Monday, October 18, 2010

முகேஷ் அம்பானியின் கனவு இல்லம் - ஒரு பில்லியன் US டாலர்களில் நிஜமாகிறது


இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்திற்கென மும்பையில் கட்டிவரும் அடுக்குமாடி வீடு, உலகின் அதிக விலைமதிப்புள்ள வீடாக கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இவ் அடுக்குமாடி குடியிருப்பில், 27 தட்டுக்கள் உள்ளன. ஜிம்,நடன பள்ளி, பால்ரூம், நீச்சல் தடாகம், என்பவற்றுடன் 50 பேர் வசதியாக அமர்ந்து பார்க்கும் திரையரங்கும் இருக்கிறது.
சுமார் 570 அடி உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கும் இக்கட்டிடத்தில் 160 வாகனங்களையும் பார்க் செய்ய முடியும்.
53 வயதாகும் முகேஷ் அம்பானியின் நீண்டநாள் ஆசையான இந்த கனவு இல்லம் அமைக்கப்படுவது அவருடன் சேர்த்து குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு மட்டுமே!

ஒவ்வொரு மாடியின் அறைகளும், வெவ்வேறு வண்ணங்களில், வெவ்வேறு இரசனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தின் சூடாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்குமாம்.

ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெரிக்க நிறுவனம் கட்டிக்கொடுத்த இவ்வீட்டின் திறப்பு விழா, இந்த மாத இறுதியில் நடைபெறுகிறதாம். உலகின் நான்காவது பெரிய கோடீஸ்வரர் என்றால் சும்மாவா? திறப்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கிற்கும் ஷ்பெஷல் அழைப்பாம்!

No comments:

Post a Comment