கனடாவின் ஆற்றிக் பிரதேச கடற்பரப்பில் 150 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன பிரித்தானிய கப்பல் ஒன்றை கனேடிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஆநசஉல டீயல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனி தற்காலிகமாக அகன்றசமயம் எச்.எம்.எஸ் இன்வெஸ்ரிகேற்ரர் என்ற கப்பல் வெளியில் தென்பட்டது
கடலின் அடியில் பதினொரு மீற்றர் ஆழத்தில் உள்ள இந்தகப்பல், அதிகம் பாதிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
றொபேட் மக்லூர் என்பவரின் தலைமையில் பிரித்தானியாவில் இருந்து 1850 ம் ஆண்டு காணாமற் போன கப்பல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் எச் எம் எஸ் இன்வெஸ்ரிகேற்றர் கப்பல் புறப்பட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தக் கப்பல் பனியில் சிச்கியதைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்கள் வெளியேறினார்கள்.
ஆட்டிக் பிராந்தியதில் உள்ள நோர்த்வெஸ்ட் பசேஜ் என்ற கடற்பாதையை றொபேட் மக்லூர் கண்டுபிடித்தா ரென்பதால், அந்தக் கப்பல் கண்டு பிடிக்கப்பட்டமை முக்கியமானதென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment