Monday, October 4, 2010

சோதனைக் குழாய் குழந்தை: இங்கிலாந்து மருத்துவருக்கு நோபல் பரிசு!

சோதனைக் குழாய் குழந்தைக்கான மருத்துவ வழிமுறையை மேம்படுத்திய இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் எட்வர்ட்ஸின் பங்களிப்பால் கருத்தரிக்க இயலாத தம்பதியர் குழந்தை பெறும் வாய்ப்பு உருவானது.
சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை மூலம் உலகெங்கும் லட்சக்கணக்கான கருத்தரிக்க இயலாத தம்பதியர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் முறையில் பிறந்துள்ளதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன், இங்கிலாந்தில் பிறந்தது.
இன்றைய நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியர் சோதனைக் குழாய் முறையில் ஒன்று முதல் 5 நாட்களிலேயே கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகள் உள்ளன.
ஆனால் 1950 ஆம் ஆண்டுகளில், கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பெண்களின் கருப்பைக்குள் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதை பேட்ரிக் ஸ்டீப்டோ என்பவருடன் சேர்ந்து ராபர்ட் எட்வர்ட்ஸ் மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டார்டிக்காவில் கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ'

  கூகுளின் சேவைகளின் ஒன்றான கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' ( Google street view ) பல நாடுகளில் சர்ச்சைக்குள்ளானதும் , பலரால் வரவேற்கப்படுவதுமான ஒரு சேவையாகும். இது தற்போது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' என்பது உலக நகர வீதிகளின் அமைவிடங்களைப் புகைப்படங்களாகக் காண்பிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது 25 நாடுகளைக் கொண்டுள்ளது. 

மேற்படி சேவையானது உலகின் பெரும்பாலான முன்னணி மற்றும் பின்தங்கிய நகரங்களின் புகைப்படங்களைக் காண்பிக்கின்றது. இவற்றுள் நகர வீதிகள் , வீடுகள், வியாபார ஸ்தாபனங்களின் அமைவிடங்கள் போன்றவை அடங்குகின்றன. 

தற்போது இச்சேவையானது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சேவை உலகின் 7 கண்டங்களையும் உள்ளடக்குகின்றது.

தற்போதைக்கு சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுமெனவும் பிறகு விஸ்தரிக்கப்படுமெனவும் கூகுள் அறிவித்துள்ளது. _

எந்திரன் இதயத்திலிருந்து...!


இது எந்திரன் பீவர் காலம். உங்கள் இதயத்தில் யார் இடம்பிடித்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரு எந்திர இதயத்தில் முழு இத்தாலியும் இடம்பிடித்திருக்கிறது. நிரந்தரமாகப் இயங்கக்கூடிய முற்றிலும் செயற்கையாக வடிவைக்கப்பட்ட ஓர் இதயம், 15 வயதே ஆன ஒரு இத்தாலி சிறுவனுக்கு பொருத்தப்பட்ட சம்பவம், மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதுகாப்பு காரணங்களால், இச்சிறுவனின் பெயர் உட்பட மேலதிக விபரங்களை வெளியிட மருத்துவர்கள் விரும்பாத போதும், தொடர்ந்து 10 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் இத்தாலிய வைத்தியர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் மருத்துவ உலகில் நீண்டகாலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு ஆரோக்கியமான தகவல். சரி இது பற்றி விரிவான ஒரு பார்வை
அச்சிறுவனுக்கு என்னதான் பிரச்சினை? என்ன தீர்வு?
தேவையற்ற சதைக்கழிவுகளில் அவனது இதயத்தில் காணப்பட்டமையினால், உடனடி மாற்று இதயம் பொருத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால் வழமை போல இன்னொரு இயற்கை மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு அவன் தகுதியடையவில்லை என்பது தான், மருத்துவர்களின் கவலை.

