Monday, September 27, 2010

கேரளாவில் பிரபலநடன கலைஞர் ஹேமலதா புதிய கின்னஸ் சாதனை!


கேரளாவில் பிரபலநடன கலைஞர் ஹேமலதா தொடர்ந்து 115 மணி நேரம் நடனம் ஆடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் பிரபல மோகினி ஆட்ட கலைஞர் ஆவார். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் பரத நாட்டிய கலையில் பட்டம் பெற்ற இவர், திருச்சூரில் தொடர்ந்து 115 மணி நேரம் ஆடி இச்சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் 108 மணி நேரம் ஆடி சாதனை புரிந்திருந்தார். அவரது சாதனையை ஹேமலதா முறியடித்துள்ளார். எனினும் இந்த சாதனையை நிகழ்த்திய பின்னர் ஹேமலதா மிகவும் சோர்வடைந்தமையினால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கேரள மாநிலம் கலமண்டலம் என்ற ஊரை சேர்ந்தவராவார்.

மரணக் குழியிலிருந்து வாழ்தலுக்கான போராட்டம் - புதிய முயற்சி!


சிலியில் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்ட நிலக்கீழ் சுரங்கத்தொழிலாளர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த இரு மாதகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்கும்' சவாலான பணியின் அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
நிலத்தின் கீழ் சுமார் 700 மீற்றர் ஆழத்தில் 33 சுரங்கத்தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். சிறிய குழாய் ஒன்றின் மூலம் அவர்களுக்கு தேவையான, உணவு தகவல் பரிமாற்றம் மட்டும் இடம்பெற்று வருகின்றன. அவர்களை பத்திரமாக வெளியில் கொண்டு வர மூன்று தொடக்கம் நான்கு மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மனிதன் ஒருவன் உள்நுழையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு புதிய குழாய் ஒன்றை நிலத்தின் கீழ் இறக்கும் முயற்சியில் சிலி அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக மூன்று சிறப்பு குழாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த வாரமளவில் நிலத்தின் கீழ் இறக்கப்படவுள்ளன. இக்குழாய்களை சுரங்கத்தொழிலாளிகள் அகப்பட்டுள்ள இடம் வரை கொண்டு செல்வதற்கு ஏற்ப நிலத்தில் துளையிடும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. இப்புதிய நடவடிக்கைகளை, சிலியின் நிலச்சுரங்க அமைச்சர் லௌரென்ஸ் கொல்போர்ன் நேரில் சென்று பார்வையிட்டார்.
நிலத்தின் கீழ் சிறைப்பட்டிருக்கும் அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்நிலையையும், எடுக்கப்படும் புதிய முயற்சினையும்  விளக்கும் படம் கீழே:

ஒரு பெண்ணுக்கு ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது

'குடும்பம் ஒரு கோயில்' என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெல்ல மெல்ல உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?!  "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"
ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?
இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"
குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?
"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.
ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.
அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.
வாழ்க்கை இனிக்க சில வழிகள்...
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!
நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.
கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.
நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்!

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண், யெ ஜோ-லிங் (23). இவர் உலகம் முழுவதும் அன்பை பரவ செய்ய நூதனமான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
அதாவது மற்றவர்களை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார். 3 மாதத்தில், 10 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில்தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் ஈடுபடுத்தி வருகிறார்.
தைபேயில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று இந்த நூதன பிரசாரத்தை நடத்தினார். அப்போது, ஒரு நாளில் மட்டும் 700 பேரை கட்டித் தழுவினார்.
இந்த பிரசாரத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருந்தும் பலர் வெட்கப்பட்டு ஓட்டம் பிடித்தனர். தைவானை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட பலர் சிரித்தப்படி தங்களின் “கட்டிப்பிடி" அன்பை ஏற்றுக்கொண்டதாக யெ ஜோ-லிங் தெரிவித்துள்ளார்.
யெ ஜோ-லிங் தைபே அருகேயுள்ள யிங்கோ நகரில் உள்ள செராமிக்ஸ் தொழிற் சாலையில் தொழிலாளியாக உள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கினார். இது வரை 7 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நூதன பிரசாரம் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீடோனியம் ஜுயோன் மான் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது அது பல நாடுகளில் பரவியுள்ளது.

1,768 அடி கோபுரத்தில் ஏறும் ஊழியர்கள் : மயிர்க்கூச்செறியும் காணொளி (காணொளி இணைப்பு)

ஒளிபரப்புக் கோபுரமொன்றின் திருத்தப் பணிகளுக்காக அதன் மீது ஏறும் ஊழியர்கள் இருவரின் மயிர்க்கூச்செறியும் காணொளிக் காட்சியானது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இக்காணொளியானது சுமார் 6 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது.

ஊழியர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா ஒன்றின் மூலமே இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,768 அடி உயரமான இக்கோபுரமானது பிரான்ஸிலுள்ள ஈபிள் டவர் (1,063 அடி), அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடம்( 1,453 அடி ) மற்றும் அமெரிக்காவின் வில்லிஸ் டவர் (1730 அடி) ஆகியவற்றை விட உயரமானதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தனியாக அல்ல, கூடவே சுமார் 13.6 கிலோகிராம் நிறையுடைய ஆயுதங்கள் உள்ளடங்கிய பெட்டியொன்றையும் இவர்கள் சுமந்து செல்லவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி காணொளி குறிப்பிட்ட ஊழியர்கள் கடமைபுரியும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இது போன்ற 2 காணொளிகளை அந்நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்

  பிரபல தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது 12 ஆவது வருட நிறைவை இன்று கொண்டாடுகின்றது.

