Thursday, October 7, 2010

கோரோ கிராமத்திற்கு 'பீப்லி லைவ்' சினிமா பாணியில் படையெடுக்கும் ஊடகங்கள்!


இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில், தொலைதூர கிராமம் ஒன்றில் புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழியை அக்கிராம மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.
நேஷனல் ஜியாகிரபிக் தொலைக்காட்சி நிருபர்கள் அழிந்து வரும் மொழிகள் குறித்து அவர்கள் தயாரித்து வரும் டாக்குமெண்டரி ஒன்றிற்காக, ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது,  அருணாச்சல பிரதேசத்தின் கிராமப்பகுதிகளுக்கு, வேறு இரண்டு மொழிகளை தேடிச்சென்றனர்.
ஆனால் அதிர்ஷ்ட்ட வசமாக பானா எனும் கிராமத்தின் அருகே கோரோ மொழி பேசும் இம்மக்களை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இதுவரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்த கோரோ மொழியை இப்போது பேசுபவர்கள் 800 முதல், 1200 பேர் வரையே இருக்கின்றனர்.
இதோ அவர்கள் மொழியில் சில சொற்களுக்கான குரல் பதிவு (நன்றி - NPR, Courtesy of K. David Harrison)
உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போக கூடிய நிலையில் உள்ளது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. ஆனால் இந்த கோரோ மொழியுன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழி குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் உலகில் இதுவரை இணங்காணப்பட்டுள்ள அரிய வகை மொழிகளில் 6,909 வது இடத்தை பிடித்திருக்கிறது கோரோ மொழி. கலாச்சார மாற்றங்கள், சமூக மாற்றங்கள், அரசியல் ரீதியான மாற்றங்கள் என்பவற்றால் இவை அனைத்துமே அழியும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக நேஷனல் ஜியோகிராபி சேனல் சுட்டிக்காட்டுகிறது.
டாக்குமெண்டரி இன்னமும் முழுமையாக வடிவமைக்கப்படாத போதும், பயனுள்ள விடயம் என்ற ரீதியில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5ம் திகதி இச்செய்தியை நேஷனல் ஜியோகிரபி சேனல் தனது இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டது. ஆனால் இது தொடர்பான 650 ற்கும் மேற்பட்ட செய்திகள் இன்று வரை புதிதாக அப்டேட் செய்யப்பட்டு கூகிளில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அண்மையில் வெளிவந்த 'பீப்லி லைவ்' திரைப்பட பாணியில், இக்கிராமத்திற்கு சில இந்திய ஊடகங்கள் படையெடுக்க தொடங்கியுள்ளதையும், இந்திய பிரபல செய்தி இணையத்தளங்களின் மிகைப்படுத்தப்படும் செய்திகளில் இருந்து காண முடிகிறது.

ஹாலிவூட்டை கலக்கிய டேர்மினேட்டர் வாரிசு! - இவர் தான்


உலக ஆணழகனாக, 20 வயதில் பட்டம் வென்று த டேர்மினேட்டர் மற்றும் கொனன் த பார்பரியன் திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ஆர்னல்ட் ஷ்வாசெனெகர். தற்போது கலிபோர்னியாவின் 38 வது கவர்கனர். வயது 63 ஆகிறது.  இன்னும் அப்படியே கட்டுமஸ்த்தான உடல் வாகு.
இது வரை அவரை பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருந்தன. தற்போது மகன் வந்துவிட்டார். பட்ரிக் ஷ்வாசெனெகர். 17 வயது இளம் வாலிபன். தந்தை 8 அடி பாய்ந்தால், இவர் 16 அடி பாய்வார் போல! தந்தையை போலவே சிக்ஸ் பெக் பாடி. நீங்களும் ஹாலிவூட்டில் கால் பதிக்க போகிறீர்களா எனக்கேட்டால், கையெடுத்து கும்பிடுகிறார்.
தந்தையை போல் மிதமிஞ்சிப்போய், ஜிம்மில் இறங்காமல், அளவான உடற்பயிற்சியுடன் யோகா வகுப்புகளுக்கு சென்று வருகிறார். அவருக்கு யோகா அவ்வளவு ஆர்வமாம். ஜிம்மிலிருந்து யோகாவுக்கு செல்லும் கன நொடிகளில் கமெராக்கள் பதித்த படமிது. அழைத்து செல்பவர் அவருடைய தாய்.
மகன் தான் இப்படியென்றால், மகள் இன்னும் கெட்டி. ஆர்னல்ட்டுக்கு எப்போதும் உடற்சுகாதாரத்தில் அதீத ஆர்வம் என்பதால் அடிக்கடி புத்தகம் எழுதி வெளியிட்டுக்கொண்டிருப்பார்.

