Monday, November 1, 2010

காதல் ஒரு கணக்கு

காதல் என்பதென்ன? காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல்! ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும்.
‘மலரினும் மெல்லிது காமம்’ - என்றுதான் வள்ளுவன் குறிப்பிடுவான்.
காதலுக்குத் தனி அகராதி உண்டு அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும். பேருந்தில் ‘ஐயோ நிக்கிறாங்களே.. என்று எழுந்து இடம் கொடுத்தவனும்.. கும்பலாக நிற்கிறபோது, இந்த புக்ûஸக் கொஞ்சம் வெச்சிருக்கீங்களா...?‘ என்று தந்தபோது தயங்காமல் வாங்கி வைத்திருந்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதுண்டு. தன்னை உணரும் பருவத்தில், இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில், தான் கவனிக்கப்படுகிறோம், எனும்போது, மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது!.
படித்து முடித்த பிறகு குடும்பச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் சோர்ந்து போகும்போது, ’எப்படி இவ்வளவும் தாங்கறீங்க...?’ என்று ஆறுதல் வார்த்தைகள் பேசியவர் காதலனாக /காதலியாகக் கருதப்படுவதுண்டு. ‘இன்னாரோடு தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டால், காலம் முழுவதும் காப்பாற்றுவார்’ என்று பெண்ணின் நம்பிக்கையும் ‘இவள் என் மனம்போல் பணிவிடைகள் செய்வாள்’ என்று ஆணின் நம்பிக்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, அவர்கள் லட்சியக் காதல்களாகி விடுவதும் உண்டு!
இந்த மூன்று நிலைகளிலும் இணைத்துக் கொள்கிற, இணைந்துகொள்ள விரும்புகிற உணர்வைக் காதல் என்று பொதுப்படையாகச் சொல்கிறார்கள்!. காதலுக்கு மட்டும் தனி மரியாதை! வேலைவெட்டியில்லாத கவிதைகளும் வியாபாரம் பண்ணுகிற சினிமாக்களும் பொழுதைக் கொல்லுகிற கதைகளும் சேர்ந்து செய்த காரியம் இது. ‘காதல் பற்றி இனிமேல் புத்தகம் போடக்கூடாது... கவிதை எழுதக்கூடாது.. பிரசாரம் செய்யக் கூடாது..’ என்று ஒரு தடைச்சட்டம் போடுவது நல்லது.
நம் அறிவு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படட்டுமே! திரைப்படங்களில் அவளும் அவனும் தெரியாமல் மோதிக் கொண்டவுடன், உடம்பின் உரசலில் காதல் பிறந்துவிடுகிறது அவனோ, அவளோ கோபத்தின் வேகத்தில் அறைந்துகொள்ள... கண்ணீருக்குப் பதில் காதல் வந்துவிடுகிறது! உடல் ஊனமுற்ற ஆணின் மீதும் பெற்றோரால கொடுமைப் படுத்தப்படும் பெண்ணின் மீதும் ஏற்படும் இரக்கமும்பூடக் காதலாகச் சொல்லப்படு கிறது! ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள் வதே சமயங்களில் காதலாகப் பார்க்கப் படுகிறது.
மற்றவர்களை விட்டுவிட்டுப் பெற்றவர்களைக் கேட்போம். மகள் காதலித்தால் ‘எம் பொண்ணு சின்னக் குழந்தைங்க.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படியோ ஏமாந்திருக்கு...’ என்பார்கள் மகனாக இருந்தால், ‘ எம் புள்ள யாரையும் நிமிர்ந்து பார்க்காத பையன்... பாவி மக... என்ன மருந்து மாயம் வெச்சாளோ..? ‘ என்பார்கள். இப்போது காதல் வசப்பட்டவர் களிடம் வருவோம். அந்தப் பையன் அவ்வளவு சரியில்லையே.’ என்று சொல்லிப் பாருங்கள். அவரைப் பற்றி எனக்குத்தான் தெரியும்.. நல்லவர் தெரியுமா? என்பாள் பெண்.
‘இந்தப் பொண்ணு வேணாம் விட்டுடுடா.’. என்று சொல்லுங்கள். அவ என்னைத்தான் நம்பியிருக்கா.. விட்டுடுனு ஈஸியா சொல்றீங்களே... என்பான், பெற்றவர் களுக்குப் பத்து ரூபாய் கூடச் சம்பாதித்துக் கொடுக்காத மகன்! இந்தக் கிளர்ச்சிக்கு வயது வித்தியாசமே கிடையாது! ‘நாற்பத்தைந்து வயது மனிதர்மீது வருவது அறிவுபூர்வமான காதல்’ என்பாள் இருபது வயசுப்பெண். சரி, அப்படியென்றால் அந்த மனிதருக்கு இந்தச் சின்னப் பெண்மீது ஏற்படுவது என்ன...? ‘
அவருக்குப் பொண்டாட்டி சரியில்லப்பா.. அதான் பாசம் காட்டுன இடத்துல சாஞ்சுட்டாரு..’ என்று பழியை அவர் மனைவிமீது தூக்கிப் போட்டால், அந்தக் காதலுக்கும்(!) நியாயம் கிடைத்து விடுகிற உலகம் இது!
ரவியும் ஜான்சிராணியும் காதலர்கள். பாதுகாப்புக்காகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு எப்போதும் போலவே அவரவர் வீட்டில் இருந்தார்கள். அப்பாவோடு ஜான்சி அமெரிக்கா செல்ல நேர்ந்தது: ‘அப்பாகிட்ட பேசி சரி பண்றேன் ‘ என்று ரவியிடம் சொல்லிவிட்டுத் தான் போனாள் ஜான்சி.. ஆனால் அங்கே போனவள். அப்பாவின் விருப்பப்படி இன்னொரு திருமணத்துக்குச் சம்மதித்தாள். பைத்தியம் பிடித்த ரவி. ‘என் மாமனார்,என் மனைவியை மறைத்து வைத்திருக்கிறார் ‘ என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான்.
இரண்டு லட்சம் செலவு செய்து மகளோடு கோர்ட்டுக்கு வந்தார் அப்பா. கோர்ட்டில் ரவிவையைப் பார்த்து. ‘இவரை யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனாள் ஜான்சி. இதே மாதிரி இன்னொரு வழக்கு... கோர்ட்டுக்கு அமுதா வரும்போது அம்மா, அப்பா.. அத்தை மாமா என்று உறவுப் பட்டாளமே பாதுகாப்பாகக் கூட வந்தது. அமைதியாக நின்றாள் அமுதா. இவரை உனக்குத் தெரியுமா..? என்று மகேந்திரனைக் காட்டி நீதிபதி கேட்டபோது. அடையாளம் பார்ப்பதற்காக அருகில் போனாள். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. முன்கூட்டிப் போட்ட திட்டம் இல்லை. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு. அத்தனை கும்பலையும் மீறித் தடதடவென்று பிடித்தார்கள் ஓட்டம்...
பெற்றோர், போலீஸ் வழக்கறிஞர்கள், நீதிபதி, கோர்ட் என்று எந்தக் கவலையும் இல்லாமல் ஒரே ஓட்டம்தான்!. உணர்ச்சிவசத்தில் அதிரடியாக ஏதாவது செய்துவிட்டு பிறகு வருந்துவதும் திருந்துவதும்தான் பொதுவான காட்சிகளாகக் கண்ணில் படுகின்றன. மற்றபடி காதல் என்பது சாதாரண ஓர் உணர்வு மனதுக்கு இசைந்த ஒருவரோடு உடலாலும் இணைந்துவிட ஆசைப்படும் ஓர் உணர்ச்சி.. அவ்வளவுதான்! அந்தவிதமான உணர்வு, ஆசை வாழ்க்கையில் ஒரே முறை, ஒரே ஒருவர்மீது மட்டுமே வரும் என்பதெல்லாம், காதலியின் கால் மண்ணில் பட்டவுடன் காதலனுக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி மிகைப்படுத்தல்தான்!
ஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம், அமைப்புமுறை இப்படிப் பல காரணங்களுக்காகக் காதல் என்பது ஒருவரைத் தவிர இன்னொருவர்மீது ஏற்படாது என்று கொஞ்சம் அதிகமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், இரண்டாவது திருமணம் செய்கிற ஆண்கள்மீது ஏன் கோபப்படுகிறீர்கள் எனலாம்.? என் வாழ்க்கையில்... இலக்கிய மேடைகளிலும் திராவிடர் கழக மேடைகளிலும் எதிலுமே சமரசம் செய்து கொள்ளாத, கொள்கைப் பிடிவாதம் கொண்ட ஒரு போராட்டக்காரப் பெண்ணாகத்தான் நான் அறிமுகமானேன்... ‘இவரா...அவரா...?’ என்றெல்லாம் பலரோடு பேசப்பட்டு, யாரோடும் நான் இணைந்து வாழ முடியாது! என்று முடிவு செய்திருந்தேன்.
அந்த நேரத்தில் என்னைப் பற்றி ‘விடுதலை’ வைத்திருந்த கவலை, அக்கறை என்னைக் கவனிக்க வைத்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளாக நானும் விடுதலையும் ஒரே கொள்கையுடைய நண்பர்களாக இருந்தோம். ‘எத்தனையோ பொண்ணுங்க பொதுவாழ்க்கைக்கு வந்திருந்தாங்க. அவங்கள்ல பலர், கொள்கையே இல்லாம வெறும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவே நின்னுட்டதுண்டு. கல்யாணம் பண்ணிட்டு, அப்படியே மெள்ள விலகிப் போனவங்களும் உண்டு.
அருள்மொழிங்கிற நெருப்பும் அப்படி அணைஞ்சு போயிடக்கூடாது. திருமணம். குழந்தை குடும்பம்கிற எந்த மாற்றங்களாலும் அருள்மொழி தொலைஞ்சு போயிடக் கூடாது என்கிற அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்தது. நம்முடைய உணர்வுகளையும் வாழ்க்கைமுறைகளையும் மதிக்கிற இந்த நண்பரோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது, மற்றபடி இதில் காதல் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை! பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும்தான் எங்களை இணைத்தது!
காதல் என்பது,மனமும் உடலும் போடும் சிக்கலான கணக்கு என்பதுதான் என் முடிவு ‘காதல் அடைதல் உயிரியற்கை‘ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியார் சொல்கிறார்... ‘காதல் என்பது தெய்வீகமானது என்று சொல்வதிலிருந்தே இரண்டுமே பொய் என்று புரிந்துகொள்ளலாம்...’