கூகுள் சிறப்பு நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் தனது லோகோவில் மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இதனை நினைவுபடுத்தும் வகையில் கூகுள் லோகோவுக்குப் பதிலாக விசேட சித்திரமொன்றினை வெளியிட்டுள்ளது. கூகுளின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் சித்திரமே அதுவாகும். 


மேற்படி சித்திரம் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான வெய்ன் தீபாவுட் என்ற ஓவியருடையது. 

கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டது. இது 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தனியார் ஸ்தாபனமாக்கப்பட்டது. 

கூகுள் முன்னர் தனது பிறந்த தினத்தை செப்டம்பர் 7 ஆம் திகதியே கொண்டடி வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி கூகுள் உலகின் முதல் தர தேடல் பொறியாக விளங்குகின்றது.

கூகுள் தேடல் பொறி சேவையை மட்டுமன்றி ஜீமெயில், மெப்ஸ், புளக், ட்ரான்ஸ்லேடர், யூடியூப் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது _

இரவு நேரக் கூத்தில் மது, மாதுவுடன் சிங்கள பிரதிநிதிகள் நியூயோர்க்கில் - லங்கா நியூஸ்வெப்

ஐ.நா.சபையின் 65வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஜனாதிபதியுடன் நியூயோர்க் சென்ற 130 பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள், இரவு நேரங்களில் களியாட்டு விடுதிகளுக்குச் சென்று மது போதையில் திளைப்பதாக தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு நாமல் ராஜபக்ச சென்ற போதிலும் அவர் மதுபானம் அருந்துவதில்லை என தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன், பகலில் பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்கு செல்வதாகவும், இரவு நேரங்களிலேயே விடுதிகளுக்கு செல்வதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட இரகசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவே அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரியவருகிறது.


ஹிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் அம்பலம்! (பட இணைப்பு) _

  ஹிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அடோல்ஃப் ஹிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது. 

எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. 

இப்புகைப்படங்கள் 1936 முதல் 1945 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இப் புகைப்படங்கள் ஹிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. 

இப்புகைப்படங்கள் ஹியுகோ ஜெகர் என்பவரால் பிடிக்கப்பட்டவை.இவர் மட்டுமே ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கப்பட்டவர். மேலும் இவர் மட்டுமே அக்காலப்பகுதியில் வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் படப்பிடிப்பாளராக இருந்தவர். 

மேற்படிப் புகைப்படங்களை வங்கியொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவர், 1965 ஆம் ஆண்டு அவற்றை 'லைப்' சஞ்சிகைக்கு விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது. 





___ 

ரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் தீவிரவாதிகள் - ஸ்டெகனோக்ராபி ஒர் அறிமுகம் - 1



சராசரியாக ஒரு நாளில் நாம் வலையில் உலாவும் போது எண்ணிலடங்காப் புகைப்படங்களைக் காண்கிறோம். நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள், வால்பேப்பர்கள், ஓவியங்கள், செய்திப்புகைப்படங்கள் இப்படி எத்தனையோ. அவற்றுள் எதேனும் ஒரு படம் தன்னுள் "நவம்பர் 26, மும்பை, தாக்கு" என்பது போன்ற ரகசியச் செய்தியை மறைத்து வைத்திருக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஸ்டெகனோக்ராபி பற்றித் தெரிந்திருந்தால் உங்களுக்கு இது சாத்தியமே என்று புரியும்.

ஸ்டெகனோக்ராபின்னா என்னம்மா?? ஹமாமா?? இல்லை. ஒரு தகவலுக்குள் இன்னொரு தகவலை மறைத்து வைக்கும் கலைக்குப் பெயர் தான் ஸ்டெக்னோக்ராபி. சுருக்கமாகச் சொன்னால் எழுத்துக்களை புகைப்படத்திலோ, ஒலி-ஒளி கோப்புகளிலோ மறைத்து வைக்கும் முறை. அனேகம் பேருக்கு 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி எதற்கு காஷ்மீர் செல்வார் என்று தெரிந்திருக்கும். தீவரவாதிகளின் சங்கேதக் குறியீட்டுத் தகவல் (encrypted message) ஒன்றிலிருந்து தகவலைப் பிரித்தறிந்து சொல்வதற்காகச் செல்வார். இப்படி நம்ம் மணிரத்னம் படம் எடுக்குற அளவுக்கு அந்த முறை ஊருக்கு அம்பலமான, ஹைதர் காலத்துத் தொழில்நுட்பம். சம்பந்தமே இல்லாமல் இருவர் 'இன்னைக்கு அமாவாசை', 'எனக்கு நிலா தெரியுது' அப்படின்னு பேசுவதைக் கேட்டால் சின்னப்பிள்ளை கூட் ஏதோ வில்லங்கமான சமாச்சாரம் நடக்கிறது என்பதை ஊகித்துவிடும். திருடன் போலீஸ் விளையாட்டில் எப்போதுமே முன்னோக்கி சிந்திப்பது திருடன் தானே, அப்படி அவர்கள் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்த முறை தான் ஸ்டெகனோக்ராபி.



