Wednesday, April 6, 2011

இணையத்தில் பொழுதை கழிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.

அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்...

நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்டர்நெட் மூலமாக ஒருவரின் முகத்தினை அடையாளம் காணும் புதிய சாப்ட்வேர்


இன்டர்நெட் வாயிலாக ஒருவரின் உருவத்தினை அடையாளம் காணும் புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஒரு பகுதியான பேஸ்.காம் என்ற இணையதளம் புதிய சாப்ட்வேர் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதில் முகம் தெரியாத எந்த ஒரு நபரையும் எளிதில் அடையாளம் காணலாம்.

இது குறித்து பேஸ்.காம் தலைமை நிர்வாகி கில்ஹிர்ஸ்கி கூறியதாவது : இத்தகைய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பத்தினை எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தலாம். பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மனிதர்கள் முகம் தெரியாமல் இறந்து போனால் அவர்களை இத்தகைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளர் காணலாம். இதனை சர்வேதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி?


நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்துalt  அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.

2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.

இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது.  மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம். பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.

5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக்


பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

இ-மெயில் சேவையை துவக்கியது பேஸ்புக்


சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும்

என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது : சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை‌ துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பத‌ாகவும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்‌ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடற்கூற்றை முப்பரிமாணத்தில் பார்க்கலாம்:கூகுள் வழங்கும் புதிய வசதி


மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் (3டி) வடிவத்தில் பார்க்கும் புதிய வசதியை "கூகுள் லேப்ஸ்' மூலம் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.இணைய முன்னணி தேடுதல் தளமான கூகுள், தங்களது வாடிக்கையாளர்களுக்குபுதிய மற்றும் நவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

கூகுள் எர்த், கூகுள் மேப் உள்ளிட்ட வசதிகள் மூலம், நமது தெருக்கள், நகரங்கள், நாடுகள் உள்ளிட்டவற்றை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதிகள் மூலம், ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.  இந்த வகையில், கூகுள் நிறுவனம் தற்போது, 'கூகுள் லேப்ஸ்' மூலம், "பாடி பிரவுசர்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், மனித உடற்கூறுகளை "3டி' வடிவத்தில் பார்க்க முடியும்.

புதிய வசதி மூலம், மனித உடலின் நுண்ணிய பகுதிகளை பெரிதுபடுத்தியும், சிறிதாக்கியும், பல்வேறு கோணங்களிலும் பார்க்க முடியும். மனிதனின் உள்ளுறுப்புகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன. எலும்புகள், தசைகள் எத்தகைய வடிவத்தில் உள்ளன என்பதை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்.கூகுள் லேப் தரும் இந்த வசதியை, எல்லாவிதமான பிரவுசரிலும் பயன்படுத்த முடியாது.

அதற்கென பிரத்யேகமாக "வெப் ஜி.எல்., கிராபிக்ஸ் ஸ்டாண்டர்' என்ற வசதி தேவை. இது, கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பீட்டா ஆகிய பிரவுசர்களில் உள்ளது.இவற்றை http://bodybrowser.googlelabs.com என்ற தளத்திலிருந்

Facebook அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை : அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக பேச


ஒரு இன்பகரமான அதிர்ச்சி தகவல் என்னவென்று கேட்கின்றீர்களா? SoNePhone இதில் இருந்து நமது Facebook கணக்கு மூலமாக இலவசமாக அழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இதில் Facebook இல் online இல் உள்ளவர்களிடம் மட்டும் தான் பேச முடியும். வேறு அழைப்புக்களுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சந்தோசமான செய்தி இந்த SoNePhone ஐ பற்றி உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி  அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் உங்களுடைய கணக்கில் ஒரு CV(cash value) சேர்ந்து விடும் அதை வைத்துக் கொண்டு நீங்கள் அழைப்பை மேற்கொள்ள முடியும்.

உங்கள் கணினியில் நிறுவிய பின் Facebook email மற்றும் password ஐ கொடுத்து உள்நுழைந்து கொள்ளுங்கள்.

