பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது. இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை |
Sunday, September 12, 2010
பூமியை நோக்கி வரும் விண் கற்கள்!
3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!
3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம். குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. இதன் அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். |
பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?
அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம். 1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு. 2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது. 3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு. 4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள். 5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்துவிடும். |
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.-1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது. இது குறித்த அறிக்கையினை நமீபிய அரசின் சுகாரதாரத்துறையினரிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளதாக கூறியுள்ளது. விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. |
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது. நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும். முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும். பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்தாதக் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும். பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logout ஆகிவிடும். |
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
* நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும். * `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். * நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணி களை மாற்ற வேண்டும். * எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை, இசையை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். * வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும். * நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது மூட்டு வலியை நன்கு குறைக்கும். * அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. * உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். * வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். வலியைப் பற்றியே நினைக்கும் பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும். |
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார். அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது.இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார். நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும். அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார். 2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார். இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார் |
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் நகர் மீது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் (1940) நடந்து கொண்டிருந்த போது லண்டனில் பிளிட்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு தெரு ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதன் 70-ம் ஆண்டு விழா பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் சார்பில் கொண்டாப்பட்டது. அப்போது அரிய வகை வீடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில் பிரிட்டனின் விமானப்படைப்பிரிவில் பணியாற்றிய வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து திரைப்படம் எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சோதனை செய்து பார்த்தில் இரண்டாம் உலக்போரின் போது குண்டு வீசப்பட்டதை நேரடியாக வண்ண படமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. |
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
மேற்படி நாணயங்கள் சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்தவையெனக் கருதப்படுகின்றது.
ஆய்வாளர் குழுவொன்று ஜேர்மனியின் மெக்லன் பேர்க் மாகாணத்தில் உள்ள அன்க்லாம் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போதே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நாணயங்கள் தூய வெள்ளியினால் செய்யப்பட்டவை. மேலும் இவை 180 ஆவது ஹிஜ்ரி வருடத்தினை சேர்ந்தவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் இந்நாணயங்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளின் போது பாவனைக்குட்படுத்தப்பட்டதைத் தாம் உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சீன ஜோதிடப்படி ஒன்பது என்பது ராசியான எண். இந்த எண்ணில் ஏதாவது நற்காரியம் செய்யும்போது நீண்ட ஆயுளுடன் நல்ல விளைவுகள் ஏற்படுவதாக மக்கள் நம்புகின்றனர். அதனால் 09ஆம் மாதம் 09ஆம் திகதி காலை 09 மணி 09 நிமிடத்தில் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் பின்னர் குதூகலமாக ஆடிப்பாடிய புதிய ஜோடிகள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். தாய்வான் தொலைக்காட்சி நிறுவனங்கள் சில இந்நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