இப்படி புதிதாக வெளியிட்ட புத்தமொன்றிற்காக மகள் கதரீன்னும் உழைத்திருந்தார். இதனால் அவரின் கைப்படவே புத்தகத்தை வெளியிட்டு வைத்த போது எடுக்கபப்ட்ட புகைப்படங்கள் இவை.
கதரின் தனது குடும்பத்தை பற்றி இப்படி சொல்கிறார். நான் இன்னமு என் தாயாருடன் நல்ல உறவை பேணுகிறேன். எப்படியும் ஒரு நாளில் 4 தடவையாவது அவருடன் கஷ்ட்டப்பட்டு பேசிவிடுவேன். (பெற்றோர் அவ்வளவு பிஸியாம்)
தந்தையுடனும் அப்படியே. ஆனால் அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் பையன்களை பற்றித்தான் கேட்பேன் என்கிறார். நல்ல குடும்பம் தான் !!!!

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும்.
ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றன. பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான் அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

சிரிப்பு ஒரு மாமருந்து

உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.
எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம். பிuனீணீக்ஷீs சிறீuதீ சிரிப்பு சங்கத்தில் சேரலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
து தேவை முடிவு செய்யுங்கள் சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம். நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.
இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி.அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும். நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.
நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும்.செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும்.சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்.'சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம் சிறப்பான உத்திகள்.கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.
வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள்.அதற்கான வழி தெரியவில்லையா? இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.

சுற்றுலா பயணிகளால் சிதையும் சீனப் பெருஞ்சுவர்

உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் உள்ளது. இதை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் போண்றவைகளை எடுத்துவருகின்றனர். சீனப்பெருஞ்சுவரில் இருந்து இயற்கை காட்சிசிகளை ரசித்துவிட்டு தாங்கள் கொண்டு வரும் பொருட்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால், சீனப் பெருஞ் சுவரில் காலி மதுபாட்டில்கள், உணவுப்பொருட்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே குப்பைகளாக கிடக்கின்றன.
சிலர் அங்கு கூடாரம் கட்டி தங்குகின்றனர். அதற்காக சீன பெருஞ்சுவரில் ஆங்காங்கே பெரிய ஆணிகளையும், இரும்பு கம்பிகளையும் அடித்து வைத்துள்ளனர். இதனால் சீனப்பெருஞ்சுவர் சிதைந்து வருகிறது. சுற்றுலாவை பெருக்குவதில் அதிக அக்கறை காட்டும் அரசு உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். யுனெஸ்கோ நிறுவனம் வழங்கியுள்ள உலக பாரம்பரிய சின்னம் என்ற பெருமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்

பச்சிளம் குழந்தையின் உயிருக்கு உலைவைத்த குரங்கு!

  குரங்குகள் ஓருயிரைக் கொல்லுமளவுக்கு கொடூரமானவையல்ல. தமது சேஷ்டையால் மனிதரை ஏமாற்றி உணவை அபகரித்துக் கொள்ளுமேயல்லாமல் உயிரைப் பறிக்குமளவுக்கு அராஜகம் செய்வதில்லை. 

ஆனால், குரங்கு ஒன்றின் செயலால் ஒரு பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மலேஷிய செரம்பிரன் மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது. 

வீட்டிலிருந்த குழந்தையை இந்தக் குரங்கு கூரைவரை தூக்கிச் சென்றதால், அங்கிருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

பிறந்து நான்கு நாட்களே ஆன இக்குழந்தை வீட்டின் முன் ஹோலில் உறங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் குழந்தை அருகில் எவரும் இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த குரங்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளது. 

குளியலறைக்குச் சென்றிருந்த குழந்தையின் தாயாரான ( 26 வயது) ரேவதி, சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். குழந்தையை அவ்விடத்தில் காணாததால் பதறிப் போன அவர், ஓடிச் சென்று குழந்தையின் பாட்டனாரை அழைத்துக் கொண்டு குழந்தையைத் தேடினார். 

வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், வீட்டுக்கு வெளியே, முற்றத்தில் குழந்தை இரத்தவெள்ளத்தில் கிடந்தது. கதறினார் ரேவதி. தூக்கிப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தமை தெரிய வந்தது.

குழந்தையின் முகத்தில் காயங்கள், கீறல்கள் காணப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்துக் குழந்தையின் பாட்டனாரான வேலாயுதம் மலேஷிய பத்திரிகை ஒன்றுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மலேஷிய வனத்துறை உயர் அதிகாரி ஒருவர், இச்சம்பவத்திற்குக் காரணமான குரங்கு சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்குரங்கு உணவுதேடியே அங்கு வந்திருக்கலாமெனவும் உணவென நினைத்து குழந்தையைத் தூக்கிச் சென்றிருக்கலாம் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார். 

பொதுவாக குரங்குகள் எந்த உயிரையும் கொன்று உண்பவையல்ல. அவற்றுக்கு உண்ணத் தேவை காய்களும் கனிகளுமே. ஆனால், ஒருசில குரங்கு இனங்கள், அசுர பசி ஏற்பட்டு, உண்ண உணவின்றி இருக்கும் வேளை, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதுண்டு எனவும் கருத்துக் கூறப்படுகிறது.

எது எப்படியோ, பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை நான்கே நாட்களில் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்த இளம் தாயின் மன வேதனைக்கு மருந்தேது? 

பழமை வாய்ந்த சிகிரியா நகரம் (பட இணைப்பு)

  இலங்கைத் திருநாட்டில் இணையற்ற கலைப் பாரம்பரியத்துடன் கூடிய புராதன இடங்களில் ஒன்றாக சிகிரியா விளங்குகிறது.முதலாம் காசியப்ப மன்னனால் (47795) உருவாக்கப்பட்ட சிகிரியா நகரின் எச்சங்கள் செங்குத்தான பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. சுமார் 370 மீற்றர் உயரக் குன்றில் (சிங்கக் குன்று) இருந்து எல்லா பக்கத்திலும் உள்ள காடுகளைப் பார்க்க முடியும். இலங்கையின் கட்டிடக் கலை மரபு சிகிரியாவில் மிக அழகாக தோன்றுகிறது. ஆசியாவில் மிகச் சிறப்பாக பேணப்படும் நகராக இந்நகரம் கட்டிடங்கள், நந்தவனங்கள், பாறைகள், நீர்த்தோட்டங்கள் மற்றும் இயற்கை செயற்கைத் திட்ட அமைப்பின் எழிலோடு விளங்குகின்றது. இன்றும் அதன் பழைய அமைப்பின் கம்பீர அழகைக் காட்டுவதாக உள்ளது.

சிகிரியாக் குன்று சிற்பங்கள் 6ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. இக்கோட்டையை காசியப்பன் எதிரிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைத்தான் என வரலாறு கூறுகிறது.

துலங்காத மர்மங்கள்

லௌவீகம், ஆத்மீகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சிகிரியா ஓவியங்கள், மன்னன் காசியப்பன் அனுராதபுரத்திலிருந்து சிகிரியாக் குன்றை ஏன் தெரிவு செய்தான்? ஓவியங்களில் உள்ள பெண்கள் யார்? என்பன போன்ற மர்மங்கள் சிகிரியா அமைக்கப்பட்டு 1500 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், துலங்காமல் தொடர்கின்றன.

யார் இந்தப் பெண்கள்?

