| உணவு விடுதிகளின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றமைக்காக புதிய புதிய தந்திரங்களைக் கையாள்வார்கள். இந்தோனேசியாவில் சுரவயா நகரத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றின் தளபாடங்களாக கார்கள் மாறி உள்ளன. வாடிக்கையாளர்கள் உணவு விடுதிக்கு சொந்தமான இக்கார்களுக்குள் அமர்ந்து இருந்து உண்ண முடியும். கடந்த வருடம் முதல் இச்சேவை ஆரம்பம் ஆகி உள்ளது. ஆனால் இது இவரின் 15 வருட கனவு என்கின்றார் உணவக உரிமையாளர். பத்து கார்கள் சேவைக்காக உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. உணவு விடுதியின் பெயரே The Cars Dream Restaurant என்பதுதான் |
Friday, January 28, 2011
உணவகத்தில் தளபாடங்களாக மாறி இருக்கும் கார்கள் (படங்கள் இணைப்பு)
இந்த இணையத்தளங்களை அலுவலக நேரங்களில் பார்வையிடாதீர்கள்(படங்கள் இணைப்பு)
| ஊழியர்கள் இணையத்தில் அளவுக்கதிகமாக நேரத்தினை விரையம் செய்வதினையும், அவர்களின் வினைத்திறன் இழப்பினை தடுக்கும் நோக்கத்துடனும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட சில தளங்களை தமது ஊழியர்கள் உபயோகப்பதினை தடைசெய்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு தடைசெய்யப்பட்ட தளங்களே இவை. |
மனிதன் போல இரு கால்களில் வேகமாக நடந்து திரியும் அதிசய கொரில்லா! (வீடியோ இணைப்பு)
பொதுவாக குரங்கினங்கள் அனைத்துக்குமே நான்கு கால்களில் நடப்பதுதான் பிடித்தமான ஒன்று. ஆனால் அம்பம் என அழைக்கப்படும் இந்த கொரில்லா மனிதனை போலவே அனைத்தையும் செய்கிறது. ஏதோ தவற விட்ட ரயிலை பிடிக்கப் போகும் நபர் போன்று இரு கால்களில் வேகமாக ஓடுகின்றது. இரு கால்களியே நிற்பது மனிதனைப் போன்றே திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் இணைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அம்பம் என்ற இந்த கொரில்லாவின் காணொளி தான் தற்போது இணையத்தில் சூப்பர் ஹிட். அம்பம் என்ற இந்த கொரில்லாவின் காணொளி தான் தற்போது இணையத்தில் சூப்பர் ஹிட். இது மட்டுமல்லாது தலைகீழாக வேகமாக நடக்கும் பயிற்சியையும் தனக்குத் தானே எடுத்துக் கொண்டுள்ள இந்தக் கொரில்லா நீண்ட தூரத்துக்கு தலைகீழாக நடந்து சாகசம் காட்டியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. கெண்ட்டில் உள்ள விலங்கின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் அம்பம் தற்போது சர்வதேச ரீதியில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. |
உலகின் மிக நீளமான மோட்டார் சைக்கிள்! பழைய உலக சாதனையை முறியடித்தது(படங்கள் இணைப்பு)
| றிக்டோஸியர், பில்டெக்கர், ரொப் மோர் மற்றும் வில்லியம் இவர்கள் தான் இதுவரை உத்தியோகப் பூர்வமாக உலகில் மிக நீளமான மோட்டார் சைக்கிளுக்குச் சொந்தக்காரர்கள். அந்த சைக்கிளின் நீளம் 9.76 மீட்டர்கள். ஆனால் இந்தப் படத்தில் இப்போது நீங்கள் காணும் மோட்டார் சைக்கிள் இந்த சாதனையை முறியடித்துள்ளதாக உரிமை கோரப்பட்டுள்ளது. இதன் நீளம் 10.5 மீட்டர்கள். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் 15 ஆசனங்கள் உள்ளன. இதில் 15 இருக்கைகள் உள்ள போதிலும் இந்த வண்டி எல்லோரும் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் ஆற்றல் கொண்டதா என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஒலெப்ரோகோய் என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார். உலகின் நீளமான மோட்டார் சைக்கிள் என கின்னஸ் புத்தகத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. |
மிகவும் சொகுசான பேரூந்துப் பயணம்
| பேரூந்துகளில் பயணம் செய்கின்றமை பொதுவாக மிகவும் மோசமான அனுபவமாகவே இருந்து வருகின்றது. ஆனால் உலகிலேயே மிகவும் சொகுசான பேரூந்துப் பயணம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது இத்தாலி நாட்டு கம்பனி ஒன்று. வெளியில் இருந்து பார்க்கின்றபோது ஏனைய பேரூந்துகளைப் போல்தான் இப்பேரூந்து காட்சி அளிக்கின்றது. ஆனால் உள்ளே வந்து பார்க்கின்றபோது ஒரு ஆடம்பர ஹோட்டல் போல் இருக்கின்றது. |
மரபணு மாற்றம் செய்யப்பட்ட 6000 நுளம்புகள்
| மலேசிய அரசு டெங்கு நோயை இல்லாமல் செய்வதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகள் 60,00 ஐ காடுகளுக்குள் விட்டு உள்ளது. இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சிதான். Aedes aegypti என்கிற இனத்தைச் சேர்ந்த நுளம்புகளில் பெண் நுளம்புகள்தான் டெங்கை ஏற்படுத்துகின்றன. எனவே மரபணு மாற்றம் செய்து அதே இனத்தைச் சேர்ந்த ஆண் நுளம்புகளை உருவாக்கி உள்ளது இந்நாடு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த ஆண் நுளம்புகளுடன், பெண் நுளம்புகள் கலவியில் ஈடுபடும். ஆனால் இனப் பெருக்கம் இடம்பெறாது. அல்லது குறுகிய நாட்களில் அழிந்து விடக் கூடிய வாரிசுகளே உருவாகும். |
பச்சை நிறமாக மாறி ருக்கும் கனேடிய ஆறு (வீடியோ இணைப்பு)
கனடாவின் Goldstream Riiver திடீர் என்று பச்சை நிறமாக மாறி உள்ளது. கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இம்மாற்றம் நேர்ந்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்நிற மாற்றத்தால் பெரிதும் கவரப்பட்டு உள்ளனர். |
Subscribe to:
Posts (Atom)