Monday, October 18, 2010
அசாதாரண விளம்பரங்கள் - (படங்கள்)
முகேஷ் அம்பானியின் கனவு இல்லம் - ஒரு பில்லியன் US டாலர்களில் நிஜமாகிறது
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்திற்கென மும்பையில் கட்டிவரும் அடுக்குமாடி வீடு, உலகின் அதிக விலைமதிப்புள்ள வீடாக கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இவ் அடுக்குமாடி குடியிருப்பில், 27 தட்டுக்கள் உள்ளன. ஜிம்,நடன பள்ளி, பால்ரூம், நீச்சல் தடாகம், என்பவற்றுடன் 50 பேர் வசதியாக அமர்ந்து பார்க்கும் திரையரங்கும் இருக்கிறது.
சுமார் 570 அடி உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கும் இக்கட்டிடத்தில் 160 வாகனங்களையும் பார்க் செய்ய முடியும்.
53 வயதாகும் முகேஷ் அம்பானியின் நீண்டநாள் ஆசையான இந்த கனவு இல்லம் அமைக்கப்படுவது அவருடன் சேர்த்து குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு மட்டுமே!
ஒவ்வொரு மாடியின் அறைகளும், வெவ்வேறு வண்ணங்களில், வெவ்வேறு இரசனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தின் சூடாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்குமாம்.
ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெரிக்க நிறுவனம் கட்டிக்கொடுத்த இவ்வீட்டின் திறப்பு விழா, இந்த மாத இறுதியில் நடைபெறுகிறதாம். உலகின் நான்காவது பெரிய கோடீஸ்வரர் என்றால் சும்மாவா? திறப்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கிற்கும் ஷ்பெஷல் அழைப்பாம்!
ஒவ்வொரு மாடியின் அறைகளும், வெவ்வேறு வண்ணங்களில், வெவ்வேறு இரசனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தின் சூடாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்குமாம்.
ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெரிக்க நிறுவனம் கட்டிக்கொடுத்த இவ்வீட்டின் திறப்பு விழா, இந்த மாத இறுதியில் நடைபெறுகிறதாம். உலகின் நான்காவது பெரிய கோடீஸ்வரர் என்றால் சும்மாவா? திறப்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கிற்கும் ஷ்பெஷல் அழைப்பாம்!
2010 இன் சிறந்த 10 மென்பொருட்களின் தொகுப்பு
மென்பொருட்களை அறிமுகப்படுத்தும் போதும் அவற்றை பற்றி விரிவாக பார்வையிடும் போது வாசகர்களினால் குறிப்பிட்ட மென்பொருட்கள் பற்றிய செய்திகளுக்கு கிடைத்த ஹிட்டுக்களை வைத்து இங்கே தொகுத்துள்ளோம்.
அவை நிச்சயம் உங்களுக்கும் பயன்படுவதாக இருக்கும்.
அவை நிச்சயம் உங்களுக்கும் பயன்படுவதாக இருக்கும்.
1. அவிரா
Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது.
2. சிசிகிளீனர்
கணனியின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் சாதரணமாக கணணியில் உருவாகும் தேவையற்ற File கள் Browsing History, காலாவதியான Registry தகவல்கள் போன்றவற்றை சேர விடமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான விடயம். அதற்கு உதவிசெய்யவே Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணணியை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் Ccleaner ஒரு இலவச செறிவு குறைந்த மென்பொருளாகும்.
3. பயர்பாக்ஸ்
அண்மைய ஆய்வுகளின் படி இணைய பாவனையாளர்களில் 45 வீதமானோர் Firefox 3 பாவணையாளர்கள் ஆவார்கள். IE 6 பாவிப்பவர்கள் 27% வீதமும் IE 7 பாவிப்பவர்கள் 24% வீதமும் ஆகும். Microsoft இன் புதிய பதிப்பான IE 8 வெறும் 1.4% வீதமானோரே உபயோகிக்கின்றனர். மிக முக்கியமாக Firefox 3 ஆனது Acid2 Browser Test எனும் இணைய தொழில்நுட்ப தகுதியில் தேறி உள்ளது. IE 6 மற்றும் IE 7 போன்றவை இதில் அடங்கவில்லை. இதனாலேயே HTML, CSS 2.0 specifications களுக்கு மிக ஏற்ற உலாவியாக Firefox 3 உள்ளது.