விற்பனைக்கு வரும் பின்லேடன் வீடு
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
குடும்ப சூழல், அமைதியின்மை, மன அழுத்தம், சுயசார்பின்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து பெறுகின்றனர். ஆனால், கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிப்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, ஒத்துழைப்பின்மை, யார் உயர்ந்தவர் என்ற எண்ணங்கள் தொற்றி கொள்கின்றன. மேலும் இருவரின் சம்பளத்தை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு நிலையை சுட்டிக் காட்டுகின்றனர். இது ஒரு கட்டத்தில் எல்லை தாண்டும் போது விவாகரத்தில் முடிகிறது. இங்கிலாந்தில் 3ல் ஒரு பெண் ஆணைவிட அதிகமாக சம்பாதிக்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு நிற்கும் பெண்களில் 38 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்களே. ஆனால், மனைவியை விட அதிகம் சம்பாதிக்கும் கணவன் உள்ள வீட்டில் இந்த பிரச்னை குறைவே என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. |
லண்டனில் சக்கை போடு போடுகிறது நாய்களுக்கான ஸ்பெஷல் 'ஐஸ்கிரீம்'
வேன்கள் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த ஐஸ்கிரீம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலை நாடுகளில், நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். தங்களின் செல்லப் பிராணிகளை குழந்தைகளைப் போல் பாவித்து, அவற்றிற்கு பணிவிடை செய்கின்றனர். சிலர், தங்கள் சொத்து முழுவதையுமே செல்லப் பிராணிகள் மீது எழுதும் சம்பவங்களும் அடிக்கடி அங்கு நடக்கின்றன. இவர்களின் இந்த மோகத்தை தெரிந்து கொண்ட லண்டனை சேர்ந்த கே99 என்ற நிறுவனம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கான ஐஸ்கிரீம் ஒன்றை தயார் செய்து, விற்பனை செய்து வருகிறது.வழக்கமாக தயாரிக்கப்படும் வெண்ணிலா சுவைக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, கோழிக்குஞ்சு இறைச்சி, எலும்பு ஆகியவை கலந்து நாய்கள் சாப்பிடுவதற்கான ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவின் ஆலோசனையின் பேரில், நாய்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும், உடல் நலத்தை பாதிக்காத வகையிலும் வெப்பநிலை, சுவை, கலைநயம் மிக்க ஐஸ்கிரீமை அந்நிறுவனம் தயாரிக்கிறது. நாய்களுக்கான ஐஸ்கிரீம் இரண்டு சுவை கொண்டது. கே99 நிறுவனம், வேன் மூலம் நாய்களுக்கான ஐஸ்கிரீமை விற்பனை செய்கிறது. ஒவ்வொரு தெரு வழியாக இந்த வேன் செல்லும் போது "ஸ்கூபி டூ' என்ற பாட்டு இசைக்கப்படுகிறது. லண்டனை சேர்ந்த சாலி பிசான்ட் என்பவர் கூறுகையில், "இங்கிலாந்து முழுவதும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு கோடியே 5 லட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான நாய்கள் தண்ணீரை குடித்து தங்களை குளிர்ச்சி செய்து கொள்கின்றன. இதை கருத்தில் கொண்டே இங்கிலாந்தில் உள்ள நாய்களுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கும் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது' என்றார். நாய்களுக்கான உணவுப் பொருட்களை தயார் செய்யும் கே99ன் தலைவர் செரிக்நாலே கூறுகையில், "புதிய ஐஸ்கிரீமின் சுவையும், வடிவமைப்பும் நாய்கள் விரும்பும் வகையில் அமைத்துள்ளோம். நீண்ட ஆய்வுக்கு பின்னரே, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கோழிக்குஞ்சு இறைச்சியை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஐஸ்கிரீம், ஐஸ்கிரீம் பிஸ்கட் தயாரித்துள்ளோம். இதை நாய்கள் நிராகரிக்காது என்று நம்புகிறோம். முன்னதாக, சோதனைக்காக அளிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை நாய்கள் மிகுந்த ஆவலுடன் விரும்பி சாப்பிட்டன' என்றார். |
58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை (காணொளி இணைப்பு)
கண்ணாடியில் கால் வைத்து ஏறுவதற்கான உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி மிலேனியம் கோபுர கட்டிடத்தில் டான் குட்வின் ஏறியபோது அவரைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.மேற்படி மாடிக் கட்டிடத்தில் 3 மணி நேரத்தில் ஏறிய அவர், காத்திருந்த பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்தார். இவர் ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு சியர்ஸ் கோபுரத்திலும் (Chicago’s Sears Tower) 1983 ஆம் ஆண்டு உலக வர்த்தக கட்டிடத்திலும் ஏறியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கவும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவுமே இவ்வாறு உயர்ந்த கட்டிடங்களில் ஏறும் நடவடிக்கையில் இறங்கியதாக டான் குட்வின் தெவித்தார். 2001 ஆம் ஆண்டு டான் குட்வினுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
பயிற்றுவிப்பாளரைத் தாக்கும் சிங்கங்கள்....!
மேற்படி சிங்கங்கள் அமெரிக்காவின் லொஸ் வெகாஸிலுள்ள எம்.ஜி.எம். விடுதியிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இக்காணொளிக் காட்சியானது அங்கு சென்றிருந்த பார்வையாளர் ஒருவராலேயே ஒளிப்பதிவாக்கப்பட்டிருந்தது.
மேற்படி விடுதியின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் சர்ச்சையினை இக் காணொளி தோற்றுவித்துள்ளது.
குறித்த பயிற்றுவிப்பாளர் வைத்தியாசலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
'யூடியூப்' இணைய தளத்தில் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீர் அருந்தாமல் 78 ஆண்டுகள் வாழ்ந்து வரும் 92 வயதுப் பாட்டி!
