Saturday, January 22, 2011

உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி சாறு சாப்பிடுங்க!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

ரொமான்ஸ் அதிகரிக்க வேண்டுமா?: பின்பற்ற வேண்டிய பெட்ரூம் கட்டளைகள்!


வீடுகளில் உள்ள அறைகளில் மிகவும் முக்கியமானது பெட்ரும். தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் இதுவே ஏற்ற இடம். மற்றவர்களுக்கே ஆனந்தம் எனும் போது, தம்பதியர்களுக்கு அது, அலாதி இன்பம் தரும் இடம் தான் அல்லவா!.
அனைவருக்கும் சந்தோஷம் தரும் பெட்ரூமில், சில சின்ன சின்ன பிரச்சனைகள், சிரமங்களும் உள்ளது. அவற்றை பெரிதுபடுத்தாமல், சமாளிக்கப் பழகி கொண்டால் என்றுமே ரொமான்ஸ் தான் என்கிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
குறட்டை விடுவது, அதிகாலையில் லைட் போடுவது, புரண்டு படுப்பது போன்ற சில விடயங்களில், விதிமுறைகளைப் பின்பற்றினால் பெட்ரூம் மட்டுமல்ல, வாழ்க்கையே இன்பமயமாகி விடும் என்று குடும்ப நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே சில வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருப்பர். அப்போது, நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், நாசல் ஸ்டிரிப் அணியலாம் அல்லது மருத்துவரை அணுகி நிவாரணம் பெறலாம்.
பாதிக்கப்படும் நபர் நீங்களாக இருக்கும் பட்சத்தில், பஞ்சை காதில் வைத்து அடைத்து கொள்ளலாம். இல்லையென்றால், மெல்லிய இசையை காதில் கேட்டபடி தூங்கலாம். இப்படி விட்டுக் கொடுப்பதால் இருவருக்கும் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த சின்ன விடயத்திற்காக விவாகரத்து வரை செல்வது கொஞ்சம் அதிகம் தானே!.
படுக்கையில் உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுப்பது, கொஞ்சம் கஷ்டமான விடயம் தான். இருப்பினும், உறவு முக்கியம் அல்லவா!. அதனால், புரண்டு புரண்டு படுக்கும் நபர்கள் வாழ்க்கைத் துணைக்கு தொல்லை கொடுக்காமல், தரையில் படுத்து புரள்வது மிகவும் சிறந்தது.
இல்லற இன்பத்துக்குப் பிறகு, சிலருக்கு தூக்கம் சொக்கும். ஆனால், வாழ்க்கைத் துணையோ சிறிது நேரம் பேச ஆசைப்படுவார். அப்போது, அவரிடம் "குட்நைட்" சொல்லி அவரை கோபப்படுத்தாமல், கொஞ்ச நேரம் உங்கள் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, அவரிடம் சிறிது நேரம் பேசலாம்.
பெரும்பாலும், சின்ன சின்ன விடயங்கள் தான் பெரிய அளவில் உருவெடுத்து, அழகிய உறவுகளை பிரித்து விடுகிறது.
எனவே, வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசினால், சிறிய அளவாக இருக்கும் போதே, பிரச்சனைகளை மென்மையாக எடுத்துச் சொன்னால் பிரச்சனைகளை அகற்றி விடலாம். பின்பு, படுக்கை அறையைப் போலவே வாழ்க்கையும் இன்பமாகும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நகைச்சுவை உணர்வினால் பெண்கள் கர்ப்பம்: ஓர் வித்தியாச அனுபவம்!


"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்" என்பது பழமொழி. அந்த நகைச்சுவை உணர்வானது, பெண்களை கர்ப்பம் தரிக்கச் செய்யும் அருமருந்தாகவும் உதவுகிறது. பெண்கள் கர்ப்பம் அடைய, சில கோமாளிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
சிரிப்பு என்பது நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகவே செயல்பட்டு வருகிறது. அதன் மூலம், பெண்களும் கர்ப்பம் தரிக்கின்றனர் என்பது ஆய்வியல் உண்மை.
நகைச்சுவை உணர்வினால் கர்ப்பம் அடையலாம் என்பது குறித்த ஆய்வினை, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
இக்குழுவினர், சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கு, சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இவ்வாறாக, சிகிச்சை பெற்ற 219 பெண்கள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர்.
அறிவியல் ரீதியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவரும் பெண்களுக்கு, மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. இதற்காக, நகைச்சுவை உணர்வு மிக்க கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அவர்கள், சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம் நகைச்சுவை உணர்வுடன் பேசி, பெண்களின் மனதில் உள்ள அழுத்தங்களை காற்றில் பறக்கச் செய்தனர். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், 36 சதவீதம் பெண்கள் கருத்தரித்தனர். கோமாளிகளின் நகைச்சுவையானது நல்ல பலனைத் தந்தது.
பொதுவாகவே, பெண்கள் இது போன்ற நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மாறாக, சோதனை குழாய் முறையிலாவது, தாங்கள் கர்ப்பம் ஆக வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெண்கள் இருப்பதால், அவர்களிடையே மன அழுத்தமானது மேலோங்கி காணப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைத்து, அவர்களை அமைதி பெறச் செய்து மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதே கோமாளிகளின் பணி. இதற்காகவே தான் கோமாளிகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோமாளிகளின் நகைச்சுவை உணர்வு தான், பெண்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களை கருத்தரிக்கச் செய்தது என்று, மருத்துவர் பிரைட்லர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த பெண் குரங்குகளுக்கு பரிசோதனை


எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய்.இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே உள்ள எய்ட்ஸ் மருந்துடன் துத்த நாகம் ரசாயன கலவையுடன் “ஜெல்” உருவாக்கினர். அந்த “ஜெல்” மருந்தை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் “எச்.ஐ.வி.” வைரஸ் கிருமி பாதித்த விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்தனர்.

இறுதியில் “எச்.ஐ.வி.” வைரஸ் பாதித்த பெண் குரங்கிடம் பரிசோதித்து பார்த்தனர். 2 வாரங்கள் தொடர்ந்து இந்த மருந்தை அவற்றின் உடலில் செலுத்தினர். அதை தொடர்ந்து எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. அதே முறையில் மனித உடலிலும் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளில் 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் தேசிய புற்று நோய் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூயோர்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்!


வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள்.
இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்’ (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.
`கிஸா’ பிரமிடு பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான ஒரு மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்தச் சுவர், கிஸா பிரமிடையும், கிரெட் ஸ்பிங்ஸையும் மணல் வீச்சில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து. இரண்டு பகுதிகளாகக் காணப்படும் அந்தச் சுவர், நான்காம் துட்மோஸ் அரசர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கி.மு. 14-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 8-வது பாரோ மன்னர் அவர்.
சுவரின் இரண்டு பகுதிகளும் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன. ஒரு பகுதி, வடக்கு- தெற்கு திசையில் 86 மீட்டர்கள் நீளமும், மற்றொரு பகுதி கிழக்கு- மேற்கு திசையில் 46 மீட்டர்கள் நீளமும் இருக்கின்றன. இங்கு இதுபோல மறைந்து கிடக்கும் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வில் தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்


இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

பிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்


இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு WorldWideWeb என்றே பெயர் சூட்டி இருந்தார்.
இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
1.WorldWideWeb (1990):
உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது.
2.ViolaWWW (1992):
யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன.
3. Cello (1993):
விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.
4. Lynx 2.0 (1993):
இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
5. NCSA Mosaic 1.0 (1993):
மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.
6. NCSA Mosaic 1.0 (1993):
ஐ.பி.எம். நிறுவனம் இணைய உலாவித் தொகுப்புகளில் இந்த தொகுப்புடன் தான் நுழைந்தது. ஏற்கனவே மொசைக் அடிப்படையில் பிரவுசர்களை உருவாக்கியது. ஆனால், அது அந்நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் மட்டும் இயங்கியது. இது சிறப்பாகப் பேசப்பட்டாலும் குறிப்பிட்ட சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கியதால், அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
7. Netscape Navigator 1.0 (1994):
மொசைக் பிரவுசர் தயாரித்த வல்லுனர்கள் சிலர், அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, தனியே ஒரு பிரவுசரை உருவாக்கினார்கள். அதுவே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 1. இதன் எளிமை, வேகம் மக்களை அதிகமாகக் கவர்ந்ததனால், அதுவே பெரும்பாலானவர்களின் பிரவுசராக இடம் பெற்றது.
8.Microsoft Internet Explorer 1.0 (1995):
நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசருக்குக் கிடைத்த புகழைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தானும் இந்த பிரிவில் இறங்கி, தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தந்தது. முதலில் அரைவேக்காடாக இருந்த இந்த பிரவுசர் நாளடைவில் மேம்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்குகிறது.
9.Netscape Navigator 3.0 (1996):
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மக்களிடம் பெரிய அளவில் சென்றடையும் முன்னர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 3, மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பதிப்பில் ஆடியோ,வீடியோ மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் சப்போர்ட் தரப்பட்டது, மக்களை இதனுடன் ஒட்டவைத்தது. இது அவ்வப்போது கிராஷ் ஆனாலும், மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
10. Opera 2.0 (1996):
நோர்வே நாட்டைச் சேர்ந்த ஆப்பரா நிறுவனம் தன் முதல் ஆப்பரா பிரவுசரை 1996ல் கொண்டு வந்தது. நெட்ஸ்கேப் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்புகளில் பிரச்னையைச் சந்தித்த மக்கள், ஒரு மாற்றாக இதனைப் பயன்படுத்தினார்கள். இணையத்திற்கென வரையறை செய்யப்பட்ட பொதுவான கொள்கைகளுக்கிணங்க இது இயங்கியதால், இணைய தளம் தயாரிப்பவர் களுக்கு இது மிகவும் பிடித்த பிரவுசராக இருந்தது.
11.KDE Konqueror (2000):
இது வெப் பிரவுசராக மட்டுமின்றி, ஒரு பைல் மேனேஜராகவும் இருந்தது. யூனிக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸ் இயக்கங்களுக்கு ஏற்றதாக இயங்கியது. பின்னாளில் வந்த சபாரி வெப் பிரவுசருக்கான அடிப்படையைத் தந்தது.
12. Microsoft Internet Explorer 5 for Mac (2001):