பூமி முழுவதும் வெப்ப வேறுபாடு காணப்படுவதற்கான காரணங்கள் யாவை?

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!
வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.
3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனி மதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…
* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

செவ்வாயினை நோக்கி ஒரு விண்வெளி விமானம்

சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள்.
அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும், போபிஸெர் (Frobisher) இனால் Northwest Passage இன்னூடாக கரைதட்டிய தீவுகள்தான் கனடாவின் மேலுள்ள குட்டிக் குட்டித் தீவுகளாகவும் இந்த உலகிற்கு அறிமுகமாயின. அவர்களின் அசாத்திய துணிச்சல்தான் மனிதனிடத்தில் புதுப்புது தேசங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களைப் போல அசாத்திய துணிச்சலும் தியாகமும் நிறைந்த நான்கு விண்வெளி வீரர்களை செவ்வாயில் தரையிறக்கி அங்கே மனிதக் குடியேற்றத்தின் முதலாவது படியினை அடையப் போகின்றது நாசா. அவர்களுக்கு பூமியில் இருந்து உணவு போன்ற அத்தியவசியமான தேவைகள் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் அவர்கள் செவ்வாயில் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு மனிதக் குடிறேற்றம் அங்கு நடைபெறத் தொடங்கும்.
Hundred Year Starship என்றும் இந்த ஒருவழிப் பயணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட $10 பில்லியன் அமெரிக்கன் டொலருக்கு மேல் செலவாகும். இதனால்த்தான் இந்தப் பணயம் ஒருவழிப்பயணமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இறுதியாக 2007 ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தினை நோக்கி ஏவப்பட்ட நாசாவின் Phoenix lander 2008 இல் செவ்வாயின் வட துருவத்தில் தரையிறங்கியிருந்தது. செவ்வாயின் ஒழுக்கிற்கும் பூமி்யின் ஒழுக்கிற்கும் இடைப்பட்ட தூரம் 34 மில்லியனில் இருந்து 250 மில்லியன் மைல்களுக்கு இடைப்பட்டாக இருக்கின்றது. இதனால் விண்வெளி விமானங்களின் பயண நேரம் மாதக்கணக்காக நீள்கின்றது. இதன் காரணமாக இந்த குடியேற்றத்திட்டத்திற்கு அணுக் கருச் சக்கியினை எரிபொருளாகப் பயன்படுத்தி பயணக் காலத்தினை நான்கு மாதங்களாக குறைக்கத் திட்டமிடப்படுகின்றது.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சிவப்புக் கிரகமே பூமியினை ஒத்த உயிர் வாழ்க்கைக்கு தேவையான காரணிகளை கொண்டிருக்கின்றது. அங்கு துருவப் பிரதேசங்களில் உறைநிலையில் காணப்படும் பனிகட்டிகள் உயிரின வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கும். மேலும் செவ்வாயில் நிலவும் காலநிலையும் பூமியில் நிலவும் காலநிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதா இருக்கின்றது. ஆனால் செவ்வாயில் வளி மண்டலத்தில் உள்ள காபனீர்ரொட்சைட்டின் செறிவு மிக அதிகம். எனவே அங்கு செல்லும் மனிதர்களுக்கு ஒட்சியன் கவசங்கள் இன்றியமையாததாகும்.
மனிதனின் காலடி இதுவரை பதியாத தடங்களை நோக்கிய இத்தகைய மனிதனின் பயணங்கள், புதுப் புதுக் கிரகங்களுக்கு மனிதனை ஏற்றுமதி செய்யும் திறனை வழங்கப் போகின்றது. இவ்வாறு செல்பவர்கள் அங்கே தமது காலணிகளை உருவாக்கி தாமாக வாழத் தொடங்கி விடுவார்கள். அங்கே மனித இராட்சியம் நிறுவப்படும். சொல்லப் போனால் பூமியில் கருவுற்ற மனிதன் தன் சிறகுகளை மெல்ல விரித்து பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கப் போகின்றான். இது இயற்கையின் சமநிலையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றதோ தெரியாது. நாடுகளுக்கு இடையிலே நடைபெறும் எல்லைப் போர்களும் இனங்களுக்கு இடையே நடைபெறும் உரிமைப் போரும் இனிமேல் கிரகங்களுக்கு இடையே நடைபெறக்கூடும். அதைவிடவும் கொலம்பஸினால் வட அமரிக்காவின் செவ்விந்தியருக்கும், ஸ்பெயினில் இருந்து நாடுகள் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்களால் மாயன்ஸ், இன்காஸ் இற்கும், ஐரோப்பியக் கைதிகளால் அவுஸ்ரேலிய பழங்குடியினருக்கும் நடந்த சோகமான இரத்தத்தால் எழுதிய சரித்திரங்கள் இனிமேல் மனிதன் என்றும் இந்த விலங்கினத்தால் வேற்றுக் கிரகங்களின் சுதேச வாசிகளுக்கும் நிட்சயமாக நடக்கப் போகின்றது. அதற்கான முதற் படிதான் இந்த செவ்வாய் நோக்கிய மனிதனின் நுாற்றாண்டு நட்சத்திரப் படகுத் திட்டமாகும்.

சிம்பன்சிஸ் (Chimpanzees), கொரில்லா (Gorillas), கியூமன்(humans), ஒராங்குற்றான்ஸ் (Orangutans) என்பவற்றிற்கு மூலக்குடும்பமாக இருக்கும் Hominidae இனில் தொடங்கி ஆபிரிக்கக் காடுகளில் ஆரம்பித்த Homo Ergaster இன் பணயங்கள் இன்று Homo Sapiens Sapiens(modern humans) என்னும் இன்றைய கூர்ப்பு விலங்காகி நாளை விண்ணில் வசிக்கப் போகின்றான். ஒருவேளை இந்த Homo Sapiens Sapiens செல்லும் கிரகங்களில் இவனை விட வலுவான கூர்ப்பினம் இருக்குமானால்.. அது Homo Sapiens Sapien தன் முடிவினை தானே தேடிச் செல்வதாய் இருக்கும்.

