Wednesday, October 20, 2010

விளையாட்டின் போது நிகழ்ந்த வினை!

விளையாட்டு வினையாகும் என்பதுதான் முதுமொழி. ஆனால் விளையாட்டின் வினை ஏற்பட்டிருப்பது இன்றைய புது மொழி.

இன்றைய காலகட்டத்தில் அநேகமான விளையாட்டுக்கள் வினையில் வந்து முடிவது வாடிக்கையாகிவிட்டது.

விளையாட்டில் போட்டி இருக்கலாமே தவிர பொறாமையோ வெறித்தனமோ இருந்துவிடக் கூடாது. போட்டி என்று நடக்கும் போது வெற்றியாளர்களைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரிப்பதும், தோல்வியைத் தழுவியவர்களைக் கேலி செய்வதும் சகஜம்.

ஆம், விளையாட்டின் போது வீரர்களைக் கேலி செய்த பார்வையாளர்களை, அவ்வீரர்கள் அடித்து துவைத்தெடுத்த சம்பவமொன்று அண்மையில் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

இம் மோதலானது சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது.

அக் காணொளியினை இங்கு காணலாம்.

தாய்ப் பாசத்துக்கு ஈடிணை இவ்வுலகில் வேறேது?

உலகில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் பிரதியுபகாரங்களும் இன்றி நாம் பெறுவது தாய்ப் பாசம் ஒன்றே! இதற்கு ஈடிணை இவ்வுலகில் ஏதுமில்லை.

ஒரு பெண்ணின் விசித்திரமான தாய்ப் பாசத்தை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புத்தான் இது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெனிஸ் கடற்கரைப் பகுதி வீதியொன்றில் தனியாக சென்றுகொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறிக்கின்றார்.

அந்நபர் அவரது கைப்பையைப் பறிக்க முயல்கின்றார். பெண் கீழே விழுந்து விடுகின்றார்.

அப்பெண் கீழே விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மிகவும் மோசமாக தாக்குகின்றார் அந்நபர். என்ன முயன்றும் இறுதி வரை கைப்பையைப் பறிக்க முடியாமல் போனதால், வெறுப்படைந்த அந்நபர் அவ்விடத்திலிருந்து ஓடிவிடுகின்றார்.

அந்நபர் பறிக்க முற்பட்ட போதும், அப்பெண் போராடியது விலையுயர்ந்த ஒரு பொருளுக்காக என்றா நினைக்கின்றீர்கள்? நிச்சயமாக இல்லை.

பெண்ணின் கைப்பையினுள் இருந்த ஒரு கைத்தொலைபேசிக்காகத் தான். அப்படியென்ன அதி உயர்ந்த கைத்தொலைபேசி அது?

அவரது இறந்த குழந்தையின் குரலைப் பதிவு செய்து வைத்திருந்த கைத்தொலைபேசித்தான் அது.

ஆம், அப்பெண்ணின் குழந்தை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 10 வாரங்களுக்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.

இறக்கும் முன்னர் அக்குழந்தை தனது தாயை ' மமி ' என்று அழைத்ததை அவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதனை இழக்கத்தான் விரும்பவில்லையெனவும் அதனைவிட தான் இறப்பது மேல் என்ற எண்ணத்திலேயே அந்நபருடன் போராடியதாகவும் அந்தத் தாய் தெரிவித்திருப்பது, நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.

இக்காட்சியானது தெருவோர பாதுகாப்பு கெமராவினாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்காணொளியின் உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.

கருப்பை புற்று நோய்

 கருப்பை புற்று நோய் .,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்.... கர்ப்பப்பை புற்று நோய்

இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல் பருமன், இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும்வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இது கர்ப்பப்பையின் உட்புற பாகங்கள், பிறப்புறுப்பு ,சிறுநீர்பை பெருங்குடல் ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும்.

இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும்பரவி அழித்து விடும்.ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.கர்ப்பப்பை வாய் புற்று நோய் இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். .இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 ..

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியை எல்.ஜி கடந்தவாரம் கொரியாவில் வெளியிட்டது.

72LEX9 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது 72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

இதுவே உலகில் தற்போது வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய திரையைக் கொண்டுள்ள பெக்லைட் எல்.இ.டி (LED) முப்பரிமாண தொலைக்காட்சி ஆகும்.

தற்போது கொரியாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இத்தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொழிநுட்ப அம்சங்களாவன :

1) 480Hz TruMotion panel
2) Full LED backlight
3)10,000,000:1 contrast ratio,
4) Wireless AV link and DLNA.
5) 4 HDMI ports
6) 1 USB
7) YouTube and Google Picasa support

உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாகக் கருதப்படுவது மிட்பிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

'சிம் கார்ட்' களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு

  ஒரு நபர் வைத்திருக்கக் கூடிய கையடக்கத் தொலைபேசி 'சிம் கார்ட்'களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இது பற்றி தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுசா பெல்பிட்ட தெரிவிக்கையில், 

"சிலர் பத்துக்கும் மேற்பட்ட 'சிம்'களை வைத்துள்ளனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலர் அவற்றைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்காகவே எதிர்காலத்தில், 'சிம் கார்ட்' களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார். _

2010 இறுதியில் 2 பில்லியன் இணையப் பாவனையாளர்கள் _

  இவ் வருட இறுதியில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகளின் ஆய்வுறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 

கடந்த 5 வருடங்களில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

226 மில்லியன் பேர் புதிதாக இவ்வருடத்தில் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகர் வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அறிக்கையின் படி வருட இறுதியில் மேலைத்தேய நாடுகளின் சனத்தொலையில் 71 % இணையப் பாவனையாளர்களாக இருப்பார்கள். 

