மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள். குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள். நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை. கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள். முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள். பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம். தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் போல ஒத்துழைக்க வேண்டும். செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும். தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள். |
Saturday, October 16, 2010
மனைவிக்கு சில அறிவுரைகள்
பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
பன்றிக் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி?
20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டதே; அது, இது போல் உருவானது தான். பறவைகள், பன்றிகளிடம் தோன்றிய இந்த தொற்று, ஒன்று என்ற நிலையிலிருந்து, அதிவேகமாகப் பரவும் தொற்றாக, எட்டாம் நிலைக்கு முன்னேறி விட்டது என, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டம் பரவும் அதிதீவிரமான வைரசாக இது உருமாறி விட்டது என, இந்த மையம் அறிவித்தது. இந்த மையம் அச்சம் கொண்டதற்கேற்ப, எச்1என்1 வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. தொற்று பரவும் பூகோள அமைப்பின் மையப் பகுதியில் இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. பன்றிக் கறி சாப்பிட்டாலோ, பன்றிகளைத் தொடுவதன் மூலமோ இந்த நோய் வருவது இல்லை. ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக இந்நோய் பரவுகிறது. இருமல், தும்மல், எச்சில் துப்புதல் ஆகிய செயல்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒரு தும்மலுக்கு 40 நீர் துளிகள் வெளிவருவதால், அதிலிருந்து தொற்று பரவுகிறது. இந்த துளிகள், தரைகளில், சுவர்களில், கதவுகளில், கைப்பிடிகளில், காசுகளில் என, மனிதன் பயன்படுத்தும் அனைத்து பகுதிகளிலும் படர்கிறது. கையைச் சுத்தம் செய்யாவிட்டால், ஒருவர் கையிலிருந்து அடுத்தவருக்குப் பரவி விடுகிறது. அதிக சூடு மற்றும் புற ஊதாக் கதிர்கள், 5 முதல் 15 நிமிடத்தில் இந்த வைரசை அழிக்கின்றன. ஆனால், சளியுடன் கலந்து வெளியாகும் இந்தக் கிருமி, 48 மணி நேரம் வரை உயிர் வாழும். அதிக மக்கள் புழங்கும் இடங்கள், காற்று குறைவான இடங்கள், வெயில் படாத இடங்களில், இந்தக் கிருமி வேகமாகப் பரவும். தொற்று ஏற்பட்டிருக்கும் ஒருவரின் அருகில் செல்லும் மற்றொருவருக்கு, 2 – 3 நாட்களில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படத் துவங்கும். சாதா சளி போல உருவாகும் இந்தத் தொற்று, சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து தண்ணீர் வழிதல், தசைகளில் வலி ஆகியவற்றுடன் தீவிரமடையும். அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு, எட்டு நாட்கள் இது தொடரும். அதன் பிறகு, முற்றிலுமாக குணமடைந்து விடும். நோயை பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும். சாதா குளிர் காய்ச்சலுக்கும், எச்1என்1 காய்ச்சலுக்கும் அறிகுறிகள் ஒன்றே. தொண்டை மற்றும் மூக்கில் உள்ள திரவங்கள் வழித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்களில் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்தக் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்படும். கடும் காய்ச்சல் ஏற்பட்டால், பாரசிட்டமால் 500 மி.கி., மாத்திரை போடலாம். ஆனால், நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் இம்மாத்திரை போடலாம். அதற்கும் குறைவான இடைவெளியில் போடக் கூடாது. ப்ரூபென் போன்ற வலி நிவாரணிகளும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கவே கூடாது. கொடுத்தால், அதி பயங்கரமான ரேயஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆசெல்டாமிவிர் (டாமிப்ளூ), ஜானாமிவிர் (ரெலென்சா) போன்ற குறிப்பிட்ட மருந்துகளும் இதற்கு உள்ளன. சரியான சிகிச்சை முறை என்பது, பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்தில் துவங்குவது தான். அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க முடியுமே தவிர, தொடர்ந்து இந்த மருந்துகள் உட்கொள்ளும் போது, இந்த மருந்துகளுக்கு வைரஸ் கட்டுப்படாத நிலை ஏற்படும். மருந்து உட்கொண்டால், நிமோனியா, நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம். எந்த மருந்தையுமே, டாக்டரின் பரிந்துரை இன்றி சாப்பிடக் கூடாது. நோய் வருமுன் தடுக்கும் வகையில் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்று கருதலாகாது. தொற்று இருந்தால் மட்டுமே, இந்த மருந்து பலன் தரும். குழந்தைகள், 65 வயதைக் கடந்த முதியோர், கர்ப்பிணிகள், சிகரெட் புகைப்பவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தொற்று ஏற்பட்டால், அதிக சிக்கல் உண்டாகும். பாதிப்பு அதிகமானால், மாரடைப்பு, ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் செய லிழத்தல் ஆகியவை ஏற்படும். பல்லுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டு, நுரையீரல் முற்றிலும் செயலிழந்து போகும். குளிர் காய்ச்சலை தடுத்து, அது பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? * நோயாளிகளை பார்த்த உடன், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பணத்தை கையாண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் கை கழுவ வேண்டும். * கதவின் கைப்பிடிகளை, கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். * வெளியில் செல்லும் போது, முகமூடி அணிய வேண்டும். * இருமல், தும்மல் ஏற்படும் போது, கைக்குட்டையால் மூக்கை, வாயை மூடிக் கொள்ள வேண்டும். * வெளியிடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். எச்1என்1 வைரஸ் நோய் தடுப்பு மருந்து உள்ளது. ஊசி வகை, மூக்கில் ஸ்பிரே போட்டுக் கொள்ளும் வகை ஆகியன உள்ளன. 