Wednesday, August 25, 2010
வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம்
சுவீடனைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது காரை வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்றமைக்காக சுமார் 11 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக காரோட்டியமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவாகும்.
�
37 வயதான மேற்படி சாரதி, அண்மையில் தனது மேர்சிடிஸ் பென்ஸ் ரக ஸ்போர்ட்ஸ் காரை மணித்தியாலத்துக்கு 290 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டியுள்ளார். சுவீடனில் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 125 கிலோமீற்றர் வேகத்தில்தான் வாகனம் செலுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் சுவிட்ஸர்லாந்து சாரதி ஒருவர் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக சுமார் 3 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு இதுவரை அதுவே உலகிலேயே அதிக்கூடிய அபராதமாக இருந்தது.
சுவீடன் பொலிஸ் பேச்சாளர் பேனியட் டுமாஸ் இது தொடர்பாக கூறுகையில், 290 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதற்கு எந்த நியாயத்தையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குறித்த சுவீடனைச் சேர்ந்த சாரதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை தவணை அடிப்படையில் 300 நாட்களில் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம்.
கடந்த வாரம் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..
5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும்??..
ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று. சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம்.
அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது. என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது,
ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது.
அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாட்டினை இந்த காணொளியில் காணவும்.
தமிழா இதுதான் தருணம்..... 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும். நம் ஈழத்து தமிழ் சொந்தங்கள் வாழ ஒன்றிணைவோம்.

2 வருடமாக 1 பைசா செலவு செய்யாமல் வாழும் அதிசய மனிதர்
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர் மார்க்பாயல் (31). கடந்த 2 வருடமாக இவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார். இவர் இங்கிலாந்தின் பிரீசைக்கிள் அமைப்பு வழங்கிய “கேரவன்” வேனில் தங்கியுள்ளார்.
அந்த வேனை அங்குள்ள ஒரு பண்ணை அருகே நிறுத்தியுள்ளார். தேவையான உணவு பொருட்களை தானே பயிரிட்டு வளர்க்கிறார். விறகு அடுப்பு மூலம் சமையல் செய்கிறார். தனக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலம் தயாரித்து கொள்கிறார். துணியை குளிர்ந்த நீரில் ஊற வைத்து கையால் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறார்.
“இன்கம்மிங்” வசதியுடைய செல்போனையும், சூரிய ஒளியில் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வேகன் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரது மனதில் உதித்ததுதான் பணம் தேவையில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் உதித்தது.
இது குறித்து கூறியதாவது:-
நண்பர்களுடன் உலகில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவேன். அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளினால் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், உலகநாடுகளிடையே சண்டைகள் குறித்து ஆலோசனை நடத்துவோம்.
இவை அனைத்தும் மனித இனத்துக்கு துன்பம் இழைப்பவை. பணம் சம்பாதிக்கதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, பணமில்லாமல் வாழ கற்றுக்கொடுக்கவே இந்த வாழ்வை மேற்கொண்டேன். அன்றாடம் தேவைப்படும் பொருட்களை தானே தயாரித்து கொண்டு வாழ்கிறேன் என்றார்.
மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம்
செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இப் பிராகா நகரின் கிழக்கு திசையில் 70 கிலோமீற்றருக்கு அப்பால் செட்லெக் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மனித எலும்புக்கூடுகளிலான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது.
இத்தேவாலயத்தின் பெயர் ஒசாரே செட்லெக் தேவாலயம் ஆகும்.
இவ் அதிசய தேவாலயம் 40000 க்கு மேற்பட்டோரின் இறந்த உடல் எலும்புகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திடீரென பரவிய ப்ளெக்(plague) நோயினால் 30000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பாரிய உயிரிழப்புக்கு 'கறுப்பு இறப்பு' என பெயரிடப்பட்டது. இவ் இறப்பின் தொகை அதிகரித்தமையால் உடலங்களை பராகா நகரத்தில் செட்லெக் கிராமத்துக்கருகில் கொட்டப்பட்டன. அந்நாட்டு Schwarzenberg family தேங்கிக்கிடந்த உடலங்களில் இருந்து மண்டையோடுகளையும் எலும்புத்துண்டங்களையும் சேகரித்து, Frantisek Rint, wood carver ஆகிய சிறந்த கட்டட கலைஞர்கள் அடங்கிய குழுவை அமர்த்தி இத்தேவாலயத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.
அதன் பின் 15ம் நூற்றாண்டில் ஏற்பட்ட Hussite யுத்தத்தில் 10000 க்கும் மேற்பட்ட படைச்சிப்பாய்கள் இறந்தனர். இறந்த படைச்சிப்பாய்களின் உடலங்களில் இருந்து பெறப்பட்ட மண்டையோடுகள் எலும்புத் துண்டங்கள் ஆகியவற்றைச் சேர்த்து மிகப் பெரிய அளவில் மிகவும் நேர்த்தியான முறையில், ஆடம்பரமான வடிவத்தில் விளக்குகள், தூண்கள், முகப்புக்கள், நிலங்கள் என இவ் இறந்த எலும்புகளை வைத்து தேவாலயத்தை கட்டி முடித்தனர்.

பறக்கும் சுறா - மெய்சிலிர்க்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு
பெருஞ்சத்தத்துடன் இசை மழையில் நனைந்து கொண்டே நீர்ப்பரப்பில் பறக்கலாம். குதித்தும் விளையாலாம். சுறா மீனில் சவாரி செய்வது போன்ற இந்த வாகனத்தை கண்டுபிடித்திருக்கிறார் ரோப் இன்ஸ். ஆனால் இதில் பயணிக்க மனத் தைரியம் மிக அதிகமாக வேண்டும். பயணிக்கும் போது இசையை சவுண்ட் சிஸ்டத்தில் கேட்பதை விட அதிக சப்தமாக வைத்தால் சிறிது பயம் குறைய வாய்ப்பு உண்டு
மிக வேகமாக செல்லும் சுறாவைப் போன்று 12 அடி உயரத்திற்கு மேலே பறந்து பின்னர் நீருக்குள் வேகமாக செல்கிறது இந்த Seabreacher. மணிக்கு 50 மைல்கள் உச்ச கட்ட வேகத்தில் செல்லக் கூடியது இந்த வாகனம். இருவர் அமர்ந்து பயணிக்கலாம். வெள்ளை சுறாவில் பயணிப்பதை போன்ற திரில்லிங் ஆன அனுபவம் பெறலாம். சுறாவின் தாடை பற்களை போன்ற அமைப்பும் உள்ளது.
கடலுக்கு மேலே மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் தண்ணீருக்குள்ளும் மணிக்கு 20 மைல்கள் வேகத்தில் செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகனம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு வாகனம் தான். இதன் விலை அறுபதினாயிரம் பவுண்டுகள். மத்திய கிழக்கு பகுதிகளில் இந்த பொழுதுபோக்கு விளையாட்டு வாகனம் சற்று பிரபலமானது.

வாகனம் செலுத்த பெற்றோலுக்குப் பதில் விஸ்கி எரிபொருள்:ஆய்வில் தகவல்
| கார் உள்ளிட்ட வாகனங்கள் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு பதிலாக உயிரி எரிபொருள் மூலம் இவற்றைச் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எடின்பர்க் நேபியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மார்டின் டேங்னே தலைமையிலான குழுவினர் கடந்த 2 ஆண்டுகளாக இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். முடிவில் விஸ்கி தயாரிக்க பயன்படும் பொருட்களில் இருந்து இவர்கள் உயிரி எரிபொருள் தயாரித்துள்ளனர். இந்த உயிரி எரிபொருள் மூலம் கார் ஓட்டி இவர்கள் சாதனையும் படைத்துள்ளனர். எனவே இந்த எரிபொருளுக்கான 'காப்புரிமை' தங்களுக்கு வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த எரிபொருள் தாராளமாக விற்பனைக்கு வரும் பட்சத்தில் பெற்றோல் நிலையங்களுக்குச் செல்லும் வாகனங்கள், விஸ்கி எரிபொருளுக்காக இனி மதுபான கடைகளுக்கு படையெடுக்குமோ, என்னவோ? |
உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா - கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான். சே குவராவின் இறுதி வசனம்
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.
“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....
புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.
தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.
அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.
உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!
சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.
சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.
சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.
1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம்
தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.
காலை 10.30
யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30..
அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30
காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.
அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசிரியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி
லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.
கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.
என்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள்
காலை 10.00
சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.
வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00 மணி
சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.
ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.
கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!
இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!
1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10
மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.
சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.
இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.
கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?
“ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!”