ஆம், பெங்களூரைச் சேர்ந்த 92 வயதான நரசம்மா, 78 வருடங்களாகத் தண்ணீர் அருந்தாமல் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
14 வயதில் மயக்கமடைந்த இவருக்கு, தொண்டை வறண்டது. அச்சமயத்தில் இவர் ஒரு நாளில் 10 லீட்டர் நீர் அருந்த வேண்டியிருந்தது. இவ்வாறு நீர் அருந்தியதும் இவரது உடல் ஊதி கை, கால்கள் வீங்கத் தொடங்கிவிட்டன. நடக்கவே முடியாமல் அவதிப்பட்டார் இவர்.
இதனால் இவரது பெற்றோர் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். வைத்தியரோ, உடலில் அதிகளவில் நீர் இருப்பதாகவும், 48 நாட்கள் நீராவிச் சிகிச்சை மூலம் நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டனர்.
வைத்தியரின் சிகிச்சை மூலம் இவருக்குப் பயனும் கிடைத்தது. இந்தச் சம்பவத்தையடுத்து இவர் நீர் அருந்துவதையே நிறுத்திவிட்டார்.
"நீர் அருந்தாமல் எவ்வாறு வாழ்கின்றீர்கள்?" என்று வினாவியதற்கு,
"நான் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே சாப்பிடுகிறேன். அரிசிச் சோறு, உலர்ந்த பழங்கள் தான் சாப்பிடுவேன். தினமும் இரண்டு கோப்பை கோப்பி அருந்துவேன்.
கோடை காலத்தில், உடலின் நீர்த்தன்மையைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்க, ஈர ஆடைகளையே அணிவேன். மற்றும் தினந்தோறும் 5 மணித்தியாலங்கள் தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபடுவேன். ஒரு மாதத்தில் 10 நாட்கள் உபவாசம் இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு, இவர் 36 நாட்கள் வட - தென் இந்திய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது இவர் எதையுமே உண்ணவில்லையாம். 3 கோப்பை கோப்பி மட்டும் அருந்தினாராம்.
நீர், மனிதனது உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது.
அந்நீரையே அருந்தாமல் இந்தப் பாட்டி 78 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாரே?
அப்படியானால் மேற்கூறிய கூற்று பொய்தானோ? இதன் உண்மை நிலையை ஆராய, பாட்டியின் உடலைப் பரிசோதனை செய்து பார்க்கத்தான் வேண்டுமென டாக்டர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள்.
இதற்குப் பாட்டி சம்மதிக்க வேண்டுமே...? சம்மதிப்பாரா...? ___
காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங் '
கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.
மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.
மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
'ஒன்ஸ்டார்' நிறுவனம் வாகனங்களின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பிரபல்யம் பெற்றதாகும். தனது பிரதான போட்டியாளரான 'போர்ட்' நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசி மூலமான 'மெசேஜ்'களுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வகையில் காரின் ஸ்டீரிங்குடன் இணைந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றையும் அது பரீட்சித்து வருகின்றது.
மேலும் அதிநவீன தொழில்நுட்ப வானொலி, நெவிகேசன் சிஸ்டம் போன்றவற்றையும் ஜிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ___
கூகுளின் 'இன்ஸ்டன்ட் சேர்ச்'
தனது தேடல் சேவையில் புதியதொரு தொழில்நுட்பத்தினை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் தேடல் பொறியின் மூலம் குறித்ததொரு விடயத்தினை தேடுவதற்காக, நாம் அவ்விடயத்தினை தேடல் பொறி பக்கத்தின் நடுவே தட்டச்சு செய்யும் போதே அதற்கான விடைகள் ( ரிசல்ட்ஸ்) திரையில் உடனடியாகத் தோன்றும். இதுவே அந்தச் சிறப்பம்சமாகும்.
இது 'இன்ஸ்டன்ட் சேர்ச்' என அழைக்கப்படுகின்றது. மேற்படி அம்சமானது பாவனையாளர் தேடும் விடயத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதினை அடிப்படையாகக் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வம்சமானது தனது சக போட்டியாளர்களான 'யாஹூ' மற்றும் 'மைக்ரோசொப்ட்' என்பவற்றுக்குப் பெரும் போட்டியாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)