4. டுவிட்டர் கிளையண்ட்
டுவிட்டரில் மேல் அதிக காதல் கொண்டவராக நீங்கள் இருந்தால் டுவிட்டரின் உச்ச பயன்களை அடைய உதவும் மிகச்சிறந்த 4 டுவிட்டர் கிளையண்ட்கள் பற்றி பார்க்கலாம்.
5. சிசிகிளீனர் ரன்னர்
கணனியை நிறுத்தும் போதே சட்டவுண் செய்யும் போதே தானாகா CCleaner ரன் செய்து கிளீனிங் பணியை செய்யக்கூடியதாக இருந்தால் மிக இலகுவல்லவா? அதை எப்படி செய்வது?
6. Revo Uninstaller
விண்டோஸ் கணனிகளில் ஏற்கனவே இருக்கும் Add Remove புரோகிராம் மனேஜரும் தன்னால் இக்குறிப்பிட்ட மென்பொருளை நீக்க முடியாதென கைவிட்டு விடலாம். இந்த தருணத்தில் மிகவும் உதவக்கூடியது Revo Uninstaller எனும் மென்பொருளாகும்.
7. பாட்டிசன் விசாட்
பாட்டிசன் விசாட் என்பது இலகுவாக ஹாட்டிஸ்க்கை பாட்டிசன் செய்வதற்கான ஒரு இலவச மென்பொருளாகும்.
8. Auslogics Disk Defrag
விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது.
9. ஏவர் நோட்
தீடீரென புதுப் புது ஐடியாக்கள் தோன்றுகின்றன, சில மறக்க முடியாத காட்சிகளை கிளிக் செய்கிறீர்கள், விலைக்கழிவு விளம்பரம் கண்ணில் படுகிறது, இவற்றை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம் . நோட் பண்ணிக்கலாம். கொஞ்சம் சோம்பேறிகள் மற்றும் எதற்கும் கணனியே கெதி என்று கிடப்பவர்கள், எவர் நோட் எனும் அற்புதமான மென்பொருளை பயன்படுத்தலாம்
10. டீம் வியூவர்
உங்களின் கணனியில் இருந்தே அவரின் டெஸ்க்டாப் ஐ பார்வையிட ஏதும் வழி உண்டா? அந்த வசதி டீம் வியூவர் எனும் இலவச மென்பொருளால் கிடைக்கிறது
உண்மையில் இந்த மென்பொருட்களால் நீங்கள் பயன் பெற்றால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணைப்பை பற்றி கூறுங்கள். மேலும் இணைய வசதி இல்லாத அல்லது இணைய வேகம் குறைந்த இணையத்திற்கு புதிதாக வருபர்களுக்கும் நிச்சயம் இவற்றை பற்றி அறியத்தாருங்கள்.
ஹாட்டிஸ்க்கை முழுவதுமாக குளோனிங்க் செய்ய உதவும் டூல்.
இந்த டூலின் மூலம் ஒரு ஹாட்டிஸ்க்கில் இருந்து மற்றொன்றுக்கு அப்படியே முழு டேட்டாக்களையும் காப்பி செய்ய முடிவதனால் கணனியின் ஆப்பிரேட்டிங்க் சிஸ்டத்தை வேறொரு ஹாட்டிஸ்க்குக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது.
Hd clone அதற்கென்றே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குவதால் உங்கள் கணனி பூட் ஆகாத போதும் இந்த டூலினால் டேட்டாக்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது..
டவுண்லோட் செய்ய இங்கே : http://www.miray.de/products/sat.hdclone.html
Hd clone அதற்கென்றே உருவாக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குவதால் உங்கள் கணனி பூட் ஆகாத போதும் இந்த டூலினால் டேட்டாக்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது..
டவுண்லோட் செய்ய இங்கே : http://www.miray.de/products/sat.hdclone.html
100 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் சுதந்திர போராட்ட தியாகி!
நாற்பது, ஐம்பது, அறுபது வயதென்றாலே, இதற்கு மேலும் படித்து என்னதான் சாதிக்கப் போகின்றோம் என்று அலுத்துக் கொள்பவர்களும் இல்லாமலில்லை.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கின்றார் ஒருவர்.
அவர்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய போலாராம் தாஸ் என்ற தியாகி. இவர் தனது 100 ஆவது பிறந்த நாளை, வெகு விமரிசையாகக் கடந்த வாரம் கொண்டாடினார்.
ஆனால் தற்போது இவர் இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாட்டி பல்கலைக்கழகத்தில் PhD கற்பதற்காக இணைந்துள்ளார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
இந்திய பல்கலைக் கழகமொன்றில் கல்வி கற்கும் அதிக வயதான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், 100 ஆண்டுகளில் பல சமூக, அரசியல், மத சார் சேவைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தாஸுக்குப் பத்துப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஒருவரே இவருக்குக் கற்பதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இவரின் மனைவி 1988 ஆம் ஆண்டு காலமாகி விட்டார். __
எவரும் கையாளக் கூடிய ' ரோபோடிக்' மென்பொருள்
' கொரோனொயிட் ' ( Choreonoid ) என்றழைக்கப்படும் இம்மென்பொருளை 'ரோபோடிக் புரோகிராமிங்' அறிவற்றவர்கள் கூட உபயோகிக்க முடியும்.
உதாரணமாகச் சாதாரண 'கிரஃபிக் டிசைனர்' ஒருவராலேயே இம்மென்பொருளைக் கட்டுப்படுத்தமுடியும்.
கணினி மவுசின் ( Mouse ) உதவியுடன் ரோபோவின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் இதன் மூலம் ரோபோவை பாய்தல், குதித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்விக்க முடிவதுடன், அதற்கு ஏற்பட்ட அதிர்வுகளையும் கணக்கிட முடியும்.
நமது பிரயோகங்கள் தவறெனில் இம்மென்பொருள் அதனைக் கட்டுப்படுத்தவும் தவறுவதில்லை.
இது 'ரோபோடிக்' துறையில் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றது.
அம்மென்பொருளின் மூலம் இயக்கப்படும் 'ஹியூமனொயிட் ரோபோ' தொடர்பிலான காணொளி :
மிகச் சிறிய உல்லாச ஹோட்டலுக்கு மிகப்பெரிய வரவேற்பு
ஹோட்டல் திறந்த சில மணித்தியாலங்களுக்குள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேவையான வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஹோட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ளது.ஜேர்மனியின் அம்பேர்க் நகரில் அமைந்துள்ள ஹஸ்வல் எனும் இந்த ஹோட்டலின் அபிமானி ஒருவர் தெரிவிக்கையில் அந்த ஹோட்டலின் பரப்பு மிகவும் சிறியது. ஆனால் அது அதிக ரொமான்ஸ் நிறைந்த பகுதியாக உள்ளது. ஏனென்றால் ஒரு நேரத்தில் ஒரு ஜோடி மாத்திரமே உள்ளே சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். 300 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஹோட்டல் ஏழு அடி அகலத்தை மட்டுமே கொண்டது. காதல் ஜோடிகளால் இந்த ஹோட்டலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கின்றது. ஹோட்டல் உரிமையாளர் மரினா ஸ்கெரீனர் விபரிக்கையில், எங்கள் ஹோட்டலில் ஒரேயொரு அறை மட்டுமே உள்ளது. ஆனால் ஸ்பா மற்றும் ஆடம்பரக் கட்டில் உட்பட நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு வசதியும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஹோட்டல் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் நாங்கள் இந்த அறையில் தங்குவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிட்டது. ஆனால் அது மிகவும் பெறுமதியானது. வேறு எந்த ஹோட்டலில், குழப்பமடையக் கூடிய பக்கத்து அறை விருந்தினர்கள் மற்றும் மெல்லிய சுவர் பற்றி கவலையின்றி நீங்கள் மாத்திரம் தனியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். |
செல்பேசியால் மூளை புற்றுநோய்?
நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் நிச்சயம் உணர்ந்திருப்போம். செல்பேசி வெப்பமடைந்திருப்பதையும் கவனித்திருப்போம். ஆனால், இவை யாவும் நமக்கு உடல் ரீதியான ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே என்பதை உலகம் உணர்ந்த அளவிற்கு இந்தியாவில் நாம் பெரிதாக உணரவில்லை. உலக நாடுகளில் இதுபற்றிய உணர்தல் அதிகரித்துள்ளது. “செல்பேசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய ஒலி அலைகளால் உருவாகும் ஒருவித கதிர் வீச்சு நமது உடலில், குறிப்பாக நமது மூளையில் செயல்பட்டுவரும் உயிரணுக்களை பாதிக்கின்றன, டிஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (டிஎன்ஏ) என்றழைக்கப்படும் நமது மரபிண குணங்களை வார்த்தெடுக்கும் அணுக்களை அவை சம நிலை பிறழச் செய்கின்றன. இதன் விளைவாக புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளும், மற்ற நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்குகின்றன” என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. உலக சுகாதார அமைப்பும் இண்டர்ஃபோன் என்ற அமைப்பின் மூலம் 13 ஐரோப்பிய நாடுகளில் செல்பேசியை அதிகம் பயன்படுத்திவருவோர் 5,000 பேரிடம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆயினும், செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனையளிக்கக் கூடிய ஒரு தெளிவான வழிகாட்டல் அறிக்கையை அது வெளியிடவில்லை. ஆயினும், இண்டர்ஃபோன் ஆய்வும் பாதிப்பை உறுதி செய்துள்ளது. செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றுபடுத்தி ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ஜோயல் மாஸ்கோவிட்ஸ், “10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு 30 விழுக்காடு அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார். பிட்ஸ்பர்க் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வும் இந்தப் பாதிப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேச புற்றுநோய்க் கழகம், “செல்பேசியைப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்ட ஆபத்து ஏதும் இல்லை” என்று கூறியுள்ளது. ஆயினும் செல்பேசியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆலோசனைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன. உதாரணத்திற்கு, செல்பேசி பயன்படுத்துவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஒரு சட்டத்தையே பிரான்ஸ் நாட்டின் இரு அவைகளும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளன. தொலைத் தொடர்பு ஒலிக்கற்றைகள் மூளையைப் பாதிக்காவண்ணம், புதிதாக செல்பேசியை வாங்குவோர் அனைவருக்கும் காதில் வைத்துப் பேசக்கூடிய ஏர்ஃபோன்களை சேர்த்தே விற்குமாறு தயாரிப்பாளர்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது (இதன் விளைவாகவே இப்போதெல்லாம் நாம் செல்பேசி வாங்கினால் அதன் கூடவே இலவசமாக ஒரு ஏர்ஃபோன்கள் அளிக்கப்படுகிறது. அது வளர்ந்த நாடுகளில் கட்டாயம். இங்கு ஒரு கூடுதல் வசதியாக அளிப்பதுபோல் கொடுக்கிறார்கள்). அதுமட்டமல்ல, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை (குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது போன்ற) வாசகங்களுடன் விற்குமாறும், செல்பேசியை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு நீங்கள் ஒலிக்கற்றை கதிர் வீச்சிற்கு ஆளாகின்றனர் என்ற அளவை (specific absorption rate - SAR) குறிப்பிடும்படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது. “செல்பேசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை என்கிற ஒரு அடிப்படையே அது பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சியல்ல” என்று பிரான்ஸ் அறிவியலாளர் பேராசிரியர் டேனியல் ஊபர்ஹெளசன் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சுற்றுச்சூழல் நல அறக்கட்டளை எனும் அமைப்பை நடத்திவரும் அறிவியலாளரான முனைவர் தேவ்ரா டேவிஸ் ‘டிஸ்கனக்ட்’ எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். “செல்பேசியில் வெளியாகும் கதிர்வீச்சு தொடர்பான உண்மைகள், அவைகளை மறைக்க செல்பேசி தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் மேற்கத்திய உலகில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புத்தகத்தில் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்களையும் அளித்துள்ளார் தேவ்ரா டேவிஸ். சுற்றுச் சூழல் மற்றும் தனி மனித நடத்தைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் முனைவர் பிரான்ஸ் அட்கோஃபர், செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது மரபுத் தன்மையை பாதிக்கிறது என்றும், மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G), இரண்டாம் தலைமுறை செல்பேசிகளை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறியுள்ளார். செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அதன் தயாரிப்பாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுதந்திரமான ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் செல்பேசியைப் பயன்படுத்துபவரின் உயிரணுவை விட, செல்பேசியைப் பயன்படுத்தாதவரின் உயிரணு பலமாக உள்ளது. சாதாரணமாக தண்ணீர் தொட்டிகளில் விழுந்த எலி, மிகச் சுலபமாக நீந்தி வெளியே வந்து விடுகிறது. ஆனால் செல்பேசியின் கதிர் வீச்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக்கப்பட்ட