திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…? தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு. |
Monday, August 30, 2010
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
மனிதக்கறி கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்
இங்கிலாந்தின் நிதி நெருக்கடி : 7 வயது சிறுவன் ஆலோசனை
நாட்டின் சிறுவயது கணித மேதையாக மதிக்கப்படும் ஆஸ்கர் செல்பி என்பவரே இவ்வாறு ஆலோசனை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் 'ஜெனரல் சர்டிபிகேட் ஒப் செகண்டரி எஜுகேஷன்' (ஜிசிஎஸ்ஈ) கணித தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த இவர், ஸ்டேம்போர்ட் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார். ஆஸ்கர், நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த வயதிலேயே மேற்படித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இதனையடுத்தே இங்கிலாந்து அரசு, நிதித்துறை ஆலோசகராக இவரை நியமித்துள்ளது. இதன்படி, நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஆலோசனையை ஆஸ்கர் வழங்கவுள்ளார். இதற்கென வாரத்தில் ஒரு நாளை(சனிக்கிழமை) இவர் ஒதுக்கியுள்ளார். "அரசின் 12.46 லட்சம் கோடி 'பட்ஜெட்' பற்றாக்குறையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, "வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார். |
மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் திரண்டெழப் போகும் சிங்களவர்கள்
| மகிந்த நியுயோர்க் செல்லும் வேளையில் அங்கு எவரும் மகிந்தவின் வருகைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்கும் படி அங்குள்ள சிறிலங்கா தூதுவரகத்துக்கு சிறிலங்கா வெளிவவிகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளது. இந்தக்குழுவில் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பலரும் இடம்பெறவுள்ளனர். சிறிலங்காவில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக மெக்சிக்கோவுக்கும் ஜேர்மனிக்கும் செல்லவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி உரையாற்றவுள்ளார். சுமார் 150 உலகத்தலைவர்கள் இந்த மூன்று நாள் கூட்டதில் பங்குபற்றி உரையாற்றவுள்ளனர். கூட்டத்தின் முதலாவது நாள் பிரேசில்,அமெரிக்கா, சுவிற்சர்லாந்து , மலாவி, பாக்கிஸ்தான், கோஸ்ராறிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்ததாக சிறிலங்கா அதிபர் உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையில் உரையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா நியமித்த நிபுணர்கள் குழு தொடர்பாகவும் குறிப்பிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சிறிலங்கா அதிபரின் நியுயோர்க் பயணத்தின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நேரத்தில் ஐ.நாவுக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதை புலிகளின் ஆரதரவாளர்களோ அல்லது தமிழர் அமைப்புக்களோ நடத்தப் போவதில்லை சிங்கள தேசியவாதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களே நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் இவர்கள் ஏற்கனவே லொஸ்ஏஞ்சல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை பாதுகாப்பு நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறும் நியுயோர்க்கிலுள்ள பௌத்த விகாரைக்கு மகிந்த செல்லும் போது குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. |
மருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.
வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய
பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பாடசாலைக்குச் சென்று வந்தவுடன் கால் மூட்டுக்களில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் குணமாகாமல் இருப்பார்கள்.இதை ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்றால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் ஆயுள் வேத மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.
இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்
இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.
அதன் படி
1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.
பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.
2) விண்டோஸ் லைஃப் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்
உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.
3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.
4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.
5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்
அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.
6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்
அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். __
மைக்கல் ஜக்சன் உடலை மீண்டும் தோண்டி எடுக்கத் திட்டம்
மைக்கல் ஜக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்றே கொடுத்த நச்சுத் தன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே டாக்டர் முர்றே மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 3 தடவை நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் மைக்கல் ஜக்சனின் உடல் புதைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
இந்நிலையில் மைக்கல் ஜக்சன் தான் புது தெம்புடன் நடனம் ஆடுவதற்காக, அதிகளவில் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தியதாகவும், அதனால்தான் அவர் மரணத்தைத் தழுவியதாகவும் வாதாட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஒரு சாரார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது மைக்கல் ஜக்சன் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.___
இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய சவூதி தம்பதியர் கைது
இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. _
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
உலகின் அதிநவீன, சொகுசு விமானம் என்று அழைக்கப்படும் இந்த விமானம் அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக விமானத் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான விமானம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான ஆர்டருமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ விமானம் தாமதமானதற்கு காரணங்கள் ஆகும். இத்தனை தடைகளையும் தாண்டி, சமீபத்தில் இந்த விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது விமானத்தில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இன்ஜின்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த விமானத்தில் உண்டு. இந்த விமானம், சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விமானத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ விமானத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 விமானத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர விமான சேவையில் ஏர்பஸ் ஏ 380 விமானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ விமானம் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக விமானம் என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது. |
பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!
வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். - ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது. - 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார். - ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். - சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில: - 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர். - 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது. - 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர். - 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. - 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். |
Subscribe to:
Posts (Atom)