Wednesday, December 29, 2010

நைஜர் காடுகளில் புதியவகைப் புலி

  எம்மில் பலரால் இதுவரை அறியப்படாததும், அழிந்து போயிருக்கலாம் என விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வந்ததுமான 'சஹரன் சீடா' எனப்படும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த புலி வகையொன்றின் புகைப்படத்தினை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். 

இப்புகைப்படங்களானது ஆபிரிக்க நாடான நைஜரிலேயே பிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் பொருத்தப்பட்ட கமராவிற்கே இதன் புகைப்படம் அகப்பட்டுள்ளது. 

உலகில் இவ்வகைப் புலிகள் 250 வரையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து முயன்று வந்தனர். 

இந்தப் புகைப்படங்கள் அவர்களின் தேடல்களுக்கு தற்போது புத்துயிர் அளித்துள்ளன.

வயதானவர்களிடையே பாலியல் ஆசை அதிகரித்துவருவதாக ஆய்வுகளில் தகவல்

  உலகில் வயதானவர்களிடையே பாலியல் ஆசை அதிகரித்துவருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

என்னெல்ஸ் ஒப் இன்டர்னல் மெடிசின் என்ற அமைப்பினர் இது தொடர்பாக ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதானவர்களிடமும் மேலும் பல நாட்டைச் சேர்ந்தோரிடமும் கேள்வி பதில் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களிடையே பாலியல் ஆசை மூன்றில் ஒரு பங்காக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 90 வயதைத் தாண்டிய முதியவர்களில் 11 வீதமானோர் தமக்கு தொடர்ந்தும் செக்ஸில் ஈடுபட ஆசை தெரிவித்துள்ளனர். உலகலாவிய ரீதியில் 90 வயதிற்கு மேற்பட்ட 10 பேரில் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

அதேபோன்று 75 முதல் 79 வயதானவர்களில் 40 வீதமானவர்கள் தமது பாலியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர். _

தென்கொரியாவில் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் “ரோபோ”க்கள்

  தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பாட்டுபாடிக் கொண்டும், கை, கால் மற்றும் தலையை அசைத்த படி நடனமாடிய படியும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வசதியும் இதில் உள்ளது. தொடக்கத்தில் தென்கொரியாவில் உள்ள தேகு” என்ற இடத்தில் உள்ள 21 தொடக்கப்பள்ளிகளில் இந்த “ரோபோ”க்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளில் சுமார் “30 ரோபோக்கள்” இது போன்று ஆங்கிலம் கற்றுத் தருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் ஆசிரியைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்.

ஆங்கில பாடம் பிலிப் பைன்ஸ் ஆசிரியைகளின் குரல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இது தங்களுக்கு நல்ல அனுபவமாக இருப்ப தாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம், குழந்தைகளும் மிகவும் அன்புடனும், ஆர்வமுடனும் ஆங்கில பாடம் கற்கின்றனர். இது போன்று தென்கொரியா முழுவதும் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. __

முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தினை வெளியிட்ட பத்திரிகை மீது தாக்குதல் முயற்சி

  நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் டென்மார்க் நாட்டில் உள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றினை தாக்க முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்துள்ளனர். 

இதன்போது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இத்தாக்குதலானது மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாணியில் இடம்பெற இருந்ததாகவும் அதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கோபன்ஹெகன் நகரில் உள்ள இப் பத்திரிகை நிறுவனமானது கடந்த 2005 ஆம் ஆண்டில் முகம்மது நபியின் கேலிச் சித்திரத்திங்களை தனது பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தது. 

மேற்படி சித்திரமானது அக்காலப்பகுதியில் உலகலாளவிய ரீதியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. 

இதற்கெதிராக இஸ்லாமியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர். 

கைதுசெய்யப்பட்ட இக்குழுவானது குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நுழைந்து தங்களால் முடிந்த அளவில் கொலைகளை நடத்தத் திட்டமிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. __

விண்டோஸ் இயங்குதளம் வேகமாக இயங்க

இன்று 90 வீதத்திற்கு மேற்பட்டோர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பயன்படுத்துகின்றனர் என்பது யாவவம் அறிந்த உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற சில வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றது.. 

1.மினிமைஸ்:
பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.
2. இமெயில் போல்டர்:
இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.
3. சரியான பயன்பாடு:
போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.
4. நேரம் தாழ்த்தி பார்க்கப்படும் மின்னஞ்சல்கள்
பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து நீக்கவும்.
5. பிரவுசரின் தேடல் சாதனம்:
உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.
6. பைல் பெயர் மாற்றம்:
பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.
7. இமெயில் செக்கிங்:
அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.
8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி:
ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது. முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
9. ஸ்பேம் நீக்கவும்:
உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.
10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்:
விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.
11. பிரச்னை பதிவு:
விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல் பல தொலைபேசி அழைப்புகளை வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை. Windows’ Problem Steps Recorder என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.
12. திரை இடம் பெரிதாக:
டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons என அமைக்கவும். இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.
13. சிறிய, பெரிய எழுத்துக்கள்:
எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.
14. பின் அப்:
விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.
15. ஆட் ஆன் நேரம்:
உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons சென்று ‘Load time’ என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, 

ஆபத்தான வைரஸ் எச்சரிக்கை!

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது நமது கணினியில் வைரஸ் இருப்பதாகவும், அதை விண்டோஸ் இயங்கு தளம் கண்டறிந்ததாகவும் என விண்டோஸ் இயங்குதளம் அறிவிப்பது போலவே படம் ஒன்றில் உள்ளவாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கையுடன் ஒரு தகவல் காட்டப்படும்.
என்னவோ ஏதோவென்று பதறியடித்து அடுத்தடுத்த பக்கத்துக்குச் சென்றோமானால் , படம் மூன்றில் உள்ளவாறு நமது கணனியில் பரவியுள்ள வைரஸ் வகைகளை வகைப்படுத்தி இவற்றையெல்லாம் நீக்கிவிடு(Remove all) என அறிவிப்பு வரும் உடனே அவிசர அவிசரமாக சொடிக்கிவிட்டால் அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது நமது கணனியில் வைரஸ் குடியேறி செயல்படத் துவங்கிவிடும்.
இதில் இன்னும் ஆபத்தான விசயம் என்னவென்றால் நாம் என்னதான் பாதுகாப்பான அண்டி வைரஸ் மென்பொருளை நமது கணனியில் நிறுவியிருந்தாலும் அதையும் ஊடறுத்து தாக்கக் கூடியது இந்த போலியான வைரஸ் எனவே நாம் இணைய உலாவியில் இருக்கும் போது இதுபோன்ற விண்டோஸ் வைரஸ் எச்சரிக்கைகள் வந்தால் மிக மிக அவதானமாக செயற்படவேண்டும்.

உலகின் மிக சிறிய ஆவர்த்தன அட்டவணை

கீழே உள்ள வீடிவோவை பாருங்கள் இதுவே உலகின் மிகச்சிறிய ஆவர்த்தன அட்டவணை ஆகும். ஒரு தனி தலைமுடியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஐக்கிய ராச்சியத்தின் நோட்டிங்கம் பல்கலைகழகத்தை சேர்ந்த இரசாயனவியல் பேராசிரியர் மார்டின் போலியகொப் ஆவார்.
முதலில் இலத்திரனியல் நுண்நோக்கி (Electron Microscope) மூலம் அந்த தலைமுடியை பெரிதாக்கி பின்னர் அயனி பரிமாற்ற கற்றைகள் எழுத்துரு (Ion Beam writer) மூலமாக ஆவர்த்தன அட்டவணையை அப்படியே அம்முடியில் பதிவு செய்ததன் மூலமாக இச்சிறிய ஆவர்த்தன அட்டவணையை உருவாக்க முடிந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?

இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
ஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும் இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும்.
ஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு உட்படுத்தியதாகவும் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் என ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர் அவிவ் கோபர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

அமெரிக்க புற்று நோய் கழகத்தின் அறிவிக்கைப்படி, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மார்பு புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது.இவற்றில் இறப்பு 465,000.இந்நோய் தொடர்ந்து அதிகரித்து கவலை தரும் ஒன்றாக மாறி வருவதை தொடர்புள்ள துறையினர் சுட்டுகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் கண்டறிவது இழப்பைத்தடுக்கும்.அதிகம் பெண்களையே தாக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம்.
அறிகுறிகள்
மார்பு இயல்புக்கு மாறாக வீங்கியிருத்தல்,வலி ஆகியன தெளிவான முதல் அறிகுறி.சிவப்பு கலராக மாறியிருப்பது, காம்பில் நமைச்சல், எரிச்சல், புண் போன்றவை உடனே மருத்துவரை அணுகத்தக்கவை.
காரணிகள்
பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை வயது (வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது) ,குடும்பத்தில் ஏற்கெனெவே வரலாறு இருப்பது, பருவமடையும் வயது, மரபுக்கூறுகள் போன்றவை தீர்மானிக்கின்றன.மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றி குழந்தை பெறுவது,பாலூட்டுவதில் உள்ள நடத்தைகள் ஈஸ்ட்ராஜன் ஹார்மோனை அதிகரிக்க செய்து மார்பக புற்றை ஏற்படுத்தலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, அதிக எடை, சுற்றுச்சூழல் (பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்தலாம்).மது அருந்துவதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோசன் அளவை கல்லீரல் ஒழுங்குபடுத்த முடியாமல் போவது போன்றவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.மேலும்,இளம் வயதில் கதிர்வீச்சு சிகிச்சை இந்நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
முன்னெச்சரிக்கையாக,
சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று மார்பில் கைவைத்து கட்டிகள் இருக்கிறதா என்றும், வீக்கம்,சிவப்பு கலரில் இருத்தல் போன்ற அறிகுறிகளையும் பரிசோதித்து கொள்ளலாம்.ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
உடலில் கொழுப்பு மிகுதியான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வயது ஏற ஏற கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொண்டே போவது பல வகையில் நல்லது.
தேசிய புற்று நோய் நிறுவனத்தின் அறிக்கைப்படி, அதிக எடை மார்பு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறது.
உடற்பயிற்சியுடன், ஹார்மோன் சிகிச்சைகளை தவிர்த்து மாற்று வழிகளை கண்டறிவது நல்லது.
வருமுன் காப்பது நல்லது இரண்டாவது,ஆரம்ப நிலையில் கண்டறிவது இழப்பை தடுக்கும். இதற்கு சுய பரிசோதனையே சிறந்த வழி!

புரோட்டினும் முக்கியத்துவமும்

புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது.
புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது.
இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து என்பது உடம்பிற்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், இறைச்சி முதலியவற்றில் புரோட்டின் சத்து உள்ளது. ஆனால், தாவரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் புரோட்டினை விட இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டின் சிறந்தது. அதனால், தாவரப் புரோட்டின் தேவையில்லை என்று கருதக்கூடாது. இரண்டுமே உடலிற்கு அவசியமானதுதான்.
தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அதிக அளவில் புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயா பீன்ஸில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய புரோட்டின் சத்துவிற்கு இணையாக சோயா பீன்ஸில் மட்டும்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவைகளில் இருக்கும் புரோட்டின் சிறந்ததாகும். வளரும் குழந்தைகளுக்கு பாலும், முட்டையும் சிறந்த உணவாக இருக்கும்.
கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி முதலிய தானியங்களில் புரோட்டின் சத்து உண்டு. மேலும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப்பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, அவரைக்கொட்டை, பீன்ஸ் கொட்டை, மொச்சைக்கெட்டை முதலிய பருப்பு வகைகளிலும் புரோட்டின் உண்டு.
இதுதவிர, முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு, நிலக்கடலை, அக்ரூட் பருப்பு முதலியவைகளிலும் புரோட்டின் சத்து உள்ளது.
கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு, கேரட் கிழங்கு, பீட்ரூட் முதலியவைகளிலும் புரோட்டின் சிறிதளவு உள்ளது.