95 வருடத்தில் 1 1/2 லட்சம் சிகரெட் புகைத்த பெண் சாவு
இங்கிலாந்தை சேர்ந்தவர் வின்னி லாங்லே (103). இவர் எப்போதும் சிகரெட் புகைத்து கொண்டே இருப்பார். இவர் தனது 7 வயதில் புகை பிடிக்க தொடங்கினார். தனது வாழ்நாளில் 95 ஆண்டுகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுகளை ஊதி தள்ளியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது 103-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் சமீபத்தில் இறந்தார். இங்கிலாந்தின் “மிக வயதான புகை பிடிப்பவர்” என்று அழைக்கப்பட்டு வந்தார்.
கல்லால் அடித்து கொலைத் தண்டனையை ஏற்ற ஈரானிய பெண்
ஈரானைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஷ்தியானி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே விதவைப் பெண்ணான ஆஷ்தியானி வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே, ஈரான் நாட்டு சட்டப்படி அவரை கல்லால் அடித்து கொலை செய்ய கடந்த 2006ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கொடூர தண்டனைக்கு உலக நாடுகளும், சமூக சேவை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆஷ்தியானிக்கு கடந்த 2006ம் ஆண்டே 99 சவுக்கடி வழங்கி தண்டனை நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்கு இந்த தண்டனை தேவையில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தினால் ஆஷ்தியானாவின் தண்டனையை நிறைவேற்றாமல் ஈரான் அரசு தள்ளிவைத்து இருந்தது.
தற்போது, கல்லால் அடித்து கொலை செய்ய உள்ள தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதாக ஆஷ்தியானி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஆஷ்தியானியின் தண்டனை குறித்த ஒப்புதல் வாக்குமூலம் ஒளிபரப்பப்பட்டது. அதில், “என்னை கல்லால் அடித்து கொல்ல நான் சம்மதிக்கிறேன்” என அவர் பேசிய ஒலி மட்டும் ஒளிபரப் பானது.
ஆனால், அவரது வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை. அவர் ஈரான் மொழியில் பேசியிருந்தார். எனவே, அவரது தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது
வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள நபரொருவரை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தினரே அவரை சிரமப்பட்டு பராமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயினூடாக சிறிது சிறிதாக சூப் உணவை அவரது குடும்பத்தினர் பருக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர் தானாக எழுந்து மலசலகூடம் செல்லும் உணர்வு கூட இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் படுக்கையிலேயே மல சலம் கழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லி ஷிமிங்கின் விசித்திர நோய் குறித்து அவரது மருமகளான பு யிப் (Fu Yip 42 வயது) விபரிக்கையில், ““அவர் உறக்கத்திலிருக்கும் போது கோமா நிலைக்கு சென்ற ஒருவர் போலவே இருப்பார்.
நாங்கள் கரண்டியால் சூப்பை பருக்கும் போது, அதை அவர் தன்னிச்சையாக விழுங்குவார்.
எதையும் சுயமாக செய்யவோ உணரவோ முடியாத நிலையில் அவர் காணப்படுவார். ஆனால் அவர் விழித்தெழுந்தால் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு சிறிதும் உறங்காது இருப்பார். அவர் வீதிகளில் அலைந்து திரிவதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் இரவைக் கழிப்பார்'' என்று கூறினார்.
ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் புதுமைப் பெண்
தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இளம் பெண். வறுமையால் தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி, பாரதி கண்ட புதுமைப் பெண் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் நினைத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதை நவீன கால நகர பெண்கள் நிரூபித்து வரும் இந்த காலத்தில், மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் நிறைந்த கிராமப் பகுதிகள் நிறைய உள்ளன. பெண்களை வெறுத்து ஒதுக்கும் தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வி 49.28 சதவீதமே உள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் இடை நிற்கும் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. பெண் சமுதாயத்தை புறக்கணிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் இளம் பெண், வறுமை காரணமாக தனது தந்தை செய்த முகச் சவரம் செய்யும் தொழிலை சவாலாக எடுத்துக் கொண்டு, தன் தாயை காப்பாற்ற லட்சியப் பணியாக முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா அமனிமல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள், கடைசி பெண் தேவிபாலா(20). கிருஷ்ணன் அமனிமல்லாபுரத்தில் சவரத் தொழில் செய்யும் சலூன் கடை நடத்தி வந்தார். தந்தைக்கு உதவியாக தேவிபாலா அடிக்கடி கடைக்கு சென்று, தன் தந்தை செய்யும் தொழிலை கூர்ந்து கவனித்து வந்தார். அவரது ஆர்வத்தைப் பார்த்த கிருஷ்ணன், முடி திருத்தம் செய்ய வரும் சிறுவர்களுக்கு, தேவிபாலாவை அவரது எட்டாவது வயதில் முடி திருத்தம் செய்ய பழக வைத்தார். கிருஷ்ணனின் மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தனித்குடித்தனம் சென்று விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் இறந்துவிட்டார். மகள் தேவிபாலாவுடன், கமலா தனியாக குடும்பத்தை நடத்த முடியாமல் தத்தளித்தார்.
