Tuesday, September 7, 2010

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!
நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.ஆமாம்…காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.
சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.
எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.
காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.
சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.
காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.
தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள்.
காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.
உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.
நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.
இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.
2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் குறித்த தன் நடவடிக்கை களில் சிறிது மந்த நிலையை மேற்கொண்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசர் வெளியாகி, நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டது.
தொடர்ந்து கூகுளின் குரோம் பிரவுசரும் வெளியாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குத் தரத் தொடங்கியது. இதனால் தன் 15 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், பிரவுசர் சந்தையின் முதல் ஹீரோவாக இருந்தாலும், சுற்றிலும் பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலையிலேயே இ.எ. பிரவுசர் உள்ளது. ஜூலை இறுதியில் இ.எ. பிடித்துள்ள இடம் 60%; பயர்பாக்ஸ் 23%, குரோம் 7% மற்றும் சபாரி 5%.
கூகுள் தன் பிரவுசரான குரோம் தொகுப்பின் தன்மையை வேறு எந்த பிரவுசரும் கொண்டிருக்கவில்லை என்று பெருமைப்படுகிறது. இணைய வழி சேவைகள் என்று பார்க்கையில் கூகுள் தான் மிக அதிகமாக சேவைகள் தருவதாகவும், அதனாலேயே இதன் பிரவுசர் தனித்தன்மை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியாகும்போது, இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனைச் சமாளிக்கும் வகையில் இ.எ. பிரவுசர் பதிப்பு 9 வெளியாக உள்ளது. தற்போதைய கம்ப்யூட்டர்களில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் கிராபிக்ஸ் பயன்பாட்டினை இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்து, இதன் வலிமையை நிரூபிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில சோதனைப் பதிப்புகளையும் காட்டியுள்ளது.
இந்நிலையில் ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது. எது முக்கியம்? ஆப்பரேட்டிங் சிஸ்டமா? பிரவுசரா? மைக்ரோசாப்ட் எப்போதும் ஒரு பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டு வருகிறது. இங்கு தான் பிரச்னையே எழுகிறது. ஏன் மைக்ரோசாப்ட் இந்த நிலையை எடுக்கிறது என்று பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் வெளியானது. தன் விண்டோஸ் 95 தொகுப்பினை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து இந்த பிரவுசரை வெளியிட்டது. விண்டோஸ் 95 சிஸ்டத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத் தந்தது.
இணையத்தின் வலிமையை, திறனைத் தான் தெரிந்து கொண்ட தாகவும், அதனால் தன் அனைத்து சாதனங்களிலும், இணையப் பயன்பாட்டினை இணைக்க இருப்ப தாகவும் அறிவித்தது. அப்போது பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறந்த நெட்ஸ்கேப் பிரவுசரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் உடனே வெளியே தள்ள முடியவில்லை. 1997 ஆண்டு, முதல் ஆறு மாதம் வரை இ.எ. பிரவுசர் 50% இடத்தை மட்டுமே கொண்டிருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 3, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு வெளியானபோதுதான், இ.எ. பிரவுசருக்கு நல்ல காலம் ஏற்பட்டது. உடனே இது போல இணைத்துத் தருவது, நிறுவனக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுவதாகும், எல்லை மீறிய செயல் என்று அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சென்ற ஆண்டு தான் இந்த வழக்கு முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தண்டிக்கும் வகையில் வெளியானது.
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தன் பிரவுசரைக் காட்டாமல் இருக்கப்போவதாக, மைக்ரோசாப்ட் அச்சுறுத்திப் பார்த்தது. இறுதியில் மற்ற பிரவுசர்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், டவுண்லோட் செய்து பயன்படுத்த வழிகளைத் தருவதாக அறிவித்தது.
நெட்ஸ்கேப் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளி, இருக்கும் இடம் காணாமல் ஆக்கியபின், மைக்ரோசாப்ட் சற்று நிதான போக்கினைக் கடைப்பிடித்தது. அடுத்த புதிய வசதிகள், இ.எ. பதிப்பு 6ல் தான் தரப்பட்டது.
இந்த வேளையில் பயர்பாக்ஸ் டேப் பிரவுசிங் உட்பட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சில புதுமைகள் எதனையும் தராததால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்றுத் தள்ளாடியது.
இதனால், தன் இ.எ. பிரவுசர் பதிப்பு 8 மற்றும் பதிப்பு 9ல், இன்டர்நெட் உலகம் எதிர்பார்க்கும் நவீன வசதிகளைத் தர முனைந்து செயல்பட்டது. தொடர்ந்து இந்த முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0
விண்டோஸ் 95 வந்த பின் ஒரு மாதம் கழித்து “Internet Jumpstart Kit” என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகவில்லை.
1995: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0.
அந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. மேக் மற்றும் விண்டோஸ் ஆகிய இரு சிஸ்டங்களையும் இது சப்போர்ட் செய்தது.
1996: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0.
1996 ஆகஸ்ட்டில் வெளியானது. இமெயில் சப்போர்ட் தரப்பட்டது. இமேஜ் பைல்கள் காட்டப்பட்டன. ஆடியோவும் இதிலேயே இயக்கப்பட்டது.
1997: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0.
வாடிக்கையாளர்களுடன் தகவல் சேர்க்கும் வகையில், இன்ட்ராக்டிவ் இணைய தளங்கள் சப்போர்ட் செய்யப்பட்டன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4.0. இமெயில் சேவையை வழங்கும் வகையில் வெளியானது.
1998: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0.
தொழில் நுட்ப ரீதியாகச் சில திறன்கள் மேம்பாடடைந்தன.
2001: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக வெளியானது. பல ஆண்டுகள் இதன் கூறுகளே, பிரவுசர் ஒன்றின் வரையறைக்கப்பட்ட கூறுகளாக இருந்து வந்தன.
2006: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0.
2006 அக்டோபர் மாதம் வெளியானது. விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 பயன்படுத்துபவர்களுக்கென உருவாக்கப்பட்டு கிடைத்தது. பின்னர் விஸ்டாவின் ஒரு பகுதியானது. டேப் பிரவுசிங் வசதி தரப்பட்டது.
2009: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0.
மார்ச், 2009ல் வெளியானது. தன் பிரவுசிங் இன் ஜினை, நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியது மைக்ரோசாப்ட். இந்த பிரவுசரின் ஒரு பகுதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஒரு பகுதியானது.
2011? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0.
பெரிய அளவிலான அடுத்த அப்டேட் இதுவாகத்தான் இருக்கும். எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பத்திற்கான மேம்படுத்தப்பட்ட சப்போர்ட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இயங்கும் ஜாவா ஸ்கிரிப்ட் இன் ஜின் கிடைக்கும். கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் சிப்பின் திறனைப் பெற்று, டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸ் திறனை மேம்படுத்திக் காட்டப்படும் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலி சுரங்கத்தில் சிக்கியவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு (வீடியோ இணைப்பு)

சிலி நாட்டில் கோபியாகோ அருகேயுள்ள சான்ஜோஸ் என்ற இடத்தில் சுரங்கங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு சுரங்கம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி இடிந்து சேதமடைந்தது.

எனவே, அங்கு பணி யாற்றி கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கத் திற்குள் சிக்கி கொண்டனர். எனவே அவர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சுரங்கம் பூமிக்கு அடியில் சுமார் ? மைல் ஆழத்தில் உள்ளது. எனவே, சுரங்கத்தின் மேல்பகுதியில் உள்ள பாறைகளின் மீது டிரில்லிங் எந்திரத்தின் மூலம் துளை போட்டு அதன் வழியாக வீடியோ கேமராவை இறக்கி படம் பிடித்து பார்க்கப்பட்டது

அப்போது, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இன்னும் 4 மாத காலம் உயி ருடன் வாழ முடியும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளையின் வழியாக மிகச சிறிய அளவிலான திரை அனுப்பப் பட்டது. மேலும் “பைப் ரோப்டிக்” கேபிள் வழி யாக உக்ரைன் நாட்டுக் கும் சிலி நாட்டுக்கும் இடையே நடந்த கால் பந்து போட்டி வெளியே இருந்து சுரங்கத்துக்குள் ஒளிபரப்பப் பட்டது.

அதை உள்ளே சிக்கியிருக் கும் தொழிலாளர்கள் பார்த்து ரசித்தனர். இதே தொழில்நுட்பத்தை பயன் படுத்தி தொழிலாளர்களின் உறவினர்கள் அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இது தங்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக கூறினர்.

6 அடி 5 அங்குல உயர இராட்சத மாடு (படங்கள் இணைப்பு)





பிரித்தானிய கிங்ஸ்வூட் பிராந்தியத்திலுள்ள பண்ணையொன்றில் வாழும் 6 அடி 5 அங்குல உயரம் மூக்கிலிருந்து வால்வரை 14 அடி நீளம் 1.2 தொன் நிறையும் கொண்ட இராட்சத மாடொன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த 7 வயதான றிக்கர் என்ற மாடு, உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பிடிக்க தயாராகியுள்ளது. றிக்கரின் உரிமையாளரான ஷோன் லேடன் விபரிக்கையில், கன்றுக் குட்டியாக இருந்த றிக்கரை விவசாயிகளின் துப்பாக்கிச்சூட்டிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்ததாக கூறினார். 

றிக்கர் தினசரி புல், கால் நடைகளுக்கான கேக், கனியுப்பு நீர் மற்றும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு அப்பிள் பக்கட் என்பவற்றை உண்டு வருவதாக அவர் தெரிவித்தார்

'ஸார்ப்' பின் முப்பரிமாண கையடக்கத் தொலைபேசி (காணொளி இணைப்பு)

ஜப்பானிய இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனமான 'ஸார்ப்' தனது முப்பரிமாண (3D) கையடக்கத் தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்கின்றது.

இத்தொலைபேசியின் கெமரா மூலம் முப்பரிமாண புகைப்படங்களைப் பிடிக்க முடியும்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை.

இக்கையடக்கத் தொலைபேசியின் கெமரா இரண்டு வில்லைகளைக் (லென்ஸஸ்) கொண்டது.

'ஸார்ப்' தொலைபேசியானது 'பரலக்ஸ் பெரியர்' திரையைக் கொண்டது.

இதன் விலை மற்றும் விற்பனைக்கு வரும் திகதி பற்றி 'ஸார்ப்' உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

கொலம்பியா குள்ளர் கின்னஸ் சாதனை

பொகொடா : கொலம்பியாவை சேர்ந்த 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கொலம்பியா நாட்டை சேர்தவர் எட்வர்டு நினோ ஹெர்னாண்டஸ் (24). இவரின் எடை 10 கிலோ, உயரம் 70 சென்டி மீட்டர். உலகில் தற்போது இருப்பவர்களில் மிகவும் குள்ள மனிதர் இவர்தான். இதனால் இவரின் பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் கின்னஸ் சாதனை பட்டியலிடும் அமைப்பு எட்வர்டு நினோவை உலகின் குள்ள மனிதராக அறிவித்து, அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருதை வழங்கியுள்ளது. இதற்குமுன் சீனாவை சேர்ந்த ஹெ பின்பின்க் 1.5 இன்ச் (4 சென்டி மீட்டர்) குறைவான உயரத்துடன் குள்ள மனிதர் என்ற சாதனையை வசமாக்கினார். அண்மையில் அவர் இறந்து விடவே, உலகின் குள்ள மனிதர் என்ற பட்டத்தை நினோ தற்போது தட்டிச் சென்றார்.

