ஆனால் உண்மையில் பறக்கும் தட்டு என்று எதுவுமே கிடையாது. மேலைநாடுகளில், பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட செய்திகள் திடீரென வெளியாகும். `இந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது’ என்று பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். வானில் இப்படி பறக்கும் தட்டு போன்று தென்படுகின்ற பொருள், காஸ்மிக் கதிர் ஆய்வு, வானிலை ஆய்வு ஆகியவற்றுக்காக உயரே செலுத்தப்படும் பலூன்களாக இருக்கக்கூடும். மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றும். பறக்கும் தட்டும் மர்மம் பற்றிய பல நூல்கள் மேலைநாடுகளில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பறக்கும் தட்டு என்பது உண்மையல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். பறக்கும் தட்டு அல்ல, வேறு எந்தக் கலம் மூலமும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நமது அண்டத்தில் பூமி போன்ற கிரகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் ஒன்றிலிருநது மனிதனைப் போன்றவர்கள் வருவது என்றால் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படி நீண்ட பயணத்துக்கு வாய்ப்பே கிடையாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு `விசிட்’ செய்திருப்பது உண்மை, அவர்களின் வாகனம்தான் `பறக்கும் தட்டு’ என்று தீவிரமாக வாதிடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆக, விவாதம் தொடர்கிறது. |
Saturday, January 22, 2011
'பறக்கும் தட்டு' உண்மையா? - தொடரும் ஆராய்ச்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment