Wednesday, February 9, 2011

பண உதவி கேட்டு பேஸ்புக் நிறுவனரை தொந்தரவு செய்த நபர்


  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர் பேர்க்கை தொடர்பு கொள்ள முயன்ற நபர் பற்றிய செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே உள்ளன.

பிரதிப் மனுகொண்டா (31) என்ற அந்த இந்திய வம்சாவளி நபர் ஷூக்கர் பேர்க்கை பல முறை சந்திக்க முயன்றுள்ளார். அவரது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் அதற்கு பண உதவி செய்யச் சொல்லுவதுமே அவரது பிரதான கோரிக்கையாகும்.

இவர் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கத்தில் மெசேஜ்களை பதிவு செய்திருந்தார்.




அதன் பின்னர் அவரது வீட்டிற்கு பூங்கொத்துக்களுடன் கடிதமொன்றினையும் அனுப்பியிருந்தார்.



இவற்றிற்கு மேலதிகமாக பேஸ்புக் நிறுவன காரியாலத்திற்கும், ஷூக்கர் பேர்க்கின் வீட்டிற்கும் பல முறை சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் பலமுறை இவருக்கு எச்சரிக்கை செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஷூக்கர் பேர்க்கின் தங்கை ரண்டி மற்றும் காதலி ப்ரிஸ்ஸில்லா சான் ஆகியோரையும் சந்திக்க முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நபர் தொடர்பாக ஷூக்கர் பேர்க் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு அந்த நபரினால் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது


  ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ.வி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _

கூகுள் உதவியுடன் இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் பார்க்க


கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம்.
எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான் வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணனியில் தங்கள் தளம் தெரிவதற்கும், மொபைலில் தெரிவதற்கும் தனித்தனியாக தான் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர்.
பல நிறுவனங்களும் இதற்கு போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது. ஆம் உங்கள் தளங்களை மட்டும் கொடுங்கள். நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி காட்டுகிறோம். யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே.
சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம் என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி இருக்கும்.
இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம் வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு எழுத்தை மட்டும் பார்க்கலாம்.

உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?


குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது.
அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம். குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
1. பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும். பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன.
பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
2. குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை தலையை ஒரு புறமாகத் திருப்பியவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் குழந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்போது குழந்தையின் உடல் விலுக்கென்று சிலிர்த்துக் கொள்ளும். கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஒன்றரை மாதத்தில் குழந்தையின் கழுத்து உறுதியாகும். பொருட்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுபார்க்கும்.
3. மூன்று மாதங்களில் குழந்தைகள் மல்லாந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிபடுத்தும் வகையில் குரலை உயர்த்துதல் போன்றவற்றை தொடரும். இந்த கால கட்டத்தில் குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிபடுத்தும். கைவிரல்களை முன்புபோல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக் கொள்ளும்.
4. 6 மாதங்களில் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் அந்த பக்கமாக குழந்தை தனது தலையைத் திருப்பும். படுத்த வாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும். எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும். குழந்தை நிற்கும்பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
5. குழந்தைகள் 9 மாதங்களில் கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ, உதவியோ இல்லாமல் உட்காரும். அப்புறமாய் குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும். 12 மாதங்களில் குழந்தை எழுந்து நிற்கத் தொடங்கும். நடக்க பழகும். அத்தை, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும். 2 வருடங்களில் கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும். கீழே விழாமல் ஓடிச்செல்லும். புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆர்வபடும். தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும். பிறர் சொல்லுவதை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும். 
6. குழந்தைகள் 3 வயதை அடைந்தால் தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும். "பையனா, பெண் பிள்ளையா" போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும். உடல் பாகங்களின் பெயரைக் கேட்டால் சொல்லி விடும்.பொருட்களை இங்கேயும், அங்கேயும் வைப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளில் உதவி செய்யும். மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும். புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
7. குழந்தைகள் 5 வயதில் துணிகளை உடுத்திக் கொள்ளும்போது ஒரு சில பட்டன்களையாவது போட்டுக் கொள்ளும். குறைந்தபட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும். படிக்கட்டுகளில் பெரியவர்களை போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச்செல்லும். குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும். அந்தந்த காலகட்டத்திற்கும் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
8. குழந்தை நடப்பதற்கு தயாராக இல்லாத நேரத்தில் நடக்க வைத்து வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுப்பது எந்தவித பலனையும் தராது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி, பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் ஏற்படும்.
சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையைவிட சில செயல்பாடுகளில் குறைவான வளர்ச்சியோ அல்லது அதீத வளர்ச்சியோ பெற்று இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துகொள்வது நலம்.

