Saturday, December 18, 2010

இதுதான் பென்சில் கலை! (படங்கள்)


இதுதான் பென்சில் கலை!  படங்களைப் பார்த்ததும் நிச்சயம் வாவ் சொல்வீர்கள்!

இணையத்தில் இலகுவாக பைல்களை பகிர புதிய தளம்


இணையத்தில் டாக்குமென்ட்ஸ் மற்றும் பைல்களை பகிர்ந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GE.TT
என்ற தளத்தின் மூலம் பைல்களை பகிரும் நடவடிக்கை இன்னும் சற்று இலகுவாகிறது.

பைல்களை அனுப்புவதற்கு Create Share பட்டனை கிளிக் செய்து  கணனியில் இருக்கும் பைலை தேர்வு செய்ததும் பைல் அப்லோட் செய்யப்படும். அவ்வாறு செய்யப்பட்டதும் பேஸ்புக் டுவிட்டர் அல்லது இமெயிலில் உங்களுக்கு தரப்படும் இணைப்பை பகிர வேண்டியது தான்.

அதன் பின்னர் எத்தனை முறை டவுண்லோட் செய்யப்பட்டன போன்றவிபரங்கள் காட்டப்படும்.30 நாட்கள் வரை நீங்கள் பகிர்ந்தவை இத்தளத்தில் இருக்கும்.

பாஸ்வேட் போன்ற விபரங்கள் கொண்ட தனிப்பட்ட பைல்களை இங்கே பகிர்வது பாதுகாப்பனதல்ல. பெரிய பைல்களை அப்லோட் டவுண்லோட் செய்யும் வேகமும் மற்றைய தளங்களை விட அதிகமானதாகவே இருக்கிறது.

இணைப்பு  http://www.ge.tt/

பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - Saved Password Editor

ஜிமெயில்களை டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள்

டிவிடி வீடியோக்களை யூடியூப்பிற்கு அப்லோட் செய்வது எப்படி?

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்

இரு மானிட்டர் திரைகளை இடமாற்றிக்கொள்ள (Swap) ஒரு மென்பொருள்.


கணனியில் இரு மானிட்டர்களை இணைத்து வேலை செய்பவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.
2வது மானிட்டரில் தெரிபவற்றை உடனடியாக பிரைமரி மானிட்டருக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வரும்.

இச்சந்தர்ப்பத்தில் என்ன செய்வீர்கள் குறிப்பிட்ட விண்டோவை டிராக் செய்து பிரைமரி மானிட்டருக்கு கொண்டு வருவீர்கள். சில நேரங்களில் இது எரிச்சல் தரும் வேலையாக தோன்றலாம்.
இதைவிட இரு மானிட்டர் டிஸ்பிளேயையும் ஒரே கிளிக்கில் ஸ்வாப் (Swap)  செய்ய முடிந்தால் இலகல்லவா? இதற்கு உதவுவதே ஸ்வாப் வின் என்ற ஒப்பன் சோர்ஸ் மென்பொருளாகும்.

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இரு மானிட்டர்களில் அக்டிவ்வாக இருக்கும் விண்டோவை ஸ்வாப் செய்து கொள்ளலாம். டாஸ்க் பார் பிரைமறி மானிட்டரிலேயே இருக்கும்.

இரு மானிட்டர்களும் ஒரே resolution  இல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் விண்டோக்களில் மாற்றம் செய்யாமல் டிஸ்பிளேயை மட்டுமே மாற்றும்.

பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

டவுண்லோட் செய்ய

இணையத்தில் இலகுவாக பைல்களை பகிர புதிய தளம்

பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - Saved Password Editor

ஜிமெயில்களை டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள்

டிவிடி வீடியோக்களை யூடியூப்பிற்கு அப்லோட் செய்வது எப்படி?