ஊனமானவர்களுக்கு ஒர் வரபிரசாதம் : ரோபோ இயந்திர கவச ஆடை!

உடல் உறுப்புக்களில் ஊனம் அல்லது இயலாமை உடையவர்களுக்கு நல்ல காலம் பிறந்து உள்ளது.
யப்பானிய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் இவர்கள் ஏனைய சாதாரண மனிதர்களைப் போல் செயல்பட கூடிய நிலைமை உருவாகி உள்ளது.
ரோபோ இயந்திர கவச ஆடை மூலம் இச்சாதனை சாத்தியம் ஆகி உள்ளது.
மூளைக்கும் இக்கவச ஆடைக்கும் இடையில் இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மூளையின் கட்டளைப்படி கவச ஆடை செயல்படும்.
மனித உறுப்புக்கள் செய்கின்ற வேலையை இந்த கவச ஆடை செய்து கொள்ளும்.
அதாவது காலில் ஊனம் அல்லது இயலாமை உடைய ஒருவர் நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்.
இத்தகவல் மூளையில் இருந்து கவச ஆடைக்கு பரிமாறப்படும். கவச ஆடை அவ்வுத்தரவை ஏற்று செயல்படும்.
இதன் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்ள் முழுமையாக வெற்றி பெற்று உள்ளன.
யப்பானில் உள்ள சுமார் 50 வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் இந்த இயந்திர ஆடைகள் பாவனைக்கு வந்துள்ளன.
2015 ஆம் ஆண்டு இந்த இயந்திர ஆடைகள் சந்தைக்கு வரும். இவை மனித குலத்துக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் ஆண்களின் குணநலன்களில் மாறுதல்

திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

பால்சார் உணவுப் பொருட்களின் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும் : ஆய்வு

பால்சார் உணவுப் பொருட்களின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக பால், சீஸ், பட்டர் மற்றும் யோகர்ட் பால் சார் உணவுப் பொருட்களை உட்கொள்வதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாலில் ட்ரான்ஸ்பொலிஸ்மஸ்டிக் எனப்படும் அமிலம் காணப்படுவதாகவும் இது நீரிழிவை கட்டுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.
3700 பேரிடம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பால் சார் உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் 60 வீதம் வரையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பால் சார் உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடற் பருமண் ஏற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Mobile Phone பாதுகாப்பு வழிகள்

1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.
எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.
4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.
6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.
7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.
8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.
12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.
13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.
14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.
15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.
16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.

உதட்டில் வியர்க்குமா?

உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும் வேர்க்காத இடமொன்று நீ சொல்லணும் - ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடமென்ன  உதட்டில் மேல் வேர்க்காது நீ நம்பணும் - ஐயோ இது பாட்டு.
பொதுவாக ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று கே‌ட்டா‌ல் அனைவரு‌ம் உதடு எ‌ன்பா‌ர்க‌ள்.
ஆனா‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம் கே‌ட்டா‌ல், அ‌தி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை. உட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌‌க்‌கி‌ன்றன எ‌ன்று உறு‌தியாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

‌விய‌ர்வை சுர‌ப்‌‌பிக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் ‌விய‌ர்‌ப்பது த‌ெ‌ரி‌கிறது. குறைவாக உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அதாவது உட‌லி‌ன் சில இட‌ங்க‌ளி‌ல் அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. உத‌ட்டி‌ல் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் ‌மிக ‌மிக‌க் குறைவு. அதனா‌ல்தா‌ன் உத‌ட்டி‌ல் ‌விய‌ர்‌ப்பது நம‌க்கு‌த் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அ‌தி‌லு‌ம் ஒரு ‌சிலரு‌க்கு அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ள‌‌ங்களை, பாத‌ங்க‌ளி‌ல் அமை‌ந்து‌விடுவது‌ம் உ‌ண்டு. இ‌னி யாரு‌ம் ‌விய‌ர்‌க்காத இட‌ம் உ‌ண்டு, அது எது தெ‌ரியுமா எ‌ன்று கே‌ட்டா‌ல், உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று எது‌வு‌மி‌ல்லை. உத‌ட்டு மேலயு‌ம் வே‌ர்‌க்கு‌‌ம் எ‌ன்பது உன‌க்கு‌த் தெ‌ரியுமா? என ப‌தி‌ல் கே‌ள்‌வி கேளு‌ங்க‌ள்.