CV (cash value) பற்றிய சிறிய விபரம்

01.Cv ஐ இலவசமாக பெறுவதற்கு இடது பக்கம் உள்ள Invite Friends என்பதை களிக் செய்து அடுத்து வரும் வின்டோவில் add me  என்பதை கிளிக் செய்து அனுப்பி வைக்கவும்.
02.10 .நண்பர்கள் ஏற்றுக்கொண்டால் மேலதிகமாக 5 Cv கிடைக்கும்.
03.ஒரே நேரத்தில் 22 நண்பர்களுக்கு மட்டும்தான்  அறிமுகப்படுத்தி  வைக்க முடியும்.
04.நண்பர்கள் அதிகமாக தேவை என்பதற்காக Facebook இல் புதிதாக அளவிற்கு அதிகமாக சேர்க்க வேண்டாம். ஏனென்றால் அப்படி நீங்கள் சேர்த்தீர்களானால் உங்கள் கணக்கை நண்பர்களை சேர்க்க முடியாமல் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை உங்களுக்கு வரும்.

குறிப்பு :- country code  உடன் தொலைபேசி இலக்கத்தை சேர்த்து  call எடுக்கவும்
SoNePhone மென்பொருளை தரவிறக்கம் செய்ய

இண்டர்நெட் இல்லாமல் ஜீமெயில் பார்க்கலாம்....


நாம் அனைவரும் ஜீமெயில் கணக்கு வைத்திருப்போம். ஆனால் சிலருக்கு மட்டுமே இணைய வசதி வீட்டு கணினியில் இருக்கும். அதனை விட்டால் ஜீமெயில் பார்க்க பல இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். அதனை நிவர்தி செய்யும் ஒரு வழிமுறையையே இங்கு காணலாம்.

முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்இங்கு சென்றுதரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.


ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.

உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .


இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

Yahoo Messenger இல் Facebook உடன் தொடர்பு கொள்ள..


இதோ Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். உங்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் புதிய Yahoo புதுப்பித்தல்கள் (updates) மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம்.

1. முதலாவதாக yahoo messenger 11 beta வை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. பின் அதனை உங்கள் கணனியில் நிறுவும் போது உங்கள்  yahoo account ஐ facebook உடன் தொடர்பு படுத்த வேண்டுமா? என கேற்கும், அதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
3. பின்னர் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைய (log in) ஆகுக, என கேட்கும்.
4. நீங்கள் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைந்த பிறகு yahoo applicationஅனுமதிக்க கூறி கேட்கும், அதனை (allow) அனுமதி கொடுங்கள்.
5. இப்பொழுது நீங்கள் Facebook உடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.
6.  Yahoo Messenger இல் log in ஆகியவிட்டதும் Facebook ற்கு  log in ஆகாமலே  Facebook நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
7. மேலும் Yahoo Messenger உள் நின்றபடி Facebook அரட்டை தொடர்பை log off அல்லது  log in ஆகவும் முடியும்.
8. அது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த  facebook games களையும் விளையாட முடியும். மேலும் பல முக்கியமான plug-ins களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக Picasa, YouTube, Pandora, Blogger போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ள கூடிய வகையானவற்றை வழங்குகின்றது.

மரமேறும் ரோபோ பாம்பு : வீடியோ இணைப்பு


பொதுவாக பாம்புகளை மரங்களில் கண்டு அலறி ஓடி இருப்போம் அல்லது பயந்து போய் இருப்போம். ஆனால் இங்கு பாருங்கள் ரோபோ வடிவிலான பாம்பு மரம் ஏறி அசத்துகின்றது.

தொழில்நுட்பம் மாற்றம் அடைந்தால் எப்படியிருக்கும்? : வீடியோ இணைப்பு


குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக மூர்ப்பின் கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையில் அன்று தோன்றிய மனிதன் படிப்படியாக பல பரிமாணங்கள் பெற்று இன்று இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான்.

இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட நிலையில் 2020ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?