சிகிரியா ஓவியங்கள் சித்தரிக்கும் பெண்கள் புத்தரைத் தரிசிக்கச் செல்லும் மகளிர் என வரலாற்றாசிரியர்களால் நம்பப்படுகிறது. அவர்கள் கைகளில் ஏந்தியிருக்கும் அல்லி மலர்கள், முகத்தில் வெளிப்படும் பக்தி உணர்வு ஆகியவற்றை சில வரலாற்றாசிரியர்கள் இதற்குச் சான்றுகளாக முன்வைக்கின்றார்கள். இந்தப் பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து மகளிர் என்றும் கருதுகின்றனர் சில வரலாற்றாசிரியர்கள். யார் இந்தப் பெண்கள் என்ற வினாவுக்கு விளக்கம் இதுவரை எந்த வரலாற்றாசிரியராலும் முழுமையாக முன்வைக்கப்படவில்லை. துர்க்குணங்கள் நிறையப் பெற்ற காசியப்ப மன்னனின் அரண்மனையில் பெண்கள் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் எனவும் நம்பப்படுகிறது. எதுவாக இருந்தபோதிலும் பெண்களின் இடையமைப்பு, முக அமைப்பு என்பன அஜந்தா ஓவியம் மற்றும் பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னன் வரைந்த ஓவியங்கள்

சிகிரியாவில் மொத்தம் 27 ஓவியங்கள் ஆரம்பத்தில் காணப்பட்டன. தகுந்த கவனிப்புகள் இன்றி அவை அழிந்து விட்டன. தற்போது ஏழு ஓவியங்கள் மாத்திரம் காணப்படுகின்றன. ஓவியங்கள் அனைத்தும் காசியப்பன் மன்னனாலேயே வரையப்பட்டுள்ளது.

சுண்ணாம்பு, தேன், கபுக்கல் போன்றவற்றைக் கலந்து பாறையில் பூசிய தளத்திலேயே (ஈரம் காய்வதற்கு முன்) ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் ஈரச் சுதை ஓவிய வகைக்குள் உள்ளடக்கப்படுகிறன. ஓவியங்களுக்கு இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மரத்திலிருந்து கிடைக்கப்படும் பசைவகை (மரத்திலிருந்து பசை வடியும் போது ஒரு நிறமாகவும் சற்று நேரம் செல்ல வேறு நிறமாகவும் சில நாட்கள் கழிய கறுப்பு நிறமாகவும் மாறும் தன்மை கொண்டது. இந்த நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.), பரப்பட்டைச் சாயம் என்பனவாகும்.

கண்ணாடிச்சுவர் ( தற்போது மங்கலாகக் காட்சி தருகிகிறது) தேன், கபுக்கல் கொண்டு ஓவியம் வரைவதற்கு தயார் செய்யப்பட்ட பகுதியாகும் இது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் ஓவியங்கள் வரையப்படவில்லை.

பாதுகாப்பா? கலைத்துவமா?

காசியப்பன் சிரியாவில் பாதுகாப்பானதும், கலைத்துவமானதுமான கோட்டையை அமைத்து, அனுராதபுரத்திலிருந்து தலைநகரை இங்கு மாற்றிக் கொண்டான் என வரலாறு கூறுகின்றது. 600 அடி உயரமான குன்றின் மீது இவன் அரண்மனயை அமைத்தான். படிக்கட்டுகள் மூலம் மலையின் நடுப்பகுதிக்கு போக முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப்பக்கத்திலுள்ள மேடைக்கு போக முடியும். இம் மேடையிலிலுந்து படிக்கட்டுகள் மண்ணினால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிங்கத்தின் கடைவாய்க்கு ஊடே உயர்ந்து செல்கின்றன. குன்றின் உச்சியில் அரண்மனை அத்திவாரத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. இது தேவ அரசர்களின் அரண்மனைக்குச் சொல்லப்பட்ட விதிகள் அடங்கிய அமைப்பையும் கொண்டுள்ளது. இயற்கையான மூன்று ஊற்றுகள், பூங்கா, மன்னன் மகாராணி குளிக்கும் தொட்டி போன்றவை இன்றும் சிதைவுகளுடன் காணப்படுகிறன. மேற்குப்புற பாறைச்சுவரில் சிகிரியா ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