Sony அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ கேம்


Sony நிறுவனம் ஒரு புதிய வீடியோ விளையாட்டை "எக்ஸ்பீரியா ப்ளேஸ்டேசன்" என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது வீடியோ கேம் ஆர்வலர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிராதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணைக் கவரும் கற்பனையுடன் வடிவாக்கப்பட்டுள்ள இவ்விளையாட்டு Sony  போனுக்காக பிரத்தியேகமானதா என்று இன்னும் தெரியவில்லை. Sony யின் எக்ஸ்பிரியா ப்ளே மற்ற ஸ்மார்ட்போன்கள் போலவே இருந்தாலும், திறக்கப்ட்டவுடன் கீ போர்டிற்கு பதிலாக ப்ளே ஸ்டேசன் கண்ட்ரோரில் உள்ளது போலவே ஏராளமான பட்டன்கள் உள்ளன.
விமர்சனங்களுக்கு இடையே வெளியான Sony யின் பி.எஸ்.பி.கோ யின் சிறிய உருவமாக உள்ளது. இதில் 3 ஜி கிடையாது. மேலும் பி.எஸ்.பி.கோ அதில் தரவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகள் மட்டுமே விளையாட முடியும்.
ஆனால் இந்த கேமின் வடிவமைப்பே வேறு. இது ஒரு தொலைபேசியும் கூட. இதில் 3 ஜி தொடர்பும், ஆண்ட்ராய்ட்டும் மற்ற விளையாட்டுகளுக்கான வசதியும் உள்ளது. டிஜி டெய்லியின் ஆசிரியர் மெக் நியூஸ் வேர்ல்ட் கூறுகையில், இது ஒரு முக்கிய மாற்றம். இந்த கேமைப் பார்க்கும் போது பி.எஸ்.பி.க்கோ போல தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் மாறானது.   2011-ம் ஆண்டு வீடியோ கேம்களின் நிறைவான ஆண்டாகவும், இது போன்ற ஒரு கருவி வெளியாவதற்கு இதுவே சரியான நேரமாகும் எனவும் கூறினார். 

தூக்கமின்மை கொலோன் புற்று நோய்க்கு வழிவகுக்கும்

தூக்கமின்மை அதிகக் கொமுப்பு, உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு மற்றும் இறப்பு ஏற்படக் காரணமாக அமைவது போலவே கொலோன் புற்றுநோய்க்கு காரணியாக உள்ளது என கண்டறிந்துள்ளனர்.
யுனிவர்சிடி ஹாஸ்பிடல் கேஸ் மெடிக்கல் சென்டர் மற்றும் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிடி ஸ்கூல் ஆப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளில் இரவில் ஏழுமணி நேரம் உறங்குபவர்களைக் காட்டிலும் ஆறுமணி நேரம் உறங்குபவர்களுக்கே 50 சதவீதம் கொழுப்பு அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவை புற்று நோய்க்கு காரணிகள் ஆகும்.
இந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் முதன்மை ஆய்வாளரான மருத்துவர் லீ கூறுகையில்,"எங்களைப் பொறுத்தவரை தூக்கமின்மை இருப்பது பற்றிய அறியவந்திருக்கும் இந்த ஆய்வு முடிவு இதுவே முதன் முறை. இது புற்று நோய்க்கு காரணமாக அமைகிறது" என்றார்.
இந்த ஆய்வில் கொலோன் புற்று நோய் தாக்கப்பட்ட நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தூக்க நிலைப் பற்றியும், தூக்கத்திலுள்ள சிரமங்கள் பற்றியும், எவ்வளவு நேரம் இரவில் தூங்குகின்றனர் என்பது பற்றியும் கேட்கப்பட்டது. இதன் மூலம் புற்று நோய் உள்ளவர்கள் 6 மணி  நேரத்திற்கும் குறைவாக உறங்குகின்றனர் என தெரிய வந்துள்ளது. மேலும் ஆண்களுக்கே பெண்களைக் காட்டிலும் இக்குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தை அதிகரிப்பது மற்றும் நன்றாக உறங்குவதற்கான முயற்சிகள் இந்த புற்று நோய்க்கு நல்லதல்ல என மருத்துவர் லீ கூறினார். மேலும் குறைவான தூக்கமின்மை எவ்விதத்தில் கொலோன் புற்று நோயை உருவாக்குகிறது என கண்டறியப்பட்டாலும், குறைவான தூக்கத்தால் மெலாடொனின் என்ற ஹார்மோன் உற்பத்திக் குறைபாடு ஏற்படுகிறது. இதுவே தூக்கமின்மைக்கும், புற்று நோய் வளர்ச்சிக்கும் காரணமாகிறது என்கிறார்.


எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்


நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.
பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.
இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.

குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் பங்க்களால் புற்று நோய் ஆபத்து


குடியிருப்பு பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகளால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான நகரங்களின் குடியிருப்புகள் அருகே சில பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அவற்றால் மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படும். குறிப்பாக புற்று நோய் உருவாகும் ஆபத்து உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மார்தா டோவல் என்பவர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பெட்ரோலில் உள்ள இரசாயன பொருட்களால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெட்ரோலில் உள்ள பென்சீன் இரசாயன மூலக்கூறினால், ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். பென்சீன் மூலக்கூறுகள் பெட்ரோல் பங்குகள் உள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் சுற்றளவு பரவுகின்றன. எனவே குடியிருப்பு பகுதியில் இருந்து குறைந்தது 50 மீற்றர் தூரத்திலாவது பெட்ரோல் பங்க்குகள் இருப்பது அவசியம் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்தள்ளது.

அழகாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?


நீங்கள் அழகாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.
தினமும் இரவில் ஒழுங்காக தூங்கினாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேலையில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எடுத்தனர்.
இந்த ஆய்வில் புகைபிடிப்பவர்களை அழைக்கவில்லை. இதில் கலந்து கொண்டவர்கள் ஆய்வுக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே மது அருந்த அனுமதிக்கவில்லை. புகைப்படம் எடுக்கையில் அவர்கள் யாரும் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வின் பின்னணி பற்றி தெரியாதவர்களிடம் அவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து கருத்து கேட்கப்பட்டது.
இதில் 65 பேர் நன்றாக தூங்கியவர்களின் புகைப்படங்கள் தான் அழகாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதன் மூலம் இரவில் நன்றாகத் தூங்கினால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.

பேஸ்புக் உபயோகம்:அரபு நாடுகளில் யு.ஏ.இ முதலிடம்

அபுதாபி,பிப்.9:பேஸ்புக் என்ற சமூக நெட்வர்க் இணையதளத்தை அரபு நாடுகளில் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் வகிப்பதாக துபாய் காலேஜ் ஃபார் கவர்ன்மெண்ட் அட்மினிஸ்ட்ரேசன் ஆன் சர்வே என்ற மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரபுலகில் 15 வயதிற்கும் 29க்கும் இடையேயான நபர்கள் சமூக உறவுகளை பலப்படுத்துவதற்காக சோசியல் நெட்வர்க் இணையதளங்களை உபயோகித்து வருகின்றனர்.


2010 ஜனவரியில் அரபுலகில் பேஸ்புக் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 11.9 மில்லியனாக இருந்தது. ஆனால், 2010 டிசம்பர் மாதம் இவ்வெண்ணிக்கை 21.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் சோசியல் நெட்வர்க்குகளை அதிகமாக பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் யு.ஏ.இ இடம் பிடித்துள்ளது.

துனீசியா, எகிப்து ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி விரைவாக பரவுவதற்கு காரணம் பேஸ்புக் போன்ற சமூக நெட்வர்க்குகளாகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.