சூரியனை போல இருமடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் (மின் இயக்கமற்ற) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது:
சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது. அணுக் கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது.
இந்த நட்சத்திரத் தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். இது விண்வெளிக் கோளத்தில் சுற்றி வரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும். இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார்.

இல்லற வாழ்க்கை இனித்திட...

திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌ங்கால‌த்து‌ப் ப‌யி‌ர், ‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடு‌த்த வர‌ம்.. எ‌ன்பது போ‌ன்ற பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் அமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது.
‌திருமண‌ம் எ‌ன்பது பெ‌ற்றோரா‌ல் பா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌ல் த‌ற்போது காத‌ல் ‌திருமண‌ங்களு‌ம் அ‌திகள‌வி‌ல் நட‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் எ‌ந்த வகையான ‌திருமணமாக இரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ள் ஒ‌த்து‌ப் போனா‌ல் ம‌ட்டுமே அவ‌ர்களது வா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம்.
‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌ம் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.
‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ற்கே‌ச் செ‌ல்லாம‌ல், கணவ‌னி‌ன் கொடுமைகளை‌த் தா‌ங்க முடியாம‌ல் அ‌ல்லது கணவ‌னி‌ன் குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஒ‌த்து போகாம‌ல் தா‌ய் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்று வாழு‌ம் பெ‌ண்களு‌ம் அ‌திக‌‌ம். பெரு‌ம்பாலு‌ம் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, கணவரது ‌வீ‌ட்டா‌ர் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல ‌விவாகர‌த்துகளு‌க்கு அடி‌ப்படையாக உ‌ள்ளது.
கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.
இதுகு‌றி‌த்து ஒரு நகை‌ச்சுவை ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது காத‌லி‌க்கு‌ம் போது காதல‌ன் பேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு மனை‌வி பேசுவா‌ள், கணவ‌ன் கே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு இருவருமே பேசுவா‌ர்க‌ள் ஊரே‌க் கே‌ட்கு‌ம் எ‌ன்பது போல குடு‌ம்ப வா‌ழ்‌க்கை ஆ‌கி‌விட‌க் கூடாது.
குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன.
இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.
எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று அவருடனான வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌ல் முடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ள்ளன.)
எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.
அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ள் துவ‌ங்‌கி அதை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டு பு‌ண் ‌புரையோடி‌ப் போன சூ‌ழ்‌நிலை‌யி‌ல் த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக நாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்து எ‌ன்ப‌தி‌லாவது த‌ம்ப‌திகளு‌க்கு ஒ‌த்த கரு‌த்து ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு எ‌லியு‌ம் பூ‌னையுமாக இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌ம் உ‌ண்டு.
‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைன வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.
இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட... என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.
இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது.
இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.
‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.
* ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.
* வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!
* விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
* உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
* விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.
* செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம்,
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்)
சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்.
அனுசரித்துப் போகுதல்.
மற்றவர்களை மதித்து நடத்தல்.
.
ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே

சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம் தவறா‌ல் சமுதா‌ய‌த்‌தி‌ல் எ‌ந்த பெரு‌ம் ‌சி‌க்கலு‌ம் உருவாகாது. ஆனா‌ல் அதே தவறை பெ‌ண் செ‌ய்யு‌ம் போது பல கே‌ள்‌வி‌க்கு‌றிக‌ள் எழு‌ம்.
உதாரணமாக, ஒரு ஆ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடலா‌ம். அதனா‌ல் அவனு‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல் ஒரு பெ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடுவதா‌ல் க‌ர்‌ப்பமுற நே‌ரிடு‌ம். இதனா‌ல் அவ‌ள் பெ‌ற்றெடு‌க்கு‌ம் ‌பி‌ள்ளை‌யி‌ன் எ‌தி‌ர்கால‌ம் கே‌ள்‌வி‌க்கு‌‌றியாகலா‌ம்.
இதே‌ப்போல, ‌‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ஆ‌ண் வேறு ஒரு பெ‌ண்ணுட‌ன் வா‌ழ்‌ந்தாலு‌ம் சமுதாய‌த்‌தி‌ல் இர‌ண்டா‌ம் தார‌ம் எ‌ன்று பெய‌ர் வை‌த்து ‌விடுவா‌ர்கள். ஆனா‌ல் இதே ஒரு பெ‌ண் வேறு ஆணுட‌ன் தொட‌ர்பு கொ‌ண்டா‌ல், அது அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தையே ‌சீ‌ர்குல‌ை‌த்து ‌விடு‌ம்.
ஒரு ஆ‌ண் ‌பிடி‌த்த பெ‌ண்ணை பெ‌ற்றோரு‌க்கு‌த் தெ‌ரியாம‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். அத‌ற்கு அவ‌ன் காத‌லி‌‌ச்ச பொ‌ண்ணை‌க் க‌ட்டி‌க்‌கி‌ட்டா‌ன் எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல், ஒரு பெ‌ண் இதை‌ச் செ‌ய்தா‌ல் அவ‌ள் ஓடி‌ப் போ‌ய்‌வி‌ட்டா‌‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.
இது போல ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌ல் வாழு‌ம் பெ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் ஆணை ந‌ம்‌பி ‌‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதா‌ல், அவ‌‌ள் வா‌ழ்‌க்கை ம‌ட்டு‌ம் பா‌தி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை, அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தாரு‌ம் பல வ‌ழிக‌ளி‌ல் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.
பெ‌ண் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் து‌க்க‌த்தை ‌விட, அதனா‌ல் ‌ஏ‌‌ற்படு‌ம் அவமானமே அவ‌ர்களை ‌நிலைகுலைய‌ச் செ‌ய்து‌விடு‌ம். உ‌ற்றா‌ர், உற‌வின‌ர்களு‌க்கு‌ம், அ‌ண்டை ‌வீ‌ட்டாரு‌க்கு‌ம், பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்கு‌ம் கே‌ள்‌வி‌க்கு சொ‌ல்வத‌றியாது கல‌ங்கு‌ம் பெ‌ற்றோ‌ரி‌ன் ‌நிலை ப‌ரிதாப‌த்து‌க்கு‌ரியது.
‌சில‌ர் இ‌ந்த அவமான‌த்தை தா‌ங்க இயலாம‌ல் த‌ற்கொலை வரை செ‌ல்வது‌ண்டு. ‌சில‌ர் ஊரை கா‌லி செ‌ய்து கொ‌ண்டு செ‌ன்று‌விடுவது‌ம், பெ‌‌ற்றவ‌ர் வேலையை ‌வி‌ட்டு ‌வி‌ட்டு வேறு ஒரு இட‌த்‌தி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வது‌‌ம் உ‌ண்டு.
உ‌ங்க‌ள் பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்பவ‌ர்களு‌க்கு எ‌ந்த பெ‌ற்றோரா‌ல், எ‌ன் மக‌ள் ‌காத‌லி‌த்தவனை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ள் எ‌ன்று சொ‌ல்ல முடியு‌ம். கூ‌னி‌க் குரு‌கி அவ‌ர்க‌ள் ‌நி‌ற்பதை‌க் க‌ண்டு கே‌ள்‌வி கே‌ட்டவ‌ர்களே பு‌ரி‌ந்து கொ‌‌ண்டா‌ல்தா‌ன் உ‌ண்டு.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு செ‌ல்லு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு ‌திருமணமாகாத சகோத‌ரிக‌ள் இரு‌ப்‌பி‌ன், அவ‌ர்களது வா‌ழ்‌க்கை இ‌ன்னு‌ம் மோசமா‌கிறது. ‌திருமண‌த்‌தி‌ற்காக வர‌ன் தேடு‌ம் போது கே‌ட்கு‌ம் முத‌ல் க‌ே‌ள்‌வி அவ‌ர்களது குடு‌ம்ப‌த்தை‌ப் ப‌ற்‌றியதுதா‌ன். அ‌தி‌ல் இ‌ப்படி ஒரு ‌சி‌க்க‌ல் ‌இரு‌ப்‌பி‌ன், மா‌‌ப்‌பி‌ள்ளை ‌வீ‌ட்டா‌ர் ச‌ற்று தய‌க்க‌ம் கா‌ட்ட‌த்தா‌ன் செ‌ய்வா‌ர்க‌ள். அ‌க்கா‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல் த‌ங்கை எ‌ப்படி இரு‌ப்பாளோ எ‌ன்று வா‌ய்‌வி‌ட்டு பேசுபவ‌ர்களு‌ம் உ‌ண்டு.
சமுதாய‌த்‌தி‌‌ன் ஆ‌ணி வேரே பெ‌ண்தா‌ன். இதனா‌ல்தா‌ன் ஆ‌ணி வே‌ர் எ‌ந்த வகை‌யி‌ல் தவறு செ‌ய்ய நே‌ர்‌ந்தாலு‌ம் அதனா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது முழு மரமு‌ம்தா‌ன் எ‌ன்று பய‌ந்துதா‌ன் பெ‌ண்களு‌க்கு இ‌வ்வளவு க‌ட்டு‌ப்பாடுகளையு‌ம் இ‌ந்த சமுதாய‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ளது.
காத‌லி‌ப்ப‌தி‌ல் தவ‌றி‌ல்லை, காத‌லி‌ப்பதை பெ‌ற்றோ‌ரிட‌ம் கூ‌றி அவ‌ர்களது ச‌ம்மத‌த்தை வா‌ங்‌‌கி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌‌ள். அவ‌ர்களது முழு ச‌ம்மதமு‌ம், அவ‌ர்களது வா‌ழ்‌த்து‌க்களு‌ம்தா‌ன் உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ஸ்‌திவார‌ம். உ‌ங்க‌ள் காத‌லின ‌‌மீது உ‌ங்களு‌க்கு ந‌ம்‌பி‌க்கை இரு‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை ச‌ம்ம‌தி‌க்க வை‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ந‌ம்பு‌வீ‌ர்க‌ள்.
உ‌ங்க‌ள் காதலை வெ‌ற்‌றியடைய‌ச் செ‌ய்வத‌ற்காக உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை தோ‌ற்கடி‌த்து‌விடா‌தீ‌ர்க‌ள்.

மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன்

மொஷில்லா ப்ரவுசரில் காணப்படும் குறைபாடுகளை கண்டுபிடித்து சொல்பவருக்கு $3000 பரிசினை வழங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் மொஷில்லா அறிவித்திருந்தது.
Alex Miller எனும் 12 வயது சிறுவனுக்கே அந்த 3000 டொலர் பரிசு போய்ச் சேர்ந்துள்ளது. மொஷில்லா பாவனையின் போது அதன் மெமரி கையாள்கையில் காணப்பட்ட குறைபாட்டினைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இந்தச் சிறுவனுக்கு இந்தப் பரிசுத்தொகை கிடைத்தது.
Alex Miller தற்போது அமெரிக்காவில் தரம் 7 ல் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறான். Alex Miller ஒரு நாளைக்கு சராசரியாக 90 நிமிடங்கள் கணணியை பாவிப்பார். அந்த 90 நிமிட பாவனையின் போது கண்ட குறைபாடு உலக மொஷில்லா பாவனையாளருக்கே உதவி செய்யப் போகின்றது. இவ்வாறான சிறுவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்.