தாய்க்கு ஆறுதல் கூறிய தேவிபாலா, தன் தந்தை நடத்திய சலூன் கடையை தொடர்ந்து நடத்த முடிவு செய்தார். கிருஷ்ணனின் வாடிக்கையாளர்கள் தேவிபாலாவுக்கு ஊக்கம் கொடுக்க, எட்டு ஆண்டாக தேவிபாலா ஆண்களுக்கு முடித் திருத்தம், சவரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் தாயை காப்பாற்றி வருகிறார். அமனிமல்லாபுரத்தில் 200 குடும்பத்தினர் உள்ளனர். தேவிபாலாவை போல் அங்கு நான்கு ஆண்கள் சலூன் கடை வைத்துள்ளனர். தேவிபாலாவுக்கு தினம் 50 முதல் 100 வரையில் வருவாய் கிடைத்த போதும், வறுமையைப் போக்க தான் கற்ற கைத்தொழில் தனக்கு உதவுவதை நினைத்து அவர் பெருமைப்பட்டு வருகிறார்.
இது குறித்து தேவிபாலா கூறியதாவது: என் தந்தை இறந்த பின், குடும்பத்தை காக்கும் பொறுப்பு ஏற்பட்டதால், என் தந்தையிடம் கற்ற சவரத் தொழிலைச் செய்ய முடிவு செய்தேன். எங்கள் வறுமையை இத்தொழில் போக்கியதால், தொடர்ந்து எனக்கு திருமணம் முடியும் வரையில் இத்தொழிலைச் செய்வேன். என் வாடிக்கையாளர்கள் பலரும் பியூட்டி பார்லர் நடத்த வற்புறுத்தி வருகின்றனர். புதிதாக ஒரு தொழிலை கற்க விரும்பவில்லை. என் குடும்பத்துக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது. எனவே, இத்தொழிலை தொடர்ந்து செய்வேன். வேறு தொழில் எதுவும் கற்க ஆசையில்லை.
சிறு வயதில் இருந்து இத்தொழில் செய்வதால், ஆண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் என்னால் தொழில் செய்ய முடிகிறது. கிராமப் பகுதி என்பதால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கிறது. முகச் சவரனுக்கு 8 முதல் 10 ரூபாயும், முடி வெட்ட 10 முதல் 12 ரூபாய் வரை கூலி கிடைக்கும். என் அப்பாவின் மூலம் கற்ற கைத்தொழில் மூலம் என்னால் முன்னேற முடியும் என்பதால், வேறு தொழில் நினைப்பு எனக்கு துளியும் இல்லை. இவ்வாறு தேவிபாலா தெரிவித்துள்ளார்
சிறுமியை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்த நினைத்தவரை காட்டிக் கொடுத்தது ஸ்கை நியூஸ் ரகசிய கேமரா
சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார்.
இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர்.
தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார்.
பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திருப்பிய சைமன் ஒரு கட்டத்தில் சிறுமியிடம் தன்னுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா என்றும் கேட்டதோடு இதை வெளியில் கூறி தன்னை போலீசில் மாட்டி விடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு சைமன் அவர் வீட்டிலிருந்து கிளம்புவது முதற்கொண்டு குன்னேர்ஸ்புரி ரயில் நிலையத்தில் இருவதும் சந்திப்பது அனைத்தும் படம் பிடிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகத்தினால் தான் படம் பிடிக்கப்படுகிறோம் என்பது தெரிந்து ஓடினார் சைமன்.
