இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அட்ரியன் ஒவன் கோமா நோயாளிகளின் மூளை நரம்புகளில் காந்த சக்தி ஒலி அலை அதிர்வுகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். அது ஓரளவு குணமடைந்து வருகிறது. இந்த நிலையில் அட்ரியனும் அவரது குழுவினரும் இதைவிட கூடுதலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோமா நோயாளிகளை எழுந்து நடக்க வைக்கும் முயற்சியாக அவர்களின் மூளையில் எலெக்ட்ரோ என் செபலே கிராபி கருவி மூலம் ஏலெக்ட்ரிக்கல் அதிர்வுகளை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இது மிகவும் பயனுள்ள தாகவும், ஆய்வில், மிகப்பெரிய முன்னேற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அட்ரியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிகிச்சைக்கு குறைந்த செலவே ஆகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கோமா நிலையில் உள்ள நோயாளிகள் சக்கர நாற்காலி மூலமாவது நடமாடி தங்கள் வாழ்நாளை கழிக்கும் வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வின் மூலம் சக்கர நாற்காலியின்றி விரைவில் எழுந்து நடமாட வழி வகை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். |
Wednesday, September 22, 2010
கோமா நோயாளிகள் எழுந்து நடக்க முடியும் :நிபுணர்கள் நம்பிக்கை.!
2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்
நூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார். தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். |
சுவிஸின் பேர்ன் கான்டனில் மினராத் அமைப்பதற்கு அனுமதி
மினராத் நிர்மாணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் நாடுதழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு முன்னதாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினராத்தை அமைப்பதற்கான இறுதி அனுமதி அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் மினராத் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேர்ன் கான்டனின் லென்ஜன்டால் நகரத்தில் மினராத் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மினராத்தை விஸ்தரிப்பதற்கான யோசனைத் திட்டத்திற்கு அனுமதியளிக்க முடியாதென நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜெனீவா, சூரிச், வின்டர்தூர் மற்றும் வேன்ஜன் ஆகிய கான்டன்களில் ஏற்கனவே மினராத்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. |
சுவிஸ் வயோதிபர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்றே சுவிட்சர்லாந்திலும் வயோதிபர்கள் கல்வியைத் தொடர்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகளை மூன்றாம் வயதுக்கான பல்கலைக்கழம் (யூ.3.ஏ) என்ற நிறுவனம் வழங்கி வருகின்றது. 60 வயதுக்கும் அதிகமான அநேகமானவர்கள் கற்கை நெறிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வயோதிபர்களுக்கு கல்வி புகட்டும் ஒன்பது முக்கிய நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகக் குறைந்தளவு கட்டணத்திற்கு கற்கை நெறிகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மொழி, வரலாறு, மருத்துவம், கல்வி, சங்கீதம் என பல்வேறு துறைகளில் கற்கை நெறிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் அமெரிக்கா தயாரிக்கிறது
அது “போயிங்” ரக விமானத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.440 கோடி செலவில் இந்த விமானம் தயார் செய்யப்படுகிறது. இது ஆளில்லாமல் சூரிய சக்தி மூலம் தானாக இயங்க கூடியது. இதற்கு “சோலார் ஈகிள்” (சூரிய கழுகு) என பெயரிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் இது சூரிய ஒளியை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்ளும். அதன் மூலம் இரவு நேரத்திலும் கூட தொடர்ந்து பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கருவிகள் போட்டோ எடுத்து அதன் மூலம் தகவல்களை அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பும். விமானத்தில் சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் “புரோபல் லர்கள்” (உந்து விசை கருவிகள்) பொருத்தப்பட உள்ளன. இதை ஆளில்லா விமானம் ஆகவும், போர்க்காலங்களில் இதை பயன்படுத்தவும் முடிவும். அடுத்த ஆண்டு (2011) இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
Subscribe to:
Posts (Atom)