குன்றின் கிழக்கும் மேற்கும் மதில்களாலும் அகழிகளாலும் அரண் செய்யப்பட்டிருக்கின்றன. மதிலின் சில பகுதிகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. இம் மதிலின் சில பகுதிகள் 30 அடி உயரமுடையன. அகழி 14 அடி ஆழமும் 82 அடி அகலமும் கொண்டது. பாதுகாப்புக்காக நிறுவப்பட்டது என நம்பப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட இலட்சியம் அல்லது கலைநோக்குக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாகவே கருதப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு அமைப்பினால் (யுனெஸ்கோ) கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய இடமாக 1982 இல் சீயகிரி என்ற சிகிரியா அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்படும் மன்னனின் வரலாறு

சிங்கள வரலாற்றுக் குறிப்புகளில் காசியப்பன் மன்னனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. இவனது பாவச்செயல் பற்றியே (தந்தையைக் கொன்றமை) மிகுதியாகக் கூறப்படுகிறது. மாகாவிகாரைப் பிக்குகள் இவன் வழங்கிய கொடைகளை ஏற்க மறுத்ததாக சூளவம்சம் கூறுகின்றது. குறிப்பாக காசியப்பனுக்கு வரலாற்று முக்கியத்துவம் கொடுத்த சிகிரியா பற்றி முழு விபரங்களையும் அறிய முடியாமல் ஊகங்களையும் மனம் போன போக்கில் கூறப்படும் கருத்துக்களையும் கேட்கும் நிலையில் இருக்கின்றோம்.

அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த தாதுசேனனுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் காசியப்பனின் தாய் தாழ்ந்த சாதி என்பதால் சிம்மாசனத்துக்கு அருகதையற்றவனானான். முகலன் பட்டத்தரசியின் மைந்தன்; சிம்மாசனத்துக்கு உரியவன். மூன்றாவது குழந்தை சேனாதிபதியை மணந்து கொண்டாள். மகளை மாமியார் கொடுமைப்படுத்தியதால் அப்பெண்ணை தாதுசேனன் எரித்துக் கொன்றுவிட்டான். இதனால் சேனாதிபதி தாதுசேனனுக்கு விரோதியானான். சிம்மாசனத்தைக் கைப்பற்ற சமயம் பார்த்துக்கொண்டிருந்த காசியப்பனுடன் சேர்ந்து தாதுசேனனை எதிர்த்தான். தந்தையைச் சிறையில் தள்ளி, சிம்மாசனத்தைக் கைப்பற்றியதுடன் தந்தையையும் கொன்றான். தம்பி முகலனையும் ஒழித்துவிட முயல, அவன் இந்தியாவுக்கு தப்பி ஓடினான்.

காசியப்பன் அனுராதபுரத்திலிருந்து சிகிரியாவுக்கு தலைநகரை மாற்றிக் கொண்டமையானது, முகலன் தென்இந்தியாவிலிருந்து பெரும்படையோடு வந்து தன்னை எதிர்ப்பான் என அஞ்சியே இந்த பாதுகாப்பான இடத்தைத் தெரிவு செய்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அனுராதபுர மக்களுக்குப் பயந்து சிகிரியாவுக்கு சரண்புகுந்ததாக வேறு சிலர் கருதுகின்றார்கள். சிகிரியாக் கோட்டையை அமைக்க ஐந்து ஆண்டுகள் கழிந்தன. மக்களுக்குப் பயந்த அரசன் தற்காலிகமாக ஒதுக்கிடம் தேடுவானேயன்றி இவ்வளவு நீண்ட காலத்தில் அமைக்கப்பட வேண்டிய ஒரு இடத்தை தெரிவுசெய்தான் என்பதும் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது.

காசியப்பன் தன்னைக் கடவுளாகக் கருதினான் என்றும் சிலர் கருதுகின்றார்கள். அக்காலத்து தேவராசர் உயர்ந்த மலைகளில் அமைக்கப்பட்ட விசேட அரண்மனைகளில் வாழ்ந்தார்கள். இக்காரணத்தால் காசியப்பன் சிகிரியாவைத் தலைநகராக்கினான் என சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றார்கள்.

பி.ஜோன்சன்

அமைவிடம்

வடமத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் கிழக்குப் புறம்.

