Monday, January 10, 2011

கூரிய பற்களைக்கொண்ட பறக்கும் தவளைகள்: வியட்நாமில் கண்டுபிடிப்பு

வழமைக்கு மாறான புதிய வகை தவளை வகையொன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் தென் வியட்நாம் காடுகளில் கண்டுபிடித்துள்ளார்.

இத் தவளையினத்துக்கு 'வெம்பயர் பிளையிங் புரக்'என பெயரிட்டுள்ளனர்.அதாவது பறக்கும், இரத்தம் குடிக்கும் தவளையாகும். 

இத்தவளைகள் மரத்திற்கு மரம் தனது கால்களில் காணப்படும் மென்சவ்வின் உதவியுடன் பறப்பதாகவும் அவ் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். 

மேலும் இத்தவளை இனத்தின் குஞ்சுகளானது மிகவும் கூரிய பற்களை உடையன. 

இவ்வினமானது அடர்ந்த காடுகளில் உள்ள சிறிய நீர் நிலைகளிலும், மரப் பொந்துகளிலுமே வாழ்கின்றன. 

இத்தவளை இனம் பற்றி தற்போதே அறியக்கிடைத்திருப்பதாகவும் இது தொடர்பில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் குரங்குகளுக்கு பரிசோதனை எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய். இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. 

தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள் ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்து களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 

ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே உள்ள எய்ட்ஸ் மருந்துடன் துத்த நாகம் ரசாயன கலவையுடன் “ஜெல்” உருவாக்கினர். அந்த “ஜெல்” மருந்தை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் “எச்.ஐ.வி.” வைரஸ் கிருமி பாதித்த விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்தனர். 

இறுதியில் “எச்.ஐ.வி.” வைரஸ் பாதித்த பெண் குரங்கிடம் பரிசோதித்து பார்த்தனர். 2 வாரங்கள் தொடர்ந்து இந்த மருந்தை அவற்றின் உடலில் செலுத் தினர். அதை தொடர்ந்து எச்.ஐ.வி. வைரஸ் கிருமி களின் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. அதே முறையில் மனித உடலிலும் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது. 

2 ஆண்டுகளில் 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானி கள் தேசிய புற்று நோய் நிறு வனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ள னர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயா ளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூ யார்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது

காணாமல் போன அமெரிக்க யுத்தக் கப்பல் 200 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு

1811 ஆம் ஆண்டு காணாமல் போனதாகக் கூறப்படும் அமெரிக்க யுத்தக் கப்பலொன்றை கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக சுழியோடிகள் தெரிவித்துள்ளனர். 

பிரித்தானிய கடற்படையினருடனான மோதலைத் தொடர்ந்து இந்தக் கப்பல் ரோட் தீவில் காணாமல்போயுள்ளது. 

அந்தக் கப்பலை யாராவது கடத்தியிருக்கலாம் என ஆரம்பத்தில் அச்சம் வெளியிடப்பட்டது. எனினும் போரின் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அந்த விடயம் பேசப்படவில்லை. 

கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலத்துக்குக் கீழ் உள்ள பாறைகள் குறித்தும் சுழியோடிகள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். 

அந்த ஆய்வின்போது கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது அமெரிக்காவுக்குச் சொந்தமான யுத்தக் கப்பல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் முதலாவது மின்சார விமானம்!

ஐரோப்பியர்களினதும் உள்ளூர் விளையாட்டுத் தேவைகளையும் கருத்திற் கொண்டு உலகின் முதலாவது மின்சார விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.


80 முதல்,120 குதிரை வலு கொண்ட இந்த விமானம் பல்வேறு இலகு ரக உபகரணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆகக் கூடிய எடை கொண்ட இலகு 200 இறாத்தல்கள் மட்டுமே. 