வெடித்து சிதறிய ஜி.எஸ்.எல் : தோலிவியில் முடிந்த பரிசோதனை

தகவல் தொடர்பு செயற்கை கோளை (ஜி சாட் -5 பி) சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி., எப்- 6 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்வி காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிரையோஜெனிக் எரிபொருள் வேலை செய்வதில் பிரச்னை இருந்ததால் கிளம்பிய சில நொடிகளில் முதல்கட்டத்தில் இந்த ராக்கெட் திசைமாறி சென்றது. பல பகுதிகளாக வெடித்து  சிதறியது. கட்டுப்பாட்டை இழந்த சில நொடிகளில் கடலில் விழுந்தது.
ஏற்கனவே கடந்த வாரம் 20 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது ஆனால் கவுண்டவுன் துவங்கும் போது திடீர் தொழில் நுட்ப கோளாறு (வால்வில் கசிவு) ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.
கோளாறு சரி செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) மாலை 4மணி 1 நிமிடம் அளவில் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. முன்னதாக இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 10 மணி அளவில் துவங்கியது.
கிளம்பிய சில ‌நிமிட துளிகளில் ராக்கெட் திசைமாறியது. உரிய இலக்கு நோக்கி செல்லாமல் கடலில் விழுந்தது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் நிருபர்களிடம் தெரிவிக்கவுள்ளனர்.
செயற்கைகோள் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு துறையை மேம்படுத்த உதவும்.இந்திய விண்வெளி ஆய்வு மையம், எஸ்.எல்.வி., - 3, ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என நான்கு வகையான ராக்கெட்கள் மூலம் இந்திய மற்றும் பிற நாட்டு தயாரிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட் வரிசையில் ஏழாவதாகும்.
இது 51 மீட்டர் உயரமும், 418 டன் எடையும் உடையது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி முன்னோக்கி செலுத்தும் 138 டன் திட எரிபொருளையும், 42 டன் ஹைபர்கோலிக் திரவ எரிபொருளையும் உடையது. இரண்டாம் பகுதி 39.4 ஹைபர்கோலிக் எரிபொருளையும், மூன்றாவது பகுதி 15.2 டன் எடை உடைய திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் பகுதியையும் உடையது.
செயற்கைக்கோள் முழுக்க, முழுக்க தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் தொலைதொடர்பு, தொலை மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியிருக்கும். தற்போதைய தோல்விக்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இஸ்ரோ விளக்கம் :
ஜி.எஸ்.எல்.வி., எப்-6 ராக்கெட் வெடித்தது குறித்து 25 மற்றும் 26ம் தேதிகளில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே ராக்கெட் வெடித்ததற்கான முழு காரணம் தெரிய வரும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் அவர் ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2.5 கி.மீ., தூரம் சென்றதும் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ராக்கெட்டுடனான கட்டுப்பாடு இழந்து விட்டது தோல்விக்கான காரணமாகயிருக்கலாம் எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