எலியானது, தண்ணீர் தொட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி நீந்தி வருகிறது. இதற்குக் காரணம் அதன் மரபணுவில் ஏற்பட்ட பாதிப்பு அதன் இயல்பான திறனை மழுங்கடித்துவிட்டதே. தங்கள் நாட்டில் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், இஸ்ரேல், ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளன. இஸ்ரேல் நாட்டின் பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், கன்னத்தில் ஏற்படும் மிக அரிதான புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்தி வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த அறிவியலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தியுள்ளன செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட பல அறிவியலாளர்கள் ஆய்வு அமைப்பில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதையும் தேவ்ரா தனது புத்தகத்தில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார். FILE இவையணைத்தையும் குறிப்பிட்ட தேவ்ரா டேவிஸ், செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை! இன்றைய நவீன யுகத்தில் செல்பேசியின்றி வாழ்வில்லை என்ற நிலையில் உள்ள நாம் அதனை காது வைத்து பேச வேண்டாம் என்றும், காதில் பொறுத்திக்கொண்டு பேசக் கூடிய ஒலி வாங்கிகளைப் (ஏர்ஃபோன்கள்) பயன்படுத்தியே பேசுமாறும் கூறியுள்ளார். செல்பேசிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலக நாடுகள் உரிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே செல்பேசியை பயன்படுத்துவோர் கீழ்கண்ட பாதுகாப்பான வழிகளை கையாள வேண்டும்: 1. செல்பேசியை ஏர்ஃபோன்களுடன் மட்டுமே பயன்படுத்துங்கள் 2. அதனை பேண்ட் பாக்கட்டிலோ, சட்டை பாக்கெட்டிலோ தொடர்ந்து நீண்ட நேரம் வைத்திருக்காதீர்கள் (பயண நேரத்தில் மட்டும் அவ்வாறு வைத்திருப்பது தவிர்க்க இயலாதது). 3. அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது அதனை மேசையின் மீது வைத்திருங்கள். 4. இயன்ற அளவிற்கு செல்பேசியில் பேசுவைத் தவிர்த்து, குறுஞ்செய்திகளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். புற்று நோயை வருவதைத் தடுக்க, அது உருவாகும் சூழல் அமையாமல் தடுப்போம் என்று கூறுகிறார் தேவ்ரா டேவிஸ். மிகச் சரியான வழிதான். |
புற்று நோய்க்கு மனிதனே காரணம் : ஆய்வு
மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர். இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது. பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார். "இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார். "சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார். அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். |
கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe
ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவுகிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த வசதி கிடைக்கும் தளத்தின் பெயர் http://scribe.googlelabs. com. இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்க வேண்டும் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம். அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது. இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவுகளுக்கும் சொற்கள் கிடைக்கின்றன. அறிவியல் துறையில் நீங்கள் எழுத வேண்டும் என முயற்சித்தாலும், உங்களுடைய பொருளை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற சொற்கள் பட்டியலிடப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் எழுத விரும்பும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாகும். |
'இன்னொரு பூமி’ இருக்குமா?
நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர். |
குழந்தையின் குரலுக்காக ரௌடியுடன் போராடி வென்ற தாய் (படங்கள் இணைப்பு)
லாஸ் ஏஞ்ஜெல்ஸ் தெருவில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பையை பறித்துச் செல்ல திட்டமிட்ட திருட்டு ரௌடி ஒருவன் திடிரென அந்த பெண்மணியை சரமாரியாகத் தாக்கியதுடன் தெருவில் வெனிஸ் கடற்கரை வரை இழுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் திருடனால் அந்த பெண்மணியின் கைப்பையை எடுக்க முடியவில்லை.
இறுதி வரை திருட்டு கும்பலுடன் போராடி தன் கைப்பையை பறி கொடுக்காமல் தப்பித்துள்ளார் அந்தப் பெண். பெண்மணியிடம் கைப்பையை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்துள்ளான் திருடன்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி காமெராவில் பதிவாகியுள்ளது. பெண்மணியின் இந்த வீரச் செயல் அமெரிக்கா ஊடங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அப்படி என்ன அந்த கைப்பையில் இருந்தது என ஊடகங்கள் விசாரித்த போது பெண்மணி ஒரு குழந்தையின் தாய் என்பதும் இவரின் குழந்தை 10 வாரங்களுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்து விட்டதும் தெரிய வந்துள்ளது.
குழந்தை மம்மி என கூப்பிட்டதை ஒலிப்பதிவு செய்து தன் கைபேசியில் வைத்துள்ளதாகவும் அதை காப்பாற்றவே இறுதிவரை போராடியதாகவும் கூறுகிறார் தாய். தாயின் இந்த வீரச் செயல் கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர் மக்கள்.
Subscribe to:
Posts (Atom)