நினோவின் தாயார் நவோமி ஹெர்னாண்டஸ் கூறுகையில், நினோ பிறக்கும் போது 1.5 கிலோ எடையும், 38 சென்டி மீட்டர் உயரத்துடனும் இருந்தான். 2 வயதுக்குப்பின் அவனுக்கு வளர்ச்சி இல்லாமல் போனது. இதையறித்து மருத்துவரை அனுகியபோது அவனுக்கு வளர்ச்சி ஏற்றபட வாய்ப்பில்லை என்று கைவிரித்து விட்டனர். அப்போது இருந்து அதே உயரத்தில்தான் இருக்கிறான் என்றார் அவர்.

நினோவுடன் உடன் பிறந்தவர்களில் 11 வயதுடைய ஏஞ்சல் என்பவர் 93 சென்டி மீட்டர் உயரத்துடன் உள்ளார். மற்ற 3 பேர் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சராசரி வளர்ச்சியில் உள்ளனர். நினோவுக்கு ஆடுவது என்றால் மிகவும் பிடிகுமாம். ஆடம்பர சொகுசு காரான மெர்சிடிஸ் மாடலை சொந்தமாக வாங்கி பயணம் செய்ய ஆசையாம். மேலும் அவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சில்வர் ஸ்டோலன், கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ ஆகியோரை சந்திக்க விரும்புதாகவும் தெரிவித்துள்ளார்.

22-வது குழந்தைக்கு தந்தையாகிறார் தென் ஆப்பிரிக்க அதிபர்



டர்பன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் காதலி கர்ப்பமாக இருக்கிறார். இதன் மூலம் ஜூமா 22வது முறையாக தந்தையாகியுள்ளார். தனது கர்ப்பிணிக் காதலியை வருகிற டிசம்பரில் அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

68 வயதாகும் அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் ஜோடியாக சென்றார் காதலி போன்ஜிவி குளோரியா நகேமா. இதனால் ஜூமாவின் மற்ற மூன்று மனைவியரும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நகேமா கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் குழந்தை பிறக்குமாம். இந்த தகவலை குளோரியாவின் தோழிதான் வெளியிட்டுள்ளார்.

குளோரியாவுக்கு அதிபர் மூலமாக ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்போது 2 குழந்தைகளாகி விட்டதால் குளோரியாவை, வருகிற டிசம்பர் மாதம் ஜூமா முறைப்படி மணக்கவுள்ளார். இதையடுத்து ஜூமாவின் மனைவியர் எண்ணிக்கை 4 ஆக உயருகிறது. சமீபத்தில் தான் ஜூமாவின் 2-வது மனைவி ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். இது ஜூமாவின் 21-வது குழந்தையாகும்.

ஆனால் இந்த குழந்தை ஜூமாவின் 2-வது மனைவிக்கும் அவரின் மெய்க்காப்பாளருக்கும் இருந்த உறவால் பிறந்தது என்று செய்திகள் வெளியான. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஜூமா. ஆனால் இது தவறான வதந்தி என்று அவர் மறுத்தார். இவர் ஜூமாவின் குடும்ப நண்பரின் மகள் ஆவார். இந்த உறவு குறித்து பின்னர் ஜூமா பகிரங்கமாக வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் வாகன விபத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்! (படங்கள் இணைப்பு)

ஜேர்மனியின் B�blingen மாவட்டத்தில் உள்ள Ehningen சந்தியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து ஒன்றில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.



இவர்கள் தலைநகரான பேர்லினில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் Mercedes Sprinter ஒன்றில் பயணித்து வந்தபோது அது Mercedes truck ஒன்றுடன் மோதுண்டது.

ஆயினும் Mercedes Sprinter இன் சாரதி காயம் அடையவில்லை. காயம் அடைந்த இலங்கையர்கள் 12 பேரும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Mercedes truck பயணித்தவரும் காயம் அடைந்துள்ளார்.

காயம் அடைந்தவர்களை மீட்கின்றமைக்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை எடுத்திருக்கின்றது. காயப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபட்டது.