சிலியில் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்ட நிலக்கீழ் சுரங்கத்தொழிலாளர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த இரு மாதகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்கும்' சவாலான பணியின் அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்காக மூன்று சிறப்பு குழாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த வாரமளவில் நிலத்தின் கீழ் இறக்கப்படவுள்ளன. இக்குழாய்களை சுரங்கத்தொழிலாளிகள் அகப்பட்டுள்ள இடம் வரை கொண்டு செல்வதற்கு ஏற்ப நிலத்தில் துளையிடும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. இப்புதிய நடவடிக்கைகளை, சிலியின் நிலச்சுரங்க அமைச்சர் லௌரென்ஸ் கொல்போர்ன் நேரில் சென்று பார்வையிட்டார்.
நிலத்தின் கீழ் சிறைப்பட்டிருக்கும் அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்நிலையையும், எடுக்கப்படும் புதிய முயற்சினையும் விளக்கும் படம் கீழே:
No comments:
Post a Comment