Monday, October 4, 2010

சோதனைக் குழாய் குழந்தை: இங்கிலாந்து மருத்துவருக்கு நோபல் பரிசு!

சோதனைக் குழாய் குழந்தைக்கான மருத்துவ வழிமுறையை மேம்படுத்திய இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் எட்வர்ட்ஸின் பங்களிப்பால் கருத்தரிக்க இயலாத தம்பதியர் குழந்தை பெறும் வாய்ப்பு உருவானது.
சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை மூலம் உலகெங்கும் லட்சக்கணக்கான கருத்தரிக்க இயலாத தம்பதியர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் முறையில் பிறந்துள்ளதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன், இங்கிலாந்தில் பிறந்தது.
இன்றைய நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியர் சோதனைக் குழாய் முறையில் ஒன்று முதல் 5 நாட்களிலேயே கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகள் உள்ளன.
ஆனால் 1950 ஆம் ஆண்டுகளில், கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பெண்களின் கருப்பைக்குள் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதை பேட்ரிக் ஸ்டீப்டோ என்பவருடன் சேர்ந்து ராபர்ட் எட்வர்ட்ஸ் மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment