' டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரொம் ' என இத்தோல் நோய் அழைக்கப்படுகின்றது.
மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்திருக்கின்ற போது அதன் வெப்பம் நமது தோலை இலகுவாகத் தாக்குகின்றது.
இந்நிலையின் போது தோலின் நிறம் மாறுவதுடன் தோலின் தன்மையும் மாறுகின்றது.
சிலநேரம் தோலின் நிறம் நிரந்தரமாக மாறுவதுடன் அவ்விடம் கருமையாக மாறக்கூடுமெனவும் உச்ச நிலையில் தோல் புற்று நோயாக மாறக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நோய் அறிகுறியானது தற்போது பலரிடையே உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
கணினி தயாரிப்பு நிறுவனங்களான அப்பிள், டெல், எச்.பி. ஆகியன தங்கள் பாவனையாளர் அறிவுறுத்தல் அட்டைகளில் கணினியை நேரடியாக கால்களில் வைத்து உபயோகிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னர் இந்நோய் அறிகுறிகள் பேக்கரியில் வேலை செய்பவர்கள், அதி வெப்பமான பிரதேசத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே தொற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. _
No comments:
Post a Comment