வித விதமான சுவையான உணவு உண்பதில் எல்லோருக்கும் அலாதி பிரியமே ஆனா இங்கு ஒரு பெண்மணிக்கோ வித்தியாசமான உணவு தேவைப்பட்டிருக்கிறது.
அப்படி என்ன எண்கிறீர்களா?
வீட்டில் இருக்கும் அனைத்து கதிரைகள், மேசைகள், குசன் போன்றவற்றை பிரியமாக சாப்பிடுகிறாராம்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான அடேல் எட்வர்ட்ஸ் என்ற இப்பெண் வெளிப்படையாகவே தனது வீட்டிலிருக்கும் அத்தனை பொருட்களையும் மென்று விழுங்குவதை வழங்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக இலாஸ்டிக், பஞ்சு மற்றும் இறப்பர் போன்ற பொருட்களை அவர் அதிகம் விரும்புகின்றார்.
ஆனால், குஷன் கதிரைகளிலுள்ள பஞ்சுகளை உண்பதே அண்மைக்காலத்தில் அவரது மிகப் பெரிய பலவீனமாகியுள்ளது.
இவர் இதுவரை 4 கதிரைகள், 8 சோபாக்கள், 100 கிலோ பஞ்சு என்பவற்றை உண்டுள்ளார்.
No comments:
Post a Comment