பயண வழி

கொழும்பிலிருந்து 186 கி.மீ தொலைவில் உள்ளது. தம்புள்ள ஹபரணை (ஏ6) பிரதான வீதியில் இனாமலுவவிலிருந்து 10 கி.மீ கிழக்காக சிகிரியாவுக்கு செல்ல திரும்ப வேண்டும். தம்புள்ள நகரத்திலிருந்து காலையில் ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் பஸ் சேவைகள் உள்ளன. தம்புள்ள யிலிருந்து முச்சக்கர வண்டிக்கு ரூபா 500 கட்டணமாக அறவிடப்படுகின்றது.

தங்குமிடங்கள

இயற்கை எழில் கொஞ்சும் சிகிரியாக் கிராமத்தில் வசதிக்கு ஏற்றவாறு உல்லாசப் பயண விடுதிகள் பல உள்ளன.

அனுமதி நேரம்

காலை 6.30 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் 5 மணிக்குப் பின்னர் அனுமதி இல்லை. அனுமதிக்கட்டணம் 20 அ. டொலருக்குச் சமமான இலங்கை நாணயம்.

ஆலோசனை

தண்ணீர் எடுத்துச் செல்வது அசௌகரியங்களைத் தவிர்க்கலாம். காலையில் சூரிய உதயம் குன்றின் உச்சியில் காண்பது மனதுக்கு ரம்மியமானது. ஊச்சி வெயிலில் மலை ஏறுவதைத் தவிர்ப்பதும் நல்லது.

     

' பேஸ்புக்' வழங்கும் புதிய 'குரூப்ஸ்'

  பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம். 

எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது. 

ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.

தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம். 

இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.

மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. _

சீனாவின் வளர்ச்சியும் சவால்களும்

  சீனாவைப் பற்றி நிகழ்காலத்தில் உலகில் பேசப்படுகின்ற போதெல்லாம் அனேகமாக அதன் அசூர வளர்ச்சி பற்றிய பிரமிப்புக்கள் அன்றேல் அதன் செயற்பாடுகள் பற்றிய ஐயப்பாடுகளே முன்வைக்கப்படுகின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக கடந்தபல தசாப்தகாலமாக கருதப்பட்ட ஜப்பானை முந்திக் கொண்டு இவ்வாண்டின் ஓகஸ்ற் மாதத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த சீனா 2027ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக திகழும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மன் சக்ஸ் நிறுவனம் எதிர்வுகூறியிருக்கின்றது

இந்தச் செய்திகள் இன்றைய உலகப்போக்கில் சீனாவை புறக்கணித்துவிட்டு எதனையுமே செய்துவிடமுடியாதென்ற நிலைமை ஏற்றப்பட்டுள்ளதனை விரும்பியோ விரும்பாமலோ ஒப்புக்கொள்ளச்செய்கின்றது

ஜயாயிரமாண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட சீனா 1949ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மாவோ ஸேதுங் தலைமையிலான கம்ய+னிஸக் கட்சியினால் மக்கள் சீனக் குடியரசாக ஸ்தாபிக்கப்பட்டமுதல் கொண்டு இம்மாதம் முதலாம் திகதி வரையில் 61 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ளது

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு கடந்தவாரத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் சீனாவைப் பற்றி ஒளிபரப்பபட்ட விவரணத் தொகுப்பொன்றைக் காணக்கிடைத்தது இந்த இடைப்பட்ட காலத்தில் சீனா எத்தகைய அசூர வளர்ச்சியைக் கண்டுநிற்கின்றது என்பiதை அந்த விவரணதொகுப்பை கண்ணுற்றவர்கள் ஏகமனதாகவே ஆமோதித்தனர்

கடந்தகாலத்தில் சீனாவைப் பற்றி பேசுபவர்கள் உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடு (130 கோடியைத்தாண்டியுள்ளது ; )சீனப்பெருஞ்சுவர் இராட்சத பண்டா தியனமென் சதுக்கம் டெராகொட்டா போர்வீரர்கள் சீனாவின் புராதன நாகரீகம் பண்டைய நகரங்கள் குறித்தே பேசியதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்

ஆனால் இன்று அதன் பாரிய அபிவிருத்தியடைந்த தலைநகர் பீஜிங் ஹொங்கொங் ஷங்காய் நகரங்கள் அதன் முன்னேற்றம் கண்டுவரும் கைத்தொழில் துறை வியக்கவைக்கும் நெடுஞ்சாலைகள் வானுயர்ந்த கட்டிடங்கள் வலுவான பொருளாதாரம் வளர்ச்சி பெறும்வாழ்க்கைத்தரம் பற்றிப் பேசுகின்றதை காணமுடிகின்றது .