மரணத்திற்கு அருகாமையிலேயே சென்று விட்டான் அவன். வேறு வழியில்லையெனும் போது, இத்தாலிய மருத்துவர்களின் யோசனையில் உதித்தது இச்செயற்கை இதயம்.
யார் சிகிச்சையை நடத்தினார்கள்? எங்கு நடந்தது?
டாக்டர் அண்டோனியோ தலைமை தாங்கி ரோமில் உள்ள பம்பினியோ கெஸு சிறுவர் மருத்துவமனையில் இவ் அறுவைச்சிகிச்சையை நடத்த முடிவு செய்தார்.
அறுவை சிகிச்சையின் முக்கிய படிநிலைகள் என்ன?
செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த இதயம் சுமார் 2.5 in நீளமுடையது. இருதயத்தின் இடது வெண்டிரிகிள் பகுதியில் உட்புறத்தில் பொருத்தும் சிகிச்சை முதலில் நடத்தப்பட்டது. இதிலிருந்து ரத்த ஓட்டம் செல்லும் படி மார்பு கூட்டிற்குள் இச்சாதனம் வைக்கப்பட்டது.

எனினும் இதன் தொழிற்பாட்டு மையம் தொண்டைக்குழாய்களில் பொருத்தப்பட்டது. அதன் துடிப்பு தொண்டையில் இருந்து நீர்சக்தியால் இயங்க வைக்கப்பட்டது.
அவனது இடது காதின் பின் வெளிப்புறத்தில் இதயத்தின் தொழிற்பாட்டிற்கான மின்சக்தி கலன் பொருத்தப்பட்டது. தொலைபேசியில் சக்தி சேமிப்பதை போன்றூ அவன் தூங்கும் போது தானகவே இக்கலன் சக்தியை சேமித்துக்கொள்ளும்.

டொச்சேன்ஸ், சிம்ட்ரோம் எனும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இத்தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதன் முறை. அவன் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ள போதும், அவனது உடல் நலம் தேறி வருவது குறிப்பிடத்தக்கது.
இச்சிகிச்சை பற்றி டாக்டர் அண்டோனியோ என்ன கூறினார்?
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்ததும், தாயின் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அண்டோனியோ,  அச்சிறுவன் காலையில்
பல் துலக்கும் போது அவனிடம் பேச்சுக்கொடுக்காதீர்கள் என சிரித்துக்கொண்டே கூறினர்.

சாவின் விளிம்புக்கு சென்றிருந்தாலும் இனி, மற்ற சிறுவர்களை போல அன்றாட தினசரி வேலைகளை அவனாலும் இனி செய்ய முடியும் என்ற அர்த்தத்திலும்,  தொண்டையில் தான் செயற்பாட்டு மையம் இருக்கிறதென்பதாலும், அவர் இப்படி கூறினார்.

ஒரு வயது வந்த இளைஞரை விட சிறுவனொருவனுக்கு இம்மாற்று இதயம் பொறுத்துவது என்பது தமக்கு நல்ல சவாலாக இருந்ததாக சக டாக்டர்கள் கூறினர்.
இம்மருத்துவ வெற்றியால் இனி கிடைக்கபோகும் நன்மைகள்?
இத்தொழில் நுட்பம் வெற்றி பெற்றுள்ளமையினால், இவனை போன்ற இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலகோடி சிறுவர்களின் வாழ்வுக்கு புத்துயிர் கொடுக்க ஒரு சாதகமான சூழல் அமைந்த சந்தோசத்தில் தனது இதயம் மிக வேகமாக துடிப்பதாக இன்னுமொரு முறை சிரித்தார் டாக்டர் அண்டோனியோ.
உண்மையில் இது தான் முதற்தடவையா?
ஏற்கனவே கனடா, கெண்டகி, நியூகாஸ்ட்டில் ஆகிய மருத்துவ மனைகளில் முற்றிலும் செயற்கையான மாற்று இதயம் பொருத்தப்பட்டுள்ள போதும், குறிப்பிட்ட காலத்திற்கு, அல்லது குறித்த நேரத்திற்கு இயங்க கூடியதாகவே அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
இவற்றிலிருந்து இந்த இத்தாலிய செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை தனித்து வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம், இது நிரந்தரமானது என்பது மட்டுமல்ல. அச்சிறுவன் 20,25 ஆண்டுகளுக்கு மற்றவர்களை போல மிக சாதாரணமாக எவ்வித பயமும் இல்லாமல் வாழலாம்
அக்டோபர் 2, இந்தியவை பெருமைப்படுத்த காந்தி பிறந்தார். இத்தாலியை பெருமைப்படுத்த நினைத்த அந்நாட்டு வைத்தியர்களின் முயற்சிக்காக இச்சிறுவன் மீண்டும் பிறந்திருக்கின்றான்.
மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்?
பொதுவாக இத்தாலியர்கள் வீண்பெருமைக்காரர்கள் என்றொரு உலகளாவிய கருத்துண்டு.
மூன்றரை மணி நேர மகிழ்ச்சிக்காக, 150-170 கோடி செலவில் ஒரு திரைப்படம் - அதன் கதாநாயகன் தனது சம்பளத்தை கூட இன்னமும் வாங்கவில்லையென்பதை தற்போதைய தமிழ்நாட்டு பெருமையாக கூறுவோமானால், ஒரு தாயின் கண்ணீர்க்கதறலுக்காக 22 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மாற்று செயற்கை இதயத்தை  அச்சிறுவனுக்கு உடனடியாக பொருத்த முன்வந்த டாக்டர் அண்டோனியோவை இத்தாலியர்கள் பெருமையாக கூறுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

