இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம். ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம். சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும். ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும். வறண்ட சருமத்திற்கு: வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது. முகம் பொலிவு பெற: தேன் – 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும். எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு: இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும். இதற்கு நிரந்தரத் தீர்வு தேன் – 1 ஸ்பூன், முட்டை வெள்ளை கரு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும். எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும். மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் மாறும். |
Saturday, January 29, 2011
முகம் அழகு பெற...
உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்? இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள். பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள். மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம். மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ் இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும். |
இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...
நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது. |
மாதுளையின் மருத்துவ குணங்கள்
1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது. மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. 2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். 3. ஆண்மை பெருக: மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. 4. கடுமையான இதய வலி நிற்க: மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும். 5. வயிற்றுப் புண்கள் குணமாக: மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். 6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக: மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம். 7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க: மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். |
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை கேன்சர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை
உலக சுகாதார மையம்(WHO) நடத்திய ஆய்வில் தினமும் அரைமணிநேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. |
64.8 மில்லியன் வயது உடைய டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
இந்த டைனோசர் சுமார் 700, 000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கின்றது. டைனோசர்கள் தாவர உண்ணிகள். டைனோசர்கள் காலநிலை மாற்றங்கள் காரணமாக முற்றாக அழிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். |
2014- ல் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும்
ஐவரி கோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014- ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ. கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ தான் சாக்லேட்டின் இன்றியமையாத மூலதனப் பொருள். உலகளவில் விளைவிக்கப்படும் கோகோ பீன்ஸில் பாதி ஐவரி கோஸ்ட் நாட்டில் இருந்து தான் பெறப்படுகிறது. தற்பொழுது அந்நாட்டு அரசியலில் சிக்கல்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் கோகோ பீன்ஸ் தயாரிப்பை பாதியளவாக குறைத்துள்ளன. பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். விளைவிக்கப்படும் சிறிதளவு கோகோவையும் கானா நாட்டிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றனர். சர்வதேச நாடுகளுக்கு கோகோ பீன்ஸை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிபர் அலஸ்சேன் குவட்டாரா தடை விதித்துள்ளார். இதன் எதிரொலியாக நடப்பு மாதத்தில் மட்டும் கோகோ விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். |
பென்குயின்களின் குட்டித் தீவு (படங்கள் இணைப்பு)
| ஆர்ஜென்டீனா நாட்டில் Martillo என்று ஒரு குட்டித் தீவு உண்டு. இதை பென்குயின்களின் தீவு என்றும் அழைக்க முடியும். இத்தீவு முழுவதும் பென்குயின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை இத்தீவு பெரிதும் ஈர்க்கின்றது. |
வசந்த கால விடுமுறையில் வளர்ப்பு நாய்களுக்கு விசேட கவனிப்பு (படங்கள் இணைப்பு)
| சீனாவில் வசந்த கால விடுமுறை ஆரம்பம் ஆகி விட்டது.ஹைனான் மாவட்டத்தில் தங்கி இருந்து கடமையாற்றிய பொதுமக்கள்ஏராளமானோர் இவ்விடுமுறைக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் இவ்விடுமுறை நாட்களில் வளர்ப்பு நாய்களின் நலன்களை கவனிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இவற்றை Pet Store களுக்கு அழைத்து செல்கின்றனர். இவற்றின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்கு ஈடுபடுகின்றனர். |
43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்