ஹாட்டிஸ்க், யு.எஸ்.பி, மற்றும் கமெரா டிவைஸ்களில் இல் இருந்து அழிக்கப்பட்ட பைல்களை பெறுவதற்கு.


கணனியில் அல்லது யு.எஸ்.பி டிவைஸ் போன்றவற்றில் இருந்து தவறுதலாக முக்கியமான சில பைல்கள்

அல்லது படங்கள் போன்ற டாக்குமென்ட்களை திடீரென அழித்து விட்டீர்களாயின் என்ன செய்வது?

அவற்றை மீளவும் பெறுவதற்கு Undelete 360 என்ற மென்பொருள் உதவுகிறது. அழிக்கப்பட்ட பைல்களை தேடுவதற்கு இந்த மென்பொருளை நிறுவி பின்னர் main interface இல் Search என்பதை கிளிக் செய்ததும்,  அழிக்கப்பட்ட பைல்களின் விபரங்கள் காட்டப்படும்.


இதில் குறிப்பிட்ட பைல் என்ன நிலையில் இருக்கிறது அதாவது அதை ரீகவர் செய்ய முடியுமா அல்லது ஓவர் ரைட் செய்யப்பட்டுள்ளாதா என்பதை அறிய முடியும்.


அவசரத்தில் பைல்களை அழித்துவிட்டீர்களாயின் இனி கவலையில்லை அவற்றை உடனடியாக ரீகவர் செய்ய இந்த இலவச மென்பொருளை டவுண்லோட் செய்து வையுங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு ப்யன்படும்.

டவுண்லோட் செய்ய
http://www.undelete360.com/

இரு மானிட்டர் திரைகளை இடமாற்றிக்கொள்ள (Swap) ஒரு மென்பொருள்.

இணையத்தில் இலகுவாக பைல்களை பகிர புதிய தளம்

பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - Saved Password Editor

ஜிமெயில்களை டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள்

யூடியூப்பில் பிரபலமான வீடியோக்களை காண புதிய வசதி


யூடியூப்பில் குறிப்பிட்ட நாட்டில் தற்போது மிக பிரபலமாக இருக்கின்ற வீடியோவையோ அல்லது குறிப்பிட்ட
வயதினரிடையே அதிகம் பிரபலமாகவுள்ள வீடியோவை கண்டறிவதற்கு ஏற்றதாக புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் முகவரி இங்கே
http://www.youtube.com/trendsdashboard

ஹாட்டிஸ்க், யு.எஸ்.பி, மற்றும் கமெரா டிவைஸ்களில் இல் இருந்து அழிக்கப்பட்ட பைல்களை பெறுவதற்கு.

இரு மானிட்டர் திரைகளை இடமாற்றிக்கொள்ள (Swap) ஒரு மென்பொருள்.

இணையத்தில் இலகுவாக பைல்களை பகிர புதிய தளம்

பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட பாஸ்வேட்களை கையாள்வதற்கு - Saved Password Editor

டிவிடி வீடியோக்களை யூடியூப்பிற்கு அப்லோட் செய்வது எப்படி?


இன்று கூகிளில் தெரிவது! - இசையால் நாசிப்படைகளை வென்ற 'சிட்டுக்குருவி'


17 வருடத்திற்கு முன்பு, நியூயோர்க்கில் ஓர் டேக்ஸி வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.
Grand Central Down, முன்பு வண்டி வந்த போது, ஒரு இளைஞன்.