உங்கள் வாழ்க்கை உங்கள் கைபேசியில்.‏


இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்என்று நம்புகிறேன்.


நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள்  உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர  நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம்.
இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

A great idea that will make a difference!

குறிப்பு:-
     உங்களுக்கு முடியாத போது உங்களுக்காக ICE பேசும்.

அக்கரை இக்கரை வாழ்க்கை‏


Join Only-for-tamil
ஊர்முழுக்க நடந்து
 
உறவுக்கார வாசல்தட்டி 
இரவல் பணம்வாங்கி 
கண்ணீர்த் துளிகளில் 
உறவுகள் வழியனுப்ப 
திரவியம் தேடி 
கடல்கடந்த பயணம் 
சுட்டெரிக்கும் கதிரவன் 
சுற்றிவரும் அனல்காத்து 
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு 
சாயங்காலம் கூடுதிரும்பும் 
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல 
ஒட்டகம் மேய்த்தும்  
ஆள்தெரியா உயரத்தில 
கட்டிடம் கட்டியும் 
ரோட்டோர குப்பைகளை 
பெருக்கி சுத்தம்செய்தும் 
குளிர்பெட்டி அறைக்குள்ள 
அசையாம படுத்தெழும்பி 
ராத்திரி பகல் 
ஓடுறது தெரியாம 
தாய்தந்த உசிரையும் 
நாடுதந்த அறிவையும் 
அடுத்தவனுக்கு அடகுவச்சு 
மாசப் பொறப்புல வாங்கிற 
சம்பள பணத்தை 
இரவலுக்கு தவணையும் 
வீட்டுச் செலவுக்கும் 
பிரித்து அனுப்பி மீதத்தை  
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி 
கிடைக்கிற விடுப்பில 
சிறைகளை உடைத்து 
தாய்நாட்டுப் பயணம் 
யார் இந்த மாமான்னு 
பெத்தபுள்ள கேட்கையில் 
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க 
விசேஷங்கள் கேட்டும் 
சொந்த மண்ணில் 
ஊரோடும் உறவோடும் 
நாட்களை எண்ணி 
உறவாடிக் கொண்டு 
மீண்டும் சிறைதேடி 
தொடரும் பயணமுடிவில் 
தேடியதையும் தொலைத்ததையும்
கூட்டிப் பார்க்கையில் 
பருவங்கள் உதிர்ந்தும் 
குருதிநாளங்கள் சுண்டியும் 
நோய்கள் சிறைப்பிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில்  
உணவாக மருந்துண்டு 
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை 
மீத வாழ்க்கை!

புதிய வைரஸ் எச்சரிக்கை‏


Join Only-for-tamil

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.  “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. 
உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல.   .scr.   என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. 
இது  CSRSS.EXE  என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு)  மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது.  
Join Only-for-tamil

ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது.   தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute  என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. 
இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. 
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  

இதிலிருந்து எப்படி தப்பிப்பது? 
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.  இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும்.
“Here you Have” அல்லது “Just For You”  என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.   இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. 
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.