இந்த வீடியோவை பாருங்கள் 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

உலகிலேயே மிகவும் நீளமான பாம்பு : வீடியோ இணைப்பு


பாம்பு என்றால் படையும் நடக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால, உலகிலேயே மிகவும் நீளமான பாம்பினை பார்த்ததுண்டா.. வாருங்கள்...
கொலம்பஸ் மிருககாட்சி சாலையில் காணப்படும் ஒரு மலைப் பாம்பே உலகின் மிகவும் நீளமான கூடிய பாம்புமாகும். இது சுமார் 24 அடி நீளமுடையது.
15 வயதையுடைய இப் பாம்பு 300 பவுண்டுகள் நிறையுடையது.
உலக கிண்ணஸ் சாதனை புத்தகத்தில் உலகில் மிகவும் நீளமான பாம்பு என பதியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவள் ஒரு பெண்ணா? : வீடியோ இணைப்பு


எம் கண்களுக்கு நம்ப முடியாத பல விடயங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் இங்கு ஒரு பெண் செய்யும் சாதனையை பாருங்கள்.
24 வயதுடைய சின்ரா என்னும் பெண் தனது உடலை எப்படி வேண்டுமாலும் வளைந்து நெளித்து அசர வைக்கிறாள்.
இது தொடர்பாக சின்ரா தெரிவிக்கையில்,
நான் பாலர் பாடசாலையில் படிக்கும் போது ஆசிரியரின் உதவியுடன் 4 வயதிலிருந்து இப் பயிற்சியில் ஈடுபட்டேன். எல்லோரும் போலவும் நான் இருக்க விரும்பவில்லை ஏதாவது வித்தியாசமாக செய்ய எண்ணியே இப் பயிற்சியில் ஈடுபட்டேன் என்றார்.
அவரின் சாகங்களை நீங்களும் பாருங்கள்...

சூப்பி போத்தலில் உணவு உண்ணும் விசித்திர மீன்கள் : வீடியோ இணைப்பு


குழந்தைகள் சூப்பி போத்தலில் பால் குடிப்பதை பார்த்திருப்போம் ஆனால் இங்கு மீன்கள் தமது உணவினை சூப்பி போத்தல் மூலம் உண்பது ஆச்சரியமல்லவா??
4 - 7 வயதுக்குட்பட்ட இம் மீன் இனம் 20 தொடங்கம் 30 பவுஸ் நிறையுடையனவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் போல் உங்களால் முடியுமா? : வீடியோ இணைப்பு


இவர் மாதிரி உங்களால் முடியுமா? அப்படி இவர் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா?
இலண்டனில் பிறந்த 33 வயதுடைய ஸ்ரிபன் என்ற ஓவியர் பார்ப்பவதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைக்கிறார்.
இவர் சிறுவயதில் வாய் பேச முடியாத ஊமையாக இருந்துள்ளார். பின்னர் தனது 5 வயதில் லண்டன் உள்ள பாடசாலையில் சேர்ந்துள்ளார். இவருக்கு கிடைக்கும் நேரமெல்லாம் ஓவியம் மூலமே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்க்கும் ஒவ்வொரு சின்ன சின்ன பொருட்களையும் வரையும் ஸ்ரிபனின் திறமையை பார்த்த ஆசிரியர் ஒருவர் இவரின் ஆற்றலை ஊடகம் ஒன்றின் மூலம் அவரின் 8வது வயதில் வெளிக்காட்டியுள்ளார்.
இன்று அவர் புரியும் சாதனைகளும் விருதுகளும் அதிகம்.
அப்படி இவர் என்ன செய்து சாதித்து விட்டார்?
அதாவது ஹெலிகெப்டர் மூலம் ஒரு நகரை சுற்றி பார்வையிடுகின்றார். அவற்ற அவரின் காந்த கண்ணில் பதிவு செய்கிறார். பின்னர் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியமாக தீட்டி அசத்துகிறார்.
இயற்கையிலே இவருக்கு ரசனையுடன் கூடிய ஞாபக சக்தியிருந்தாலும் இவரை 'மனித கமரா' என்றுறே எல்லோரும் அழைக்கின்றனர்.
முடிந்தால் நீங்களும் முயற்சியுங்கள்....