மேலும் மொபைல் இணையம் மற்றும் புரோட்பேன்ட் (Broadband) ஆகியன வேகமாக வளர்ந்துவருவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக உள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. 

அவ்வறிக்கையினை இங்கு தரவிறக்கம் செய்யலாம். 

DOWNLOAD THE REPORT HERE. __

செக்ஸில் நாட்டமில்லாததால் பிரிட்டனில் பலர் விவாகரத்து

50 வயதுக்கு மேல் பாலியல் ரீதியான உறவில் நாட்டமில்லாததால் பிரிட்டனில் விவாகரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறதென திடுக்கிட வைக்கும் புள்ளி விபரங்கள் புதிய ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.குழந்தைகள் பெரிதாகும் போது தம்பதிகளுக்குள் உள்ள நெருக்கம் குறைவதே இது போன்ற முடிவுகளுக்கு பெரும்பாலும் காரணமாக அமைந்து விடுகிறது என்பதும் புள்ளிவிபரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 50 வயதிற்கு மேற்பட்ட 1900 விவாகரத்தாகும் தம்பதிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 28 விழுக்காடு பெண்கள் தங்கள் கணவரின் உணர்வுகளைக் குறை கூறுகின்றனர்.

மேலும் 27 சதவீதத்தினர் பொறுப்புக்கள் குறைந்து விடுவதால் இந்த நிலை ஏற்படுவதாகவும் 25 விழுக்காட்டினர் உடலுறவில் நாட்டம் குறைவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த வருடம் பிரிட்டனில் 50 வயதுக்கு மேல் விவாகரத்தானவர்களின் எண்ணிக்கை 22,000 என தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தையினதும் மகனதும் திருவிளையாடல் வீடியோவாக அம்பலம்

Brooklyn, New York ஐ சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் சில வாரங்களுக்கு முன் iphone ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி பூமியின் வளைவு சுளிவுகளை வீடியோவாக படம் பிடித்து உள்ளனர்
இவர்கள் எட்டு மாதங்களை இதற்காக செலவழித்துள்ளனர் இதை விண் வெளிக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளிலும் பரிசோதனைகளிலும், வடிவமைக்கவும். iphone ஐ எடுத்து செல்லும் பலூன் கட்டமைப்பு 100 miles-per-hour என்ற காற்று வேகத்தையும், அதிகூடிய வெப்பமாக 60 செல்சியசையும் மிகக்குறைந்த வெப்பமாக 0 செல்சியசையும் தாங்க கூடியதாக வடிவமைத்தனர்.
iphone னால் எடுக்கப்பட்ட வீடியோ பலூன் வெடிக்க முதல் 100,000 அடி உயரம் எழும்புவது பதிவாகியுள்ளது. இறுதியாக பலூன் வெடித்த பின் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்ட iphone கட்டமைப்பு அனுப்பபட்ட இடத்தி லிருந்து 30 மைல் தூரத்தில் ஒரு மரத்தில் தரை இறங்கியது. தந்தையும் மகனும் அதை இரவு வேளையில் iphone இல் இருந்த ஒரு LED லைட் இன் உதவியுடன் மீட்டனர்.

பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கவேண்டும் என சிவசேனை கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பிரசார ஏடான சாம்னாவில் இது தொடர்பான தலையங்கம் செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. குழந்தைகளை திருட பர்தா அணிவது பயன்படுத்தப்பட்டால் சட்டப்படி அதை தடை செய்வதே சரியானதாக இருக்கும்.

பர்தாவுக்கு பிரெஞ்சு அரசு தடை விதித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த விஷயத்தில் பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ள முடிவு புரட்சிகரமானது.

துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மும்பை மருத்துவமனை ஒன்றிலிருந்து 2 மாத குழந்தை அக்டோபர் 15 தேதி திருடு போனது. இந்த சம்பவத்துக்கு பர்தா அணிந்த மர்ம பெண் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரரை முழுவதுமாக பேக்அப் எடுக்க

என்னத்தான் சந்தைக்கு புதிய புரவுசர்கள் வந்துகொண்டிருந்தாலும் எக்ஸ்புளோரர் மீது மக்களுக்கு உள்ள மோகம் இன்னும் குறையவில்லை என்றே கூறலாம். இணைய உலகில் பலரது கையினை கட்டிபோட்டுருப்பது எக்ஸ்புளோரர் தான் என்றால் அது மிகையல்ல.
உலகில் அதிகம் நபர்களால் பயன்படுத்தப்படும், புரவுசர்கள் பட்டியலில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர்க்குதான் முதலிடம். இந்த IE-தொகுப்பானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது ஆகும். அண்மையில் எக்ஸ்புளோரரின் புதிய தொகுப்பு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிகொள்ளவும், பின் அதை ஒப்பன் செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும். இது அன்மையில் வெளியான IE தொகுப்பாப 9 பீட்டாவிற்கும் பொருந்தும்.
இவ்வாறு எக்ஸ்புளோரர் தொகுப்பினை Backup செய்துகொள்வதன் மூலமாக ஒரு கணினியில் உள்ள புக்மார்க், Setting போன்றவற்றை மற்ற கணினியில் நிறுவிகொள்ள முடியும்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் BackRex பேக்அப் செய்பவை:
Favorites
Proxy & connection settings
Security zones
User customizations
Cookies
History
Dialup accounts
Form Autocomplete entries