ஸ்டெகனோக்ராபி என்பது ஆதிகாலந் தொட்டே இருந்தி வந்திருக்கிறது. ஐரோப்பிய மன்னன் ஒருவன் மிக நம்பிக்கைக்குரிய தன் அடிமைக்கு மொட்டை அடித்து அதில் ரகசியத்தகவலை பச்சை குத்தி, முடி வளரும் வரைக் காத்திருந்து பின் தகவல் சேர வேண்டிய இடத்திற்கு அவனை அனுப்பியது தான் கிட்டத்தட்ட முதல் நிலை ஸ்டெகனோக்ராபி. அப்புறம் அவனுக்கு மறுபடி மொட்டை அடித்துத் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இதில் கால விரயம் அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு அதைவிட அதிகம். பின்னாளில் ஒவ்வொரு படியாக முன்னேறி புகைப்படங்களில் மைக்ரோ அளவில் புள்ளிகள் வைத்து இரண்டாம் உலகப் போரின் போது உளவாளிகளால் ரகசியத்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. காலம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு பயணித்த போது கணினியும், இணையமும் வந்தது. ஸ்டெகனோக்ராபியும் வளர்ந்தது.

இணையத்தில் உலாவும் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள் அனைத்திலும் ரகசியத் தகவல்கள் மறைத்து அனுப்பி வைக்க ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கணக்கில்லாமல் கிடைக்கின்றன. இருந்தாலும் புகைப்படங்களே அதிகமாக உபயோகப்படுத்தப் படுகின்றன, காரணம் புகைப்படக் கோப்புகள் அளவில் சிறிது, வலையேற்றம்/தரவிறக்கம் எளிது. மேலும் புகைப்படங்களின் எண்ணிக்கை இணையத்தில் ஒலி-ஒளி கோப்புகளை விட அநியாயத்துக்கு அதிகம். எவ்வளவோ நுணுக்கமான சங்கேதத் தகவல்களையெல்லாம் எல்லாம் கண்டுபிடித்து விடுகிறார்கள், இதைக் கண்டுபிடிக்க முடியாதா? ஸ்டெகனோக்ராபி அப்ப்டி என்ன உசத்தி?. இதன் சூட்சுமம் இவர்கள் உபயோகப்படுத்தும் சங்கேத மொழிக்கான தொழில்நுட்பத்தில் (encrypting algorithm) இல்லை. உபயோகப்படுத்தும் களத்தில் தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தை எடுத்து இதில் ஒரு தகவல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால் நிபுணர்கள் நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்து விட்டு காபி சாப்பிடச் சென்று விடுவார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'ன்ற மாதிரி இத்தனை கோடி இணையத்தளங்களில் எத்தனை கோடிப் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள். இவற்றில் எதை விடுவது, எதைத் தொடுவது என்று யோசிக்கும் அந்த கணத்தில் தான் ரகசியங்கள் பத்திரமாகப் பயணமாகிக் கொண்டு இருக்கின்றன.



இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்முறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். முதலில் ஊடகக் கோப்புகள் எனப்படும் புகைப்படங்கள்,ஒலி-ஒளிக் கோப்புகள் வெவ்வேறு முறையில் கட்டமைக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு புகைப்படங்கள் BMP,JPEG போன்ற முறைகளிலும், ஒலி-ஒளிக் கோப்புகள் WAV,MP3, mpeg,avi இப்படி பல வகைகளில் வெவ்வேறு வடிவமைப்பில் சேமிக்கப்படிகின்றது. முதலில் எந்த வகை கோப்புகளை உபயோகிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்ய வேண்டும், பின் அந்த வகைக் கோப்புகளின் உள் கட்டமைப்பைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு விளக்கத்துக்கு BMP கோப்புகளை எடுத்துக் கொள்வோம். BMP கோப்புகள் File header, Bitmap Information, color palette மற்றும் pixel data போன்ற பகுதிகளை உள்ளடக்கி இருக்கும். இதனை ஒவ்வொரு பைட் (byte) ஆக ஒரு நிரல் கொண்டு வாசித்துக் கோப்பின் தன்மைகள் குறித்து அறிந்து கொண்டு, பின் pixel data பகுதியில் ஒவ்வொரு pixel இன் வண்ண மூலங்கள் சிவப்பு, பச்சை, ஊதா நிறக்கூட்டில் எண்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த எண்களைத் தான் ரகசியத் தகவல்களின் எழுத்துக்களுக்கு ஏற்ப மாற்றப் போகிறோம்.

தொடர்ந்து பல pixelகளை மாற்றினால், இறுதியில் புகைப்படத்தில் அந்த இடம் மட்டும் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து சந்தேகம் வரலாம் என்பதால் ஆங்காங்கே பரவலாக எழுத்துக்கள் விதைக்கப்படும். ஆகையால் இறுதியில் மொத்தமாக ரகசியச் செய்தி தாங்கியிருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது கண்களுக்கு ஆங்காங்கே மாறியிருக்கும் pixel வண்ணங்கள் சட்டென புலப்படாது.

ஓரளவுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்பொழுது படத்திலிருந்து திருப்பி செய்தியை மீட்டெடுக்க எந்தெந்த pixelகளில் நீங்கள் எழுத்துக்களை விதைத்து இருக்கிறீர்கள் என்பதை அந்த மென்பொருளில் இருக்கும் நிரல் தீர்மானம் செய்யும். உதாரணத்திற்கு நீங்கள் எந்த செய்தி அனுப்பினாலும், மென்பொருள் புகைப்படத்தில் முதல் pixelலில் ஒரு எண்ணைப் பதிவு செய்யும், 16 என்று வைத்துக் கொள்வோம். இதில் 16 என்பது ஓவ்வொரு 16வது pixelல்லிலும் ஒரு எழுத்து விதைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். உங்களிடம் இருக்கும் அதே மென்பொருள் செய்தி சேரும் இடத்திலும் இருக்க வேண்டும். அந்த மென்பொருள் மூலம் படத்தை திறக்கும் போது ஒவ்வொரு 16வது pixelலில் இருக்கு எழுத்தையும் பிரித்தெடுத்து இணைத்து செய்தியாக வழங்கி விடும்.

மேற்கூறிய முறை ஒரு உதாரணம் மட்டுமே. இந்த எழுத்து விதைக்கும் விதம் (algorithm) ஒவ்வொரு மென்பொருளுக்கும் மாறுபடும். கொஞ்சம் நிரல் எழுதத் தெரிந்தால் நாமே தேவைக்கேற்ப மென்பொருள் தயார் செய்து கொள்ளக் கூட முடியும் :D. இருந்தாலும் இணையத்தில் ஏகப்பட்ட ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கிடைக்கின்றன.


பெரும்பாலும் இது தீவிரவாதச் செயல்களுக்கும், இராணுவ தொடர்புகளுக்கும் பயன்படுத்தப் படுவதாக ஊடகங்களில் பலமுறை சொல்லப்பட்டு வந்தாலும், அல்-குவைதாவின் விருப்ப முறை தகவல் தொடர்பு இது தான் என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த பிறகு தெரிவித்த போது ஸ்டெக்னோக்ராபி கூடுதல் கவனம் பெற்றது. நாம் கூட நண்பிகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ புகைப்படத்தின் மூலம் ரக்சியமாய்ப் பேசலாம். பின்னாளில் அப்படங்கள் வேறு யார் பார்வைக்குச் சென்றாலும் அவர்கள் மறைந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வது மிக அரிது ;). அவ்வாறு இணையத்தில் கிடைக்கும் மென்பொருள் ஒன்றின் மூலம் மேலே இருக்கும் நமீதாவின் படத்தைப் பயன்படுத்தி எப்படி ரகசிய தகவலைப் பறிமாறிக் கொள்ளலாம் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

இணையம் இனிக்கவும், கண்கள் பனிக்கவும் சில ஆலோசனைகள்


முதலில் இது வாத்தியார்த்தனமான பதிவல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே. இணையத்தில் சமையல், கல்(ல)வி, தொழில்நுட்பம், இலக்கியம் எனச் சகலத்தையும் பற்றியும் தெரிந்து கொண்டு இன்புறுவது எவ்வள்வு இனிமையோ, அவ்வளவுக்கு அதனை ஒரு ஊடக்கருவியாக மட்டுமே பயன்படுத்துதலின் மூலம் நிஜ வாழ்க்கையில் எந்தவித துன்பங்களும், அசெளகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை என்ற கருத்துப் பொங்கலின் வெளிப்பாடே இப்பதிவு.


1. அலுவலகம்,இல்லம்,ஓசிக்கணினி,பக்கத்து வீடு, பேருந்து-ரயில்-விமான நிலையங்கள், இணைய மையங்கள் (netcafe) என்று எங்கு உங்கள் இணையத் தாகத்தினை சாந்தி செய்து கொண்டாலும், முதலில் நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி பாதுகாப்பானதா என்று பரிசோதித்துப் பின் செயலில் இறங்கவும். keyloggers, spyware போன்ற அன்பர்கள் உங்களுக்காகக் காத்திருக்கலாம், கவனம். மடிக்கணினி வைத்துக் கொண்டு பொது இடங்களில் இணையத்தைப் பாவிப்பவர்கள் முதுக்குப் பின் யாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் :D. பெரும்பாலும் பொது இடங்களில் மிக அவசிய, அவசரத் தேவையன்றி, இணையத்தைத் தவிர்ப்பது சிறப்பு. அவ்வாறு தவிர்க்கவியலாத சூழ்நிலையில், உங்கள் வீட்டுக்குச் சென்றடைந்ததும், பயன்படுத்திய கடவுச்சொற்களை மாற்றுவது நன்று.


keyloggers என்பது விசைப்பலகையில் தட்டச்சப்படும் அத்தனையையும் பதிவு செய்யும் அதிஅற்புதப் பயனுக்காகவே படைக்கப் பட்ட ஒரு மென்பொருளென்பதும், spyware உங்கள் இணைய நடவடிக்கைகளை இம்மி பிசகாமல் தங்கள் எசமானர்களுக்கு அனுப்பி வைக்கும் கடமையேக் கண்ணாகக் கொண்ட மென்பொருளென்பதும் உபரித்தகவல்.