| இங்கிலாந்தில் உள்ள எஸ்செஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜிம்ஓவன் (66). தற்போது இவர் பாசில் டன் கவுன்சிலில் பணிபுரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருடங்கள் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதிகாலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது பணியை தொடங்குகிறேன். இது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் நான் சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது. வேலை செய்யும் போது சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன். எனவே நான் ஆரோக்கியமாக வாழ்கிறேன். தற்போது எனக்கு ஓய்வு பெறும் வயதுதான். இருந்தாலும் பணியில் இருந்து ஓய்வு பெற நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஜிம்ஓவனுக்கு 2 மகன்களும் 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். |
கொடுத்து வைத்த பன்றிகள்! ஆடம்பரத் தீவில் அமர்க்களம் (படங்கள் இணைப்பு)
| இது பன்றிகளின் ஆடம்பரத் தீவு. பளிங்குபோன்ற தெளிவான நீரில் இவை தினசரி காலையில் நீந்துகின்றன. அதன் பிறகு தான் அவற்றின் அன்றாடக் கடமைகள் தொடங்குகின்றன. நீச்சல் முடிந்ததும் கடற்கரையில் காலாற நடக்கத் தவறுவதுமில்லை. பன்றிகளின் இந்த ஆடம்பரத் தீவு பற்றி சிறுவர்களுக்கான புதியப் புத்தகமான The secret of pig Island (பன்றிகளின் இரகசியத் தீவு) எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 52 வயதான ஜிம் அபனர்தி என்ற படப்பிடிப்பாளர் தான் இந்தப் புத்தகத்தில் பிரசுரமாகியுள்ள படங்களின் சொந்தக்காரர். பன்றிகளின் இந்தப் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாத மக்களே இல்லை என்கிறார் இந்தப் படப்பிடிப்பாளர். இது பன்றிகளுக்கான உன்னதமான ஒரு தீவு இங்கு பன்றிகள் மிகவும் உல்லாசமாகவும், இணக்கப்பாட்டுடனும் வாழுகின்றன. இங்குள்ள பன்றிகள் அற்புதமாக நீந்துகின்றன. குட்டிகள் கூட சளைக்காமல் நீண்ட நேரத்தை தண்ணீரில் செலவழிக்கின்றன. இந்தத் தீவு உத்தியோகபூர்வமாகவே பன்றிகள் தீவு என்றுதான் அழைக்கப்படுகின்றது என்று அவர் மேலும் கூறுகின்றார். இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் மாலுமிகள் தமது உணவுத் தேவைக்காக பன்றிகளை இந்தத் தீவுக்கு அறிமுகம் செய்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த மாலுமிகள் இங்கு திரும்பி வராததால், அது அப்படியே பன்றிகளுக்கான தனித் தீவாக மாறிவிட்டது. 46 வயதான ஜெனிபர் நொலான் எனபவர் தான் இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளைகளுக்கான கற்பனைக் கதைகளோடு கலந்து பன்றிகள் தீவின் புகைப்படத்தை இணைத்து மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். மனிதர்கள் வாழ ஒரேயொரு பூமி இருப்பதுபோல், அந்தப் பூமியில் பன்றிகள் வாழ உள்ள ஒரேயொரு தீவு இது தான் என்கிறார் அவர் |
பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி
| பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5.5 மில்லியன்களாகக் காணப்படும் எனவும் இத்தொகையானது குவைத்தில் உள்ள முஸ்லிம்களின் தொகையை விட அதிகம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான இடம்பெயர்வுகளே இதற்கான காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 6.2 மில்லியனாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி பிரித்தானியாவில் குடியேறும் 4 பேரில் ஒருவர் முஸ்லிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகையில் 26 % முஸ்லிம்களாக காணப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. |
ஊனம் அடைந்தவருக்கு கருணை காட்ட மறுக்கும் சட்டம்! (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவைச் சேர்ந்த உடல் ஊனம் அடைந்த நபர்களில் ஒருவர்தான் Jim Starr (வயது-36). இவர் சக்கர நாற்காலி ஒன்றில் அமர்ந்து வீதிகளில் பயணம் செய்து வந்து உள்ளார். இது ஒரு டாங்கி என்றும் இவர் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றால் ஒழிய இவ்வாகனத்தை வீதிகளில் பயன்படுத்த முடியாது என்றும் பிரிட்டன் அரசு தடை போட்டு உள்ளது. அரசின் தடை நியாயம் அற்றது என்கிறார் Jim Starr. |
பட்டுப்போன்ற பாதம் வேண்டுமா? வெடிப்பு நீங்க சில ஆலோசனைகள்
அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.
கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும். முதல்நாள், பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டு உள்ளங்காலில் தேய்க்க வேண்டும். மறுநாள், தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.
தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.
உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும். .
கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு கடவுச்சொல்
இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.
கூகுள் குரோம் இயக்கு தளத்திற்கு கடவுச்சொல் (Password) பயன்படுத்துவதன் மூலம் இதனை நாம் மேற்கொள்ள முடியும்.
அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது.
