Wednesday, September 22, 2010

கோமா நோயாளிகள் எழுந்து நடக்க முடியும் :நிபுணர்கள் நம்பிக்கை.!

“கோமா” நோயாளிகள் வருடக் கணக்கில் மயக்க நிலையிலேயே இருந்து வருகின்றனர். அவர்கள் நாள் முழுவதும் எழுந்து நடக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அட்ரியன் ஒவன் கோமா நோயாளிகளின் மூளை நரம்புகளில் காந்த சக்தி ஒலி அலை அதிர்வுகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். அது ஓரளவு குணமடைந்து வருகிறது.
இந்த நிலையில் அட்ரியனும் அவரது குழுவினரும் இதைவிட கூடுதலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோமா நோயாளிகளை எழுந்து நடக்க வைக்கும் முயற்சியாக அவர்களின் மூளையில் எலெக்ட்ரோ என் செபலே கிராபி கருவி மூலம் ஏலெக்ட்ரிக்கல் அதிர்வுகளை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது மிகவும் பயனுள்ள தாகவும், ஆய்வில், மிகப்பெரிய முன்னேற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அட்ரியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிகிச்சைக்கு குறைந்த செலவே ஆகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கோமா நிலையில் உள்ள நோயாளிகள் சக்கர நாற்காலி மூலமாவது நடமாடி தங்கள் வாழ்நாளை கழிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
அதன் பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வின் மூலம் சக்கர நாற்காலியின்றி விரைவில் எழுந்து நடமாட வழி வகை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment