இறந்த பின்னரும் பயனில்லை என்பதை சொல்லாமல் சொன்னார் கண்ணதாசன்!
ஆனால் அதையும் பொய்யாக்கியிருக்கியுள்ளது பிரான்ஸ்! 2007ம் ஆண்டு ஒரு கண்காட்சியை தொடங்கியது! 'Our Body' (எங்களது உடல்) என்பது இக்கண்காட்சியின் தீம்! தொடங்கிய வேகத்திலேயே பாரதூரமான விமர்சனத்தை சந்தித்து தடை செய்யப்பட்டது.
இப்போது பல்வேறு எதிர்ப்புக்களை மீறி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அப்படி என்ன இக்கண்காட்சியில் காட்டினார்கள்? அது சாத்தியமா?
'இது இன்றைய உலகின் இன்னொரு கலை வடிவம்!' என்கிறார்கள் கண்காட்சியாளர்கள். இறந்த மனிதர்களின் உடலை அப்படியே பதப்படுத்தி, 'பிளான்ஸ்டேஷன்' (Planstaion) எனும் புதிய தொழில்நுட்ப முறையில் காட்சிப்படுத்தியுள்ளது தான் இக்கண்காட்சியின் சிறப்பம்சம்!
மூளை, கண், முகம், கை,கால், உடலின் பிற உறுப்புக்கள், நரம்பு, என அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உண்மையான உடல்கள்! (படத்தில் கிளிக் செய்க)
சில உடல்கள், விலங்குகளுடையது. அதிகமானவை மனிதர்களுடையது . உள்ளிருக்கும், சதை, இரத்தம், நீர் என்பன அப்புறப்படுத்தப்பட்டு, சிலிகொன் பொலிமர் எனும் இராசயணம் கொண்டு பதப்படுத்தப்பட்டுள்ளது.
யார் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
முதன் முதலில் இந்த அழகியல் கலை வடிவ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் ஜேர்மனிய உடல் கூற்று இயல் நிபுணர் கந்தெர் வொன் ஹகென்ஸ்.
இத்தொழில் நுட்பத்தின் சிறப்பம்சம்? இப்பதப்படுத்தல் முறையின் மூலம் இறந்த உடலினை எந்த நிலையிலும், (Positions) எந்த வடிவத்திலும் அசைக்க முடியும்!
இக்கண்காட்சிக்கு எதிர்ப்புக்கள் வரவில்லையா?
இந்த கண்காட்சியும் அறுவறுக்கத்தக்க விமர்சனத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை. அறுக்கப்பட்டு சதையும், நரம்புமாக தொங்கும் உடலத்தை ஒரு இரண்டு நிமிடம் கண்வெட்டாமல் பார்த்தாலே என்ன நடக்கும்!
எப்படி அதை சமாளித்தார்கள்?
மருத்துவ உயர்கல்வி பயிலும் இளைஞர்களிம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இக்கண்காட்சி, அவர்களது ஏகோபித்த ஆதரவு மூலம், மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடல்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? யாருடையவை? யார் அனுமதி அளித்தார்கள்!?
உத்தியோகபூர்வமாக சீனாவை சேர்ந்த பிரேதங்கள் இவை. இறந்த உடலங்களை உறவினர்கள் பொறுப்பேற்க வராத போது, அவற்றை இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் அந்த உடலங்களுக்கு உரிய நபர்கள் இறப்பதற்கு முன்னர் இதற்கு அனுமதித்தார்களா?
இந்த கேள்விக்கு பதில் கூறுவது கடினமானது. சீனாவின் சிறைச்சாலைகளில் இறந்து போகும், கைதிகளின் உடலங்களை அவர்களது உறவினர்களுக்கு தெரியாமல், இங்கு அனுப்பிவிடுவதாக கடுமையான குற்றச்சாட்டுக்களையும் இக்கண்காட்சி எதிர்கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்!
ஆனால் இதையெல்லாம் மீறி, இக்கண்காட்சி பிரபல்யமடைந்து வருகிறது தான். சுமார் 25 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை இக்கண்காட்சியை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது அதற்கு நல்ல சான்று!

No comments:
Post a Comment