இரு கைகள் அற்ற பியானோ கலைஞர் : வீடியோ இணைப்பு


இசைக்கு மயக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு இளைஞர் இசையுடன் ஓர் ஆச்சரியத்தையும் தந்து இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்.
சீன தொலைக்காட்சியில் 'China's Got Talent'  எனும் நிகழ்சியில் கலந்து கொண்ட ஒர் இளைஞர் இரு கைகளும் அற்ற நிலையில் தனது கால் விரல்களால் பியானோ வாசித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியுள்ளார்.
23 வயதுடைய லியு என்னும் இளைஞர் இச் சாதனையை நிகழ்த்தியவராவார்.
இவரின் 10வது வயதில் ஏற்பட்ட விபத்தொன்றின் போது தனது இரு கைகளையும் இழந்துள்ளார். பியானோ கலைஞர்ராகும் ஆர்வம் கொண்ட லியுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருந்தும் தனது விடா முயற்சியின் மூலம் சுயமாகவே கால் விரல்களால் பியானோ வாசிக்க பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.
இவர் தனது 18வது வயதில் தனது இலக்கை எட்டியுள்ளார்.
தன்னம்பிக்கையும் சுய முயற்சிக்கும் இவர் ஒர் உதாரணமல்லவா? சோம்பெறிகளாக காலத்தை கடந்தும் இளைஞர்கள், இவரை போல் சாதிக்க துணிய வேண்டும் என்பதே எமது ஆசையும் கூட
உங்களாலும் இவ்வாறு சாதனை புரிந்த வீடியோ காட்சிகள் இருப்பின் எமக்கு அனுப்பி வையுங்கள். அதனையும் பிரசுரிப்போம்.
இவரின் திறமையினை நீங்களும் காண.....

வாய் விட்டு சிரிக்க.... : வீடியோ இணைப்பு


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். இயந்திர மயமான இவ் வாழ்வில் அதிகரித்த வேலை பளு, மன உளைச்சல் அவதி படுவோர் ஏராளம். இவற்றையெல்லாம் தீர்க்க ஒரே ஒரு வழி நகைச்சுவையே.
இங்கு இரு யப்பானியர்கள் அசத்தும் நகைச்சுவை வெடியால் அரங்கமே அதி்ர்கின்றது. பிறகுகென்ன நீங்களும் பார்த்து சிரித்து சந்தோசத்தை அனுபவிக்க...

2.08 செக்கனில் ஓர் உலக சாதனை : வீடியோ இணைப்பு


முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி.
சின்ன விடயமானாலும் அதனை வித்தியாசமாய் செய்தால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும். அந்த வகையில் இங்கு ஒரு சிறுவன் பார்ப்பதற்கு இலகுவாக இருந்தாலும் கடும் முயற்சி பயனால் உலக சாதனை படைத்துள்ளான். அப்படி என்ன செய்திட்டார் என்று கேட்கிறீர்களா?
10 வயதான மரிலாண்ட் என்னும் சிறுவன் வெறும் பிளாஸ்டிக் கப்புகளை வைத்து மிக விரைவாக பல்வேறு கோணங்களில் அடுங்கி சாதனை படைத்துள்ளான். அதாவது வெறும் 2.08 செக்கனில் இவ் உலக சாதனையை படைத்துள்ளான்.
இப்படி உங்களுக்குள்ளும் நிறைய திறமைகள் ஒழித்திருக்கும். நீங்கள் முயற்சி பண்ணி பாருங்கள் அதனை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் நிச்சயம் உங்கள் திறமைகளை பாரிஸ்தமிழ் வெளியுலகுக்கு காட்டும்.

உயிர் காக்கும் Ambulance உயிர்குடிக்கும் முயற்சி (வீடியோ இணைப்பு)


ஈரான் நாட்டில் நோயாளியை வைத்தியசாலைக்கு எடுக்துச் செல்லும் போது வீதியோரம் கூடிநின்றவர்கம் மீது மோதியவண்ணம் சென்றுள்ளது இவ் Ambulance மோதிச் சென்றபோதும் எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும் காயங்களுடன் தப்பித்தனர் எனவும் தெரியவருகின்றது.