மேக் ஓ.எஸ். எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஒரு பிரவுசர் தேவைப்பட்ட போது, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேக் சிஸ்டத்திற்கான பிரவுசரை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
13. Microsoft Internet Explorer 6.0 (2001):
பிரவுசர் யுத்தத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உச்சத்திற்குக் கொண்டு போன பிரவுசர். இருப்பினும் பின்னாளில் ஹேக்கர்கள் இதன் பலவீனங்களைக் கண்டறிந்து செயல்பட்டபோது, மக்கள் சற்று பயத்துடனே இதனைப் பயன்படுத்தினர். மாற்று பிரவுசருக்குக் காத்திருந்தனர்.
14. Netscape 7 (2002):
தன்னுடைய பிரவுசரைப் பயன்படுத்திய பலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குத் தாவியதனால், தன் பங்கினை நிலை நிறுத்த, நெட்ஸ்கேப் நிறுவனம் இந்த பதிப்பினை வெளியிட்டது. இதனுடைய குறியீட்டு வரிகளில் பெரும்பாலானவை ஓப்பன் சோர்ஸ் முறையில் மற்றவர்களுக்கு இலவசமாகக் கிடைத்தன.
இருந்தும் இந்த பிரவுசரினால், மைக்ரோசாப்ட நிறுவனத்திற்கு முன் நிற்க இயலவில்லை. ஆனால், இந்த பிரவுசரே, ஓப்பன் சோர்ஸ் முறையில் மொஸில்லா நிறுவனத்தை, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கொண்டு வரத் தூண்டுதலாய் இருந்தது. பின்னாளில், மொஸில்லாவின் சில தொழில் நுட்பத்தினை, நெட்ஸ்கேப் கொண்டு வந்தாலும், மைக்ரோசாப்ட் முன்னால், நெட்ஸ்கேப் மறைந்தே போனது.
15. Mozilla Phoenix 0.1 (2002):
நெட்ஸ்கேப்பின் சாம்பலில் இருந்து மொஸில்லா உருவாக்கிய பிரவுசர் இது. எளிமை, வேகம், நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இயக்கம், உருவாக்கம் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு பிரவுசர்களை அமைப்பதாக மொஸில்லா அறிவித்து, இந்த பிரவுசரைக் கொண்டு வந்தது. இதுவே பின்னாளில் பயர்பேர்ட் (Firebird) மற்றும் பயர்பாக்ஸ் (Firefox) ஆக மாறியது.
16. Apple Safari Public Beta (2003):
மேக் சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகக் கருதப்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் தன் சொந்த முயற்சியில், தன்னுடைய மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரவுசர் ஒன்றை உருவாக்கியது. பின்னாளில் இது சபாரி என்ற பெயரில் இடம் பிடித்தது.
17. Mozilla Firefox 1.0 (2004):
தன் சோதனைத் தொகுப்புகள், மக்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மொஸில்லா நிறுவனம் பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட்டது. மிக அதிகமாக மக்களால் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் என்ற பெயரைப் பெற்றது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்த மக்கள், பயர்பாக்ஸ் பக்கம் செல்ல, மைக்ரோசாப்ட் பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கத் தொடங்கியது.
18. Google Chrome Beta (2008):
தேடல் இஞ்சினில் தன் இடத்தைப் பரவலாகவும், ஆழமாகவும் மக்கள் மனதில் பிடித்த கூகுள் நிறுவனம் தனக்கென ஒரு பிரவுசரை வடிவமைக்க விரும்பி, குரோம் பிரவுசரை வெளியிட்டது. வேகத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்த பிரவுசர் இன்றும் மற்ற பிரவுசர்களின் இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருகிறது.
இன்னும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இந்த பிரவுசர்களே, தனிப்பட்ட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, பிரவுசர் சந்தையில் தங்களுக்கென இடம் பிடித்தவையாக உள்ளன.

உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும்


மனிதர்களின் உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிறுவனங்களின் சக்தி வளப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு புதிய தொழில்நுடபம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடல் வெப்ப நிலையை பயன்படுத்தி சுவீடன் நிறுவனமொன்று சக்தியை உற்பத்தி செய்துள்ளது.
உடல் வெப்பநிலை வீண் விரயமாக்கப்படுவதாகவும், இந்த சக்தியைப் பயன்படுத்தி கட்டங்களில் கதகதப்பை ஏற்படுத்த முடியும் எனறும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்டொக்கொம் மத்திய ரயில் நிலையப் பயணிகளின் உடல் வெப்ப நிலையைப் பயன்படுத்தி அருகில் உள்ள கட்டடமொன்றின் வெப்ப நிலையை அதிகரிக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உடலின் வெப்பநிலையை வெப்பக்கடத்திகள் மூலம் ஈர்த்து அருகில் உள்ள கட்டடம் வெப்பமாக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த முறைமையினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படாது எனவும், எரிபொருள் செலவினை 25 வீதத்தினால் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

'பறக்கும் தட்டு' உண்மையா? - தொடரும் ஆராய்ச்சிகள்


ஆங்கிலத் திரைப்படங்களில் நீங்கள் `பறக்கும் தட்டை’ பார்த்திருக்கலாம். ஆகாயத்தில் எங்கிருந்தோ அது பறந்துவரும். நெருப்பு அல்லது வெளிச்சத்தைக் கக்கியபடி கீழே இறங்கும். அதிலிருந்து விசித்திரமான மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் தங்களை வெளிக்கிரகவாசிகள் என்று கூறிக்கொள்வார்கள்.
ஆனால் உண்மையில் பறக்கும் தட்டு என்று எதுவுமே கிடையாது. மேலைநாடுகளில், பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட செய்திகள் திடீரென வெளியாகும். `இந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது’ என்று பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். வானில் இப்படி பறக்கும் தட்டு போன்று தென்படுகின்ற பொருள், காஸ்மிக் கதிர் ஆய்வு, வானிலை ஆய்வு ஆகியவற்றுக்காக உயரே செலுத்தப்படும் பலூன்களாக இருக்கக்கூடும். மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றும்.
பறக்கும் தட்டும் மர்மம் பற்றிய பல நூல்கள் மேலைநாடுகளில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பறக்கும் தட்டு என்பது உண்மையல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.
பறக்கும் தட்டு அல்ல, வேறு எந்தக் கலம் மூலமும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நமது அண்டத்தில் பூமி போன்ற கிரகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் ஒன்றிலிருநது மனிதனைப் போன்றவர்கள் வருவது என்றால் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படி நீண்ட பயணத்துக்கு வாய்ப்பே கிடையாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு `விசிட்’ செய்திருப்பது உண்மை, அவர்களின் வாகனம்தான் `பறக்கும் தட்டு’ என்று தீவிரமாக வாதிடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆக, விவாதம் தொடர்கிறது.

பகல் கனவு காணும் குழந்தைகள்!


வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைகளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் `எம்.ஆர்.சி. கிளினிக்கல் சயன்சஸ் சென்டர்’ ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது, நடந்தவற்றை யோசித்து மீளாய்வது செய்வது மற்றும் விழிப்பு உணர்வுக்கான மூளைப் பகுதிகள், பிறந்த குழந்தைக்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் செயல்பாடு, வளர்ச்சி குறித்த தற்போதைய கருத்துகளுக்குச் சவாலாகத் திகழ்கிறது புதிய கண்டுபிடிப்பு.
இம்பீரியல் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 29 வாரங்கள் முதல் 43 வாரங்கள் வரையிலான 70 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களின் `மூளை ஓய்வுநிலை வலைப் பின்னல் அமைப்பு’ எவ்வாறு இருக்கிறது என்று `எம்.ஆர்.ஐ. ஸ்கேன்’ எடுத்துப் பார்க்கப்பட்டது. இந்த ஓய்வுநிலை வலைப்பின்னல் அமைப்பானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்தாத போதும் அல்லது தூக்கத்தின் போதும் செயல்பாட்டு நிலையில் உள்ள நிரான்களின் இணைப்பாகும். கருவில் உள்ள சிசுவானது பிறக்கும் நிலையை எட்டும் போது, இந்த வலைப்பின்னல் அமைப்பு பெரியவர்களுக்கு உள்ளதைப் போல முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறது.
இந்த வலைப்பின்னல் அமைப்புகளில் ஒன்றான `டீபால்ட் மோட் நெட்வொர்க்’, நடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பது, பகல் கனவு காண்பது ஆகியவற்றில் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யாதபோது மேற்கண்ட நெட்வொர்க்கானது `ஆக்டிவ்’ ஆகவும், ஒரு பணியில் கவனமாக ஈடுபடும்போது குறைவான `ஆக்டிவ்’ உடனும் இருப்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குழந்தைகள் தூங்கும்போது இந்த `நெட்வொர்க்’, செயல்பாட்டில் இருக்கிறது.
ஆய்வுக் குழுவின் முக்கிய உறுப்பினரான பேராசிரியர் டேவிட் எட்வர்ட்ஸ், குழந்தைகளின் மூளைச் செயல்பாடு குறித்த முந்தைய கருத்துகளை எங்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன என்கிறார்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு; நாசா விஞ்ஞானிகள் தகவல்


விண்வெளியில் கிரகங் களை ஆய்வு செய்வதற் காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப் லர்-10 என்ற செயற்கை கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர்.அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியில் உள்ள கிரகங் களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று தோற் றம் கொண்டது. இது முழு வதும் பாறைகளால் ஆனது. அது நட்சத்திர கூட்டங்களை சுற்றி வருகிறது.