1) முதலில் இங்கு கிளிக் செய்வதன் மூலம் அதற்கான எக்ஸ்டென்சனை தரவிறக்கம் செய்து கொள்ளவதற்கான தளத்திற்கு சென்று அதனை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Download
இதனைத்தொடர்ந்து கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.
காத்தான்குடியில் சமையலுக்காக வெட்டிய உருளைக்கிழங்கில் ‘அல்லாஹ்’ என்ற அற்புத வாசகம்
‘இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறைவத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ அல்குர்ஆன் வசனம் (21:30)
உங்கள் மனைவியை அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?
நீங்கள் உங்கள் மனைவியை அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சில... * நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் பேசுவதற்கு மட்டுமே செலவிடுங்கள். * வீட்டிற்கு வந்த உடன் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விட வேண்டாம். மனைவியை அழைத்து அன்று வீட்டில் நடந்த விடயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். * உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம். * பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள். * உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினையுங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள். * உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் என்று எதாவது இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள். * மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்த நேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். |
விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இல்லை: நிபுணர்களின் கருத்து
அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைகழக விஞ்ஞானி ஹோவர்டு அமித் விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் இந்த கருத்தை விண்வெளி வீரர் ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர் கூறியதாவது: விண்வெளியில் வேற்று கிரகமனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறோம். விண்வெளியில் பூமியைப் போன்று பல கிரகங்கள் உள்ளன. இங்கு மனிதர்கள் வாழும் சூழ்நிலை இல்லை என்று கூறினார். |
முக எலும்புகளின் அமைப்பை வைத்து ஒருவரின் வயதை கண்டறிய முடியும்: ஆய்வுத் தகவல்
இது குறித்து அறிவியலாளர்கள் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்களை சி.டி. ஸ்கேன் கொண்டு சோதனை செய்துள்ளனர். அதில் ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய முகத்தின் எலும்புகளின் கட்டமைப்பு மாறுபடுவதை அவர்கள் கண்டறிந்தனர். மேலும் ரோசெஸ்டர் மருத்துவ பல்கலை கழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை பிரிவு கண்காணிப்பாளரான "ஹோவர்டு லேங்ஸ்டீன்" என்பவர் முகத்தில் உள்ள மென்மையான திசு படிப்படியாக குறைந்து விடுதல் மற்றும் முகத்தின் எலும்புகள் தனது இலகு தன்மையை இழந்து கடினமாக இருத்தல் ஆகியவை வயதை கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் விடயங்கள் என தன்னுடைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
உள்ளங்கையில் கீபோர்டு(KeyBoard)
உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், "ஸ்டிக்கர்" வடிவ கீபோர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்" என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப்யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும். மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன்களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும். முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, சிப்பில் உள்ள பட்டனை நீங்கள் தட்டினால் போதும். என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. |
தூங்கினால் ஜலதோஷம் வராது!
மாத்திரை சாப்பிடுவது, ஊசி போட்டுக்கொள்வது, ஆவி பிடிப்பது என்று ஜலதோஷத்தை விரட்ட ஒரு போராட்டமே நடத்துகிறோம். ஆனால் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்களோ, இது சாதாரண விஷயம் என்று கூறுகிறார்கள். ஜலதோஷம் பாதிப்பு இருப்பவர்கள் நன்றாக 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலே போதுமாம். தும்மலும் வராது. அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு தகுந்த நிவாரணமும் பெறலாம் என்கிறார்கள். அதேநேரம், தினமும் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவோர்க்கு ஜலதோஷம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். |
ஜிமெயிலின் புதிய வசதி: Incoming Mail and Chat Alert
இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங்கை நாம் தவற விட்டு விடுவோம். நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது. ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்கு பதில் அளிக்க இயலும். * இந்த வசதியை பெற முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்துwww.gmail.com உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். * பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள். * அதன் பின் அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும். * படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். * அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புதிய மெயில் அல்லது சாட்டிங் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வந்து விடும். இந்த வசதியை தற்பொழுது கூகுள் குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் மட்டுமே பெற முடியும். |
பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!
ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர். இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். |
இரண்டு வேளை பல் தேய்ச்சால் மாரடைப்பு வாய்ப்பு கம்மி: ஆராய்சி முடிவு
இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது: உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால் கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும், சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும். இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார். |
ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு....