இன்றைய உயர் நிலையோக்கிய பயணத்திற்கு; சீனத்தலைவர் டெங் ஸியாவோபிங் 1978ம் ஆண்டில் மேற்கொண்ட தூரதரிசனமிக்க நடவடிக்கைகளே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது .கடும் போக்கு கம்ய+னிஸக் கொள்கைகளுக்கு பதிலாக திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார் . அன்று இருந்ததிலும் பார்க்க 90 மடங்குகளாக சீனாவின் பொருளாதாரம் இன்று பெருகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் சான்றுபகர்கின்றது

இந்தக்காலப்பகுதியில் 300மில்லியன் மக்களை சீனா வறுமையில் இருந்து வெளிக்கொண்டுவந்திருப்பதாக ஐநா குறிப்பிடுகின்றது

எந்தவொரு நாட்டையும் போலன்றி கடந்த முப்பது ஆண்டுகாலமாக சீனப்பொருளாதாரம் வருடாந்தம் சராசரியாக 10வீத பொருளாதார வளர்ச்சி வேகத்;தை கொண்டு பயணித்துக்கொண்டிருப்பதுடன் தற்போதைய நிலையிலும் வேகமான பொருளாதார வேகத்தை கொண்டிருக்கின்றது

சீனா எதிர்நோக்கும் சவால்கள்

யதார்த்தத்தை வெளிப்படுத்திய சீனத் தூதுவர்

சீனாவின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய சீனத்தூதுவர் யாங் ஸியுபிங் சீனாவில் பொருளாதார மறுமீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு திறந்த பொருளாதாரம் 1978ல் அமுல்படுத்தப்பட்டது முதலாக உலகை உலுக்கு கின்ற மாற்றங்களை சீனா கண்டுநிற்பதாக குறிப்பிட்டார் . சீனர்கள் தமது நாட்டின் சாதனைகள் தொடர்பாக பெருமைப்பட்டுக்கொள்கின்ற அதேவேளை எதிர்நோக்கியிருக்கின்ற என்றுமில்லாத பல பெரும் சவால்கள் தொடர்பிலும் தெளிவாக விளங்கிக்கொண்டிருப்பதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

“ சோசலிஸ சமத்துவத்தின ஆரம்பக்கட்டத்திலேயே சீனா இன்னமும் உள்ளதுடன் தொடர்ந்துமே அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடாகவே இருக்கின்றது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி தலா வருமானம் சமீபத்தில் தான் 3000 அமெரிக்க டொலர்கள் இலக்கை தாண்டியுள்ளது .இதன்படி உலகளவில் 104வது இடத்திலேயே காணப்படுகின்றது .சமச்சீரற்ற அபிவிருத்தியானது மிகமுக்கிய பிரச்சனைகளிலொன்றாக அமைந்துள்ளது பல கிராமப்புறங்களும் தூரப்பிரதேசங்களும் இன்னமுமே மிகவும் வறுமைமிக்கதாக காணப்படுகின்றது 135மில்லியன் மக்கள் இன்னமும் நாளொன்றுக்கு ஒருடொலர்களுக்கம் குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களாகவே காணப்படுகின்றனர் .சீனா உண்மையான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு பல தாசப்தகாலங்கள் பத்திற்கும் மேற்பட்ட சந்ததியினரின் கடுமையான முயற்சிகள் அவசியமாகும் .;”

உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியாகசீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் பொருளாதார அபிவிருத்தி சமத்துவமீன்மையானது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதனை சீனத்தூதுவரின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொள்ளமுடிந்தது