குழந்தைகள் உங்கள் IPhone/Moblie பாதுகாப்பாக பயன்படுத்த Woogie

நம்முடைய IPhone , மொபைல் ,IPod போன்றவற்றில் குழந்தைகள் விளையாட கேம்ஸ் puzzles நிறுவி கொடுக்கநினைத்தாலும் ஆர்வமாக எடுத்து விளையாடும் போது நாம் அவர்கள் அதனை கீழே போட்டு விடுவார்களோ அல்லது தண்ணீரில் விழுந்து விடுமோ என பல்வேறு கவலையுடன் வேறு வேலை செய்யமுடியாமல் கண்காணித்து கொண்டே இருப்போம்.

இதற்க்கு தீர்வு காணும் வகையில் Woogie எனப்படும் ஆறு கரங்கள் போன்ற இந்த touch screen player தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.( மேலே உள்ள படத்தில் உள்ளது ) இதனால் உங்கள் குட்டீஸ் தங்களது விளையாட்டுகளை நீங்கள் உங்கள் IPhone இல் நிறுவி அவர்களுக்கு கொடுக்கலாம்.

இதனை மூன்று வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் எளிதாக கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது ..முழுமையான பாதுகாப்பு நிச்சயம் . இதுவே ஒரு toy போல வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ..கீழே உள்ள வீடியோ பாருங்கள் தெளிவாக இதன் அவசியம் புரியும்.

உங்கள் குழந்தைகள் சிந்தனையை வளர்க்கும் பல விளையாட்டுகள், online puzzles, maths quiz போன்றவற்றை பழக்கப்படுத்த இனி கவலையே இல்லை.


பெண்களின் முத்தம்..!

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :
* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.
* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
* முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணு அணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல

சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.
கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.
நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, “மூளை செயல்திறன் குறைபாடு’ என்று அழைக்கிறோம். ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.
தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. கரு பாதுகாப்பில் குறைபாடு, சந்தேகமான அறிகுறிகளைக் கண்டறிவதில் தோல்வி, குழந்தை பிறப்பதில் சிக்கல், மூச்சுத் திணறல், குழந்தை பிறந்ததும் அதை உயிர்பித்தலில் குறைபாடு ஆகியவையே காரணம் என, கருதப்பட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது பழங்கதையாகி விட்டன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம். மகளுக்கு திருமண ஏற்பாடு செய்வதற்கு முன், இது போன்ற தடுப்பூசிகளை, அவளுக்குப் போட வேண்டும் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை.
தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும். இதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.
பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.
மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. இந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.
மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.
விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.
இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, “லொடலொட’வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; “வழவழ’ உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும்.
பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.
மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.
* உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.
* எலும்பு முறிவு, எலும்பு அழற்சி ஆகியவற்றைக் கையாள, எலும்பு சிகிச்சை மருத்துவர் தேவை.
* தசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.
* சுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை.
மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்!

மூளை செயல்திறன் குறைபாடு வளரும் நோய் அல்ல

சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.
கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.
நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, “மூளை செயல்திறன் குறைபாடு’ என்று அழைக்கிறோம். ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.
தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. கரு பாதுகாப்பில் குறைபாடு, சந்தேகமான அறிகுறிகளைக் கண்டறிவதில் தோல்வி, குழந்தை பிறப்பதில் சிக்கல், மூச்சுத் திணறல், குழந்தை பிறந்ததும் அதை உயிர்பித்தலில் குறைபாடு ஆகியவையே காரணம் என, கருதப்பட்டது. இந்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது பழங்கதையாகி விட்டன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம். மகளுக்கு திருமண ஏற்பாடு செய்வதற்கு முன், இது போன்ற தடுப்பூசிகளை, அவளுக்குப் போட வேண்டும் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்வதில்லை.
தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும். இதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.
பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும்.
மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. இந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.
மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.
விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.
இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, “லொடலொட’வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; “வழவழ’ உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும்.
பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.
மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.
* உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.
* எலும்பு முறிவு, எலும்பு அழற்சி ஆகியவற்றைக் கையாள, எலும்பு சிகிச்சை மருத்துவர் தேவை.
* தசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.
* சுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை.
மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்!

நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக!

நாய் நன்றியுள்ள பிராணி. நாம் உணவிட்டால் நன்றியுடன் வாலாட்டும், வீட்டைப் பாதுகாக்கும் என்று கூறி வருகிறோம். நாய் வாலாட்டுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்தது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… நாய்கள் வாலாட்டுவது (நன்றிக்காக அல்ல) மகிழ்ச்சிக்காக. அதுவும் எந்த திசையில் வாலாட்டுகிறது என்பதில்தான் விஷயமே உள்ளது. நாய்கள் இடது பக்கமாக வாலாட்டினால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். 56 சதவீத நாய்கள் இப்படித்தான் வாலாட்டுகிறதாம்.
21 சதவீத நாய்கள் எப்போதும்போல் வாலாட்டாமல் இருக்கின்றன அல்லது எப்போதாவது வலதுபக்கமாக வாலாட்டுகின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டு கின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டுகின்றன. நாய்கள் வாலாட்டுவது வேதித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

நாம் அதற்கு தேவையானதை வழங்கிவிடுவதால் அவை நம்முடன் மிக நெருக்கமாகிவிடுகின்றன. நாய்களின் வாலை வெட்டிவிடுவதன் முலம் அவை மற்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் திறனை தகர்த்துவிடுகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்தது ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகும்.

யாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.

கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.

எனினும் விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.

தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.



காகத்திற்கு ஆறாம் அறிவு உள்ளதா? (வீடியோ இணைப்பு)





பாம்பும் எலியும் ஒருகூண்டில் வாழமுடியுமா? (வீடியோ இணைப்பு)



ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமையை காணொளியில் காண்பித்திருக்கும் [August,27,2010] அல்-ஜசீரா தொலைக்காட்சி! (வீடியோ இணைப்பு)


சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் எல்.ரி ஆரியவதி ( வயது 49) இற்கு நேர்ந்த சித்திரவதைகளை காணொளி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றது அராபிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையான அல் ஜசீரா.

சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகளால் அறையப்பட்டு ஆரியவதி சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்று பிள்ளைகளின் தாய்.

ஆயினும் சவூதி அரேபியா இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து உள்ளது.

உலகிலேயே அதிகவிலை கொண்ட நவீன கார் அறிமுகம் (வீடியோ இணைப்பு)





இந்தியாவில் ரூ.16 கோடி மதிப்புள்ள நவீன ரக சொகுசு கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. உலகிலேயே அதிக விலை கொண்ட இந்த காரின் பெயர் 'புகட்டி வேரோன்' என்பதாகும்.

மணிக்கு 407 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கார்கள் ஏற்கனவே இங்கு புழக்கத்தில் உள்ளன. அந்த வரிசையில் அவற்றை விட அதிகவிலை கொண்ட புகட்டி வேரோன் காரும் சந்தையில் அறிமுகமாகிறது.

இது பற்றி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் கய் காக்வெலின் குறிப்பிடும் போது, "புகட்டி வேரோன் கார் வடிவமைப்பின் உச்சமான தாகும். இதன் முன்னோட்ட விற்பனையாக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் விற்பனைக்கு தருகிறோம்." என்றார் காய் காக்வெலின்.

உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு கொண்ட நானோ கார் முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை கொண்ட புகட்டி வேரோன் வரை விதவிதமான கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பெருமைக்குறியதாகும்.

முதலையிடம் யானை மாட்டிக்கொண்டால்!



ஆபிரிக்க காட்டில் யானைக்குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அந்த சதுப்பு நிலத்தில் மறைந்திருந்த முதலையிடம் குட்டி யானை மாடிக்கொண்ட காட்சியை, சுற்றுலாப் பயணி ஒருவர் பிரத்தியேகமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். குட்டி யானையின் தும்பிக் கைகளை முதலை மிக இறுக்கமாக கவ்விப்பிடித்ததால் அது மூச்சுத்திணறலில் தவித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு நின்ற சிலர் முதலயை திசைதிருப்ப முயன்றும் தோற்றுப்போயினர். அதுவோ பிடித்த பிடியை தளர்த்துவதாக இல்லை. குட்டியானை நீண்ட நேரமாகப் போராடியது.

அத்தோடு அங்கு நின்ற பல சுற்றுலாப் பயணிகள் ஒருவாறு முதலையை ஒருவாறு திசை திருப்பினர். இதனால் அது தனது வாயைத் திறக்க நேரிட்டதால் யானைக் குட்டி தப்பித்து ஓட ஆரம்பித்ததை நேரில் பார்த்த ஒருவர் ஆங்கில செய்திச்சேவை ஒன்றிக்கு தெரிவித்துள்ளார். வழமையாக முதலைகள் ஒருபோதும் யானையைக் குறிவைப்பது இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த முதலை யானையை உண்ண முனைந்தது அபூர்வமான விடயமாகவே கருதப்படுகிறது.

கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.

கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.

கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.

கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது.

ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல்லது ஒரு கருத்தியலுடன் தொடர்புபட்டதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்களின் ஒரு ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக பரிசோதனைக்கு உட்படும் ஒரு தொண்டர், நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் பற்றிக்கொண்டு ஜொலிக்கும்.

பரிசோதனைக்கு வந்த தொண்டர்களுக்கு தொடர்ச்சியான பல படங்களை காண்பித்தபோது, பல தரப்பட்ட விடயங்கள், பொருட்கள் மற்றும் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட நியூரோன்களை ஆய்வாளர்களால் அடையாளம் காண முடிந்தது.

தூங்கும் தொண்டர்களின் மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்ள விழைவது என்பவைதான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த முயற்சியாகும்.

பச்சிளம் குழந்தை பரிதாப பலி! குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூர தாய் (வீடியோ இணைப்பு)

மும்பையில் மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாயின் கொடூர செய்கை சி.சி.டி.,வியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா என்ற பெண் ஒன்றரை மாதமே ஆன தனது இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இரண்டு குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மிகவும் எடை குறைவாக இருந்தன.

இவற்றில் ஒன்று ஆண் குழந்த�ை, ஒன்று பெண் குழந்தை. இந்நிலையில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி., வி கேமரா பதிவை பார்த்துள்ளது. அப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் நுழைவது பதிவாகியிருந்தது.

ஆனால் வெளியில் வரும் போது தீபிகா கையில் குழந்தை இல்லை. சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் தீபிகாவி�டம் தீவிரமாக விசாரிக்க பெண் குழந்தையை தான் ஜன்னல் வழியாக �வெளியே தூக்கி எறிந்ததாக தெரிவித்தார் தீபிகா.

மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர். ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டதால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் எலிகள் கடித்து குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்தியிருந்தன.

தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபிகாவின் மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்ததும் தீபிகா கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

தீபிகாவின் கணவர் இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும். பெண் குழந்தை என்று தான் எப்போதும் பேதம் பார்த்ததில்லை என்றார். இருப்பினும் தனது மனைவியின் செயல் அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

80 களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தம் அடித்த காட்சிகள் (படங்கள் இணைப்பு)

இன்று உலக வல்லரசான அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக இருக்கும் பராக் ஒபாமா அவர்களின் இளமைக் காலப் படங்களே இவையாகும்.1980 களில் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் சிலவற்றில் ஒபாமா சிகரெட்டுடன் இருப்பதைப் படங்களில் காணலாம்.

இன்று உலக வல்லரசான அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக இருக்கும் பராக் ஒபாமா அவர்களின் இளமைக் காலப் படங்களே இவையாகும்.1980 களில் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள் சிலவற்றில் ஒபாமா சிகரெட்டுடன் இருப்பதைப் படங்களில் காணலாம்.




















உலகப் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் திடீர் மரணம் (வீடியோ இணைப்பு)


உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தின் போது புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் இன்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக போல் பாராமரிக்கப்பட்டு வந்த மீன் காட்சியக ஊழியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

" போல் ஒக்டோபஸின் எதிர்பாராத மரணம் எங்களை கடும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. இரவு உறக்கத்திலேயே அது உயிரிழந்துள்ளது. அதன் நினைவாக அது புதைக்கப்படவுள்ள இடத்தில் நினைவுத் தூபியொன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளோம்" எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ன உதைபந்தாட்ட போட்டிகளில் ஜேர்மனி பங்குபற்றிய மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களை முன்கூட்டியே, சரியாகத் தெரியப்படுத்தி ஒக்டோபஸ் பெரும் புகழடைந்திருந்தது.

ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்


நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி.

மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார்.

எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார். மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார்.

ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன்.

இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம் (வீடியோ இணைப்பு)


ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டும் ' என்ற சட்டதின் காரணமாக 8 மாத கர்ப்பணிப் பெண் ஒருவரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று அவருக்கு வயிற்றில் இருந்த குழந்தையை ஊசி ஏற்றிக் கொன்ற கொடூர சம்பவமொன்று சீனாவில் இடம் பெற்றுள்ளது.

தென் சீனக் கரையோரப் பகுதியில் சியாஹோ அல் யிங் என்ற பெண்ணின் வீட்டிற்கு திடீரென நுழைந்த 12 அரச அதிகாரிகள் அந்தப் பெண்ணை மோசமாக தாக்கியுள்ளனர்.

பிறகு வைதியர்கள் 36 வயதான இப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இறப்பதற்கான ஊசியை செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டிடத்தொழிலாளியான அப் பெண்ணின் கணவர் தனது மனைவியின் வயிற்றில் அதிகாரிகள் மோசமாக உதைத்ததாகவும் பின்னர் சுமார் 3 நாட்கள் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு ஊசியை செலுத்தி தனது குழந்தையைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள அப்பெண் கடும் தாக்குதலுக்க்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் "இறந்த என் குழந்தை இன்னும் வயிற்றில் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.

மனதை உருக்கும் இச்சம்பவம் மிகக் கொடூரம் எனினும் இது போன்ற விடயங்கள் சீனாவில் சர்வசாதாரணம்.

சனத்தொகையைக் கட்டுப்படுத்த சீனாவில் வருடாந்தம் சுமார் 13 மில்லியன் கருக்கலைப்புக்கள் இடம் பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போலீசையும் மக்களையும் சிம்பன்சி குரங்கு படுத்தும்பாடு- சுவாரஸ்யம்! (வீடியோ இணைப்பு)


அமெரிக்கா கன்சாஸ் நகரத்திலுள்ள வீடொன்றில் இருந்த குரங்கு அவ்வீட்டின் சொந்தக் காரருக்குத் தெரியாமல் கதவுகளைக் கடந்து வெளியே வந்து தன்பாட்டுக்கு அட்டகாசம் படுத்தியுள்ளது. 300 இறாததல் எடையுடைய இவ்வாலில்லாக் குரங்கு தன்பாட்டுக்கு கதவுகளைத் திறக்கக் கூடியதாக இருந்தால் மக்களின் பாதுகாப்புக் குறித்து போலீசாருக்கும் திண்டாட்டம் ஆகிவிட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையேயும், மைக்கேல் என்னும் நபர் தனது காதலியுடன் தனது வீட்டுக் கூரையில் தவழ்ந்தபடி அக்குரங்கினை வீடியோ படம் பிடித்துள்ளார்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் யன்னல்களை இக்குரங்கு தனது முழங்கையால் அடித்து உடைக்க முன்னர் அவ்வாகனத்தின் கூரையில் பாய்ந்து விளையாட்டுக் காட்டியுள்ளது. அந்த நேரத்தில் அவ்வாகனத்தினுள் ஒரு போலீஸ்காரராவது இருந்திருக்க வேண்டும்.

இக்குரங்கை நோக்கிப் போலீசார் சுட்ட போதிலும் குரங்கை அடக்க முடியவில்லை. ஆனால் மக்களுக்கு இக்குரங்கால் ஆபத்து நேரும் பட்சத்தில் அதனைச் சுட்டு வீழ்த்துவதற்கு போலீஸ் தங்கள் கைத்துப்பாக்கிகளுடன் தயாராக இருந்தனர். இறுதியில் குரங்கை வளர்த்துவந்த குறித்த வீட்டுக்காரர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கூண்டுக்குள் அடைத்துவிட்டார்.