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகவும் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும். சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். |
கால்களின் மூலம் ஒருவரின் மனதை அறியலாம்
நம் உடலின் பாகம் மூளையை விட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் அவற்றின் செயல்களைப் பற்றி அறியாமல் இருந்து விடுகிறோம். சிலர் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். கால்கள் தொடர்ந்து தாளமிட்டுக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடுவதற்கு தயாராக உள்ள மனோபாவத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். முகத்தை மட்டும் நடிக்கப் பழக்கியவர்கள், கால்கள் என்ன செய்கிறது என்பதை கவனிப்பதில்லை. 1. நடக்கும் விதம்: இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள். 2. கால்கள் சொல்லும் உண்மைகள்: பால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக் கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்தார். இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து அவர்களைப் பொய் பேச வைத்தார். அவர்கள் பொய் சொல்லும்போது, பாதங்களை உணர்வின்றி வேகமாக அசைத்தனர். இன்னும் பலர் முகபாவங்களை பொய்யாக மாற்றி, கை அசைவுகளையும் கட்டுப்படுத்தி நடித்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே தங்கள் பாதங்கள் என்ன செய்கின்றன என்பதை அறியாமல் இருந்தனர். பொய் பேசுபவர்களின் முழுஉடலையும் பார்த்தோமானால், அவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்து விடலாம். 3. கால்களை ஒன்று சேர்த்தல்: ஒரு இடத்தில் தங்கலாமா? அல்லது வேண்டாமா? என்று எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையான மனநிலையை வெளிப்படுத்தும் இந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது. ஆண் - பெண் சந்திப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையில் நிற்பார்கள். மேலதிகாரிகள் முன்னால் இளம் அதிகாரிகளும், ஆசிரியர்கள் முன்னால் மாணவர்களும் இவ்வாறு நிற்பார்கள். 4. கால்களை விரித்து நிற்பது: சிலர் ஆங்கில எழுத்தான `வி' வடிவில் கால்களை விரித்து நிற்பார்கள். இவர்கள் தரையில் கால்களை வலுவாக ஊன்றி தாங்கள் எண்ணத்திலிருந்து எப்போதும் விலகிச் செல்வதில்லை என்பதை வெளிப்படுத்துவர். ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதால், விளையாட்டு வீரர்களும், திரைப்படத்தில் கதாநாயகர்களும் இதுபோன்ற நிலைகளில் நிற்பதைக் காணலாம். 5. பாதத்தை முன் வைப்பது: ஒருவர் உடனடியாக என்ன செய்யப்போகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நாம் எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை முன்னிருக்கும் காலின் திசை தான் காட்டுகிறது. இது நம் மனம் எந்தப் பக்கம் செல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. |
சைக்கிளில் மொபைல் சார்ஜர்: நோக்கியா அறிமுகம்
விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும் போது, அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும். |
2011- ன் புத்தம் புதிய வரவுகள்!
இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள். மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம். 1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது. இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம். 2. ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம். இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும். 3. மெமரி: இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம். சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது. 4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது. 17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம். இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான். Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும் சாதனம் போலத் தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன. |
அதிசயம்: 4 மாத குழந்தையின் வயிற்றில் கரு
அந்தக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே வயிறு வீக்கமும், மூச்சுத்திணறலும் இருந்து வந்தது. மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சோதனை செய்ததில், குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. முதலில் நீர்க்கட்டி என்றும் புற்றுநோய்க் கட்டி என்றும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தனர். அப்படி எதுவும் இல்லை என உறுதியானதும் அந்தக் கட்டியை அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவுசெய்தனர். அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அகற்றப்பட்ட கட்டியானது, 14 செமீ அகலத்துக்கு 12 செமீ உயரமாக இருந்தது. அது இன்னொரு கருவைப்போல இருந்தது. தண்டுவடம் தவிர கை விரல்கள், தலைமுடி ஆகியன அதில் இருந்தன. இந்தத் தாய்க்கு, இரட்டைக் கரு உருவாகி, அதில் ஒன்று உருவானவுடனேயே இன்னொரு கருவுக்குள் போய்விட்டது. ஐந்து லட்சத்தில் ஒன்றுதான் இதுபோல ஏற்படும் என்று அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்தார். |
Subscribe to:
Posts (Atom)