அமெரிக்காவின் விளையாட்டுத்துறை விமானிகளுக்கு உகந்தது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது. SONEX விமானம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

காதலுக்காக ஏங்கும் உலகின் மிகவும் குள்ளமான பெண்! (படங்கள் இணைப்பு)

உலகின் மிகவும் குட்டையானப் பெண் இவர்தான். இவருக்கு வயது 21. இவரின் பெயர் ஹெடிஸ்கொக்காமென். உயரம் 28 அங்குலங்கள் மட்டுமே. எடை 151 இறாத்தல்.


இந்தக்குள்ளமான பெண் ஒருவகை அபூர்வமான எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் காரணமாகவே இவரின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.


21 வயதிலும் இவர் எட்டு வயது சிறுமியின் வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளார். உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைப் பதிவு இவருக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.


நேபாளத்தைச் சேர்ந்த தாபா மாகர் தான் உலகின் குள்ளமான ஆண்.என்னுடைய தோற்றம் மற்றும் குள்ளம் காரணமாக பல தடவைகள் நான் சக பாடசாலை மாணவர்களாலும், தோழிகளாலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.


ஆனால் அதுவே எனக்கு இன்று சர்வதேச அங்கீகாரமாக மாறிவிட்டது. இன்று நான் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டேன். மற்றவர்கள் என்னை அவமானப்படுத்திய அதே காரணி இன்று என்னை பிரபலமாக்கிவிட்டது.


இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறும் ஹெடிஸ்கொக்காமென் என்றாவது தன்னை விரும்பும் ஒரு நபர் தன்னைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்.

இராட்சத உருவ மனிதனின் புதிய பிரச்சினை!

ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் எடை 500 இறாத்தலுக்கும் மேல். கனடாவைச் சேர்ந்த ஜெக் கார்டே இன் பிரதான பிரச்சினையே இதுதான்.


26 வயதான இவர் தனது எடை காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவந்தார். இந்நிலையில் இவ்வாண்டு இறுதிப் பகுதியில் எடை குறைப்பு சம்பந்தமாக இவருக்கு சத்திர சிகிச்சையொன்றுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் அதற்குமுன் அவருக்கு வேறு ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இவருக்கு செல்லுலிடிஸ் எனப்படும் ஒருவகை சருமத் தொற்றுநோய் ஏற்பட்டது. 

இது படிப்படியாக அதிகரித்து, நஞ்சாகி வயிற்றில் குடல்பகுதி மற்றும் சுவாசத் தொகுதி என்பனவற்றையும் பாதித்து விட்டது. இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் ரோயல் ஜுபிலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 20 தினங்களாக அங்கு தங்கியுள்ளார். 

சிகிச்சை முடிவடைந்து இப்போது தான் சற்றுத் தேறி வருகின்றார். இன்னமும் செயற்கை பிராணவாயு மூலம் தான் சிவாசிக்கின்றார். தொடர்ந்து மேலும் சில வாரங்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். 

இந்த சருமப் பிரச்சினை காரணமாக இவரின் பிரதான பிரச்சினைக்கான திட்டமிட்ட சிகிச்சையை இப்போதைக்கு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இவரின் உடல் பருமனானது நடமாட்டத்தை சிரமமாக்கும் ஊளைச்சதைப் பிரச்சினை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஜெக் கார்டே தனது உடல் பருமன் பிரச்சினை காரணமாக விரக்தியடைந்து காணப்படுகின்றார். 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இவ்வாறான 800 பேர் எடைகுறைப்பு சத்திர சிகிச்சைக்காகக் காத்திருப்பதாக அந்தத் துறைசார்ந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

ஓவியரின் கொடூர சிந்தனை குழந்தையின் மண்டை ஓட்டில் 8 ஆயிரம் வைரங்கள் பதிப்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டேமி யன் ஹிர்ஸ்ட். இவர் புகழ் பெற்ற ஓவியர். தனது வித்தியாசமான சிந்தனை களின் மூலம் பலவிதமான ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். 

இவர் இறந்தவர்களின் மண்டை ஓடுகளில் வைரங்களை பதித்து ஓவியங்கள் வரைந்தார். இது அனை வரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அவர் பிறந்து இறந்த பச்சிளம் குழந்தையின் மண்டை ஓட்டில் வைரம் மற்றும் வைடூரிய கற்களை பதித்து ஓவியம் வரைந்துள்ளார். 

அதில் சுமார் 8 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அவை இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் ஆனவை. வைரம் தவிர பிளாட்டினத்தாலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் வைரம் பதித்துள்ள மண்டை ஓடு பிறந்து 2 வாரத்தில் இறந்த குழந்தைக்குரியது என கூறப்படுகிறது. இந்த ஓவியத்தை கண்காட்சியில் வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது 

இந்த ஓவிய சிந்தனை கொடூரமானது என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிக்கட்டிகளுக்குள் அதிகநேரம் நின்று சீனர்கள் சாதனை (காணொளி இணைப்பு)

  சீனாவைச் சேர்ந்த சென் கெகாய் (52) மற்றும் ஜி சொங்காஹோ (54) ஆகிய இருவரும் மேற்சட்டையின்றி சுமார் 2 மணிநேரம் பனிக்கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் இருந்து சாதனை புரிந்துள்ளனர். 

இதில் சென் சுமார் 118 நிமிடங்கள் வரை பெட்டிக்குள் இருந்தபோது அவரின் உடல் வெப்பநிலை சடுதியாக குறைவடைந்தமையினால் மருத்துவ குழுவினால் வெளியே எடுக்கப்பட்டார். 

எனினும் ஜின் 120 நிமிடம் வரை உள்ளே இருந்து சாதனை படைத்தார். 

இவர்கள் இருவரும் சீனாவின் ஹீலொங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். சைபிரிய எல்லையில் உள்ள இப்பிரதேசத்தின் வெப்பநிலையானது சில சமயங்களில் (-40) பாகைவரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 115 நிமிடங்கள் வரை பனிக்கட்டிகளுக்குள் இருந்தமையே சாதனையாக இருந்தது. 

இச்சாதனையானது கடந்த வாரம் விம் ஹொப் என்ற ஒல்லாந்து நாட்டவரால் நிலைநாட்டப்பட்டதாகும். 

 __

110 இலும் ஆசை வரும்..! (பட இணைப்பு)

  சிலருக்கு வயதானாலும் ஆசை அடங்குவதில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் பல விடயங்கள் எங்கள் காதுகளுக்கு எட்டிய வண்ணமே உள்ளன.

அண்மையில் கூட 94 வயதில் தந்தையான தாத்தா, இளம் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவர் என வரிசை நீண்டுகொண்டே போகின்றது.

இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த 110 வயதான நபரொருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள 82 வயதான பெண்மணியொருவர் தயாராகவுள்ளதாகவும் எனவே விரைவில் மணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அஹமட் மொஹமட் இஸா என்ற அந்நபருக்கு 20 பேரக்குழந்தைகளும், 40 கொள்ளுப் பேரன் பேத்திகளும் இருக்கின்றனர். 

இவர் இதற்கு முன்னர் 5 தடவை திருமணமானவர். இவரின் 4 மனைவிகள் உயிரிழந்ததுடன் ஒருவரை இவர் விவாகரத்து செய்துள்ளார். 

இம் முதியவர் தன்னைப் பராமரிப்பதற்கும் தனக்கு துணையாகவும் ஒருவர் தேவையென பத்திரிக்கையொன்றிற்கு தெரிவித்துள்ளார். 

இதனை பார்வையிட்ட சானா அஹமட் என்ற 82 வயதான பெண்மணி இவ்விடயத்தில் தான் விருப்பமாக இருப்பதாகவும் இது தொடர்பாக இஸாவை தொடர்புகொள்ளுமாறு சானா தனது குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார். 

சானா அஹமட் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் விதவையானனவர் என்பதுடன் 9 பிள்ளைகளின் தாயுமாவார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சானா இறந்த தனதுகணவருக்கும் இஸாவிற்கும் நிறைய உருவ ஒற்றுமைகள் உள்ளதாகவும் அதனாலேயே தான் கவரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 





பெண்களின் கண்ணீரில் ஆண்களின் பாலியல் உணர்வை அடக்கும் சக்தி

  ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உள்ளதாக இஸ்ரேலிய வீஸ்மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.

பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும் குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள்ளதாகவும் இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சியற்றவர்களாக உணரவைத்ததாகவும் ஆண்களின் இதயத்துடிப்பு வீதம், தோலின் உஷ்ணம், தெஸ்தெஸ்தரோன் சுரப்பு வீதம் ஆகியவற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளான ஹைப்போதலமஸ், பியுசிபோர்ம் ஜயிரஸ் ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும் ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப் பகுதி நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

மோட்டரோல்லாவின் மிரட்டலான எக்சூம்

  பிரபல அமெரிக்க இலத்திரனியல் சாதன தயாரிப்பு நிறுவனமான மோட்டரோல்லா அதி நவீன டெப்லட் கணனியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மோட்டரோல்லா சூட்டியுள்ள பெயர் எக்சூம் (Xoom) ஆகும்.

அப்பிளின் ஐ-பேட், செம்சுங்கின் கெலக்ஸி டெப் வரிசையில் இப்புதுவருடத்தின் முதல் அதி நவீன டெப்லட் கணனி இதுவாகும். 

 

இதன் முக்கிய சிறப்பம்சம் யாதெனில் அண்ட்ரோயிட் 3.0 அனிகோம் இயக்குதளமாகும். இது சிறப்பாக டெப்லட் கணனிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதாகும்.

இது தவிர என்விடியா டெக்ரா 2 டுவல் கோர் புரசசர் இதில் உபயோகிக்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பம்சமாகும்.

இதன் மேலதிக சிறப்பம்சங்கள்

* 10.1-inch 1280×800 resolution display

* Android Honeycomb 3.0 OS

* Nvidia Tegra 2 dual core processor

* Dual Cameras

* 5 MP rear-facing camera with dual LED flash

* 2 MP front-facing camera

* 1GB RAM

* 32 GB inbuilt memory

* Micro SD support

* Wi-Fi 2.4GHz & 5GHz 802.11b/g/n

* Bluetooth 2.1

* 3.5mm audio jack

* micro USB 2.0 HS

* 730 g weight

* 249.1mm (h) x 167.8mm (w) x 12.9mm (d) - dimension

* AAC, AAC+, AMR NB, AMR WB, MP3, XMF support

* 10 hour video playback - battery

இக்கணனியானது இவ்வருட மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதன் விலை தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

 __

வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை

  கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். 

கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். 

தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். 

இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வெடித்துச்சிதறும் நட்சத்திரம் (Super Nova ) எனப்படுவது பிரமாண்டமான நட்சத்திரங்கள் தமது எரிபொருட்கள் நிறைவடைந்ததன் பின்னர் மாபெரும் ஒளியாற்றலை வீசிக்கொண்டும் பாரிய சத்தத்துடனும் வெடித்துச்சிதறுதலாகும். 

இதன்போது வெளியிடப்படும் ஓளிர்வானது, சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றலை விட அதிகமானதாகும்.

 __

ஆசியாவில் முதன்முறையாக 4ஜி வலையமைப்பு: பரீட்சிக்கும் சீனா

  4ஜி (4G) எனப்படும் நான்காம் தலைமுறை (fourth-generation) மொபைல் வலையமைப்பு தொழிநுட்பத்தினை சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமான சீனா மொபைல் நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.

இதற்கான அனுமதியை சீன அரசு வழங்கியுள்ளது.

மேற்படி பரீட்சாத்த நடவடிக்கையானது சீனாவின் சங்ஹாய், ஹங்ஷவு, நாஞ்ஜிங், குவங்சோவு, சென்சென், மற்றும் சியாமென் ஆகிய 6 நகரங்களில் இடம்பெறவுள்ளது.

'சீனா மொபைல்' நிறுவனமானது சீனாவின் மிகப்பெரிய தொடலைத்தொடபு நிறுவனம் என்பதுடன் சுமார் 579 மில்லியன் பாவனையாளர்களையும் கொண்டது.

அதிவேக 4ஜி தொழிநுட்பமானது சீனாவின் உள்ளூர் டிடி-எல்.டி.யி தொழிநுட்பத்துடன் இணைந்து பாவனையாளர்கள் தங்களது தரவுகளை வேகமாக பரிமாற்ற உதவும் என அந் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3 ஆம் தலைமுறைத் தொழிநுட்பமான 3ஜி சேவைகள் சீனாவில் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. _

எம்.எஸ்.என் ஹொட்மெயிலில் மின்னஞ்சல்கள் மாயம்

  பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் எம்.எஸ்.என் ஹொட்மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்த பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முறைபாடுகள் செய்துள்ளனர்.

பாவனையாளர்கள் பலர் தங்களது இன்பொக்ஸில் காணப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் டிலீடட் மெயில்ஸ் அதாவது அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் போல்டருக்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இது தொலில்நுட்பக் கோளாறா அல்லது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலையா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

எனினும் அந்நிறுவனம் இக்கோளாறை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. 

ஹொட்மெயில் சேவையானது உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியின் பாவனையாளர்களைக் கொண்டதென்பதுடன் அதிகமான பாவனையாளர்களைக்கொண்ட மின்னஞ்சல் சேவையாகவும் திகழ்கின்றது. _

2010 தொழில்நுட்ப உலகம்: ஒரு மீள்பார்வை

  2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில் இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.

இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம். 

மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology) 

1) எச்.டி.சி இவோ 4 ஜி 

பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது. 

2) அண்ட்ரோயிட் இயக்குதளம் 

கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன. 

3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட் 

அப்பிள் தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் ஐபேட் எனும் சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது. 

4) கலெக்சி டெப் 

கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும். சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும். 

இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8), டெல்லின் ஸ்ரைக் (Dell Streak), எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள் மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid) பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும். 

சமூகவலையமைப்புக்கள் (Social Networking) 

1) பேஸ்புக் 

பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும். 

2) டுவிட்டர் 

இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது. 

3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1 

பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை. 

எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன. 

4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு 

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும். 

கூகுள் 

1) கூகுள் தானியங்கிக் கார் 

கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது. 

2) கூகுளின் 'குரோம் நெட்புக்' 

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது. 

இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக, 

1) ஈரானை உலுக்கிய ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ் 

அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில் செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி 

டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது. 

இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும். 

3) பிளக்பெரிக்குத் தடை 

சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன . இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. 

மார்ச் முதல் பேஸ்புக் சேவை நிறுத்தப்படுமா?

  பேஸ்புக் பாவனையாளரா நீங்கள்? தினசரி அதில் உலாவருபவரா?அவ்வாறாயின் இச்செய்தியை கேள்வியுற்றிருந்தால் ஆடித்தான் போய் இருப்பீர்கள். 

ஆம் கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது. 

இணையத்தளமொன்று கடந்த சனிக்கிழமை வெளியிட்ட இச்செய்தியில் பேஸ்புக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவையை நிறுதிக்கொள்ளவுள்ளதாகவும், அதிகப்படியான உளைச்சலே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இச்செய்தியானது பிரபல டுவிட்டர் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களில் வேகமாக பரவியது. பலரை பெரும் சோகத்துக்குள்ளாக்கியது என்று கூட சொல்லலாம். 

எனினும் இது வெறும் வதந்தி எனவும் பேஸ்புக் தொடர்ந்து செயற்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 



___