உலகின் மிகப்பெரும் பொருளாதார வல்லரசாக திகழும் அமெரிக்காவின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி 14 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன் தலா வருமானம் 46000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக இருக்கின்றது

ஜப்பானின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி தலா வருமானம் 32000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக உள்ளது

4.99ரில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த தேசிய உற்பத்தியுடன் உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியாக திகழுகின்ற சீனாவில் மக்களின் சராசரி தலா வருமானம் 3000 அமெரிக்க டொலர்கள் அளவிலேயே இருக்கின்ற நிலையில் தம்மை உண்மையான பொருளாதார வல்லரசு என அழைக்க முடியாததென்பதை சீனத்தரப்பே ஒப்புக்கொண்டுள்ளமை யாதார்த்தைத்தை அவர்கள் நன்குணர்ந்துகொண்டுள்ளமையை தெளிவுபடுத்துகின்றது.

சீனாவின் அபிவிருத்தி உலகிற்கு நன்மைகளைக் கொண்டுவந்துள்ளதுடன் அது உலகப்பொருளாதாரத்தினதும் வர்த்தகத்தினதும் வளர்ச்சியை வலுவாக ஊக்குவித்துள்ளதாக சீனத்தூதுவர் சுட்டிக்காட்டியதுடன் தமது நாட்டை வளர்;த்துக்கொள்வதற்கு அமைதியான சர்வதேச சூழலை எதிர்பார்த்துநிற்பதாகவும் 1.3 பில்லியன்களாகவுள்ள சீனாமக்கள் சிறப்பான முன்னேற்றமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு தமது ஓட்டுமொத்த நேரத்தையும் சக்தியையும் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார் . தமது சொந்த அபிவிருத்தி மூலமாக உலக சமாதானத்திற்காக பங்களிப்புச்செய்வதாகவும் சீனத்தூதுவர் தெரிவித்திருந்தார்

ஐயப்பாடுகளைப் போக்கும் கருத்துக்கள்

சீனாவின் அசூர வளர்ச்சியானது பல்வேறு தரப்பிலும் அச்சங்களையும் ஐயப்பாடுகளையும் ஏற்படுத்திவிட்டுள்ள நிலையில் சீனத்தூதுவர் இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார் “ (அபிவிருத்தியென்பது )சீனா தேர்ந்தெடுத்துள்ள உபாயத் தெரிவாகும் .சமாதானமான அபிவிருத்தி என்ற பாதையில் சீன மக்கள் தொடர்ந்தும் தம்மை உறுதியுடன் அர்ப்பணித்திருப்பர்.சீனாவின் அபிவிருத்தி யாரையும் புண்படுத்தவோ அன்றேல் அச்சுறுத்தவோ மாட்டாது . வளர்ச்சி பெற்றதும் ஆதிக்கத்தை நாடிய பெரும் வல்லரசுகளின் பாதையை சீனா ஒருபோதுமே பின்பற்ற மாட்டாது. சீனா எவ்வளவுக்கு எவ்வளவு அபிவிருத்தி காண்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு சர்வதேச பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் .ஏனையவர்களின் நலன்களை விலைகொடுத்து தனது சுயநலனை சீனா ஒருபோதுமே முன்னெடுக்கமாட்டாது. சீனாவின் அபிவிருத்திக்கு நீண்டகாலங்கள் ஸ்திரமான சர்வதேச சூழல் அவசியமானது குறிப்பாக அண்டைநாடுகளில் ஸ்திரமான நிலை அவசியமானது .இலங்கை உட்பட அண்டைநாடுகளுடன் சிறப்பான அயலக நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புகின்ற கொள்கையை சீனா தொடர்ந்தும் பின்பற்றும் “

சீனத்தூதுவரின் கருத்துக்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றபோதிலும் சீனாவின் வளர்ச்சியும் அதன் செயற்பாடுகளும் இலங்கையிலுள்ள சில தரப்பினரைப்போன்றே உலகிலும் அச்சத்துடனும் ஐயப்பாட்டுடனும் நோக்கப்படுவதை இங்கே சுட்டிக்காட்டுதல் சாலப்பொருத்தமாகும்.