2. எந்த இடத்தில் சுட்டிகளைக் கண்டாலும், அடுத்த நொடியே தன்னிலை இழந்து, படக்கென்று க்ளிக்கி விடும் வியாதி இருக்கும் அன்பர்கள், பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டுப் பார்வையிடும் பக்கங்களை எக்காரணம் கொண்டும் வலைப்பக்கங்களிலோ அல்லது மின்னஞ்சல்களிலோ இருக்கும் சுட்டிகள் மூலம் திறக்காமல் இருப்பது பாதுகாப்புக்கு மிக முக்கியம். அப்படி முடியாத அளவுக்கு வியாதி அதிகமாயிருந்தால் கைகளைக் கட்டிக் கொண்டு வலைப்பக்கங்களையோ, மின்னஞ்சல்களைப் படிக்கப் பழகலாம் (பார்க்க படம்:D).


3. டிஜிட்டல் புகைப்படக்கருவிகளும், புகைப்படக்கருவி வசதி கொண்ட செல்பேசிகளும் பெருத்துப் போன இக்காலகட்டத்தில் புகைப்படங்களை கணினியில் சேமிப்பதோ, இணையத்தில் பகிர்வதோ எல்லாருக்குமே மிகமிக எளிதாகிவிட்டது. எளிதாகிவிட்ட ஒரே காரணத்தினால் புகைப்படங்களைக் கண்டமேனிக்குப் பகிர்ந்து கொள்ளும் முன் புகைப்படக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் உளவுத்தகவல்களை நீக்குவது பற்றி அறிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கவும். மிகமிக முக்கியமானத் தவிர்க்க முடியாதத் தேவைகளின்றி உங்கள் முகத்தினையோ அல்லது குடும்பத்தினரின் முகத்தினையோ இணையத்தில் காட்டுவது விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பிருப்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக சுதந்திரமாக மாற்றுக் கருத்துக்களைக் குமுறும் பலவகை இசங்களில் ஏதெனும் ஒன்றிற்கான, இணைய உலகின் ஒரே ஒப்பற்றப் பிரதிநிதிகளுக்கு இது மிக முக்கியம், இல்லையேல் சாலையில் தனியாக நடந்து செல்லும் போது கலைஞர் காப்பீட்டு அட்டையை மறக்காமல் சட்டைப்பையில் வைத்துச் செல்லவும். (படிக்க: இணையத்தில் புகைப்படங்கள் )

4. உங்கள் கணினியை, புகைப்படக் கருவிகளை, கோப்புகளை சேமிக்கும் உபகரணங்களை (pen drives) மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டோ அல்லது பிழைநீக்கும் நபர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டோ கொடுக்க நேர்ந்தால் காஞ்சிபுரம் தேவநாதனை ஒருமுறை கண்மூடித் தியானித்துக் கொள்ளவும். அழிக்கப்பட்ட, அழிக்கப்படாத அத்தனைக் கோப்புகளும் சுருட்டப்படும், கவனம். கடந்த காலத்தில் அப்படி பகிரக்கூடாதக் கோப்புகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்திருந்தால், தினமும் இரவு தூங்கச் செல்லும் முன், சாப்பாட்டுக்குப் பின், ஒரு முறை யூ-டியூப் தளத்தினையோ அல்லது கூகுள் படங்களையோ அலசி, உறுதிபடுத்திக் கொண்டு தூங்கவும் (படிக்க: மெமரி டிஸ்க் அபாயங்கள் ).

5. பிறந்தநாள் தேதி, தாய் தந்தையர் பெயர்கள். சொந்த ஊர், முகவரி போன்ற தகவல்கள் ஒவ்வொன்றும் வலைத்தளங்களில் உங்கள் பயனாளர் கணக்கை பாதுகாக்கும் கதவுகளின் சாவிகள். சாவிகள் பத்திரம். பலர் படிக்கும் வண்ணம் பதிவுகளிலோ, வலைத்தளங்களிலோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோ, அல்லது இன்று எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன..இன்றே கடைசியென்று கூவுவதையோ தவிர்ப்பது நல்லது.


6. வலைப்பதிவுகளில், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடப்பவைகள் குறித்துப் பகிரும் போது புனைவுகள் சேர்த்துப் பதியுங்கள்.

"பஸ் ஸ்டாண்ட்ல போயி இறங்கினதும், காந்தி நகர் எங்கேருக்குன்னு கேட்டீங்கன்னா, யார் வேணா சொல்வாங்க. நடக்கிற தூரந்தான். காந்தி நகர் மூணாவது தெருவுல ரைட் சைடு நாலாவது வீடு. மஞ்சக்கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும். பெரிய கதவுல ABC ILLAM அப்படின்னு போட்ருக்கும்",

"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்",

"மேலே போட்டோல இருக்குறது தான்எங்க பாப்பா, அவ ரொம்ப சுட்டி, படிப்பில் கெட்டி, abc பள்ளிக்கூடத்தில தான் படிக்கிறா. தனியாவே/ஆட்டோல/பஸ்ல போயிட்டு வந்துருவா. அவங்க க்ளாஸ் டீச்சர் மைதிலி. ரொம்ப நல்லவங்க. அவங்க உதட்டுக்கு மேல மச்சம் சிம்ரன் மாதிரி மச்சம் இருக்கும்"

போன்ற பகிர்வுகள், பகிர்வுகளல்ல, உட்காரும் இடத்தில் நமக்கு நாமே விதைக்கு கண்ணி வெடிகள். உங்களுக்கு விதைத்துக் கொண்டாலும் அடுத்தவர்களுக்கு விதைக்காமல் பார்த்துக் கொள்ளவும் :D. அவசியமென்றால் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாமே தவிர பொதுத்தளங்களில் அல்ல.

7. இணையத்தின் மூலம் அறிமுகமாகும் நண்பர்களிடம் போதிய கால அவகாசமின்றி உடனேயே உங்கள் வீட்டு நாய்க்குட்டி குட்டிப் போட்ட வரைக்கும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும். முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.


8. அனுதினமும் படைப்புகளைப் படையலாக்கிக் கொண்டிருக்கும் பதிவுலகில், பாராட்டு என்பது எல்லாருக்குமே க்ளென்பெடிச் (18yrs) போன்றது, அதாவது உற்சாகமளிக்கும், பட்டாம்பூச்சி பறக்கும் விஷயம் தான். அதனைப் பின்னூட்டங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்வது நன்று. வலைப்பதிவராக இருப்பின் உங்கள் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்காமல், வலைப்பதிவுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சலைப் பாவித்து வருவது பலவகையிலும் பிரச்சினைகளைத் தவிர்க்கும். அதிகபட்சம் உங்கள் வலைப்பதிவிற்கான மின்னஞ்சலை பொதுவில் பகிர்ந்து கொள்ளுங்கள் (மின்னஞ்சல் சூறையாடப்பட்டால் சுடுதண்ணி பொறுப்பல்ல). உங்கள் தொலைபேசி/செல்பேசி எண்களைப் வலைப்பக்கத்தில் "வாங்க பேசலாம்" என்று பெரிதாகப் போட்டுவிட்டுப் புன்னகைக்கும் உங்களைப்பார்த்து, அடுத்த வாரமே "எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். நான் ரொம்ப பிசி. முக்கியமான நேரத்தில, பதிவு பத்திப் போன் பண்ணித் தொல்லை பண்றானுங்க, ராஸ்கல்ஸ்" என்று பதிவு போடும்போது படிப்பவர்கள் புன்னகைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.


இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்ற நோக்கத்திலேயே இப்பகிர்வு, மற்றபடி இணையத்தில் எதை எழுதுவது, பகிர்வது என்பது அவரவர் சுதந்திரம். ஒருவேளை சுதந்திரம் சட்டத்தை மீறினாலோ. அல்லது சுதந்திரத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டாலோ சட்டத்தைத் தயங்காமல் அணுகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்லி இப்பதிவு நிறைவடைகிறது.



பி.கு: படிக்கும் அன்பர்கள் தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இளமைக்கும் அழகுக்கும் தேவையான உணவுகள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடிம்.
சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாபிட்டு குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது.
நீங்களும் அழகான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா?
பொறுமையாக தொடர்ந்து படியுங்கள், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அழகுக்கும் இளமைக்கும் உதவும் என்கிறது ஆய்வுகள்.
இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.
வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களை குறிக்கும். இவர்கள் உடலில் வேகமான வளர்ச்சி 91/2 வயதில் தொடங்கி 131/2 ஆடுகள் வரை தொடர்கிறது.
பொதுவாக ஒரு பெண் சராசரியாக 121/2 வயதில் பூப்பெய்துகிறாள். அவளது உடலில் பெரிய அளவிலான வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது.
இவர்களுக்கான சத்தான உணவு பரிந்துரைகளின் பட்டியல் 10 முதல் 12 வயது, 13-15 வயது, 16-18 வயது என்ற 3 பிரிவுகளாக
உள்ளது.வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தையும், பொதுவான எடையில் 53 சதவீதத்தைம், உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள்.
அந்த வளர் இளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் எடை இரு மடங்காக உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும், கொழுபு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாயப்பு உண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிப்பு நேரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. கருமுட்டை உற்பத்தி சுழற்சியைம், கால்சியம் அளவை 300 கிராம் முதல் 750 கிராம் வரையிலும் பராமரிப்பதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.
எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம்.
இன்றைய வளர் இளம் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது இருக்கிறது.
அதாவது சாப்பிடுவதற்கு எதைத் தேர்வு செய்வது என்பதில் பெரிய அளவில் கட்டுப்பாடு வைத்துக்கொள்வது தங்கள் வயதை ஒத்தவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களால் தீவிரமாக ஈர்க்கப்படுதல் மது குடிக்க, புகை பிடிக்க மற்றும் மூளையை பாதிக்கும் வகையில் நரம்பு மண்டலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மருந்துகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகுதல் ஸ்லிம் ஆக இருபதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தி விடுதல். உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருத்தல் பெற்றோரின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்ட உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கருதுதல்.
இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன.
சாப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்கபடும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந்த பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன.
அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து.
அதற்கு என்ன செய்யலாம்? அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். அதை வராமலும் தடுக்க வேண்டும். உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். சத்து குறைவான உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும், சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனோரீதியாக கண்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.
மேலும், உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி, அதை பின்பற்ற வேடும்.
அதற்காக, பலவகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது குறைவான கொழுபுச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்வு செய்வது காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது கணிசமான அளவுக்கு சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
வளர் இளம் பருவ பெண்கள்
இனி என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி பார்போம்,
10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெகள் தினமும் 30 முதல் 70 கிராம் வரைம், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரைம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை - இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும்.
டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
1. பச்சை இலை காய்கறிகள்.
2. வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
3. கிழங்குகள் - தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.
4. குருப் -1 காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
5. குருப் - 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளைம் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குருப் - 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரைம், கு 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரைம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகளை போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றைம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.

பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’

சம்பவம் ஒன்று: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகிக்கும் பெண் அவர். வயது 42. ஆறு மாதங்களாக அவரை அளவுக்கு மீறிய சோர்வு வாட்டியது.
தூக்கம் வரவில்லை. கோபமும், எரிச்சலும் எக்கச்சக்கமாக வந்தது. இனம் புரியாத கவலை வேறு. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அலுவல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார். தனக்கு ஏன் இந்த நிலை என்று புரியாமல் தவித்த அவரை, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். பலனில்லை. ஒரு வருட அலைச்சலுக்கு பின்பு அவருக்கு `ஆட்டோ இம்யூன் கீமோ லைட்டிக் அனீமியா` என்ற நோய் என்பது கண்டு பிடிக்கபட்டது.
சம்பவம் இரண்டு: குடும்பத் தலைவியான அந்த பெண்மணிக்கு 48 வயது. கல்லூரிக்கு படிக்கச் சென்ற ஒரே மகள் அங்கு காதல் வலையில் விழ, அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள் தாய். ஏற்கனவே எப்போதாவது `உடல் பலகீனமாகிறது, கால்கள் மரத்து போகின்றன’ என்று கூறிக்கொண்டிருந்த அந்த தாயார், திடீரென்று கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்தார். மூச்சுவிட சிரமபட்டார். முற்றிலுமாக அவர் முடங்கிபோனார்.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை தாக்கியிருப்பது `குல்லியன் பாரி சின்ட்ரோம்` என்று கண்டறிந்தார்கள். அதாவது அவருடைய உடலே, அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான மாற்று பொருளை சுரந்து, ரத்தத்தில் கலந்து செயல்பட்டிருக்கிறது. ரத்தத்தில் கலந்திருந்த அந்த `எதிர் உயிரியை`, `பிளாஸ்மா பெரிசிஸ்` என்ற முறையில் பிரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சம்பவம் மூன்று: சாட்ப்வேர் என்ஜினீயரான அந்த பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியிருந்தன. அவரால் கர்ப்பம் ஆக முடியவில்லை. அவரது இனபெருக்க உறுப்புகளும், சினை முட்டையும் பரிசோதிக்கபட்டது. எல்லாம் நல்ல முறையில் இருந்தன. கணவரது உயிரணுவின் உயிர் சக்தி தன்மையும் சிறப்பாகவே இருந்தது. எல்லாம் சிறப்பாக இருந்தும் அந்த பெண் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என்பதை பற்பல சோதனைகளுக்கு பின்பே கண்டுபிடித்தார்கள். பெண்களின் உடலில், இன்னொரு உயிரை வளர்க்கும் சக்தி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில பெண்களின் உடலுக்குள், அவர்கள் உடலுக்கு எதிரான `எதிர் உயிரிகள்` உருவாகும். அவை இன்னொரு உயிரை, உடலுக்குள் உருவாகவிடாமல் தடுத்துவிடும். அப்படிபட்ட எதிர் உயிரிகள் அந்த பெண்ணின் உடலுக்குள் செயல்பட்டு கருத்தரிக்காமல் செய்திருக்கிறது.
“சில பெண்களுடைய உடல் கணவருடைய விந்தணுவையே இன்னொரு அன்னிய பொருளாக பாவிக்கும். விந்தணுவை உள்ளே விடாமல் எதிர் உயிரி மூலம் அதன் சக்தியை அழித்துவிடும். இதனால் கணவரிடம் தரமான உயிரணு இருந்தும், தன்னிடம் முதிர்வடைந்த சினை முட்டை இருந்தும் பயனில்லை. அந்த பெண்ணால் கர்ப்பமாக முடியாது. இப்படி எதிர் உயிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால் `சர்வக்கிள் மியூக்கஸ் டெஸ்ட்` மூலம் கண்டறிந்துவிடலாம்.
சில பெண்களின் உடல் முதல் கட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உயிரணுவை உள்வாங்கிக்கொள்ளும். அடுத்த கட்டமாக அது கருப்பைக்குள் சென்று வளர, என்டோமெட்ரியம் என்ற பஞ்சு திசு மீது ஒட்டவேண்டும். அப்படி ஒட்டி வளர `பாஸ்போ லிப்பிட்` என்ற சுரப்பு அவசியம். ரத்தம் அந்த சுரப்புக்கு எதிரான `எதிர் உயிரியை` உருவாக்கி, ஒட்ட விடாமல் கருவைக் கலைத்து அபார்ஷன் ஆக்கி வெளியேற்றிவிடும். இப்படி பெண்ணின் உடலுக்குள்ளே உயிரை அழிக்கும் எதிர் உயிரியை அடையாளங்கண்டு கட்டுபடுத்தினால்தான் பெண் கர்ப்பம் ஆக முடியும்..”- என்று கூறுகிறார், டாக்டர் மகேஸ்வரி.
“இப்படி எதிர் உயிரி உருவாகி தாக்கும் பாதிப்பு பெண்களுக்குத்தான் 65 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கபடுகிறார்கள். எதிர் உயிரியால் பாதிக்கபடுகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்”-என்றும் அதிர்ச்சி குண்டு போடுகிறார்.
இந்த நிலை தற்போது அதிகரிக்க என்ன காரணம்?
“நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைடன் கூடிய அதிக வேகமும், பெயர்- புகழோடு வாழவேண்டும் என்ற போட்டி மனபான்மையும் பெண்களிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மரபு வழியாக வந்துகொண்டிருக்கும் ஒரு சில நோய் தொடர்புகள், சத்துணவு சாப்பிடாமை, சரியான நேரத்திற்கு தூங்காமை போன்ற தாக்கங்கள் எல்லாம் இப்போது பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. இளமையில் அடங்கிக்கிடக்கும் அத்தகைய பாதிப்புகள் நாற்பது வயதுக்கு மேல் தலைதூக்கி, தாக்கத் தொடங்குகிறது. ” – என்று கூறும் டாக்டர் மகேஸ்வரி ரத்தத்தில் இருக்கும் தன்மைகளை ஆராயும் `இம்னோ ஹேமட்டலாஜி`யில் எம்.டி. பட்டம் பெற்றவர். இவர் சென்னையில் வசிக்கிறார்.
இந்தவித நோய்கள் பெண்களை எப்படி தாக்குகிறது?
“நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நோய்க்கிருமிகள் மற்றும் கெடுதல் விளைவிக்கும் பொருட்களில் இருந்து அது நம்மை காக்கும். மண்ணீரல், கழுத்து பகுதியில் இருக்கும் தைமஸ் சுரபி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட் போன்றவை உடலை நோயில் இருந்து காப்பவைகளாக செயல்படும்.
இவை எப்படி செயல்படும் என்பதையும் விளக்குகிறேன். நமது கை விரல்களில் `லிம்ப்வெசல்`கள் உள்ளன. இவை ரத்தக் குழாய்களைவிட மெலிதானது. ரத்தக்குழாயின் ஊடே ஓடும். நமது விரல் நுனியில் அடிபட்டு காயமாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடனே அதில் பாக்டீரியாக்கள் குடியேறி, புண்ணாக்கிவிடும். பின்பு பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலக்க முயற்சிக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாக்களை ஒரே இடத்தில் பிடித்துவைக்கும். பிடித்துவைக்கும் இடத்தில் வலியும், வீக்கமும் உருவாகும். அதைத்தான் நாம் `நெரி கட்டுதல்` என்று கூறுகிறோம். பிடித்துவைத்துவிடுவதால், அந்த பாக்டீரியாக்களால் ரத்தத்தில் கலக்க முடியாது. உடலில் ஒரு காயம் என்றாலே எல்லா வெள்ளை அணுக்களும் ஒரே இடத்திற்கு வந்து தடுத்து தாக்கி யுத்தம் செய்யும். அவைகளால் தடுத்து, தாக்கி அழிக்க முடியாதபோது பாக்டீரியாக்கள் பல்கி பெருகி, நோயை உருவாக்கி விடுகிறது. அப்போது நாம் மருந்து சாப்பிட்டு நோயை கட்டுபடுத்துவோம்.
சில நேரங்களில் சிலருக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியே, எதிர் உயிரியை உருவாக்கி அவர்கள் உடலையே தாக்கும். இதனை `ஆட்டோ இம்னோ டிசாடர்` என்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் மேற்கண்ட மூன்று சம்பவங்களில் பார்த்தோம். இந்த பாதிப்புக்கு நாம் சிகிச்சை கொடுக்கும்போது, எந்த சுரப்பி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதிக்கு மட்டும் மருந்துகொடுக்க முடியாது. நாம் கொடுக்கும் மருந்து மொத்தமாக போய் ரத்தத்தில் கலந்துதான் நோய்க் கிருமிகளை அழிக்க முற்படும். அப்போது பக்க விளைவுகள் தோன்றலாம்”
நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான இந்த `எதிர் உயிரிகள்` ரத்தத்தில் கலந்து விஷமாக்காத அளவிற்கு பெண்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
“ஆட்டோ இம்னோ டிசார்டர் நோய்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்தாலும் முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. கட்டுபடுத்தத்தான் முடியும். அதனால் பெண்கள் அதிகமான வேலைபளு, அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், வாழ்வியல் சிக்கல்களால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் அதை எளிதாகக் கையாண்டு, அதில் இருந்து விடுபட்டுவிட வேண்டும். உடலில் அதிகமான சூரிய வெப்பம் நேரடியாக தாக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளை உண்ணவேண்டும். இதை எல்லாம் மீறி நோய் வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அது `ஆட்டோ இம்னோ டிசார்டர்’ ஆக இருக்குமா என்றும் பரிசோதிக்க வேண்டும். சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”- என்கிறார்.

புதிய வைரஸ் எச்சரிக்கை

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.
“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.
இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.