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு, மூக்கு வழியே ஸ்பிரே செய்யலாம். 6 மாதக் குழந்தைகளுக்கு ஊசி மருந்தே போட வேண்டும். இரண்டுமே, சிறந்த வகைகள் தான். மூக்கு வழியே போடப்படும் தடுப்பு மருந்தால், பயன்கள் அதிகம். மூக்கில் உள்ள சளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் அழிய வாய்ப்பு ஏற்படும். தடுப்பு மருந்து போட்டாலும், சிலருக்கு தொற்று ஏற்படலாம். ஆனால், அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இந்த தொற்று, ஏப்ரல் மாதம் வரை தென்படும். எனவே, நோய் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். |
உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்
எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள். NetQin Mobile Anti Virus இந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும். இந்த மென்பொருளை தரவிறக்க NetQin Mobile Anti Virus Look Out Mobile Anti Virus இந்த ஆன்டி வைரசும் நன்றாக செயல் படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனின் அனைத்து தகவல்களையும் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். இதில் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதை தரவ்றக்க இந்த லிங்கில் சென்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொபைல் போனின் ரகத்தை குறிப்பிட்டு GO க்ளிக் செய்து உடன் மேலே Download என்ற மஞ்சள் நிற பட்டன் வரும் இதை க்ளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். இதை தரவிறக்க - Mylook Out Mobile Anti Virus Get Droid Free Anti Virus Android மொபைல் போன்கலுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது வைரஸ், மால்வேர் அவற்றிடம் இருந்து போன்களை பத்திரமாக பாதுகாக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்க Droid Security |
காதல் சரியா? தவறா? (வீடியோ காதல் உரையாடல் இணைப்பு)
காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.
‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும்.
ஏன், இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே. ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து.
காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காகவே வாழும் நீயே அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு! இது ஆண்களுக்கும் பொருந்தும்.
அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன வாகனம் வைத்திருக்கிறான், அவன் வீட்டில் எத்தனை பேர் என்பதையெல்லாம் சேர்த்து அந்தக் கணக்கைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ‘பிரதிபலன் பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல். கணக்குப் பார்ப்பது காதலுக்கே களங்கம்’ என்றெல்லாம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட வாக்கியங்கள்தான்.
கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்,
நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் பெண்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது.
‘காதலைப் பொறுத்தவரை பெண்தான் தேர்ந்தெடுப்பவளாக இருக்கவேண்டும். ஆண் என்பவன் அவள் முடிவுக்கு அடிபணிபவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பே, ஆணாதிக்கம் போன்ற ஒருவித ஆதிக்க உணர்வுதான். பணிவது, பணியவைப்பது என்பதையெல்லாம் தாண்டிய பரஸ்பர அன்புதானே காதல்?
ஒரு பெண்ணுக்கு பிடித்தவன், பிடிக்காதவன் என்று இருப்பதுபோல ஆணுக்கும் இருக்கும்தானே? தன்னிடம் காதல் சொல்லும் பெண்ணையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவனைக் காதலன் என்று சொல்வதா... இல்லை, பெண்பித்தன் என்று சொல்வதா?
சிலர் நினைக்கலாம். ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது என்பது தவறே இல்லை. அதைக் கூடாது என்று கண்டிப்பது பிற்போக்குத்தனம்தான். ஆனால், எதற்குமே ஒரு எல்லை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பெண்களே நீங்கள் ஒரு ஆணோடு களங்கமில்லாமல் பழகுவதுபோலவே அவனும் உங்களோடு பழகுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தோளில் கை போட்டுக் கொண்டு வலம் வருவது உங்களைப் பொறுத்தவரை நட்பாக இருக்கலாம். ஆனால், நம் சமூகம் இன்று வரை கல்யாணம் செய்து கொள்வதையே ‘கரம் பிடிப்பது’ என்று சொல்கிறது. உங்கள் மனதில் களங்கமில்லை, விரசமில்லை, தடுமாற்றம் இல்லை! ஆனால், நீங்கள் மட்டுமே உலகமில்லை என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல எப்போதும் நினைத்திருக்கவேண்டும்!
