Sunday, April 3, 2011

சாதிக்க நினைத்துவிட்டால்..! (காணொளி இணைப்பு)


  பொதுவாக பியானோ வாசிப்பதென்பது இலகுவான காரியமல்ல, சவால்மிக்கதாகும்.

அதற்காக பல நாள் பயிற்சி மற்றும் விடாமுயற்சி என்பன அவசியம்.

மேலும் கைகளின் 10 விரல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனினும் சீனப் பெண் ஒருவர் தனது வலது கையில் விரல்களே இல்லாத நிலையில் இடது கை விரல்களை மாத்திரமே வைத்து மிகச் சிறப்பாக பியானோவை வாசித்துக் காட்டுகிறார்.

 _

இருதயம் மூலம் ஐபொட்களை சார்ஜ் செய்யலாம்

வீட்டை விட்டு வெளியே சென்ற போது உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது? கவலைப்படவேண்டாம்.
உங்கள் இருதயமே சார்ஜ் செய்து விடும். உடல் இயக்கத்தை வைத்து பொருள்களை சார்ஜ் செய்யும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு குட்டி சிப்பை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இது உடல் அசைவு மூலம் செல்போன், ஐபொட் போன்ற சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் மொபைல் போனுக்கு ஜார்ஜ் ஏற்றப்பட்டால் பற்றரிகளே தேவைப்படாது.

இசையை கற்றுக் கொடுக்கும் இணையதளம்

இசையில் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களின் அடிப்படையை மற்றும் அதன் முழுமையை அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது.
இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் விலை மதிப்பில்லாத ஒன்று தான் இசை. இந்த இசையின் அடிப்படையை சிறிய அளவிளான விளையாட்டின் மூலம் சொல்ல ஒரு தளம் உள்ளது.
இந்தத் தளத்திற்கு சென்று நாம் Start Training என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Melody, Harmony, Rhythm , Sound போன்ற வகைகளில் நமக்கு எந்த வகையான இசையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமோ அதற்கான விளையாட்டை தேர்ந்தெடுத்து Play என்ற பொத்தானை சொடுக்கி விளையாடலாம்.
நாம் தேர்ந்தெடுத்த இசையின் படி நாம் விளையாடும் விளையாட்டு இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைகளில் வித்தியாசமான விளையாட்டாக இசையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணணியில் இதுபோன்ற கோளாருகள் அதிகமாக உண்டு.
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணணியில் இருந்து நீக்கி விடுவோம். கணணியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணணியை விட்டு நீங்காது.
மேலும் ஒரு சில கோப்புகள் நம்முடைய கணணியிலேயே தங்கி விடும். அந்த கோப்புகளால் நம்முடைய கணணியில் அடிக்கடி செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும்.
மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும். இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும். மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் செய்தி வருவதோடு கணணி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?

குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது.
இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது.
http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல் அந்த தளத்தின் முகவரி கொடுத்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும்.
அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில் அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் மென்பொருள் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும்.
மோசமான தளமாக இருந்தால் அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும்.

கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் ஆதாரப்பொருளாக பயன்படுத்தலாம்

ஆண்டுதோறும் பல லட்சம் டன் கோழி இறக்கைகள் எந்த வித பயன்பாடும் இல்லாமல் அழிக்கப்படுகின்றன.
குப்பையில் வீணாக போகும் கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் தயாரிப்பு பணியில் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ரசாயன சமூக கூட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் தயாரிப்பு பணிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த கோழி இறக்கைகளை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோலியத்தில் இருந்து பெறப்படும் உப பொருட்களை பிளாஸ்டிக் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம். கோழி இறக்கைகளை தொழிற்சாலைகளில் சுலபமாக பயன்படுத்துவது தொடர்பாக பெரும் அளவில் சோதனை செய்யப்பட வேண்டி உள்ளது.
கோழி இறக்கைகள், தலைமுடி மற்றும் விரல் நகங்கள் உறுதி மிக்க புரதத்தை கொண்டுள்ளது. இந்தப் புரதம் மூலம் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பில் எடைக்குறைப்பையும் பெட்ரோலிய கூட்டுப்பொருளை அதிகம் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியும்.
பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பில் கோழி இறக்கைகளை பயன்படுத்துவது தொடரபாக யு.எஸ் வேளாண் ஆணையகத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையை லின்கோல்ன் நெப்ரஸ்கா பல்கலைக்கழக விஞ்ஞானி யிகி யாங் சமர்ப்பித்துள்ளார்.
பிளாஸ்டிக் தயாரிப்பில் 50 சதவீத கூட்டுப்பொருளாக கோழி இறக்கைகள் அமையும் என அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய விண்மீன்கள்

இது வரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும் நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் 1963 ல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசர்கள் புதிரானவை. குவாசர் என்பது ஒரு கூட்டுச் சொல் ஆகும். குவாசர்கள் தோற்றத்தில் ஒரு விண்மீனைப் போன்றே காட்சியளிக்கின்றன. இந்த குவாசர்கள் பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இந்த குவாசர்கள் பல்வேறு அளவுகளில் மிகுதியாக ஒளியை உமிழ்கின்றன.
ஓர் ஒளித் தொலைநோக்கியைக் கொண்டு பார்த்தோமானால் குவாசர்கள் சாதாரண மங்கிய ஒரு விண்மீனைப் போன்றே காணப்படுகின்றன. ஆனால் வானொலித் தொலைநோக்கியைக் கொண்டு ஆராய்ந்தோமானால் குவாசர்கள் வானொலி அலை மூலங்களாகவும் உள்ளது தெரிய வருகின்றது.
அதாவது குவாசர்கள் வானொலி அலைகள் மற்றும் எக்ஸ் கதிர்களை ஒளியுடன் உமிழ்கின்றது. ஒரு குவாசரானது நமது அண்டத்தில் 100000 ல் ஒரு பகுதி அளவுடையது. ஆனால் அது உமிழும் ஒளியானது நமது அண்டத்தின் ஒளியைக் காட்டிலும் 100 முதல் 200 மடங்கு அதிகமாகும். இது வரை இது போன்று சுமார் 1500 குவாசர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குவாசர்களின் கண்டுபிடிப்பு மேலும் பல ஆவலைத் தூண்டும் கேள்விகளை அறிவியலாளர்களிடையே எழுப்பியுள்ளது. இதனால் ஆராய்ச்சி வேட்கையும் அதிகரித்துள்ளது. பிரபஞ்சம் உருவாகத் தொடங்கிய முதல் மூன்று வினாடிகளில் அணுத் துகள்கள் உருவாயின என்றால் அத்துடன் சேர்ந்து எதிர் அணுத் துகள்களும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அவை இதுவரை கண்டறியப்படவில்லை.
இதே போல் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் எதிர்ப் பொருட்கள் இருக்க வேண்டும். இது வரை அவையும் கண்டறியப்படவில்லை. கண்டறியப்படாத இவ்வெதிர் அணுக்கள் எதிர்ப் பொருட்கள் அவற்றின் நிறை, இயக்கம், ஆற்றல் எல்லாம் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் வரலாற்றையும் தெரிவிக்கக் கூடியனவாக இருக்கலாம். எனவே இப்புதிர்களைக் கண்டறியத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சீனாவில் இப்படியும் ஓர் கொடூரம்: (மனிதர்கள் பார்க்க தடை!)

வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.

பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை உங்கள் உணர்வுகளை அடக்கி வைத்துவிட்டு நீங்களும் பாருங்கள்…!!