Monday, April 18, 2011

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் (காணொளி இணைப்பு)


  ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.

பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணரமுடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச்சலைப் பதிவு செய்துள்ளனர்.

வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல்கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள கடலடி ஒலிவாங்கியின் மூலமே இவ்விரைச்சல் ஒலிப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அச்சத்தமானது ஏதோ பொருள் ஒன்று நொருங்குவதினைப் போல உள்ளது.

தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ள அவ்விரைச்சலை நீங்களும் கேளுங்கள்.

__

Sunday, April 17, 2011

இளவரசர் வில்லியம்ஸ் : மிடில்டன் திருமணம் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? (வீடியோ)


பிரித்தானிய அரச குடும்பத்தினரில் இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் பிரமாண்டமான திருமணத்திற்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில், அதன், Spoof வீடியோ ஆன்லைனில் வெளிவந்து புதிய சென்சேஷனல் ஹிட்ஸை உருவாக்கியிருக்கிறது.
இளவரசர் சார்லஸ் - கமிலா, எலிசபத் மகாராணியார், இளவரசர் ஹரி, இறுதியாக இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் என அச்சு அசலாக உண்மையானவர்களின் தோற்றத்தை ஒத்த நபர்களையே தேடிக்கண்டுபிடித்து இவ்வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.

'One's life for sharing' எனும் தொணியில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விடியோவை உருவாக்கியவர்கள் T- Mobile ஐ சேர்ந்த House of Love குழுவினர்.

இதோ அந்த Spoof வீடியோ!

ஆக்கங்களை புக்மார்க் செய்வது அல்லது பகிர்வது எப்படி?


தினமும் 4தமிழ்மீடியாவிற்கு வருகைதரும் வாசகராகிய உங்களுக்கு சில ஆக்கங்கள் பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்? அவற்றை மற்றவர்களும் வாசித்துப் பயன்பெறும் நோக்கில் அவர்களுடன் பகிர்வதற்கு விரும்புவீர்கள். அல்லது அவை பின்னர் பயன்படுத்தும் நோக்கில் புக்மார்க் செய்து வைக்க விரும்புவீர்கள்.

அவற்றை 4தமிழ்மீடியாவில் மிக இலகுவாக செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

1.குறிப்பிட்ட செய்தியை படித்துவிட்டு அச்செய்தியின் ஆரம்பத்தில் தெரியும் "பகிர்தலும் புக்மார்க்கும்" அல்லது வலப்பக்கம் தெரியும் "புக்மார்க் செய்வதற்கு அல்லது பகிர்வதற்கு!" என்ற பகுதிக்கு வாருங்கள். (படத்தை பாருங்கள்)


2. அங்கே முதலாவதாக காட்டப்படும் நட்சத்திர ஐகானை கிளிக் செய்வதன் மூலம்  அப்பக்கத்தை புக்மார்க் செய்து கொள்ளலாம்.

3. குறிப்பிட்ட இணைப்பை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சோசல் நெட்வேர்க் தளங்களில் உங்கள் நண்பர்களுடன் பகிர்வதற்கு விரும்பும் ஐகானை அழுத்தி திறக்கும் விண்டோவில் அத்தளத்தில் உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் தந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லது அதற்கு மேலிருக்கும் like பட்டனை , டுவிட்டர் பட்டனை அழுத்தலாம்.

இணையத்தை பார்வையிட சிறந்த இணைய உலாவி எது?


வேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின் நாமும் அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்வதும் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ஆயினும் 4tamilmedia வின் Web Analytic ஐ வைத்து பார்க்கும் போது எமது தளத்திற்கு வரும் பார்வையாளர்க்ளில் 52% வீதமானோர் இன்னமும் Internet Explorer-6 பாவிப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அவர்களுக்கு 4tamilmedia வை முழுமையாக பார்வையிட தடங்கல்கள் இருப்பதும் அறிய முடிகிறது. பார்வையாளர்கள் தங்களுக்கு ஏற்றால் போல் தளத்தை மாற்ற உதவும் Web 2.0, மற்றும் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப எமது தளம் வடிவமைக்கப்பட்டிருப்பதும் இன்னும் பல தொழில்நுட்ப மாற்றங்களை நாம் செய்ய இருப்பதாலும் எதிர்காலத்தில் IE 6 பாவனையாளர்களுக்கு 4tamilmedia மட்டும் அல்ல இன்னும் பல இணையத்தளங்களை அறவே பார்வையிட முடியாமல் போகலாம். இதை தவிர்ப்பதற்கும் எமது தள வாசகர்களை புது தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தயார் படுத்தும் நோக்கத்துடனும் அதிக பாவனையாளர்களை கவர்ந்த Firefox 3 உலாவியை பற்றி ஒரு பார்வை.

Microsoft தனது மார்க்கெட்டிங் உத்தியாக internet explorer இலவசமாக வழங்க தொடங்கியது. மேலும் internet explorer ஐ மேம்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களாலும் internet explorer இன் ஆகப் பழைய version ஆன internet explorer 6 ஐ பாவிக்க காரணமாக இருக்கலாம். இதற்கு மாற்றீடாக மிக வேகமான மற்றும் பாதுகாப்பான உலாவி Firefox 3 ஐ பயன்படுத்தலாம்.

ஏன் Firefox 3?

அண்மைய ஆய்வுகளின் படி இணைய பாவனையாளர்களில் 45 வீதமானோர் Firefox 3 பாவணையாளர்கள் ஆவார்கள். IE 6 பாவிப்பவர்கள் 27% வீதமும் IE 7 பாவிப்பவர்கள் 24% வீதமும் ஆகும். Microsoft இன் புதிய பதிப்பான IE 8 வெறும் 1.4% வீதமானோரே உபயோகிக்கின்றனர். மிக முக்கியமாக Firefox 3 ஆனது Acid2 Browser Test எனும் இணைய தொழில்நுட்ப தகுதியில் தேறி உள்ளது. IE 6 மற்றும் IE 7 போன்றவை இதில் அடங்கவில்லை. இதனாலேயே HTML, CSS 2.0 specifications களுக்கு மிக ஏற்ற உலாவியாக Firefox 3 உள்ளது.

URL ஐ தட்டியதும் Browser History , and Bookmark போன்றவற்றில் தேடி முழு URL ஐயும் கீழே காட்டுதல். URL பக்கத்திலேயே வசதியாக தெரியும் Star Button ஐ இருமுறை அழுத்தினால் நேரடியாக Bookmark செய்யும் வசதி, Tab Browsing வசதி, Bookmark Toolbar வசதி , இணைய பக்கத்தினுள் தேடும் வசதி, மேலும் Sessions Restore, built-in spell checking, integrated search, pop-up blocker, clear private data, and automated behind-the-scenes updates. பாதுகாப்பு வசதிகளாக Mal ware, Phishing பாதுகாப்பு, Extended Validation Secure Socket Layer (EV SSL) போன்றவற்றுக்கு இசைவாக்கம் பெற்றிருத்தல், ஆகியவையே Firefox 3 க்கு வலுச் சேர்க்கின்றன.

கணனியின் வளங்களையும் குறைவாக பயன்படுத்தக்கூடியதும் இலவசமானதும் மாறி வரும் இணைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க கூடியதும், இணைய பாவனையின் முழுமையான அனுபவத்தையும் பெறக்கூடியதாக நிச்சயமாக Firefox 3 உலாவி இருக்கும.

Firefox 3 ஐ தரவிறக்க இங்கே செல்லுங்கள். http://www.mozilla.com

இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 ஐ மேம்படுத்தாமல் இருக்க சில காரணங்கள்


அண்மையில் மைக்ரோசாப்ட் தனது மேம்படுத்திய இணைய உலாவியான இன்டநெட் எக்ஸ்புளோரரின் 9வது பதிப்பை வெளியிட்டது.
எனினும் பயன்படுத்தும் ஏனைய உலாவிகளை விட (இன்டரநெற் எக்ஸ்புளோரர் முன்னைய பதிப்புக்கள் தவிர்ந்த) அது ஒன்றும் சிறந்ததாக கருதப்படவில்லை. IE 9 இன் பதிப்பை மேம்படுத்துவதா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவெடுப்பதற்கு சில காரணங்களை பார்க்கலாம்.

1. இன்டநெற் எக்ஸ்புளோரர் உலாவி விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இல் மட்டுமே இயங்கும்.
விண்டோஸ் எக்ஸ்பி பாவனையாளர்கள் இன்னமும் 55% வீதமானோர் இருக்கும் போதும் அவர்களை ஏமாற்றிய மைக்ரோசொப்ட் IE9 ஐ விஸ்டா மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் இயங்குவதற்கு வடிவமைத்துள்ளது.

2. வேகமற்றது
வேகம் தொடர்பான பரிசோதனைகளில் பாஸாகியதாக கூறப்படுகின்ற போதும் உண்மையில் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளை விட வேகத்தில் குறைவாகவே செயற்படுகின்றது.
3.பாதுகாப்பில்லை
IE9 வெளியானதில் இருந்து அதன் பாதுகாப்பு தொடர்பாக இன்று வரை பல சர்ச்சைகள் உருவாகியுள்ளது. TPLs என்ற புதிய வசதியை IE9 இல் அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசொப்ட் எனினும் அதில் பாதுகாப்பு ஓட்டை இருப்பது கண்டறியப்பட்ட போதும் , அது உண்மையில் ஓட்டையில்லை IE9 இன் சிறப்பியல்பு என்று மழுப்புகிறது அது.
மாற்றீடான இணைய உலாவிகள் சில.
1.பயர்பாக்ஸ் டவுண்லோட் - http://www.mozilla.com/en-US/firefox/
2. குரோம் டவுண்லோட் - http://www.google.com/chrome
3. ஒபேரா டவுண்லோட் - http://www.opera.com/

கணினியில் திறந்திருக்கும் புரோகிராமை சிஸ்டம் டிரேயில் கொண்டுவருவதற்கு.


கணினியில் திறந்திருக்கும் எந்த புரோகிராமையும் சிஸ்டம் டிரேயில்
கொண்டு வருவதற்கு உதவுவதே Move to Tray என்ற மென்பொருளாகும்.

இதனால் குறிப்பிட்ட புரோகிராமை மினிமைஸ் செய்து வைத்திருக்கவும் கணினித்திரையில் இடத்தை மிச்சம் பிடிக்கவும் உதவுகிறது. டவுண்லோட் செய்வதற்கு இங்கே

பேஸ்புக்கில் இனி பிழையாக இட்ட கருத்துக்களில் (Comment) மாற்றமும் செய்யலாம்.


பேஸ்புக்கில் தவறுதலாக இட்ட கருத்துக்களை (Comments) இல் மாற்றம் செய்யும் வசதி இதுவரை இல்லை. அவற்றை நீக்க மட்டுமே முடிந்தது.

ஆனால் இப்போது கருத்துக்கள் இடும்போது அவற்றில் பிழை ஏற்பட்டு விட்டால் அதை உடனே மாற்றிக்கொள்ள முடியும்.

எவ்வாறு செய்வது? 

உதாரணமாக கமாண்ட் பாக்ஸில் எழுத்துப்பிழை விட்டு விட்டால் உடனே x அடையாளத்தை கிளிக் செய்யுங்கள். அப்போது நீங்கள் இட்ட கருத்துக்களில் மாற்றம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

கருத்தை நீக்க வேண்டுமெனில் எழுத்துக்களை முழுதும் அழித்துவிட்டு என்டரை தட்டுங்கள். மேலும் கருத்துக்களை எழுதும் போது என்டர் பட்டனை தட்டுவதன் மூலம் அடுத்த லைனில் கருத்திடக் கூடிய சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது பேஸ்புக்.

குறிப்பு - எடிட் செய்வதற்கான சந்தர்ப்பம் உங்கள் கருத்துக்கு மற்றுமொருவர் கருத்திட வரைக்கும் தான் வழங்கப்படுகிறதாம். மற்றதை நீங்கள் பரிசோதித்து பாருங்கள்.