முதளை வாயில் தலை!!! உயிர் தப்பினார் (வீடியோ இணைப்பு)


விளையாட்டு வினையானது அமரிக்க ஃபளோரிடா மானிலத்தில் முதளையுடனான சாகச விளையாட்டின் போது கெனிஹைப்ஸ் என்பவர் முதளையின் வாயினுள் தலையை விட்டு சாகசம் செய்யும் பேளையில் அவ் முதளை அவர் தலையைக் கவ்விக்கொண்டது. அதன் பின்னர் பலரின் முயற்சியினால் மீட்டெடுக்கப்பட்டார். இந்த உயிர்ப்பணயச் சாகசத்தை பரிஸ்தமிழ்.கொம் தளத்தில் முதலாவது காணெளியிலும் அவர் மீட்கப்படும் காட்சிகளை இரண்டாவது காணெளியிலும் காணலாம்.

ஆகாயத்தில் ஓர் அசத்தல் உணவகம் : வீடியோ இணைப்பு


வித்தியாசமான முறையில் உணவருத்திய அனுபவம் உங்களுக்குண்டா?
வாருங்கள் பாரிஸ்தமிழ்.கொம் வித்தியாசமான ஒர் உணவகத்தை காட்டப் போகிறது.
அதுதென்ன என்று கேட்கிறீர்களா?
அதிகதிரித்து வரும் இடநெருடிக்கடி காரணமாக அதை ஈடு செய்ய வித்தியாசமாக யோசிக்க வேண்டியிருக்கும் இன்நிலையில். இவர்கள் எண்ண நினைத்தார்களே தெரியவில்லை அந்தரத்தில் அதாவது ஆகாயத்தில் ஓர் உணவகத்தை அமைத்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் இவ் விசித்திர உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பகுதியை தெரிவு செய்யலாம். இதில் 22 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் பயிற்றப்பட்டவர்களால் தரமான உணவு வகைகள் இங்கு பரிமாறப்படுகின்றன.
நிலத்தில் இருந்து 50 மீற்றர் உயரத்தில் கிரேனின் உதவியுடன் இவ் உணவகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.  பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் இதை நடாத்தும் நிறுவனத்தினால் தரப்பட்டுள்ளது.

கதிரைகளை உண்ணும் விசித்திர பெண்மணி : வீடியோ இணைப்பு


வித விதமான சுவையான உணவு உண்பதில் எல்லோருக்கும் அலாதி பிரியமே ஆனா இங்கு ஒரு பெண்மணிக்கோ வித்தியாசமான உணவு தேவைப்பட்டிருக்கிறது.
அப்படி என்ன எண்கிறீர்களா?
வீட்டில் இருக்கும் அனைத்து கதிரைகள், மேசைகள், குசன் போன்றவற்றை பிரியமாக சாப்பிடுகிறாராம்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான அடேல் எட்வர்ட்ஸ் என்ற இப்பெண் வெளிப்படையாகவே தனது வீட்டிலிருக்கும் அத்தனை பொருட்களையும் மென்று விழுங்குவதை வழங்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக இலாஸ்டிக், பஞ்சு மற்றும் இறப்பர் போன்ற பொருட்களை அவர் அதிகம் விரும்புகின்றார்.

ஆனால், குஷன் கதிரைகளிலுள்ள பஞ்சுகளை உண்பதே அண்மைக்காலத்தில் அவரது மிகப் பெரிய பலவீனமாகியுள்ளது.
இவர் இதுவரை 4 கதிரைகள், 8 சோபாக்கள், 100 கிலோ பஞ்சு என்பவற்றை உண்டுள்ளார்.

சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (காணொளி இணைப்பு)


  இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர்.

அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக நரமாமிசம் மற்றும் நாய்களை இவர்கள் உண்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் மனைவியர் இவர்களை விட்டுச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.