பின்னர் ஒரு கட்டத்தில் இணையத்தில் இது போன்று சிறுமிகளை தேடித் பிடித்து அவர்களை பாலியல் ரீதியில் தயார் செய்வது தனக்கு கை வந்த கலை என்றும் தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரியும் எனவும் ஸ்கை செய்தி நிறுவனத்திடம் ஒப்புக் கொண்டார்.
தற்போது சிறுவர்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் ஆதாரம்
| விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம், நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள ‘என்சிலூடஸ் துணை கோளை, காசினி விண்கலம் சுமார் 6,17,000 மைல் தூரத்தில் பயணித்த போது, எடுத்த படத்தை டாக்டர். ப்ராங்க் போஸ்ட்பெர்க்விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இதில் என்சிலூடசில் உப்புநீர் பனிப்பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு ஏரிகள், நீர்தேக்கங்கள், மற்றும் கடல்கள் இருந்திருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள 3 துணை கோள்களில் என்சிலூடசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. |
உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா?
| பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர். * காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும். * நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள். * முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். * பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும். * கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும். * உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும். * இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும். |
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது.
ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நம் நாட்டு மக்கள் உலகம் முழுதும் பயணிக்கின்றனர். திரும்பும் போது தங்கள் உடைமைகளுடன், கிருமிகளையும் எடுத்து வந்து விடுகின்றனர்.
குளிர்காய்ச்சல் பரவுதல், அடிக்கடி ஏற்படுகிறது. 1918ல் ஸ்பெயின் நாட்டில் இது முதலில் பரவத் துவங்கியது. மிகவும் அபாயகரமாக உலக அளவில் 50 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டனர். ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர். ஆசியாவில் 1957ல் குளிர் காய்ச்சல் பரவியது. 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஹாங்காங்கில் 1968ல் பரவி, ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.
குளிர் காலத்தில் வரும் இந்த காய்ச்சலால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இதை விடக் குறைவு தான்; ஆனால், அதை ஒழிக்க அதிக நிதி அளிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது.
தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு ஏற்பட்ட ஓரிரு நாளில், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.
தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு ஏற்பட்ட ஓரிரு நாளில், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.
சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து நீர் வடிதல், தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சாதா சளியை விட, இது மிகவும் கடுமையாக இருக்கும்.
நோய் உள்ளவருக்கு, இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, எச்சிலைத் துப்பினாலோ, காற்று மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவி விடும். ஒவ்வொரு இருமல், தும்மலும், 40 ஆயிரம் நீர்த் துளிகளை வெளியிடுகிறது. ஒரே ஒரு துளி, மூக்கில் நுழைந்தால் போதும், தொற்று ஏற்பட.
சுவர்கள், கதவுகள், பேப்பர், நாணயம் மற்ற பொருட்கள் மீதும் இவை படியலாம்.
சுவர்கள், கதவுகள், பேப்பர், நாணயம் மற்ற பொருட்கள் மீதும் இவை படியலாம்.
நோய் தொற்று உள்ளவர்கள் கை கழுவும் பழக்கம் இன்றி இருந்தால், அதன் மூலமும் தொற்று பரவும். மிக அதிக வெப்பமோ, புறஊதாக் கதிர்களோ செலுத்தினால், 5 முதல் 15 நிமிடங்களில் இந்த கிருமி இறந்து விடும். சளி மூலம் வெளியேறும் இந்த வைரஸ் 48 மணி நேரம் உயிருடன் இருக்கும் திறன் பெற்றது. நெருக்கடியான இடங்களுக்குச் செல்வது, தொற்று உள்ளவர் அருகில் சென்று பழகுதல், காற்றோட்டமின்மை, குறைந்த வெப்பச் சூழலில் இருப்பது ஆகியவை இந்தத் தொற்று பரவக் காரணமாக அமைகின்றன.
குளிர்க்காய்ச்சல் என்பது, மிகவும் மிதமான காய்ச்சல் தான். பொதுவாக தானாகவே சரியாகி விடும்.
மிகவும் சிறு வயது அல்லது மிக முதிய வயது உடையோர், கர்ப்பிணிகள், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு, இது அபாயகரமான நோயாக மாறி விடுகிறது. நிமோனியா உருவாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது.
தொற்று பரவும் காலங்களில், அறிகுறிகளை வைத்து நோய் கண்டறியப்படுகிறது. வைரசைக் கண்டுபிடிக்க விரைவுப் பரிசோதனை முறைகள் உள்ளன; இவை, 75 முதல் 90 சதவீதம் வரை துல்லியமாகக் கணிக்கின்றன.
வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக உள்ளவை, ரிபோநியூக்ளிக் அமிலம் கொண்ட வைரஸ்கள். இவற்றில் ஏ, பி மற்றும் சி வகை வைரஸ்கள் தான். காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மனிதனின் நோய் எதிர்ப்புத் திறனை வைத்து, அவற்றுக்கு எச்1என்1, எச்5என்1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ்கள், பறவைகள், பன்றி போன்ற விலங்கினங்களின் உடலில் வாழ்கின்றன. இந்த வைரஸ்கள் திடீரென தன்மையை மாற்றிக் கொண்டு, சீற்றத்துடன் மனிதனைத் தாக்கத் துவங்கி விடுகின்றன. இது போன்ற புதிய வைரஸ்களை மனிதனால் எதிர்கொள்ள முடிவதில்லை. எனவே, வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே இந்த நோய் வேகமாகப் பரவி விடுகிறது.
குளிர்காலத்தில் தான் இது பரவுகிறது. வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும், வெவ்வேறு மாதங்களில் குளிர் நிலவுகிறது. எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நோய் பரவுதல் ஏற்படுகிறது. சில இடங்களில் மழைக் காலங்களில் நோய் பரவுகிறது. சூரிய ஒளி குறைவான காலங்கள் இவை. ஒரே இடத்தில், கட்டடங்களில் மக்கள் ஒதுங்குவர். அப்போது தொற்று ஏற்படும். மக்களின் பயணம் தற்போது உலக அளவில் இருப்பதால், நோய் பரவுவது எந்த காலத்திலும் ஏற்படுகிறது.
நோய் பரவுவதை கட்டுப்படுத்த…
* நோய்வாய்ப்பட்டவரை பார்த்த பிறகு, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* பணத்தைக் கையாண்ட பிறகு, பல முறை கையைக் கழுவ வேண்டும்.
* கதவுத் தாழ்ப்பாள் உட்பட அடிக்கடி நீங்கள் கை வைக்கும் இடங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* வெளியில் செல்லும்போது முகமூடி அணிந்து செல்லவும்.
* தும்மல், இருமல் ஏற்படும்போது, முகத்தை மூடிக் கொள்ளவும்.
* கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.

குளிர்க் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து உண்டு. ஒவ்வொரு ஆண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமியை, உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து, மருந்து நிறுவனங்களுக்குச் சொல்கிறது. அந்த நிறுவனங்கள் ஆறு மாதத்திற்குள் நோய் தடுப்பு மருந்தைத் தயாரிக்க வேண்டும். தற்போதைய குளிர் காய்ச்சல் தடுப்பு மருந்து, 75 சதவீத அளவு பாதுகாப்பு தருகிறது. இந்த மருந்து போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், தீவிரமாக ஏற்படுவதில்லை; அதிக உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து, இந்தியாவில் கிடைக்கிறது. சிறு வயதினர், முதியோர், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த மருந்து போடுவது நல்லது. மற்ற நாடுகளில், மூக்கு வழியாகச் செலுத்தப்படும் வடிவில் இந்த மருந்து கிடைக்கிறது.
உங்களுக்கு குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டால், வீட்டிலேயே இருங்கள். நன்கு ஓய்வு எடுங்கள். சீக்கிரம் குணமடைவீர்கள்; மற்றவர்களுக்கும் நோய் பரவாது. வலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மருந்து உட்கொள்ளுங்கள்.
உங்களுக்கு குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டால், வீட்டிலேயே இருங்கள். நன்கு ஓய்வு எடுங்கள். சீக்கிரம் குணமடைவீர்கள்; மற்றவர்களுக்கும் நோய் பரவாது. வலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மருந்து உட்கொள்ளுங்கள்.
பொதுவாக ஆஸ்பிரின், சாலிசைக்ளிக் அமிலம் நிறைந்த மருந்துகள் உட்கொள்ள வேண்டாம். குளிர்க்காய்ச்சல் இருக்கும்போது, இந்த மருந்துகள் உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படியே, “டாமிப்ளூ’ போன்ற மாத்திரைகளைச் சாப்பிடலாம். காய்ச்சலின் தீவிரத்தையும், பாதிப்பு ஏற்படுத்தும் நேரத்தையும் குறைக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)