பூமியை விட 400 மடங்கு பெரிதான கிரகம் பால்வெளிக்கு அப்பால் கண்டுபிடிப்பு

பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை முதல் முறையாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்முறையாக பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்மி ஸ்டிரீம் என்ற நட்சத்திர கூட்டத்தின் அருகே இந்த கிரகம் காணப்படுகிறது. பால்வெளி மண்டலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த நட்சத்திர கூட்டம் பார்னாக்ஸ் அல்லது பர்னேஸ் என்று அழைக்கப்படுகிறது. 600 கோடி முதல் 900 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த நட்சத்திர கூட்டம் பால்வெளி மண்டலத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், எச்.ஐ.பி., 13044 பி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பி உள்ளன. வியாழன் கிரகத்தை விட 25 சதவீதமும், பூமியை விட 400 மடங்கும் எடை அதிகமானது. சிலி நாட்டில் லா சில்லாவில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்கள் 2.2 மீட்டர் குறுக்களவு உள்ள மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், அதன் அருகில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் வாயு முற்றிலும் எரிந்து விட்டது. இதனால் அந்த நட்சத்திரம் விரிவடைந்து "சிவப்பு குள்ளன்' என்ற நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. அந்த நட்சத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள ஹீலியம் வாயு தற்போது எரிந்து வருகிறது.
நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம், அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு விழுங்கப்படும். இதனால் அந்த கிரகத்தின் ஆயுள் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஜெர்மன் நாட்டு ஹெடில்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் - பிளாங் விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர் ரெய்னர் கெல்மன் கூறுகையில், "பால்வெளி மண்டத்திற்கு அப்பால் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வாகும். மேலும், பல புதிய நிகழ்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இது ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

உலகிலேயே முதல் Electric விமானம்!

முதல் Electric விமானம் Sonex நிறுவனம் அறிமுகப்படுத்துயுள்ளது. இவ்விமானமானது Electric cars அல்லது Electric bikes களை போன்று பாதுகாப்பானது அல்ல.
பொதுவாக ஆகாயத்தில் பறக்கும் போது சில விபத்துக்களை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்காக இவ்வகை விமானங்களில் பறக்க கூடாது எனவோ, பாதுகாப்பானது ஒரு துளி கூட இல்லை என்றோ எண்ணக் கூடாது.

இவ் Sonex Electric விமானமானத்தின் முதல் test fly யை சில நாடகளுக்கு முன் நடாத்தியது. அதன் போது அவ்விமானம் பாதுகாப்பானது என Sonex நிறுவன முகாமையாளர் , E-Flight தலைவர் தெரிவித்ததோடு அவர்கள் இருவருமே முதல் முதலாக அவ்விமானத்தில் பறந்தனர்.
இதற்கு பறக்கும் கால அளவை வழங்குவதே தற்போதுள்ள பிரச்சினையாக உள்ளதாகவும், அனையும் மிக விரைவில் செய்வதாகவும் மேலும் பல பரிசோதனைகளையும் நடத்தி வருவதாகவும் Sonex நிறுவனம் தெரிவிக்கின்றது.

Kingston அறிமுகப்படுத்தும் HyperX MAX 3.0 external USB 3.0 hard drive!

Kingston லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும்.
இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GB கொள்ளளவுகளில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது.
இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும் write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.


Kingston HyperX MAX 3.0 இன் சிறப்பியல்புகள் மற்றும் விவர வரையறைகள்
Performance — USB-IF SuperSpeed-Certified
Standardized — complies with USB 3.0 specification standards, compatible with USB 2.0
Sequential Speed — Read — up to 195MB/sec., Write — up to 160MB/sec
Shock-resistant — built with Flash components so no moving parts
Portable — Aluminum design is sleek, stylish and rugged
Silent — runs silently with no moving parts
Easy — plug & play with no driver required; utilizes USB bus power with no additional bus power required
Guaranteed — three-year warranty
Capacities — 64GB, 128GB and 256GB
Dimensions — 2.89″ x 4.67″ x 0.47″ (73.49mm x 118.60mm x 12.00mm)
Vibration Operating — 20G Peak, 10-2000Hz, (20min/Axis) x 3 Axis
Vibration Non-operating — 20G Peak, 10-2000Hz, (12 Cycle/Axis) x 3 Axis, x 20min.
Operating Shock — 1500G
Operating Temperature — 0° to 60°C / 32° to 140°F
Storage Temperature — -20° to 85°C / -4° to 185°F
Power Consumption — 4.5W

பூமியின் உட்புற காந்த சக்தி மைய வலிமையின் அளவு முதன்முதலாக ஆய்வில் கண்டுபிடிப்பு

நாம் வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800 மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை
1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்
3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின் உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும் ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது. ஏறத்தாழ 1,400 மைல்கள் (2,253 கி.மீ.) அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின் உதவியால் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது. அந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க உதவுகிறது. இந்த காந்த சக்தி மையம் பின்னர் பூமியின் மேற்புறம் வரை பரவுகிறது. இது பற்றிய தகவல்களை கண்டறிந்துள்ள அறிவியலாளர் புரூஸ் பூமியின் உட்புறம் காணப்படும் அரிய விசயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

கம்ப்யூட்டரில் மானிட்டர் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் அவசரமாக பணியில் ஈடுபட்டு இருக்கும்போது மானிட்டரில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையாக கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
முதலில் மானிட்டருக்கு மின்சப்ளை உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால், கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு மின் கேபிள் செல்லும். இது. சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாக பொருத்திப் பார்ப்பது நல்லது.
தற்போது வந்துள்ள மானிட்டர் என்றால் அதற்கு தனியே பவர் கார்டு இருக்கும். அது சரியானபடி பவர்பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். அந்த பிளக்குக்கு தனியாக சுவிட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
பொதுவாக மானிட்டரின் வலது பக்கத்தில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜெஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.
மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. அது ஆன் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒருசிறிய லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்சு நிறத்தில் அல்லது மெலிதான பச்சை நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. கம்ப்யூட்டரின் சிபியூவுக்கு சிக்னல் வரவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளை சரி செய்து பார்க்க வேண்டும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்ட வேண்டும்.
சந்தேகத்துக்கு உரிய மானிட்டரை மற்றொரு கம்ப்யூட்டரில் பொருத்தி பார்க்கலாம். அப்போதும் மானிட்டர் வேலை செய்யவில்லை என்றால்,மானிட்டரில் தான் கோளாறு உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் இருக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாம தெரியும். , உங்களது டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று அர்த்தம். எனவே அதை மாற்றிப் பார்க்கலாம்.
புதிய டிஸ்பிளே கார்டு பொருத்தப்பட்ட பின்னரும் மானிட்டர் சரிப்பட்டுவரவில்லை என்றால், மானிட்டரை மாற்ற வேண்டும் அல்லது மானிட்டரை பழுது பார்க்க வேண்டும்.
இவ்வாறு மானிட்டர் பிரச்சினைகளை நீங்களே முடிந்த அளவு தீர்க்கலாம்.

பறவை போன்று பறக்கும் மீன் இனம்

பறவைகள் பறப்பதை பார்த்துள்ளோம் ஆனால் மீன்கள் பறப்பதை நீங்கள் பார்த்ததுண்டா??

2094ம் ஆண்டு வரை சந்திர கிரகணம் நிகழாது

சூரியனிடம் இருந்து நிலாவுக்கு செல்லும் ஒளிக்கதிர்களை பூமி மறைக்கும் சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. இதுபோன்ற சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் தோன்றியது.
தற்போதும் கடுமையான குளிர் காலத்தில் இந்த கிரகணம் நடந்தது. 2094ம் ஆண்டு வரை இதுபோன்ற சந்திர கிரகணம் நிகழாது. இந்த சந்திர கிரகணத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் நிலாவின் மீது விழாது. பூமி மறைத்து கொள்ளும். கிழக்கு நேரப்படி செவ்வாய்க் கிழமை (21ம் திகதி) அதிகாலை 2.40 மணியில் இருந்து, 3.53 மணி வரை முழு சந்திர கிரகணம் தெரிந்தது.
சுமார் 72 நிமிடங்கள் நீடித்தது. பூமியின் நிழலில், தாமிரம் போன்ற நல்ல சிவப்பு நிறத்தில் நிலா காணப்பட்டது. அன்று வானம் தெளிவாக இருந்ததால், வடஅமெரிக்கர்கள் இந்த சந்திர கிரகணத்தை நன்றாக பார்க்க முடிந்தது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை.