கிறிஸ்மஸுடனான குளிர்கால விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு, 17 ஓவியப்புகைப்படங்களாக தனது கூகிள் இலட்சினையை மாற்றியமைத்துள்ளது கூகுள் இணையத்தளம்.
உலகின் மிக பிரபலமான விடுமுறை சுற்றுலா தளங்களான சிட்னி பாலம், ஃபுஜி மலை, ரஷ்யாவின் புனித பாஸில்ஸ் கதேட்ரால், இத்தாலியின் வெனிஸ் கொந்தலாஸ், சஹாரா பாலைவனம், நேபாளம், சீனப்பெருஞ்சுவர் ஆகியவற்றை சில தூரிகை ஓவியப்படங்கள் குறிக்கின்றன.
உலகின் மிகத்தொன்மையான கலாச்சார பிண்ணணிகளை இன்னும் சில தூரிகை ஓவிய படங்கள் குறிக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய பரதநாட்டியம், ஆ யூல் லாக் போன்ற கிறிஸ்மஸுக்கான சிறப்பு உணவு வகைகள், கிழக்கத்தேய ஊட் கிட்டார், மொரோக்கே ஹெனா ஒளிவிளக்குகள், உலகப்புகழ் பெற்ற சிலி வைன் உற்பத்தி என்பவற்றை பற்றிய தகவல்கள் இப்படங்களில் காணப்படுகின்றன.
கிறிஸ்மஸ் தாத்தா, இரவில் இரகசியமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வெகுமதிகளை வைத்துவிட்டு திரும்பும் தொணியில் புகழ் பெற்ற Up on the Housetop பாடலுடன் தனியான ஒரு படம் தீட்டப்பட்டுள்ளது.
இப்புகைப்படங்களுக்கு மேலே நீங்கள் மவுஸை கொண்டு செல்லும் போது அவை பெரிதாக மாறுவதுடன் கிளிக் செய்யும் போது அவை பற்றிய மேலதிக விவரணங்களை பெற்றுக்கொள்ள உதவும் தளங்களுக்கு லின்க் செல்கிறது.
2010 இல் இதுவரை வெளிவந்த கூகிள் சின்னங்களில், மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்கபப்ட்ட கூகிள் டூடிலாக, இந்த 17 வண்ணப்புகைப்படங்கள் கொண்ட இலட்சினை சாதனை படைத்துள்ளது.
இதனை உருவாக்க மரியோ லூபஸ் தலைமையிலான கூகுள் நிறுவன குழுவினருக்கு 250 மணித்தியாலங்கள் பிடித்திருக்கிறது.

2010 இன் இறுதியை பிரமாண்டமாக கொண்டாட வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு கஷ்ட்டப்பட்டார்களாம்!
இதனால் கிறீஸ்மஸ் முடியும் வரை இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த சின்னம் தொடரவிருக்கிறது.
2010 இல் கூகுள் மொத்தம் 270 டூடில்கள் (இலட்சிணைகளை) உருவாக்கியிருந்தது. பலவும் மிக அழகாக வடிவமைக்கபட்டீருந்தன.