இந்த கிரகத் துக்கு கெப்லர்-10பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதாவது 1371 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் வெப்பம் உள்ளது. “எனவே, இங்கு மனிதர்கள் வாழ முடியாது. எனவே தான் இது உயிரினங்கள் வாழ தகுதியற்றது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானிகள் நாசா விண்வெளி நிறுவனத்தின் கெப்லர் திட்ட விஞ்ஞானி டக்ளஸ் ஹட் ஜின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கிரகத்தில் கார்பன் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இல்லை.

எனவே, இங்கு ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ. மூலக்கூறுகள் தோன்ற வாய்ப்பு இல்லை. ஆகவே பூமியை போன்று இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. என்று நாசா வின் மற்றொரு விஞ்ஞானி நடாலி படால்கா தெரிவித் துள்ளார்.

கடலில் இருந்து மின்சாரம்!


உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.
சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.
நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது.
எனவே செலவு குறைவாக உள்ளதும், தொடர்ந்து மின்சக்தியைத் தருவதுமான புதிய ஆற்றல் மூலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
அவ்வாறு அமைந்த புதிய வழிமுறைதான் கடலில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும். அலை வீச்சு, கடலில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள், ஆறுகள் கடலில் பாய்ந்து கலப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆற்றலை நாம் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடல் அலைகளில் இயங்கு ஆற்றலும், நிலை ஆற்றலும் அடங்கியிருக்கின்றன. அலை உயரும்போது நிலை ஆற்றலையும், விழுந்து பாயும்போது இயங்கு ஆற்றலையும் கொண்டிருக்கிறது.
அலைகள் எழும்பித் தாழ்ந்து பாயும் பாய்ச்சலைப் பயன் படுத்தி, 'டர்பைன்களை’ சுழலச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ட்பத்தை மின்சாரப் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு கடல் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாடு முன்னணியில் திகழ்கிறது. நம் நாட்டிலும் கட்ச், காம்பே போன்ற கடல் பகுதிகளில் இம்முறையைப் பின்பற்றி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள கடல் மின்சார உற்பத்திச் சாதனங்களை விட செலவு குறைவான, செயலாற்றல் அதிகமுள்ள சாதனங்களை உருவாக்கும் தொழில்ட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தவளை மற்றும் நண்டின் அற்புதக் கலவை: ஓர் அதிசய உயிரினம்!


தவளை நண்டு என்ற ஓர் அதிசய உயிரினம், தவளை மற்றும் நண்டின் கலப்பு தோற்றத்துடன் காட்சியளிக்கும் தன்மையுடையது. இவை, கேரளாவை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் வாழும் அரிய வகை உயிரினங்கள் பற்றிய ஆய்வுகளை, மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ந்து செய்து வருகிறது. "சாகர் சம்ப்டா" என்ற ஆராய்ச்சி கப்பலின் உதவியுடன் களம் இறங்கிய ஆராய்ச்சி குழுவினர், கேரள மாநிலம் கொச்சி அருகே அமைந்துள்ள வங்கக்கடலில் தீவிரமாக ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வின்போது, அரிய வகை உயிரினங்களான கத்தி மீன், வவ்வால் மீன், தவளை நண்டு போன்றவை தற்போதும் ஆழ்கடலில் வாழ்ந்து வருகிறது என்பது தெரிய வந்தது. இந்த அற்புத உயிரினங்கள் 116 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உயிரினங்கள், ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், வவ்வால் மீன்களில் 9 வகைகள் உண்டு என்றும், அவற்றில் 4 வகை இந்தியாவில் காணப்படுகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவை கடல்பாசி, நுண்ணிய கடல்வாழ் புழுக்கள் மற்றும் சிறிய மீன்களையே அதிகம் உணவாக எடுத்துக் கொள்கிறது. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், செங்கடல் மற்றும் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா, தைவான், சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகிறது என்றும் வவ்வால் மீன்கள் பற்றி ஆராய்ச்சி குழுவினர் தங்களின் கண்டுபிடிப்பை விளக்கினர்.
கத்தி மீன்களைப் பற்றி அவர்கள் கூறும் போது, இவை மன்னர் வளைகுடா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது என்றும், பவளப்பாறை மற்றும் அதிகமான சேற்றுப் பகுதிகளில் தான் இவை உயிர் வாழ்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
வெள்ளை நிறத்தில் தட்டையாக காணப்படும் இந்த மீன்களை சாப்பிட முடியாது. இவை அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களின் இனத்தைச் சேர்ந்தது. இவை சாதாரண மீன்களைப் போல் நீந்தாமல், செங்குத்தாக நீந்தும் தன்மையுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கத்தி மீனின் சிறப்புகளை விளக்கி கூறினர்.
மற்றொரு அரிய உயிரினமான தவளை நண்டு பற்றி கூறும் போது, இவை தவளை மற்றும் நண்டின் கலப்புத் தோற்றம் கொண்டது. இவற்றில் 11 வகைகள் உண்டு. இதில் 3 வகை, இந்தியாவிலேயே காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.
இருப்பினும், ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம், பல அரிய மற்றும் அற்புத உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை செய்பவர்கள் இடைவேளை எடுத்துக் கொள்வது அவசியம்


நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலைகளில் ஈடுபடுவோர் சிறு சிறு இடைவேளைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு சிறு இடைவேளைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக பேண முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இருதயம் மற்றும் முதுகு பகுதிகளுக்கு இவ்வாறான இடைவேளைகளின் மூலம் நன்மை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நிமிடம் எழுந்து நிற்றல், அல்லது படியேறுதல் போன்ற நடவடிக்கைகள் கூட சிறந்த உடற்பயிற்சியாக அமையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் டொக்டர் ஜெனீவய்வ் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.
இருபது வயதுக்கும் மேற்பட்ட சுமார் ஐயாயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சீரான உடற்பயிற்சி இருதய நோய்களை கட்டுப்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2012ல் உலகம் அழிந்து விடுமா?: விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை!


உலகம் 2012ல் அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.
உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன.
இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் திகியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும்.
திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன.
இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள்.
இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள்.
இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர்.
சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் அவர்.
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் விஞ்ஞானி அய்யம் பெருமாள்.

உடல் எடையை குறைக்க பால் போதுமே!


காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் உடல் எடை குறையும் என்கின்றது அவுஸ்திரேலிய ஆய்வுத் தகவல்.
காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடித்தால், அதிகமாக பசி ஏற்படும். பசி சீக்கிரமாக வருவதால், உணவு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வரும். இதனால், கலோரியின் அளவும் கூடும்.
ஆனால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுத்துக் கொள்ளும் போது, உணவின் அளவு குறைவதோடு கலோரியின் அளவும் குறையும். இதனால், உடல் எடையை மிக எளிதாக குறைக்க முடியும் என்கின்றனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள், 34 ஆண்கள் மற்றும் பெண்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். அவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
ஒரு குழுவினருக்கு பழச்சாறும், மற்றொரு குழுவினருக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலும் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 4 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் உண்மை தெரியவந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில், குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துகள் உள்ளன. இவை அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதை தடைசெய்கிறது. மேலும், போதும் என்ற மனநிறைவை இது மூளைக்கு கொடுப்பதால், பசி உணர்வு தள்ளிப் போகிறது. இதனால், உணவும் குறைவாக எடுத்துக் கொள்ளும் நிலை வந்துவிடும்.
அதனால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலானது, உடல் எடையை குறைக்க வழி செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

மனைவியை, பெண்களை மயக்கும் வித்தைகள்


இல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது
உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரு வது கருத்து வேறுபாடுகளால் தான். இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதில்லை. முதலில் உங்கள் மனைவியை ஆழமாக நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவளது தேவை களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள். நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒரு மடங்கு அன்பை காட்டினால், அவள் பதிலுக்கு நூறு மடங்கு அன்பை திருப்பித் தருவாள். பெண்மைக்கு மட்டுமே உள்ளது இந்த தாராள குணம். இதைப் புரிந்து கொண்டால் உங்கள் மனைவி உங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விடுவாள். அவளுக்கு நீங்கள் சொல்வதே வேதம் என்றாகி விடும்.
சுதந்திரம்
அன்பை வெறும் வார்த்தைகளில் மட்டும் காட்டாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும். புதுப்பெண்ணுக்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறது. தாலி கட்டினாலே அவள் நமக்கு அடிமை தான் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அதே போல், தாய் அல்லது சகோதரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடக்குமுறையைக் கையாளாதீர்கள். உங்கள் இருவருக்குள்ளும் உள்ள சுதந்திரத்தில் வேறு எவரும் தலையிட முடியாத அளவில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து விடுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள்
நிறைய மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவரிடம் மற்றவர் நெருங்கி வரும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணமான புதிதில், பெண்களுக்கு பிறந்த வீட்டின் மீது அதிக நாட்டம் வருவது இயல்பு. அப்போது அவர்களை அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது பிறந்த வீட்டிற்குச் சென்று வர அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், அவளுடைய உள்ளத்தில் நீங்கள் நீங்காஇடம் பிடித்து விடுகிறீர்கள். நாளடைவில் அந்த பழக்கமும் அவளுக்கு படிப்படியாக குறைந்து விடும். அங்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தால் கூட, அதிக நேரம் இருக்க மனமில்லாமல் உங்களைப் பார்க்கும் ஆசையில் ஓடோடி வந்து விடுவாள்.
அன்பின் பாலம்
இருவரது உறவுக்கும் இடையில் உள்ள அன்பிற்கு பாலமாக இருப்பது உடலுறவு தான். அதனால் அதற்கு நீங்கள் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உச்சகட்ட நிலையை எட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள். மனைவியை திருப்திபடுத்த `அது' மட்டும் போதாது என்பது கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவளாக மாற்றிக் கொள்ள முடியும். பூவை என்றாலே மெதுவாக மலரும் பெண்மை தான். அதைப் புரிந்து கொண்டால் போதும். கணவன்மார்களின் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவளாகி விடுகிறாள், பெண்.

பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!


அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...
முகம்:
பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்' செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முகஅழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
சருமம்:
பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.
அழகுசாதனப் பொருட்கள்:
லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பற்கள்:
புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.
பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.
கூந்தல்:
ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
உடை:
உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்' செய்து அணிவது சிறந்தது.
இதுவும் அணிகலன்தான்:
கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.
நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.

பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் சில விஷேச குணங்கள்!


ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.
தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது.
அதாவாது,
பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.
பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.
விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.
உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.
அதிக துணிச்சல் உடையவன்.
இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.
தாராள மனப்பான்மை உடையவன்.
அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.
ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.
ரகசியத்தை அறிந்தவன்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்.

கொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் அதிசயம்!


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

மின்சாரத்தில் இயங்கும் புதிய மினி கார்!


புதிய அம்சங்களுடன் கூடிய இஎன்-வி என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் காரை ஜெனரல் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.ஆனால் குறைந்த தொலைவு மட்டுமே செல்ல முடியும் என்பதால் அவை மக்கள் இடத்தில் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பார்க்கிங் தொல்லைக்கு பதிளலிக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் காரை ஜெனரல் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த விழாவில் இந்நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது: இஎன்-வி காரானது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும்,குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காரை ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 25 கி.மீ வரை பயணம் செய்யலாம்.
இரண்டு போ் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த காரை அதிகபட்சம் 25 கி.மீ வேகத்தில் செல்லலாம்.இந்த காரை பார்க்கிங் செய்வதற்கு குறைந்த இட வசதியே போதுமானது.மேலும் அடுத்த முயற்சியாக எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த காரின் வர்த்தக ரீதியான விற்பனையை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்


குழந்தை பிறந்த உடனே  `சீம்பால்' என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை முதலில் தவறாமல் கொடுக்க வேண்டும்.அதனால் குழந்தைக்கு மட்டுமில்லாமல் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியானது  பிறந்த குழந்தையின் உடலில் மிகவும் குறைவாக இருக்கும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அதனால், எந்த நோயும் எளிதில் குழந்தையை  தாக்குவது இல்லை.இதுமட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தையை அணைத்து பால் ஊட்டும்போது, தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. 
குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது.
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் நம்பப்படுகிறது.
தாயின் அன்பானது குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. தாயின் அன்பு,பாசம் கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்களே நிரூபித்து இருக்கிறார்கள். அதனால், எந்த தாயும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க மறக்க வேண்டாம்.

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது!


பிளாக்பெரி போன் தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் (ரிம்)  பிளாக்பெரியில் ஆபாச தளங்களை பார்க்க முடியாதபடி தடைவிதித்துள்ளது.
செல்போனில் ஆபாச படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்வது இந்தோனேஷியாவில் அதிகரித்து  வந்தது.இதையடுத்து ஆபாச இணையதளங்களுக்கான இணைப்பை தடை செய்ய கூறி போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை  விடப்பட்டது.இதை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக இன்டர்நெட் தொடர்பின் போது ஆபாச இணையதளங்களை பார்க்க முடியாதபடி வடிகட்டும் சாப்ட்வேரை ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) நிறுவனம் ஏற்படுத்தி உள்ளதாக ஜகார்தாவில் அதன் நிறுவனர் கூறினார்.
இந்த தடையை இந்தோனேஷியாவின் தொலைத் தொடர்பு அமைச்சர் டிபாபுல் செம்பரிங் வரவேற்றுள்ளார்.

போன் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதி


விரும்பும் போன் நிறுவனத்திற்கு செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும் இந்த வசதியை "மொபைல் நம்பர் போர்ட்டப்ளிடி" (எம்என்பி) என்கின்றனர். இந்த வசதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

இதை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
1.இந்த வசதியை பெற செல்போனில் PORT டைப்செய்து இடைவெளி விட்டு போன் நம்பர் டைப் செய்து 1900  என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
2.மாறும் குறியீட்டுடன் (யுனிக் போர்ட்டிங் கோட்) பதில் எஸ்எம்எஸ் வரும்.மாற விரும்பும் நிறுவனத்திடம் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறியீட்டை குறிப்பிட வேண்டும்.அதனுடன் அடையாள  சான்று,முகவரி சான்று இணைத்து மாற விரும்பும் போன் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.அங்கு புதிய சிம்கார்டு தரப்படும்.
3.மாறும் நிறுவனம் செல்போனில் தொடர்பு கொண்டு தேதி,நேரத்தை கூறுவார்கள்.அந்த நாள் நேரத்துக்கு பிறகு பழைய சிம்கார்டை நீக்கி விட்டு புதிய சிம்கார்டை பொருத்த வேண்டும்.இந்த நடைமுறைகள் 7 நாட்களுக்குள் முடிவடையும்.
4.ரூ.19 கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.மாறும் நிறுவனத்தின் சேவை தொடங்கும் முன் செல்போன் சேவை 2 மணிநேரம் துண்டிக்கப்படலாம்.அதுவும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் இது நடக்கும் என்பதால் வாடிக்கையாளருக்கு பாதிப்பு இருக்காது.
5.போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆவணங்களுடன் கடைசியாக செலுத்திய பில் நகலையும் இணைக்க வேண்டும்.
6.ஒரு நிறுவனத்தில் இருந்து மாறிய பின் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு வேறு நிறுவனம் மாற முடியாது.
7.நிறுவனம் மாறும்போது ப்ரீபெய்டு இணைப்பில் பாக்கித் தொகை இருந்தால்,புதிய நிறுவன இணைப்பு பெறும்போது அது காலாவதி ஆகிவிடும்.

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!


அதிகம் சிந்தித்தால் உடை எடை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மருத்துவர்களும் இதை உண்மை என்று கூறுகின்றனர்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பு ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது, நமது மூளை அதிகமாக சிந்திக்கின்றது. அப்போது, ஏராளமான சக்தி செலவாகும். இருப்பினும், உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இதன் காரணம் கண்டறிய மருத்துவர்கள் பல சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்பது தெளிவாக கண்டறியப்பட்டது.
அதாவது, நாம் சிந்திக்கும் போது அதிக சக்தி செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால், அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக, உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.
இது குறித்து பலரிடம் மேற்கொண்ட ஆய்வின் படி, புத்தகங்களை படித்த பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது என்பது தெரிய வந்தது.
மன அழுத்தம் ஏற்படுகின்ற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
உடல் பருமன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, இதுவே சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!


இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை.
அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.
வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க…
தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.
இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

பெற்றோரின் இரத்த வகையால் குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா?

இரத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிடிவ் மற்றும் Rh நெகடிவ் என்று இரண்டு வகை. ஒரு வகை குரங்கின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதே  Rhesus என்பதாகும். இதனால் நாம் அதை Rh என்று கூறுகிறோம்.
கர்ப்பமாக இருப்பவர்கள் Rh பாஸிட்டிவாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. உலகில் மிக குறைந்த பேர் தான் Rh நெகடிவ்வாக இருப்பார்கள்.
மனைவியின் இரத்தம்  Rh நெகட்டிவ்வாக இருந்து, கணவனின் இரத்தம் Rh பாஸிட்டிவாக அமைந்துவிட்டால் பிரச்சனை. டெலிவரி நேரத்தில் தாயின் Rh நெகட்டிவ் ரத்தத்தில் குழந்தையின் Rh பாஸிட்டிவ் ரத்தம் கலக்கும்போது எதிர்வினையை உருவாக்குகிறது.
இதனால் முதல் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவது இல்லை மற்றும் தாயின் உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது.இதனால் இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதோ, அல்லது பிறந்த பின்போ குழந்தைக்கு மஞ்சள்காமாலை, இரத்தச்சோகை என்று கடுமையான நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க Rh நெகட்டிவ் இரத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கண்டிப்பாக தடுப்பூசிப் போட வேண்டும். தற்போது நவீன டெக்னாலஜி மூலம் கருப்பையில் உள்ளக் குழந்தையின் இரத்தத்தை மாற்றுமளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்.

இந்த ஊசியைப் முதல் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளும் போடலாம். இருந்தாலும் முன்பே போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
 

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப் பொருட்கள்!



"அச்சச்சோ மறந்து போச்சே" என்று பலரும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது தான்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்
1.ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2.சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
3.பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12  பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ்,தாதுஉப்பு இருக்கிறது.குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது.
4.கோதுமை,சோளம்,பார்லி,காராமணி,பீட்ரூட்,சோயாபீன்ஸ்,வெங்காயம்,வெள்ளைப்பூண்டு,புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இதை தவிர பால்,தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும்.
நினைவாற்றல் குறைவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகள்தான். இரத்த ஓட்டக்குறைவும், நோய்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூனளக்கு சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும்.மூளையை சோர்வடையால் பார்த்துக் கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.

'இயற்கை' ஓவியங்கள்! (படங்கள்



இயற்கையை ஓவியமாக வரையலாம். ஆனால் இயற்கையில் ஓவியம் வரைந்தால்! இப்படித்தான் இருக்கும்!