இணைப்பு)



ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தனது பரிவாரங்களுடன் நாடு திரும்பி நான்கு நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் இவ்வாறான புகைப்படம் வெளியிடப்பட்டமை ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படத்தில் காணப்படும் சில யதார்த்தத் தன்மை மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதியும், பராக் ஒபாமாவும் சந்தித்ததாக எந்த ஊடகங்களும் செய்திகளை வெளியிடவில்லை. அப்படியான சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்குமானால் அரச ஊடகங்கள் இதுவரை காலமும் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை.

இதனால் இந்தப் புகைப்படம் சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.

கணவாயின் விஷத்தில் புதிய மருந்து


ஒக்டோபஸ்சின் விஷத்தில்  இருந்து புதிய மருந்து ஒன்று கண்டுப்பிடிக் கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் பல்கலைக்கழகம், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் ஹம்பர்க் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து  இந்த புதிய கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளன.

அந்தாட்டிக்கா கடற்பகுதியில் இருந்து புதிய நான்கு அக்டோபஸ்கள் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளன.

இவை மிகவும் விஷதன்மை கொண்டதாக காணப்பட்டுள்ளது.

இதன் விஷத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகளின் பின்னரே இந்த புதிய மருந்து தொடர்பான அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது.

1850 இல் காணாமல் போன கப்பல்



கனடாவின் ஆற்றிக் பிரதேச கடற்பரப்பில் 150 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன பிரித்தானிய கப்பல் ஒன்றை கனேடிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.

ஆநசஉல டீயல  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனி தற்காலிகமாக அகன்றசமயம் எச்.எம்.எஸ் இன்வெஸ்ரிகேற்ரர் என்ற கப்பல் வெளியில் தென்பட்டது
கடலின் அடியில் பதினொரு மீற்றர் ஆழத்தில் உள்ள இந்தகப்பல், அதிகம் பாதிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
றொபேட் மக்லூர் என்பவரின் தலைமையில் பிரித்தானியாவில் இருந்து 1850 ம் ஆண்டு காணாமற் போன கப்பல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் எச் எம் எஸ் இன்வெஸ்ரிகேற்றர் கப்பல் புறப்பட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தக் கப்பல் பனியில் சிச்கியதைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்கள் வெளியேறினார்கள்.
ஆட்டிக் பிராந்தியதில் உள்ள நோர்த்வெஸ்ட் பசேஜ் என்ற கடற்பாதையை றொபேட் மக்லூர் கண்டுபிடித்தா ரென்பதால், அந்தக் கப்பல் கண்டு பிடிக்கப்பட்டமை முக்கியமானதென தெரிவிக்கப்படுகிறது.

சிவப்புதான் பெண்ணுக்கு பிடித்த கலர்




சிவப்பு சட்டைகளை அணிந்திருக்கும் ஆடவர்கள் பெண்களை அதிகமாக ஈர்க்கக் கூடியவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது

ஏனைய நிற மேற்சட்டைகளை அணிந்திருப்பவர்களை காட்டிலும்  சிவப்பு நிற மேற்சட்டைகளை அணிந்திருப் பவர்களையே பெண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது

சிவப்பு சட்டைக்காரர்கள் தமக்கு கம்பீரமா னவர்களாக காட்சியளிப்பதாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் தம்மை இலகுவில் கவரக் கூடியவர்களாக இருப்பதாகவும்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் குறிப் பிட்டுள்ளனர்

பெட் மேன் ஏலத்தில்



பெட் மேன் சித்திரக்கதையின் முதல் பிரதி அமரிக்காவில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது

இந்தநிலையில் இந்த சித்திரக்கதை பிரதி 40 ஆயிரம் டொலர்கள் வரை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார் க்கப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு பெட்மேன் சித்திர கதையின் முதல் பிரதி வெளியானது

இதேவேளை பெட்மேன் பகுதி இரண்டு மற்றும் பகுதி நான்கு  ஆகியனவும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இவை சுமார் 5000 ஆயிரம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படும் எதிர்ப்பார் க்கப்படுகிறது

பொய்கூறி தப்பிய பெண்


சுவாரஸ்யமான பொய் ஒன்றை சமயோசிதமாக கூறி, ஆயுதங்களுடன் வந்த திருடன் ஒருவனிடம் இருந்து, தமது மடிகணனியை அமெரிக்க பெண் ஒருவர் பாதுகாத்துக் கொண்டுள்ளார்.

ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த திருடன், வீட்டில் இருந்த அனைத்து உடமைகளையும் கொள்ளை அடித்து செல்ல முற்பட்டுள்ளான். 
பின்னர் குறித்த பெண்ணின் மடிகணனியையும் பறிக்க முற்பட்ட போது, அவர் பின்தொடரும் கருவி என பொய்யாக கூறியுள்ளார்.
அதாவது இந்த கணனி எடுத்துச் செல்லப்படும் இடங்களை, செய்மதி ஊடாக அவதானிக்க முடியும் என கூறியதைத் தொடர்ந்து, திருடன் அச்சத்தில் கணனியை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் தொடர்பில் தமது காதலருக்கும், காவற்துறைக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து, திருடன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிட்லரின் பெயரால் சர்ச்சை


ஜேர்மனியின் நாசிப்படைகளின் சர்ச்சைக்குரிய சர்வாதிகாரி எடல்ப் ஹிட்லர் சார்பான பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டிய பெற்றோர்கள் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் பெரும் அவதானத்தை எதிர்நோக்கியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவர்களுக்கு சாதமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அடல்ப் ஹிட்லர் உருவத்திலான கேக் ஒன்றை தயாரித்ததனை அடுத்து, அவர்களது குடும்பம் நியுஜேர்சி மக்களினால் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது பெயர் வைப்பதில் அவரவர் சுதந்திரம் என பல பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஹிட்லர் கூட அவர் பிறந்த உடன் கொடூர செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பின்னரே அவர் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடித்திருந்தார் எனவும் சில அமைப்புக்கள் கூறியுள்ளன

இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லை



மலேசிய ஆண்கள், வியட்நாம் மற்றும் சீனப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்
இந்திய பெண்களை அவர்கள் விரும்புவதில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மலேசியாவில், இந்தியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட  பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

இந்தநிலையில், மலேசிய ஆண்கள், எந்த நாட்டைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் மலேசிய ஆண்கள், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண்களை திருமணம்  செய்துக் கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

வியட்நாம் பெண்கள் அப்பாவியாகவும், கற்புடனும், எளிதில் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளாத வர்களாகவும் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இதற்கு அடுத்து, மலேசியாவில் சிறுபான் மையினராக இருக்கும் சீனப் பெண்களையும் மலேசியர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர்.

ஆனால், இந்திய பெண்களை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் சிறுபான் மையினராக இருப்பதால், அவர்களை மணக்க பெரும் போட்டியே நடக்கிறது.

சிலர் காதலித்து மணக்கின்றனர். அதற்கு வாய்ப்பி ல்லாதவர்கள் திருமண தகவல் மையங்கள் மூலம் பெண் பார்க்கின்றனர்.

கல்லூரி மாணவர்களும், படித்துக் கொண்டிருக்கும் போதே, பெண் பார்க்கும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். ஆனால், 21 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு, திருமண தகவல் மையங்கள் உதவ முன்வருவதில்லை.

திருமணத்திற்கு முன், மணமகள் கற்புடன் இருக்கிறாளா? என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் மலேசியர்கள் கேட்கின்றனர்.

காதலிக்க வாய்ப்பில்லாத மலேசியர்கள், திருமண தகவல் மையங்களை அணுகும் போது, அவர்கள் அந்த நபரை, இணையத்தளம் மூலம் மணமகள் தேடும் இணைய தளங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி விடுகின்றனர். அதன் மூலம், அந்த நாடுகளில் வசிக்கும் பெண்களே, அமையும் பட்சத்தில், மணமகனும், மணமகளும் நேரில் சந்திக்கின்றனர்.

பரஸ்பரம் பிடித்திருந்தால், திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர்.  இதற்கு, அந்த திருமண தகவல் மையங்களே உரிய சட்ட உதவிகளை செய்கின்றன.

திருமணத்திற்கு முன், பெண்கள் கற்பு உள்ளிட்ட தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையை மணமகனுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவ்வாறான அறிக்கையை மணமகனிடமிருந்தும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பின்னர், பிரத்யேக விசாவில் வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

;வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதால், அவர்களுக்கு மொழி இடையூறாக இருந்தாலும், விரைவாக அதை கற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலவு சுருங்குவதாக புதிய ஆய்வுகள்




நிலவு அதன் முன்னைய நிலையிலிருந்து சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சயன்ஸ் எனும் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி புதிய ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

நிலவின் உட்பகுதி குளிர்மையடைந்து வருவதால் அதன் மொத்த அளவும் சுருங்கிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள், 14 புதிய பிளவுகளை கண்டறிந்துள்ளன.

கடந்து பல பில்லியன் ஆண்டுகளில் நிலவு 100 மிட்டர் அளவு வரை சுருங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.


நிலவின் இந்த மாற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது என்றும், இது தொடர் நிகழ்வு எனவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது பூமியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.