பார்த்தாலே தெரிகிறது வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய ஒருவன். டேக்ஸியில் லிப்ட் கேட்டான். அனுமதித்தேன். கையில் ஓர் கேசட் பெட்டி. முதன்
முதலாக எடித் பியேஃப் (Edith Piaf) பாடல் நான் போடாமல், என் காதுகளுக்குள் ஒலித்த சந்தர்ப்பம் அது. அவன் திரும்ப திரும்ப பாடல் வரிகளை முணுமுணுதுக்கொண்டே  இருந்தான். 30 நிமிட பிரயாணமது. எடித் பியேஃப் பற்றி ஓரளவேனும் அறிந்துகொள்ள அந்த 30 நிமிடமும், அவனும் தான் காரணம். இறங்கும் போது கையில் இருந்த அந்த கேசட்டை கொடுத்துவிட்டு கூறினான். வாழ்க்கை வெறுத்த பலதடவைகளை வென்றுவிட்டேன். இந்த வரிகளை கேட்டுப்பாருங்கள்  உங்களது இளமை பருவம், தாய், தாய்நாடு எல்லாமே ஞாபகத்திற்கு வரும்! என்னைப்போலவே!

'Listening Room Blog'  - பிரபல இசைப்பிரியர்களின் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஓர் அனுபவம் இது!
இது தான் எடித் பியேஃப் இன் உன்னதமான சக்தி. அவருடைய யுனிக் வோகல் ஸ்டைல், இன்றுவரை பிரான்ஸுக்கு பெருமை சேர்ப்பவற்றில் ஒன்று!
பிரான்ஸில் முதன் முதலாக, ஓர் மரணமடைந்த நபரின் இறுதிக்கிரியைகள் பொது மக்கள் மத்தியில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது என்றால், இவருடையது தான்! 1963 ம் ஆண்டு புற்றுநோயின் காரணமாக எடியேத் இறந்த போதுதான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டமா என உலகம் வாய்பிளந்தது.

பிறந்தது பாரிஸில் பெல்வில் எனும் ஊர். பிறந்த ஆண்டு 1915 டிசெ.19. இதில் ஆச்சரியம் அவர் உலகம் முழுவதும் பிரபலமடைந்த போது, பிரான்ஸில் மட்டும்  தேசத்துரோகியாக கருதப்பட்டார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, அவரது இசைப்பாடல்கள் ஜேர்மனிய நாசி இராணுவத்தினரை குஷிப்படுத்தியதாம்.

அந்நேரம் அவர் பாடிக்கொண்டிருந்ததே பிரான்ஸில் இருந்து தான்.

ஜேர்மனிய நாசிக்களிடமிருந்து பிரான்ஸுக்கு ஆதரவான யூதர்களை காப்பாற்றவே எடித் அப்படி பாடினார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவடைந்த பிறகு தான் பிரான்ஸ் மக்களுக்கு வந்தது. அதன் பின்னர் தான் அவர் பிரபல்யமடையத்தொடங்கினார்.

பிரான்ஸின் மூலை முடுக்குவரை அவர் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கின. தனது வாழ்வின் பிரதிபலிப்பை பற்றியே அதிகம் பாடினார். ஆனால் கேட்பவர்கள் எல்லோருக்கும் அது  பொருந்தும்! அதிகமானவை பலேட் வகை இசையை சேர்ந்தவை. "La Vie en rose" (ரோஜாவினுள் ஓர் வாழ்க்கை - 1946), "Non, je ne regrette rien" (1960), "Hymne à  l'amour" (1949), "Milord" (1959), "La Foule" (1957) என்ற பாடல்கள், பிரான்ஸின் 40,50 களை அவரது இசையின் பின்னால் வரவழைத்த காலப்பகுதி.

பாரிஸ் எங்கிருக்கிறது என தெரியாத பிரான்ஸ் வாசிகளுக்கு கூட La Môme Piaf என்றால் சிம்பிளாக சொல்வார்கள். அது எடித் பியேஃபின் செல்லப்பெயர்.
பிரெஞ்சில் Môme என்றால் குழந்தை. ஏனைய நாட்டவர்கள் அவரை த லிட்டில் ஸ்பரோவ் (The Little Sparrow) சின்ன சிட்டுக்குருவி என
அழைப்பார்கள்.
நாசிப்படைகளை கூட தன் இசையால் இணங்கவைக்க முடியும் என பியேஃப் நம்பியது தான், அவர் இறந்தும் இறவாது  மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கமுடியும்!
இன்று வரை அவரை பற்றி தெரியாதவர்களுக்கும் கூகிள், தனது டூடிள் மூலம் வழி சமைத்துவிட்டது. 95 வது பிறந்தநாளை கொண்டாடும் பியெஃபுக்கு நாமும் வாழ்த்து கூறுவோம்!
முன்னைய ' இன்று கூகிளில் தெரிவது?' பதிவுகள்

பேஸ்புக் ஸ்தாபகரின் கொடை உள்ளம்


பிரபல சமூகவலையமைப்பான பேஸ்புக்கின் ஸ்தாபகரும், குறுகிய காலத்தில் கோடிகளை தொட்டவருமான மார்க் ஷூக்கர்பேர்க் அவரது சொத்தில் பெரும் பகுதியினை தர்ம காரியங்களுக்கு வழங்கவதற்கு இணங்கியுள்ளார்.

26 வயதான ஷூக்கர் பேர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிரபல அமெரிக்க கோடிஸ்வரர்களான பில் கேட்ஸ் மற்றும் வொரன் புபட் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட The Giving Pledge என்ற திட்டத்திட்கே அவர் தனது சொத்தில் பாதியினை வழங்குவதற்கு இணங்கியுள்ளார்.

மேற்படி திட்டமானது செல்வந்தர்கள் தமது சொத்தில் பெரும் பகுதியினை தர்ம காரியங்களுக்கு வழங்க ஊக்குவிப்பதாகும்.

மேலும் பேஸ்புக்கின் மற்றுமொரு ஸ்தாபகரான டஸ்டின் மொஸ்கோவிட்ஸும் இத்திட்டத்திற்கு இணங்கியுள்ளார்.

ஏற்கனவே இதற்கு பல செல்வந்தர்கள் இணங்கியுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் கீழே தருகிறோம்.


நாயின் சல்சா ஆட்டம்....ஆட்டம்....கொண்டாட்டம்....! (வீடியோ இணைப்பு)



மகிழ்ச்சியில் கைகால் புரியாமல் துள்ளிக்குதிப்பதை பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

ஏன் நடனம் கூட ஆடியுள்ளதை அறிவோம்.

சிலவேளைகளில் நாங்களே அவ்வாறு நடந்து கொண்டுமுள்ளோம்.

இதற்கு விலங்குகளும் விதிவிலக்கல்ல .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் எஜமானைக் கண்டதும் 

ஒட்டகத்திற்கும் அடி சறுக்கும்..! ( வீடியோ இணைப்பு)

யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி .யானைக்கு மட்டுமல்ல பாலைவனக் கப்பலென வர்ணிக்கப்படும் ஒட்டகத்திற்கும் அடிசறுக்குவதுண்டு.



அத்தகையதோர் சம்பவம் அண்மையில் அமெரிக்க தென் புளோரிடாவில் இடம்பெற்றது.

அந்த ஒட்டகத்தின் பெயர் லூலாபெல்.

தென்புளோரிடாவில் உள்ள தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்காக அழைத்துவரப்பட்ட லூலாபெல் அங்கு வந்திருந்த பார்வையாளர்களின் மீது விழுந்துள்ளது.

மனிதர்கள் விழுந்தாலே தாங்குவது கடினம் என்ற நிலையில் ஒட்டகம் விழுந்தால் கேட்கவா வேண்டும்? எனினும் எவரும் காயங்களின்றி தப்பித்தனர். ஆபத்து சுவாரஷ்யமாக முடிந்தது.

லூலாபெல் பார்வையாளர்கள் மீது விழுந்த காட்சியினை நீங்களும் பாருங்கள்.

இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் Cyber Crime

பேஸ்புக் சமூக வலைப்பின்னலானது உலகநாடுகளில் அடைந்துவரும் வளர்ச்சியைப்போல இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

'சந்திக்கு வந்தால் சுற்றத்தாரைச் சந்திக்கலாம்' எனக் கிராமத்து மொழிவழக்கில் சொல்வார்கள். இப்போது அந்தக்காலம் மாறி 'FB' இற்கு வந்தால் கூட்டத்தோடு குதூகலிக்கலாம்' என்றாகிவிட்டது.

ஒருபுறம் இணைய உலகம் நாளுக்கு நாள் புதிய மலர்ச்சியையும் பரிமாணத்தையும் கண்டுவரும் அதேவேளை, இதற்கு மாற்றாக ஏற்பட்டுவரும் எதிர்விளைவுகளையும் யாராலும் தடுக்க முடிவதில்லை.

ஆம்! பேஸ்புக்கானது பிரபலமடைந்துவரும் அதேநேரம் கடவுச்சொல்லை வேட்டையாடும் களமாகவும் மாறிவருகிறது என்கிறார்கள் இணையப் பயன்பாட்டாளர்கள்.

பல்வேறு பெயர்களில் அறிமுகமாகும் இணையத் திருடர்கள் புதிய கணக்குகளை உருவாக்கியும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் தனிப்பட்ட நபரின் இரகசியங்களை பெற்றுக்கொள்கிறார்கள். இந்நடவடிக்கை இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு இத்தகவலை உறுதி செய்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) கீழ் இயங்கும் இக்குழு இணையத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இணைத்தில் திருட்டுச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கினூடாக இவ்வாறு பணம் சம்பாதிப்பவர்கள் தொடர்பில் இக்குழுவுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரிக்குத் தெரிவிக்கிறார். 

உண்மைச் சம்பவம் 

இது இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவமொன்று, 

சுகத் என்ற இளைஞர் பேஸ்புக்கில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் அதனை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கையில் கவிந்த்ரா என்ற பெண் தன்னையும் நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ளுமாறு அழைப்புமடல் விடுத்துள்ளார். 

மற்றுமொரு இளம் பெண்ணின் தொடர்பு கிடைத்த மகிச்சியில் கவிந்த்ராவை இணைத்துக்கொண்ட சுகத் இணையத்தினூடாக தனது தொடர்பாடலை வளர்த்துக்கொண்டுள்ளார். 

சில நாட்களின் பின்னர் வீடியோ காட்சியினூடாக முகம்பார்த்துப் பேச வேண்டும் என்ற கவிந்த்ராவின் வேண்டுகோளை ஏற்ற சுகத் பேசுவதற்காகக் காத்திருந்த வேளை அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது. 

தன்னுடன் வீடியோ காட்சியினூடாகப் பேசவேண்டும் என்றால் இந்தத் தொடுப்பைப் (Link) பயன்படுத்துமாறு கேட்டுள்ளார் கவிந்த்ரா. அந்தத் தொடுப்பை சொடுக்கியவுடன் (Click) அதனூடாக வந்த இணையப்பக்கத்தில் சுகத்தின் மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்கப்பட்டுள்ளது.

ஆர்வ வெள்ளம் அறிவுக்கரையைத் தாண்டியதால் அவற்றை இணையப்பக்கத்தில் பதிவு செய்தார் சுகத். 

அதன்பின்னர் கவிந்த்ராவைக் காணவில்லை. சுகத்தின் பேஸ்புக் கணக்கிற்குள்ளும் நுழைய முடியவில்லை. 

சுகத்தின் நண்பர் ஒருவர் கூறியதன் பிரகாரம்இரண்டு நாட்களின் பின்னர் சுகத்தின் பேஸ்புக் சுவருக்கு (Wall) வந்த செய்தி இதுதான் " உங்கள் கடவுச்சொல் எங்களிடம் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் எங்களால் செய்ய முடியும். கடவுச்சொல் வேண்டுமானால் ஸ்கைப் (Skype) தொடர்பாடலில் நவீனுடன் தொடர்பினை ஏற்படுத்தி பணம் செலுத்துங்கள்". இந்தத் தகவலின் பின்னர் சுகத் பாதுகாப்புக்காக இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவைத் தொடர்புகொண்டுள்ளார். 

இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்களும் பணம் செலுத்தியவர்களும் இலங்கையில் ஏராளமானோர் இருக்கிறார்கள். 

சுகத்தைப் போன்றவர்கள் மட்டுமன்றி பேஸ்புக்கில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் ரொஷான் சந்திரகுப்தா. 

தன்னைத் திருமணம் முடிக்கத் தவறிய ஆண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இளம்பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ள விடயம், ஒரே பெயரில் இன்னுமொரு கணக்கினை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்களை கேளிக்கையாக்கிய சம்பவம், கடவுச்சொல்லைத் திருடி பேஸ்புக் புகைப்படத் தொகுப்பில் நீலப்படங்களை இணைத்துவிட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நாம் இங்கு உதாரணமாகக் கூறலாம். 

இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? 

1. அடையாளம் தெரியாத நபர்களின் வேண்டுகோள் மடலை ஏற்றுக்கொள்ளாதீர்கள் 

2. நீங்கள் அறிந்திராத நபர்களிடமிருந்துவரும் கவர்ச்சியான மின்னஞ்சல்களை சொடுக்கிப் பர்வையிடாதீர்கள். 

3. சமூக வலைப்பின்னல்களில் திடீரெனத் தோன்றும் தொடுப்புகளை அகற்றிவிடுங்கள். 

4. உங்களுக்கென உள்ள சொந்தத் தகவல்களை தரவேற்றம் செய்யாதீர்கள் 

இவை அடிப்படையான சில விடயங்களேயன்றி உங்கள் மின்னஞ்சல் கணக்காயினும் பேஸ்புக் அல்லது மாற்றுக் கணக்குகளாயினும் பொது இடங்களில் உபயோகப்படுத்துதலிலும் ஏனைய பாதுகாப்புகளிலும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். பேஸ்புக் கணக்குகளில் வேட்டையாடும் நபர்களைத் தவிர வலைப்பதிவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட இணையப் பாவனைப் பக்கங்களை முடக்குவதிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். 

நடைமுறை உலகில் இணையம் தொடர்பான எந்தவொரு தவறான செயற்பாடுகளையும் திருட்டுச் செயல்களையும் 'சைபர் க்ரைம்( Cyber Crime)' என அழைக்கிறார்கள்.

அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை உலகுக்கு எடுத்துக்காட்டிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தற்போதைய நடவடிக்கைகளை அடுத்து இச்சொல் இணையப் பாவனையாளர்களிடையே மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. 

ஆகையால் இணைய உலகில் வளர்ச்சியை நோக்கும் அதேவேளை மறுவிளைவுகளையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். புதிதாக முளைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதில் கவனம்கொள்ள வேண்டும். 

இலங்கையில் அவ்வாறானதொரு பிரச்சினைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேர்ந்தால் slcert@slcert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு தொடர்புகொண்டு உதவி கோர முடியும். இலங்கையைப் பொருத்தவரையில் கடவுச்சொல் திருட்டு மற்றும் ஏனைய முறைகேடான விடயங்கள் குறித்து அனைவருமே தெளிவாக அறிந்துகொள்ளவில்லை. 

நிகழ்கால உலகில் இளம்பராயத்தினர் இணைய உலகிற்குள் வெகுசீக்கரமாகவே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் இணையத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். 

ஆக, எது எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு எமது கரங்களிலேயே தங்கியுள்ளது. உலகமயமாக்கலிலும் தொடர்பாடலிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரியதொரு மாற்றத்தைக் கண்டுவரும் இணையத்தின் அபார வளர்ச்சியின் போக்கில் எமது பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுகொள்ள வேண்டும்.