Friday, September 24, 2010

நாகரீக உலகில் நிரப்பப்படாத வெற்றிடம்


அலெக்ச்சாண்டர்  மெக்கூயின் எனும் பிரபல ஆடை வடிவமைப்பாளர், தனது  தாய் இறந்து போன  சிலநாட்களிலே  (11.02.2010)  இலண்டன் மாநகரத்தில், அவரது வீட்டில் தனது உயிரை  மாய்த்துக்  கொண்டார்.


17.03.1969ல்,   ஆறு குழந்தைகளில் இளையவனாக  joyce mecqueen னுக்கும், ronald mecqueen க்கும்  அலெக்சான்டர் மெக்கூயின்  பிறந்தார்.  இலண்டனில் பிறந்த இவர்,  நாகரீக  உலகத்தில் மிக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

அவர் இறந்து  ஒரு மாதத்திற்கு  மேலானாலும்,  நாகரீக உலகம்  இன்னும் இவருடைய  மறைவை  ஏற்றுக்  கொள்ள முடியாமல் தவிக்கிறது. இவர் போன மாதம்  top design award வெற்றி   பெற்று இருக்கிறார்.
இதன் தொடர்ச்சியை ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பில் காணலாம்

இணைப்பு : aananthi.com (பக்கம் - 10-11)

இனி ஆடை தேவையில்லை..? - நவநாகரீகத்தில் ஒரு புது முயற்சி!


இனிமேல் ஆடை தான் உடலை மறைக்க உடுத்த வேண்டும் என்றில்லை. ஸ்ப்ரே அடித்தால் போதும் என்கிறது புதிய உலகம்!
திரவத்தன்மை வாய்ந்த, கொட்டொன் ஸ்ப்ரேவை கொண்டு உடல் வாகுக்கு ஏற்ப புதிய வடிவிலான மெல்லிய ஆடை வகைகள் தயாரிக்கும்  நுட்பத்தை அறிமுகமாக்கியிருக்கிறது ஸ்பெயின்.
ஸ்பானிய ஆடை வடிவமைப்பாளர் டாக்டர் மெனேல் டொரோஸ் இதை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆடையேதும் இன்றி வெறும் உடம்பில் இத்திரவத்தன்மை கூடிய ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. 15 நிமிடத்தில் இலாஸ்ட்டிக் தன்மை கூடியவகையில் இவ் ஆடை உருவாகிவிடும்.


லண்டனில் உள்ல புகழ்பெற்ற இம்பெரியல் ஆடைக்கல்லூரியில் இத்தொழில் நுட்பம் மூலம் சில மாடல்களுக்கு ஆடை உருவாக்கி காட்டுகிறார் இவர்.
நவீன யுகத்தின் ஸ்டைலிஷ்ஷான, மிகப்பொருத்தமான ஆடையாக இது உருப்பெறும் என இவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சந்தைக்கு வந்தால் விலையும் அதிகமில்லை என்கிறார்.

லண்டன் பேஷன் ஷோவில் விரைவில் காட்சிப்படுத்தவிருக்கிறது இந்த ஆடை! (இல்லை இல்லை ஸ்பிரே)

மனித பிரேதங்களில் ஒரு அ(ழு)ழகியல் கண்காட்சி!



'மீன் செத்தா கருவாடு.. நீ செத்தா வெறுங்கூடு..' கவிப்பேரசின் புகழ்பெற்ற வரிகள் இவை! பிற உயிர்கள் இறந்தாலும் பயன் தரக்கூடியவை. ஆனால் மனிதன் இருக்கும் போதும் பயனில்லை.
இறந்த பின்னரும் பயனில்லை என்பதை சொல்லாமல் சொன்னார் கண்ணதாசன்!

ஆனால் அதையும் பொய்யாக்கியிருக்கியுள்ளது பிரான்ஸ்! 2007ம் ஆண்டு ஒரு கண்காட்சியை தொடங்கியது! 'Our Body' (எங்களது உடல்) என்பது இக்கண்காட்சியின் தீம்! தொடங்கிய வேகத்திலேயே பாரதூரமான விமர்சனத்தை சந்தித்து தடை செய்யப்பட்டது.

