இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள். தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. "மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது. சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது. |
Monday, February 7, 2011
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?
ஆரோக்கியம் தரும் துளசித் தேநீர்
துளசியை எந்த முறையில் உட்கொண்டாலும் அது உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. சக்தியை அளிக்கிறது. நோயை எதிர்க்கும் ஆற்றலையும், நோயை குணப்படுத்தும் ஆற்றலையும், நோயில் இருந்து காக்கும் ஆற்றலையும் துளசித் தேநீர் தருகிறது. துளிசியைக் கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்த துளசித் தேநீர் வெறும் உற்சாகத்தையும், நல்ல வாசனையையும் மட்டும் அளிக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான சக்தியையும் அளிக்கிறது. துளசி இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து அவற்றை நீங்கள் போடும் தேநீரில் கூட சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் க்ரீன் டீ போன்றவற்றில் துளசி சேர்த்ததை வாங்கி வந்து அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி துளசி கஷாயத்தைக் கொடுத்தால் போதும். |
இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்
இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்: 1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி. 2. அக்கவுண்ட் எண்: மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும். 3. தானாக தனி நபர் தகவல்: ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும். 4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான். 5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள். 6. பாதுகாப்பு வழிகளைக் கடைப்பிடியுங்கள்: இந்த மலரில் பல முறை ஆன்லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள். |
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க...
அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ: 1. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும். 2. கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால் சொரசொரப்பு தன்மை நீங்கி தோல் மிருதுவாகும். முதல்நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டு உள்ளங்காலில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். 3. தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும் முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும். 4. மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி பஞ்சு போன்று மென்மையாக்கும். 5. உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும். |
திருமண வாழ்க்கை சிறக்க வேண்டுமா?
திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும்.
இந்த எண்ணம் வாய்த் தகராறில் ஆரம்பித்து விவாகரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தம்பதியர் தங்களின் எண்ணங்கள், குண நலன்கள், எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து தங்கள் துணையிடம் சரியான நேரத்தில் கண்ணியமான முறையில் தெரிவித்துவிட வேண்டியது மிகவும் அவசியம்.
திருமணமான ஆரம்ப காலத்திலோ, காதலிக்கும்போதோ பரிசுப் பொருள்களை அதிகமாக வாங்கி கொடுப்பது வழக்கம். நாளாக நாளாக அந்த குணம் குறைந்துவிடும். இதனால் சில தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். பரிசுப் பொருள்களின் மீதான ஈடுபாட்டால் அல்ல, தன் மீது உள்ள அன்பு குறைந்துவிட்டது என எண்ணம் தோன்றும் காரணத்தினால் தான் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடங்கும்.
திருமணம் நடப்பது வரை உடல் தோற்றத்தின் மீது அதிக கவனம் கொள்பவர்களில் பலர், திருமணத்துக்குப் பிறகு கவனம் செலுத்துவதில்லை. இதனால் உடலின் எடை அதிகரித்து தங்களின் எடுப்பான தோற்றத்தை இழக்க நேரிடுகிறது. இதன் மூலம் தங்கள் துணையின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம். உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக மிடுக்காக தம்பதியினர் வைத்துக் கொள்வது சிறந்தது.
துணையிடம் உண்மையை மறைக்க தொடர்ந்து பலர் முயற்சி செய்வது வழக்கம். இந்த விஷயத்தில் கணவனா அல்லது மனைவியா என்ற வேறுபாடு கிடையாது. தங்களது இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ எனத் தொடர்ந்து பலர் உண்மையை மறைத்து வருவார்கள்.
ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும். தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந்தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் பிரச்சனை நிலவினால் 25 மணி நேரம்கூட செலவழிக்கலாம்.
ஒரு நாள் உண்மை தெரியவரும் நிலையில், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து விவாகரத்து வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகும். தம்பதியர் ஒரு வாரத்தில் குறைந்தது 15 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் பிரச்சனை நிலவினால் 25 மணி நேரம்கூட செலவழிக்கலாம்.
சுவாசிக்க கூடிய அதிசய எந்திர மனிதன்
இந்த ரோபோவானது சுவாசிக்கவும் செய்கிறது. அப்படி மூச்சு விடும்போது அதன் மார்பு விரிந்து சுருங்குகிறது. `மேன்னி’ என்ற இந்த ரோபோவுக்கு மனிதனைப் போலவே தோல் இருக்கிறது. வியர்வை ஏற்படும் வகையிலும் அமைத்திருக்கிறார்கள். இதன் உடல் வெப்பநிலையைக் கண்டறிய முடியும். இந்த ரோபோ நடக்கிறது, குனிகிறது. கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருகிறது. தரையில் இதனால் உட்கார முடியும். தரையில் தவழ்ந்து செல்லவும் முடியும். எந்திர மனிதன் என்ற சொல் இதற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். அமெரிக்காவில் உள்ள பாட்டலே ஆய்வுக்கூடம் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. அசல் மனிதனைப் போல இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு `மேன்னி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 20 லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் மேன்னி ரோபோ, அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் யுடா மாநிலத்தில் உள்ள ஆயுத சோதனைக்களத்துக்கு மேன்னி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சோதனைத் தளம், ஆபத்தான வேதியியல், உயிரியல் ஆயுதங்களைச் சோதிப்பதற்குப் பயன்படுத்தப்படுவது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உடையைத் தயாரிக்க அந்நாட்டு ராணுவத் தலைமையகம் விரும்புகிறது. அதற்கான பரிசோதனைகளுக்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படும். |
எச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்
வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது. ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர். வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி, புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான். இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம். கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவலாகி வருகிறது. இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும். பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை, வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்தவை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம். அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம், பாதகமானவையும் இருக்கலாம். உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம். இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் பட்சத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும். உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும் அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும். எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம். ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைத்தாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிறது. இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது. அதாவது இந்த தளத்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடம், உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம். அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும். அது சரியான அறிமுகத்தை தரும். ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம். |
இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்திற்கு
ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ. 1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம். 2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது. 3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும். 4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம். |
பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். 2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். 4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும். 5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். 6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். 7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும். 8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும். 10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. 11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள். 12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. 13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. 14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம். |
சூரியனின் முப்பரிணாம அமைப்பு
இரண்டு நாசா வானூர்திகள் சூரியனிலிருந்து 180 கோணத்தில் சூரியனுக்கு பின்னும் அதன் சுற்றுவட்டப் பாதைக்கு முன்புறமாகவும் நிலைப்படுத்தப்பட்டு சூரியனைப் படம் பிடித்துள்ளன. அவை ஸ்டீரியோ என்ற வானூர்திகளாகும். சூப்பர் சண்டே ஆன இன்று அப்படங்களை வெளியிட்டதன் மூலம் நாசா பெருமை தேடிக் கொண்டுள்ளது. சூரியனின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளை முழுமையாக காண உதவும் இப்படங்களால் விண்தட்பவெப்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முன்னேற்றத்தை காணக்கூடியதாக அமையலாம். மேலும் இயந்திர மற்றும் மனிதர்களால் இயக்கப்படும் ஆராய்ச்சிப் பயணங்களுக்கும் மிக உதவிகரமானதாக அமையும். 2006 அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த ஸ்டீரியோ ஆராய்ச்சியானது, சூரியனின் சக்தி வெளியேற்றம், சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் ஆற்றல், போன்றவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். இந்த ஆய்வுப் பயணம் 2007இல் சூரியனின் முப்பரிமாணத் தோற்றத்தை படம்பிடித்தது. 2009 இல் இந்த இரு விண்கலங்களும் சூரியனின் முப்பரிமாணத்திலிருந்து வெளியேறும் பொருட்களின் நிறைகளின் வெளியேற்றம், எவ்வாறு தகவல் தொலைத்தொடர்பு, கப்பல்களின் இயக்கம்,செயற்கைக் கோள் இயக்கம் மற்றும் பூமியிலுள்ள ஆற்றல் மையங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அறிய உதவும். இந்த ஸ்டீரியோ அமைப்பு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அறிவியல் அமைப்புகளினால் வடிவமைக்கப்பட்டது. டெலிகிராப் நாளேட்டிற்கு இங்கிலாந்தின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கலாநிதி கிறிஸ் டேவிஸ் தெரிவித்ததாவது, ஸ்டீரியோ ஆய்வுகள் ஏற்கெனவே பல அழகிய காட்சிகளையும், விண் கற்களிலிருந்து வரும் சூரிய வெடிப்புகள் பற்றியும், அறிய உதவுகின்றது. கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்த கலாநிதி றிச்சர்ட் ஹரிசன், “எல்லோரும் நினைப்பது போன்று சூரியன் அழகிய மஞ்சள் நிற அமைப்பைக் கொண்டதல்ல, சூரியனின் மேற்புற அமைப்புத் தொடர்பான படங்கள் மூலம் அதன் பல பரிணாமங்களையும் அறியலாம்” என்று தெரிவித்துள்ளார். |
நெரிசலை கட்டுப்படுத்த பறக்கும் கார் கண்டுபிடிப்பு
இதனால் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்திலும், ஆகாயத்தில் 185 கி.மீ. வேகத்திலும் பறக்கும். இந்த காருக்கு விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல் தேவை இல்லை. சாதாரண பெட்ரோலே போதும். இதன் விலை ரூ.90 லட்சம் ஆகும். டெரபுஜியா நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்டு ஜெர்ஷ் கூறும் போது, கார் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த விமானத்தை முதலில் விமான நிலையங்களில் இருந்து இயக்க முடியும். தற்போது 100 பறக்கும் கார்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. இந்த கார் சாலையிலும் ஓடும். ஆகாயத்திலும் பறக்கும். இவற்றை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து விடுவோம் என்றார். டெரபுஜியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் டயட்ரிச் கனடியன் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பறக்கும் கார்களை நாங்கள் 28 தடவை சோதனை செய்து பார்த்து விட்டோம். இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த பறக்கும் கார்களை இயக்குவது எளிது. வருங்காலத்தில் பறக்கும் கார்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும். ஆகாயத்தில் வானிலை சரி இல்லாவிட்டால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆனால் இந்த பறக்கும் கார்கள் சாலை, ஆகாயம் இரண்டிலும் பறப்பதால் இதற்கு மவுசு அதிகமாக உள்ளது என்றார். |
பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் தொடு உணர்வு அதிகம்
ஏன் என்ற காரணம் தற்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர். மெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக் காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே. தொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை சுரப்பிகளுக்கருகே தான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது. |
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும். |
பேஸ்புக் முகவரியை மாற்ற வேண்டுமா?
நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. முகவரியை மாற்ற
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டதை போன்று விண்டோ தோன்றும்.
4. அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும். கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்.
5. உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதிபடுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்.
இப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.
அன்புக்குரியவரை அணைத்தால் உடல்வலி, மனஅழுத்தம் குறையும்
கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். "ஆ" என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர். தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என, அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ் கூறுகையில், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும். மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்குமாம். |
எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது. உங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன. கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம். |
நண்பர்களை மரபணு தான் தேர்வு செய்யும்: ஆய்வுத் தகவல்
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே போன்று ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில் எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும், இந்த மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர் தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனாலும் வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டு வருவது வயிற்றுக்கு நன்மைதானே. அப்படிப்பட்ட வயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை என பார்ப்போம். சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை. நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர், மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும். சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும். சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது. பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற உணவுகள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே இவற்றை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது. |
சேவ் பண்ணாத கோப்புகளை திரும்பப் பெற
நம்மில் பலர் அந்த முழு பைலையும் முடித்த பின்னர் தான் அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம். ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள். அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால் மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள். இவர்களுக்காகவே எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில் AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். இதை செயல்படுத்திட File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் இடது பக்கம் உள்ள Save பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம் Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல் நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம். சேவ் பண்ணாத பைலை திரும்ப பெறுவதற்கு File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில் கீழாக வலது மூலையில் Recover Unsaved Documents என்ற பட்டனை கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்தவுடன், உங்களை புரோகிராம் தானாக நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். |
பரிசோதனைக் கூடத்தில் இரத்த நாளங்களை உருவாக்கி சாதனை
இரத்த நாளங்கள் அதி நவீன சிகிச்சை மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள செல்கள் மூலம் உருவாக்குகின்றனர். இதற்கு சுமார் 9 மாதங்களாகின்றன. இதுவரை நீண்ட நாட்களாக நோயாளிகளால் காத்திருக்க முடிவதில்லை. எனவே தற்போது பரிசோதனை கூடங்களில் செயற்கையான முறையில் ரத்த நாளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மற்றவர்களிடம் செல்களை தானமாக பெற்று அவற்றை இயற்கையாக பெறப்படும் புரோட்டீன்களுடன் சேர்த்து வளர்த்து உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒரு வருடத்துக்கும் மேலாக பத்திரமாக வைத்திருக்க முடியும். இந்த ரத்த நாளங்களை இருதய அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு பொருத்த முடியும். இது இருதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. |
பூமிக்கு அருகில் விண்கற்கள் கண்டுபிடிப்பு
இதுவரை கண்டறியப்படாமல் இருந்த 20 வால் நட்சத்திரங்களும், 33 ஆயிரம் சிறிய கிரகங்களும் மற்றும் விண்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை சுற்றி உள்ள சூரிய குடும்ப ஏரியாவில் சுற்றி வரும் விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கில் "நியோவைஸ்" என்ற ஆய்வுத் திட்டத்தை நாசா 2009 ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. கடந்த ஓராண்டு சாதனை பற்றி நாசா அதிகாரி லிண்ட்லே ஜான்சன் கூறியதாவது: நியோவைஸ் ஆய்வு மூலம் 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் விண்கற்கள், சிறிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை இதுவரை கண்டறியப்படாதவை. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளன. மேலும் சூரியனை பூமி சுற்றி வரும் பாதையில் இருந்து 4.5 கோடி கி.மீ. தொலைவுக்குள் 134 விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. குறைந்த தூரம் என்றாலும் இவற்றால் பூமிக்கு ஆபத்து இல்லை. இவற்றின் அடர்த்தி, அளவு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இவ்வாறு ஜான்சன் கூறினார் |
இஞ்சி இடுப்பழகியாக ஆசையா?
இஞ்சி பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம். எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம். |
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?
எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும் என்றால், சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy) , பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும் என்கிறார் ரோஜர். |
மச்சம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வுத் தகவல்
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். 18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். |
கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம். 1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்: பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும். 2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்: இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும். 3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும். 4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்: டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது. 5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது: திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும். 6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்: பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும். |
மொபைல் வாலெட் சேவை: ஏர்டெல் அறிமுகம்
இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்களது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தொலைதொடர்பு சேவையை அளித்துவரும் தாங்கள், அவர்களுக்கு மேலும் ஒரு முத்தாய்ப்பான சேவையாக 'ஏர்டெல் மனி' சேவையை துவக்கியுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சேவை குர்கானில் துவக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இதற்கான முன்னேற்பாடுகளில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. காபி ஷாப்கள், ரெஸ்டாரெண்ட்கள் உள்ளிட்டவைகளுடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளோம். விரைவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து சேவையை வழங்க உள்ளோம். முதற்கட்டமாக குர்கானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் மற்ற இடங்களிலும் விரிவுபடுத்தப்படும். தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற க்னோ யுவர் கஸ்டமர் (கேஒய்சி) என்ற முறையை பரிசீலித்த பின், அவர்களது சிம் கார்டில் ஏர்டெல் மனி திட்டத்தின் படி மாற்றியமைக்கப்படும். இதன்பின் அவர்கள் ரீடெயில் அவுட்லெட்களில் தாங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து, பணத்தை கையில் வைத்துக் கொள்ளாமல் தாங்கள் வைத்துள் ஏர்டெல் சிம் மூலமாகவே, தங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். |
முடி உதிர்வை தடுக்க...
அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும். ஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில் தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும். |
ஒரு விரலுடன் வாழும் மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு
மிகவும் அரிய வகையான இந்த புதிய உயிரினம் உலகிலேயே மிக கொடிய, ஒரு விரல் கொண்ட ஒரே உயிரினமான டி ரெக்ஸ் டைனோசர் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலானது: புதிய டைனோசருக்கு ஒரு விரல் மட்டுமே உள்ளது. இது தெரோபாட் இனத்தை சேர்ந்த லின்ஹெனிகஸ் மோனோடாகிலஸ் வகை உயிரினம். ஒரு மீட்டர் உயரத்துடன் காணப்படும். இது அதிக பட்சமாக பச்சைக்கிளியின் எடையளவு உள்ளது. புலால் உண்ணும் வகையை சேர்ந்த பண்டைய தெரோபாட்களின் பரிணாம வளர்ச்சிதான் தற்போது பறவையாக உள்ளது. இவற்றின் ஒவ்வொரு கைகளிலும் தலா 3 விரல்கள் இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினத்துக்கு ஒரே ஒரு விரல் மட்டும் பெரிய அளவில் உள்ளது. அதிலுள்ள நகத்தால் பூச்சிகளின் கூடுகளை கிளறி சிறிய புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். மிகக் குறைந்த உயரத்துக்கு பறக்கும் தன்மை இதற்கு இருந்திருக்க வேண்டும். பறக்க இயலாத பண்டைய தெரோபாட்கள் 5 விரல்களை உடையவை. கால மாற்றத்தில் இதிலும் மாற்றம் ஏற்பட்டு தற்போது இந்த வகைகளுக்கு 3 விரல்கள் உள்ளன. இத்தகைய உயிரினங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டதாகவே கருதப்பட்டு வரும் நிலையில், புதிய டைனோசர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தொடர் ஆராய்ச்சியில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும். |
குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம். எனவே மோப்ப சக்தியால் நாய் குடல் புற்று நோயை அடையாளம் கண்டு விடுகின்றது. நாய்களை கொண்டு இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். இதனால் நோயை குணப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். வேறு உயிர்கொல்லி நோய்களை அடையாளம் காண கூடிய சக்தி நாய்களுக்கு உண்டா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
தயிர் தொடர்ந்து சாப்பிட்டால்...
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில 1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. 2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. 4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. 5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். 6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம். 7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. |
டவர் இல்லாமல் செயல்படும் செல்போன்கள் கண்டுபிடிப்பு
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக்ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும். |
கூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்
Maxthon இன் சிறப்பியல்புகள்: 1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது. 2. Auto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது. 3. Magic Fill Manager எனப்படும் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை save செய்து கொள்ளமுடியும். 4. Popup ads மற்றும் சில தேவையற்ற windows ளை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும். மேலும் Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம். 5. Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன் அல்லது shortcutபடடன்களை பாவிக்காமலே Mouseஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடும். 6. இதன் இன்னுமொரு சிறப்பியல்பு Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. 7. அடுத்ததாக Drag and Drop Search எனும் வசதி, உலாவியில் உள்ள எந்தவொரு சொற்கள் அல்லது வசனங்களை தெரிவுசெய்து நகர்த்தி Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்துவிடும். 8. உலாவியிலுள்ளவற்றை இலகுவாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது, மேலும் Redo Page, Home, Recently viewed pages, back மற்றய பொத்தான்கள் இவ்உலாவிக்கு அழகை தருகின்றன. 9. Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது, இவற்றை வெவ்வேறான தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. 10. மேலும் Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save செய்து கொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 11. இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது, இதை பெற்றுக்கொள்ள http://addonsmx.maxthon.cn முடியும். இதை விடவும் மேலும் பல வசதிளையும் Maxthon கொண்டுள்ளது. |
பெண்களால் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படுவது ஏன்?
இதற்கு காரணம் பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான். இதனால் தான் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும். இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள் மற்றும் புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம். |
பொம்மை வடிவிலான இரண்டு வயது குழந்தை
இவரின் கிறிஸ்துமஸ் விருந்துக்காக வாங்கப்பட்ட வெள்ளை நிற ஆடை அதுவும் அப்படியே பொம்மை தேவதை போன்றே உள்ளது. அபிக்காக வாங்கப்படும் உடைகள் அனைத்தும் 0 - 3 மாதக் குழந்தைகளுக்கு போடப்படும் உடைகள் தான். அபி பிறந்த போது, ருஸ்ஸல் - சில்வர் சிண்ட்ரோம் என்ற ஒரு வகையான மரபணுக் குறைபாடு உண்டாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வகை குறைபாட்டினால் குழந்தைகள் எத்தனை வயதானாலும் சிறியதாகவே தோற்றமளிப்பார்கள். பொதுவாக 100,000 ஒரு குழந்தைக்கு இது போன்று நேரலாம் என மருத்துவ உலகம் கூறுகிறது. இரண்டு அடிகள் மட்டுமே இருந்தாலும் அவள் வயதுடைய குழந்தைகளை போல அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். முதலில் அபி வளராமல் இருப்பது கொண்டு அச்சமுற்றதாகவும் பின்னர் அவள் வயதை ஒத்த குணநலண்கள் இருந்ததால் நிம்மதிப் பெரு மூச்சு விட்டதாகவும் கூறுகிறார் அபியின் தாய். |
Subscribe to:
Posts (Atom)