பெண்களே ‘நான் நல்லவளாக இருக்கும்போது, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்பதை தைரியம் என்று சொல்வதைவிட அசட்டு தைரியம் என்று சொல்வதுதான் சரி. உங்களுடைய பாதுகாப்பு உங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கிற ஆண்களின் ஒழுக்கமும் அதில் பங்கு வகிக்கிறது.
நாம் கனவு காண்பது போன்ற, ஆண் &பெண் பேதமில்லாத கலாசாரம் வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில் கற்பு என்பதோ, கல்யாணம் என்பதோ, பாலியல் தவறுகள் என்பதோ பெரிய விஷயமில்லை. இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள் என்று இருக்கும் பெண்களையும் வெளிநாட்டில் ஒரு ஆண் காதலிப்பான். அதேபோல பெண்களும் காதலிப்பார்கள்.
இன்னொரு விடயம் காதலில் பொய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பொய் என்பது அத்தனை ரசிக்கக் கூடியதா? பொய் சொல்லாமல் காதலிக்க முடியாதா? கவிதைக்குப் பொய் அழகு... சரி, காதலுக்கும் அதுதான் அழகா? & இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள், எல்லா காதலர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கின்றது.
நம் எல்லோருக்குமே உண்மையைவிட பொய்யின்மீது அதிக ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காரணம், உண்மை என்பது எந்த மாற்றமும் இல்லாமல், இருந்தபடியே இருந்துகொண்டு நம்மை ஜீரணிக்கச் சொல்கிறது. ஆனால், பொய் நமக்காகவே உருவாக்கப்படுகிறது. நாமாகவே உருவாக்கிக்கொள்ளலாம். காதலில் ஆண்களே அதிகமாக பொய் சொல்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.
நமக்குப் பிடித்த மாதிரியான திருப்பங்களை எல்லாம் கொண்டிருக்கிற ஒரு நாவலைப் போல, பொய் நமக்குப் பிடித்தமான எல்லா அம்சங்களோடும் ஜோடிக்கப்படுகிறது. அதனால்தான் அதை ரசிக்க முடிகிறது. சினிமாவில் வரும் டூயட் பாடல்கள்கூட ஒருவகையில் பொய்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த காதல் ஜோடியும் பாடி ஆடுவதில்லை. அதுதான் நிஜம். ஆனால், அந்த நிஜத்தைவிட டூயட் எனும் பொய் ரசிக்கும்படியாக இருக்கிறது, அல்லவா? அப்படித்தான், பொய் சொல்லும் ஆண்களையும் பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பொய்களில் பல வகை உண்டு.
எல்லோருக்கும் நன்மை ஏற்படுத்தும் பொய்.
எல்லோரையும் பாதிக்கும் பொய்.
யாரையும் பாதிக்காத, நன்மையும் ஏற்படுத்தாத விளையாட்டுப் பொய்.
நமக்கு மட்டும் நன்மையையும், மற்றவர்களுக் கெல்லாம் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பொய்!
இப்படி, அதன் பட்டியல் நீளும். சின்னதொரு பொய்கூட சொல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது மிகமிகக் கடினம். ஆனால், அது எப்படிப்பட்ட பொய் என்பதுதான் கவனிக்கவேண்டியது. வள்ளுவர்கூட,
‘பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனில்’
என்று சொல்லியிருக்கிறார். ஆம், பொய்களாக இருந்தாலும், நன்மையை தந்தால், அவை உண்மைக்கு சமமானதே. உண்மையாக இருந்தாலும், அடுத்தவரை துன்பப்படுத்தினால் அவை பொய்க்கு நிகரானதே.
காதலின் கெட்ட குணம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவனை பிடித்துப் போகும் வரைதான், அவன் செய்யும் நல்லது கெட்டது பற்றிய ஆராய்ச்சியெல்லாம். அதன் பிறகு மனம் ஏதாவது ஒரு குருட்டுக் காரணம் சொல்லி அவன் செய்கையையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்.
காதலுக்குள்ளும் இல்லறத்துக்குள்ளும் பொய் உலவுவது என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். ‘சின்னப் பொய் தானே’ என்ற சமாதானம் அர்த்தமற்றது. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படும் எல்லா பொய்யுமே பெரிய பொய்தான். எனவே காதலர்களே, தம்பதிகளே ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.
அடுத்து, சில ஆண்கள் பெண்களிடம் மிகவும் தாழ்வான எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.
எப்படிப்பட்ட பொண்ணாக இருந்தாலும் சரி நாலு வரி புகழ்ந்து பேசினா போதும். நம்பளையே சுத்தி சுத்தி வருவாங்க’ என்று நினைப்பினைக் கொண்ட ஆண்களும் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தப்பில்லை அப்படி ஆண்கள் நினைப்பதற்கு காரணமாக சில பெண்களும் நடப்பதனாலேயே ஆண்களிடம் இவ்வாறான எண்ணங்கள் நிலைகொண்டிருக்கின்றன.
‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’
‘இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு’
‘உங்க குரல் இருக்கே.. ஸ்வீட்டோ ஸ்வீட்!’
உங்கள் கூந்தல் ரொம்ப அழகாக இருக்குது
பெண்களை ‘காதல் கடலில் வீழ்த்த’ இப்படி ஏகப்பட்ட வாசகங்களை சில ஆண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களும் புகழ்ச்சியின் உச்சத்தால் கண்மூடித்தனமாக காதல் கடலில் மூழ்கின்றனர். பெண்கள் ‘எல்லோருமே’ வர்ணனைக்கு மயங்குகிறவர்கள் என்று ஒரு சிலர் இப்படி மெத்தனமாகப் பேசிக் கொண்டு திரிவதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் அறியாமையாலும் எதையும் எளிதாக நம்பிவிடும் வெகுளித்தனத்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், எவனோ ஒருவன், தேவையில்லாமல் நம்மிடம் வர்ணனைகளை வார்க்கிறான்.. பொய் பொய்யாகப் பொழிகிறான் என்றால், ‘அவன் நோக்கம் என்னவாக இருக்கும்..’ என்பதை பெண்கள் சிந்திக்க வேண்டும். இனிமேலாவது சிந்திப்பார்களா பெண்கள் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் காதலை எடுத்துக்கொண்டால், பெண்மனம் இலகுவில் ஏமாறும் மனம். ஆணின் மனம் குரங்குமனம்(எப்போ இன்னொரு கிளை தாவும் என்பது ஐயமே)
உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறவன் என்றால், அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கூசும் அளவுக்கா வர்ணிப்பான்? சிந்தியுங்கள் பெண்களே..!
அதற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட வர்ணனை பார்ட்டிகளை ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தத் தேவையில்லை. பொய் என்று தெரிந்தாலும் நம்மைப் பற்றி உயர்வாக ஒருவர் பேசும்போது, ஒருவித உற்சாகம் மனதில் பிறக்கத்தான் செய்யும். ஒரு சின்னப் புன்னகை, ஒரு ‘தங்க்யூ’ போன்றவற்றால் அவர்களை சமாளித்து, கடந்தும் விடலாம்.
அதை விட்டுவிட்டு, போயும்போயும் ஒரு வெற்றுப் புகழ்ச்சிக்காக வாழ்க்கையையே ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்குப் போவதில், எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்ய.. ஒருசிலர் காதலில் ஆண்களின் வர்ணனைக்கு ஆட்கொண்டு தம் வாழ்க்கையை அழித்த பெண்களும் உள்ளனர்.
ஒரு பெண், ஒரு அந்நிய ஆணிடம், ‘நீ மன்மதன் மாதிரி இருக்கிற.. உன்னுடைய கண் ரொம்ப அழகு.., மீசை வீரமானவன் என்று சொல்லுது, தோள்கள் அழகாக இருக்குது ’ என்றெல்லாம் வர்ணித்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை! ‘தனக்கானவனிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனக்குள்ளாகவே ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு காதலிக்கிறாள், வாழ்கிறாள். ஆனால் அந்த ஒழுக்கம் ஆணிடமும் இருக்க வேண்டாமா? அந்நியப் பெண்களை வர்ணிக்கும் ஆண்களையெல்லாம் அந்த ஒழுக்கத்தை மீறியவர்களாகக் கருதிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே.
காதலில் ஆண்கள் உன்னையே காதலிக்கிறேன் உன்னையே திருமணம் செய்துகொள்வேன் என நம்பவைத்து எல்லைமீறிவிட்டு ஆளே காணாமல் போயிடுவார்கள்.
பெண்களே..!உங்களை நோக்கி வீசப்படுவது தூண்டிலா, தூய அன்பா என்பதைத் துப்பறிந்து தப்பித்துக் கொள்வது தான் இந்த வயதில் உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் சவால்!
பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் என்பவள் தேனீயாகவே வாழவேண்டும்.
இதோ காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சின்ன கதை.
காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது.
அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்... ‘உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’
நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ... கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது.
‘கிட்டாதாயின் வெட்டென மற’. அவ்வளவுதான்!
‘‘காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையோ இல்லையோ மூளையில்லை என்பது உண்மை’’
வீடியோவில் வரும் குரல்வழி உரையாடல்களைக் கேட்டுப்பாருங்கள்,. காதல் என்பது எத்தனை வகை? எப்படி பேச வைக்கும்? எப்படி அழவைக்கும் என்ற உண்மை புரியும்.
குரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள்
சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் பிரவுசர் பதிப்பு 6ல் தன் பயன்பாட்டினைத் தொடர்ந்து, அதில் தான் மேற்கொண்ட பல புதிய ட்ரிக்ஸ் குறித்து நீண்ட கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம். கூகுளின் குரோம் 6 தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம். 1. தொடங்கும் இணையப் பக்கம்: ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது. இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் “options” “basics” ஆகியனவற்றை கிளிக் செய்திடவும். பின்னர் “open the following pages”என்பதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதில் “ add” என்பதில் கிளிக் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அண்மையில் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் பட்டிய லிடப்படும். இவற்றில் நீங்கள் இணையத் தொடர்பினைத் தொடங்கும்போது, இணைப்பு இறக்கி உங்களுக்குக் காட்ட வேண்டிய, இணைய தளத்தின் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை இதில் டைப் செய்திடவும். 2. சர்ச் இஞ்சின் மாற்றுக: குரோம் பிரவுசர், கூகுள் மட்டுமின்றி வேறு தேடுதல் சாதனங்களையும், பிரவுசரில் இணைக்க வழி தந்துள்ளது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தேடுதல் சாதனம் குரோம் பிரவுசரில் இல்லாமல் இருக்கலாம். அவற்றில் ஒன்றை இந்த பிரவுசரிலேயே தேடுதல் தளமாக அமைக்க விரும்பினால், வழக்கம்போல பைல் ரென்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். அதன் பின் “options”/ “manage” எனச் செல்லவும். தேடுதல் சாதனத்திற்கான பிரிவைக் காணவும். இங்கு நீங்கள் விரும்பும் தேடுதல் சாதனம் கிடைத்தால், அதனைத் தேர்ந்தெடுத்து “make default” என்ற பட்டனை அழுத்தவும். 3.அவசரத்தில் மூடிய தளம் திறக்க: அதிக எண்ணிக்கையில் இணைய தளங்களைத் திறந்து பணியாற்றுகையில், சில வேளை களில் எந்த தளத்திற்கான டேப் எது என்று அறியாமல், அதனை மூடிவிடுவோம். மூடிய பின்னரே, அதற்கான முகவரி நினைவில் இல்லாமல், அல்லது எப்படி அந்த தளத்தினைத் திறந்தோம் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். இவ்வாறு மூடிய பத்து தளங்களை மீண்டும் பெற குரோம் பிரவுசரில் வழி உள்ளது. Ctrl+shift+T என்ற கீகளை அழுத்தினால், இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் திறக்கப்படும். இப்படியே மீண்டும் மீண்டும் அழுத்த, மூடப்பட்ட பத்து தளங்களைத் திரும்பப் பெறலாம். 4. பிரவுசர் பாரில் டேப்: புக்மார்க் பார்கள் மிக வேகமாக நிரம்பப் பெறும். இதனால் தளங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுகையில், சில டேப்கள் நம் பார்வையில் இருந்து மறையும். இணையத்தில் இருக்கும் ஒரு வேளையில், குறிப்பிட்ட சில தளங்களை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டிய திருப்பின், இந்த தள டேப்கள் நம் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், நமக்கு சற்று சிரமம் ஏற்படும். இதற்குத் தீர்வாக குரோம் ஒரு வழி தருகிறது. புக்மார்க் ஒன்றை அட்ரஸ் பாரில் குத்தி (pin)வைக்க இந்த வழி உதவுகிறது. அப்படிக் குத்தி வைத்திடுகையில், ஒரு சிறிய ஐகான், அந்த தளத்தின் பிரதிநிதியாக அட்ரஸ் பாரில் அமர்ந்து கொள்கிறது. இதனைக் கிளிக் செய்து, தளத்தினை எளிதாகப் பெறலாம். இவ்வாறு குத்தி வைத்திட, எந்த தளத்தை இப்படி அமைக்க வேண்டுமோ, அந்த டேப்பின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் “pin tab” என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் இது வேண்டாம் என்று கருதினால், மீண்டும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் “unpin” என்பதில் கிளிக் செய்திட, ஒட்டிக் கொண்டிருந்த சிறிய ஐகான் நீக்கப்படுவதனைக் காணலாம். நீங்கள் பிரவுசரை எப்போது மூடுகிறீர் களோ, அப்போது, இவ்வாறு குத்தப்பட்ட அனைத்து தளங்களின் ஐகான்களும் நீக்கப்படும். இந்த செட்டிங்ஸ் அந்த பிரவுசிங் காலத்திற்கு மட்டுமே. 5. குரோம் நினைவகம்: குரோம் பிரவுசர் அதன் வேகத்திற்குப் பெயர் பெற்றது. அப்படி இருந்தும் சில வேளைகளில் வேகம் குறைகிறதா? ஒரு டேப் தவிர மீதம் உள்ள அனைத்து டேப்களையும் மூடவும். இதற்கு Ctrl+W R களை அடுத்தடுத்து அழுத்தினால், அவை ஒவ்வொன்றாக மூடப்படும். ஒரு டேப் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை மூடவும். மீண்டும் இவற்றைத் திறக்க Ctrl+Shift+T ஆகிய கீகளை அழுத்தவும். மூடப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும். இதனை அவ்வப்போது செயல்படுத்தினால், குரோம் எடுத்துக் கொள்ளும் மெமரி ரெப்ரெஷ் செய்யப்பட்டு, வேகம் குறையாது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. குரோம் தொகுப்பின் டாஸ்க் மானேஜர் செயல்பாட்டினை இயக்கலாம். இதனைப் பெற ஷிப்ட் + எஸ்கேப் (Shift+Esc) கீகளை அழுத்தவும். இப்போது கிடைக்கும் பட்டியலில், திறந்திருக்கும் தளங்களில் எந்த தளம் அதிக மெமரி இடத்தினை எடுத்துக் கொள்கிறது என்று பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுத்து, “end process” என்பதனை அழுத்தி இயக்கத்தினை மூடவும். இன்னும் தெளிவாக குரோம் பிரவுசரின் மெமரி பயன்பாட்டினைப் பார்க்க வேண்டும் என்றால்,டேப் ஒன்றைத் திறந்து “about: memory” என டைப் செய்திடவும். இப்போது மற்ற பிரவுசர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டி ருந்தால், அவை எடுத்துக் கொள்ளும் மெமரி இடமும் காட்டப்படும். |
சிங்கங்களுடன் விளையாடும் மனித சிங்கம்! (படங்கள் இணைப்பு)
|
மீசைப் போட்டி
|
100 வயதை கடந்து இரட்டை சகோதரிகள் சாதனை!
|
கடலுக்குமேல் மாயமாக மறையும் கப்பல்கள்! (வீடியோ இணைப்பு - 2008)
விண்வெளியில் என்ன இருக்கிறது, சந்திரனில் என்ன இருக்கிறது, அல்லது செய்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், தாம் வசிக்கும் பூமியில் இருக்கும் சில அதிசயங்களை ஆராயத் தயங்குகின்றனர். காரணம் அங்குசென்றால் மரணம் தான் நிகழும் என்று பயமா எனத் தெரியவில்லை. அமெரிக்காவின் மயாமி, வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் இருந்து பராமுடா வரையும், அங்கிருந்து சான் -ஜான் -பெரு ரிக்கோ என்ற தீவுகள் அடங்கலாக ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் கடல் பகுதியையே பரமுடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக ஆபத்தான பகுதியாக கருதப்படுவது இதுதான்.
அக் கடல் பிரதேசத்தில் சென்ற கப்பல், சிறு வள்ளங்கள் அடங்கலாக சுமார் 1000 த்திற்கு மேற்பட்ட கப்பல்களை அது விழுங்கியுள்ளது. அப்பிரதேசத்தில் மட்டும் காலநிலை சில நிமிடத்தில் மாற்றமடைவதாகவும், அமெரிக்காவை கண்டு பிடித்த கொலம்பஸ், குறிப்புகளில் கூட அப் பிரதேசத்தில் வித்தியாசமான மின்னல் மற்றும் வெளிச்சங்கள் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் காந்த அலைகள் கடுமையாக அங்கு காணப்படுவதால், விமானத்தில் இயங்கும் கம்பியூட்டர் உட்பட பல கருவிகள் உடனடியாகவே பாதிக்கப்பட்டு அவ்வழியில் செல்லும் பல விமானங்கள் மாயமான முறையில், கடலினுள் விழுந்து மறைந்துள்ளது.
அப்பகுதியில் பறப்பில் ஈடுபடும், போர் விமானங்கள் கூட பல மாயமாக மறைந்துள்ளது. பரமுடா முக்கோணப் பகுதியில் கடலில் திடீர் திடீரென பாரிய குழிகள் தோன்றுவதாகவும் அக்குழிகளுக்குள்ளேயே, கப்பல்கள் சிக்குண்டு மறைவதாகக் கூறப்படுகிறது. திடீர் திடீர் எனத்தோன்றும் கரும்மேகக் கூட்டங்களில் இருந்து பலத்த இடிமின்னல்களும் அப்பகுதியில் வருவதால், விமானங்களும் பறப்பில் ஈடுபடுவது இல்லை. எது எவ்வாறு இருப்பினும் இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை மீறிய பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கை காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
இதுவரை மறைந்த கப்பல்களோ, அல்லது விமானங்களோ ஏன் காணமல் போனது என்று எவராலும் கூறமுடியாத நிலை இருப்பதாகவும், அப்பகுதியில் சில வகை பக்ரீரியாக்கள் கடலுக்கு அடியில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும் எண்ணிக்கையில் இவை மைல் கணக்கில் நீண்டு அகண்டு கடலின் அடிப்பகுதியில் காணப்படுவதாகவும் அவைவெளியிடும் ஒருவகை வாயுவால், அப்பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டு பருவமாற்றம், மற்றும் இடி மின்னல் தோன்றுவதாக சில விஞ்ஞானிகள் தெரிவித்தாலும், அதை எவரும் இதுவரை சரியாக நிரூபிக்கவில்லை. மர்மம் தொடர்கிறது.
கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம் குடிக்கின்றனர்’ என்கிறார் பாய்சன். ‘விலங்கினங்களின் ரத்தத்தை குடிக்கும் வவ்வால்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதும் மனிதர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்த தன் மனைவி, காதலி ரத்தத்தை குடிக்கின்றனர். அதுபோல பெண்களும் செய்கின்றனர். டிவி, இன்டர்நெட்டை பார்த்து சூப்பர்மென் போல தாங்களும் செய்யலாம் என்று நினைப்பதன் விளைவே இது; செக்ஸ் செய்கையின் உச்சம் தான் இது’ என்கிறார் சிட்னி பல்கலைக்கழக செக்சாலஜி பேராசிரியர் ஆடம். ‘பயம் தான் போபியா. அதுபோல, செக்ஸ் குஷிக்காக ரத்தம் குடிப்பது என்பது ‘ரென்பீல்டு சிண்ட்ரோம்’ என்ற மனோவியாதி. பெரும்பாலும், ஆண் தான் பெண்ணின் ரத்தம் குடிப்பான். ஆனால், ஆஸ்திரேலியாவில் தலைகீழாகவும் நடக்கிறது’ என்று குயின்ஸ்லாந்து மனோதத்துவ நிபுணர் டேவிட் கீவொர்த் கூறினார். சிட்னி நகரில் பல ஆண்டுக்கு முன் மோர்பஸ் என்ற சிறுவன், தன்னுடன் சண்டை போட்ட நண்பனை தாக்கி, அவன் ரத்தத்தை குடித்தான். அதன் பின் பெண்களின் ரத்தத்தை மட்டும் குடிக்க ஆரம்பித்தான். ‘பெண்ணின் ரத்தம் குடித்தால் ரொமான்சில் மிதக்கிறேன்’ என்று சொன்னான். இவனைப் போல, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் 300 பேர் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். |
சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி மீட்க்கப்படுவர் (வீடியோ இணைப்பு)
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள், இதை ஒரு சவாலாக ஏற்று உதவ முன்வந்தது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டு படிப்படியாக 3 குழிகளைத் தோண்டி அதனூடாக 33 பேரையும் சில்லி நாட்டு நிபுணர்கள் மீட்க்க உள்ளனர் . இங்கு 3 காணொளிகள் இனைக்கப்பட்டுள்ளன. அதில் எவ்வாறு இச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என விரிவாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த மீட்ப்பு நடவடிக்கை இன்னும் 2 தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.
ஒரே தினத்தில் 3 குழந்தைகள் பிறப்பு! : வருடத்தில் மட்டுமே மாற்றம்!
அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரே நாளில் நடத்து முடித்து விடலாம்.
இப்படியான அதிஷ்டம், ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களுக்கு இருக்கலாம்.
வெவ்வேறு வருடங்களில், அதே மாதத்தில், அதே தினத்தில் குழந்தைகள் பிறக்கும் அதிஷ்டம் 48 மில்லியன் பேரில் ஒருவருக்கே கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
அத்தகைய அதிஷ்டத்தினை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதோ, இதனை நிரூபிக்கின்றார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெனிபர் - ட்ரிஸ் அலாலி தம்பதியினர்.
இவர்களின் மூன்று குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளன என்றால், இவர்களும் அதிஷ்டசாலியான பெற்றோர் தானே?
அவர்களின் மூன்றாவது குழந்தையான சமி இம்மாதம் 7 ஆம் திகதி பிறந்துள்ளான். இதே தினத்திலேயே இக்குழந்தையின் அக்காவான நஜீலா ( வயது 5 ) , அண்ணன் அடம் (வயது 3 ) ஆகியோரும் பிறந்துள்ளனர்.
இக்குழந்தைகளின் தாயார் ஒரு தாதியாவார்.
"இது அதிஸ்டமாந்து. இதனை நாங்கள் திட்டமிடவில்லை. இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விடயம்" என குழந்தைகளின் தாயார் தெரிவிக்கின்றார்.
இதனை யாரும் நம்பவில்லையெனவும் தாம் பிறப்பத்தாட்சிப் பத்திரங்களைக் காட்டிய பின்னரே நம்பியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவர்களின் மூத்தகுழந்தை 2005 ஆம் ஆண்டு 7 ஆம் திகதியும் , 2 வருடங்கள் கழித்து இரண்டாவது மகனும் ஒரே வைத்தியசாலையிலேயெ பிறந்துள்ளனர்.
இது தொடர்பாக தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனைப் பெரும் பாக்கியமாகவே கருதுவதாகவும் குழந்தைகளின் தந்தையான அலி தெரிவிக்கின்றார்.
உண்மையிலேயே ஜெனிபர் - அலாலி தம்பதியர் பெரும் அதிஷ்டசாலிகள் தான். _
மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை!
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல மிளகாயை உணவில் அதிகமாகச் சேர்த்து விட்டாலோ அதன் சுவை முற்றிலும் மாறிவிடும் தன்மைகொண்டது.
தவறான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டால் சிறுவரின் வாயில் பச்சை மிளகாயை உடைத்துத் தடவிவிடும் அன்னையரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதனால் தான் மிளகாய் என்றாலே சிறுவருக்கு அலர்ஜி. சிலர் மிளகாயைக் கண்டாலே காத தூரம் ஓடுவார்கள்.
என்னதான் காரச் சுவைக்காக மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டாலும், உண்ணும் போது அதனைக் கவனமாக ஒதுக்கி விடுவதும் உண்டு. காரணம், மிளகாய் கடிபட்டால், உணவின் சுவையே அற்றுப் போய்விடும். காரமே எஞ்சி நிற்கும். அதற்கு மேல் உணவை உண்ண முடியாத நிலை கூட ஏற்பட்டுவிடும்.
இத்தகைய பயங்கரமான மிளகாயைச் சர்வ சாதாரணமாக ஒரு குழந்தை உண்கின்றதென்றால் ஆச்சரியமாக இல்லையா?
ஆம், பலஸ்தீனத்தைச் சேர்ந்த 20 மாதங்களே ஆன நாமன் அமீர் என்ற சிறுவன் பச்சை மிளகாய்களை சர்வ சாதாரணமாகச் சுவைத்து உண்கின்றான் என்றால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.
இவனே உலகின் மிகவும் வயது குறைந்த மிளகாய் உண்ணும் நபராகக் கருதப்படுகின்றான்.
இவன் பிறந்து 14 மாதங்கள் முதற்கொண்டே உணவிலுள்ள மிளகாய்களை உண்ண ஆரம்பித்து விட்டதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
படங்களைப் பார்த்தால் உங்கள் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடுமே!
ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( உத்தியோகபூர்வமானது)
ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.
இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்
மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.
இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
Download Skype 5.0 here
ஸ்கைப் 5.0 தொடர்பான காணொளி
பேஸ்புக்கின் ' தற்காலிக ' கடவுச் சொல் வசதி
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password).
பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.
இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.
உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுப்பினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும்.
இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது.
கடந்தவாரம் பேஸ்புக் ' ரிமோட் லொக் அவுட்' வசதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் இவ்வசதியை அனைவரும் பெறக்கூடியதாகவிருக்கும்.
தானாக நிறம் மாறும் நவீன ஆடை! (காணொளி இணைப்பு)
இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. இவ்வாடை ' பிசியூடோமோர்ப் ' என அழைக்கப்படுகின்றது.
' பிசியூடோமோர்ப் ' இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உடம்புப்பகுதி வெள்ளை நிறத்தால் ஆனது. மற்றைய பகுதி மெல்லிய குழாய்களினால் ஆனது.
இவ்வாடையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நிறச் சாயங்கள் ஆடைகளுக்குச் செலுத்தப்படுகின்றன. இச்சாயங்களின் மூலம் ஆடை, பலவித நிறங்களில் தோற்றமளிக்கின்றது.
இதனைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் சேர்க்கிட் 9 வோல்ட் மின்கலங்களால் வலுவூட்டப்படுகின்றன.
நிறச்சாயங்கள் தன்னிச்சையாக ஆடைகளின் மீது செலுத்தப்படுவதால் புதுவிதமான டிசைன்களில் ஆடைகள் காணப்படுவதாக இதனை உருவாக்கியுள்ள 'அனொவுக் விப்ரச்ட்' தெரிவிக்கின்றார்.
நவீன ஆடை இயக்கப்படும் முறையினை இக் காணொளியில் காணமுடியும்.
சமூகவலைப் பின்னல்களில் மலேசியருக்கு அதிக நண்பர்கள்
மேலும் ஈ-மெயில் பாவனையானது காலங்கடந்து விட்டதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.
பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று சுமார் 46 நாடுகளில் 50,000 பேரிடம் மேற்படி ஆய்வினை நடத்தியிருந்தது.
இவ்வாய்வின் முடிவுகளின் படி இணையப் பாவனையாளர்களில் அதிகமானோர் மின்னஞ்சல் பாவனையைவிட 'பேஸ்புக்' மற்றும் 'லிங்டின்' போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெகு நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, சீனா போன்ற நாடுகளில் சமூக வலைப் பின்னல்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அங்கே கணிசமானோர் மின்னஞ்சலை உபயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியர்கள் சராசரியாக 233 மற்றும் பிரேஸிலியர்கள் 231 நண்பர்களையும் சமூகவலைப் பின்னல் தளங்களில் கொண்டுள்ளனர். ஜப்பானியர்கள் சாராசரியாக 29 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.
சீனாவில் இணையப் பாவனையாளர்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 88 % மற்றும் பிரேஸிலியர்களில் 51 % வலைப்பதிவில் எழுதுகின்றனர். இது அமெரிக்காவை விட 32 % அதிகமாகும்.
இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகியவற்றின் பாவனை வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைத்தொலைபேசிகளின் மூலம் சமூகவலைப் பின்னலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.