இப்போது பல்வேறு எதிர்ப்புக்களை மீறி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன இக்கண்காட்சியில் காட்டினார்கள்? அது சாத்தியமா?

'இது இன்றைய உலகின் இன்னொரு கலை வடிவம்!' என்கிறார்கள் கண்காட்சியாளர்கள். இறந்த மனிதர்களின் உடலை அப்படியே பதப்படுத்தி, 'பிளான்ஸ்டேஷன்' (Planstaion) எனும் புதிய தொழில்நுட்ப முறையில் காட்சிப்படுத்தியுள்ளது தான் இக்கண்காட்சியின் சிறப்பம்சம்!

மூளை, கண், முகம், கை,கால், உடலின் பிற உறுப்புக்கள், நரம்பு, என அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உண்மையான உடல்கள்! (படத்தில் கிளிக் செய்க)

சில உடல்கள், விலங்குகளுடையது. அதிகமானவை மனிதர்களுடையது . உள்ளிருக்கும், சதை, இரத்தம், நீர் என்பன அப்புறப்படுத்தப்பட்டு, சிலிகொன் பொலிமர் எனும் இராசயணம் கொண்டு  பதப்படுத்தப்பட்டுள்ளது.

யார் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
முதன் முதலில் இந்த அழகியல் கலை வடிவ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் ஜேர்மனிய உடல் கூற்று இயல் நிபுணர் கந்தெர் வொன் ஹகென்ஸ்.
இத்தொழில் நுட்பத்தின் சிறப்பம்சம்? இப்பதப்படுத்தல் முறையின் மூலம்  இறந்த உடலினை எந்த நிலையிலும், (Positions) எந்த வடிவத்திலும் அசைக்க முடியும்!

இக்கண்காட்சிக்கு எதிர்ப்புக்கள் வரவில்லையா?
இந்த கண்காட்சியும் அறுவறுக்கத்தக்க விமர்சனத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை. அறுக்கப்பட்டு சதையும், நரம்புமாக தொங்கும் உடலத்தை ஒரு இரண்டு நிமிடம் கண்வெட்டாமல் பார்த்தாலே என்ன நடக்கும்!

எப்படி அதை சமாளித்தார்கள்?

மருத்துவ உயர்கல்வி பயிலும் இளைஞர்களிம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இக்கண்காட்சி, அவர்களது ஏகோபித்த ஆதரவு மூலம், மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உடல்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? யாருடையவை? யார் அனுமதி அளித்தார்கள்!? 

உத்தியோகபூர்வமாக சீனாவை சேர்ந்த பிரேதங்கள் இவை. இறந்த உடலங்களை உறவினர்கள் பொறுப்பேற்க வராத போது, அவற்றை இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் அந்த உடலங்களுக்கு உரிய நபர்கள் இறப்பதற்கு முன்னர் இதற்கு அனுமதித்தார்களா?

இந்த கேள்விக்கு பதில் கூறுவது கடினமானது. சீனாவின் சிறைச்சாலைகளில் இறந்து போகும், கைதிகளின் உடலங்களை அவர்களது உறவினர்களுக்கு தெரியாமல், இங்கு அனுப்பிவிடுவதாக கடுமையான குற்றச்சாட்டுக்களையும் இக்கண்காட்சி எதிர்கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்!


ஆனால் இதையெல்லாம் மீறி, இக்கண்காட்சி பிரபல்யமடைந்து வருகிறது தான். சுமார் 25 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை இக்கண்காட்சியை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது அதற்கு நல்ல சான்று!
        

100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது


அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.
தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர்.

இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்
Ron Bowes என்பவரே ஆவார்.

பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.

இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.

தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது.

இது தொடர்பான செய்தி

4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு

தொலை தொடர்புத்துறை (Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் நான் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)

இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.   4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):

  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV
1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:(((
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]



2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network

குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.


மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:
)